Friday, February 07, 2020

On Friday, February 07, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் அருகே மதிமுக சார்பில் பொதுமக்களிடையே இந்திய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பாலக்கரை புதூர் காளியம்மன் கோவில் எடத்தெரு அருகே  அருகில் மதிமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ரொகையா ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில்  பெல் ராஜமாணிக்கம் அன்புராஜ் ஜங்சன் பகுதி செயலாளர் பிரபாகரன் பொறியாளர் ஸ்டீபன் பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜஸ்டின் செல்லகுமார் மாவட்ட பிரதிநிதி கரிகாலன் பகுதிசெயலாளர்கள் துரை வடிவேல், எடத் தெரு சரவணன், ஜெயசீலன்,  பொன்மலைப்பட்டி கணேசன், அகமது கபீர், ரஜினி சிவா, கல்லுக்குழி பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் திருச்சி செல்லத்துரை, திமுக நாகராஜ், ஜமால், ராமமூர்த்தி, ஷாஜஹான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, February 06, 2020

On Thursday, February 06, 2020 by Tamilnewstv in ,    
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் காயத்ரிதேவி தலைமை வகித்தார். செயல் தலைவர் கோமதி சிறப்புரையாற்றினார்.
கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை பழிவாங்கும் நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை, இடமாறுதல் உத்தரவு, தற்காலிக பணிநீக்கம் ஆகியவற்றை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கு வற்புறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. பெண்கள் பிரசவத்திற்கு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்த பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் தான் பெண்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ளவேண்டும். இதற்காக கிராம சுகாதார செவிலியர்களை அழைக்கக் கூடாது. தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி விபரம் குறித்த தகவலை குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், இமெயிலில் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
 துணை சுகாதார நிலைய மேம்பாட்டு நிதி, நிபந்தனையற்ற நிதி, கிராமக் குடிநீர் மற்றும் துப்புரவு குழு நிதிகளை மூன்று ஆண்டுகளாக முறையாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும். வாடகையில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பழுதடைந்த துணை சுகாதார நிலையங்களுக்கு வாடகை பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
On Thursday, February 06, 2020 by Tamilnewstv in ,    
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் திருச்சி எல்பின் நிதி நிறுவன மோசடி குறித்து

திருச்சி மாவட்டக் காவல்துறை ஆணையர் அவர்களிடம் அளித்துள்ள புகாரில்
தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டுவரும் எல்பின் நிறுவனம் மாதம் தோறும் பெரிய ஹோட்டல்களில் தன தங்களது லீடர்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை வரவைத்து மூளைச்சலவை செய்து தொடர்ந்து கோடிக்கணக்கில் ஏமாற்றி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருச்சி BREEZE ஹோட்டலில் பல ஆயிரம் பேரை திரட்டி ஏமாற்றி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர்.
இந்த மோசடி ELFIN நிறுவனம் பற்றி நான் புதுக்கோட்டை தஞ்சாவூர் மதுரை திருச்சி என பல மாவட்டங்களிலும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். இவர்கள் நோக்கம் கொள்ளை அடிப்பது மட்டும்தான்.



(2013 ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது 2014 வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN)

மதுரையை தலைமையிடமாக கொண்டு 2013ல் பாதுஷா என்பவர் 2 பேர் பார்ட்னருடன் ஒரு கம்பெனியை தொடங்குகிறார். அங்கு நஷ்டக் கணக்கு காண்பித்து விட்டு தலைமறைவாகி 2014 சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வருதா மணி என்ற கம்பெனியை ஆரம்பிக்கின்றனர். அதில் இரண்டு பேர் பார்ட்னர் ஒருவர் ரமேஷ்குமார் மற்றவர் விஸ்வநாதன் செட்டியார் அதையும் மூடிவிட்டு 2017ல் இந்த எல்பின் நிறுவனத்தை ஆரம்பிக்கின்றனர் .
இதில் பங்குதாரர்கள் ரமேஷ்குமார், பாதுஷா இதுவும் சிறிது நாட்களில் வருமானவரி சோதனையில் சிக்கி மூடப்படுகிறது.

மறுபடியும் இதே எல்பின் நிறுவனத்தின் பெயரை வைத்து ஸ்பேரோ குளோபல் டிரேடிங், ஸ்பேரோ ரியாலிட்டி இந்த நிறுவன பங்குதாரர்கள் அறிவுமதி, பால்ராஜ், பாபு இவர்கள் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரே நம்பர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர்களைப் பற்றி புகார் அளித்தாலும் ஏதாவது தகவல் பரப்பினால் ஒன்று ஆள் வைத்து மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது அல்லது உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என செட்டில்மெண்ட் பேசுவது அவர்கள் வாயை அடைத்து இவர்கள் தொழிலை நன்றாக நடத்த வேண்டும் என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள். என்னைக் கூட திருச்சி அறம் மக்கள் நல சங்கம் சேர்ந்த மாநில பொறுப்பாளர் பிரபாகரன் என்பவர் நான் அறம் மக்கள் நல சங்கத்தில் உள்ளேன் நீங்கள் அனுசரித்துப் போனால் எப்படியும் இருக்கலாம் இல்லை என்றால் என்னை பற்றி தெரியாது கொலையும் செய்யத் தயங்க மாட்டேன் என மிரட்டி விட்டுச் சென்றார். தற்போது இவர்களை பாதுகாத்துக்கொள்ள 2015இல் வேற ஒரு நபர் பதிவு செய்த பத்திரிக்கையை 5 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர், அதேபோல் 25 லட்சம் கொடுத்து அறம் டிவி என்பதை வாங்கியுள்ளனர். பல குற்ற வழக்குகள் உள்ள ரமேஷ் எப்படி மக்கள் ராஜன் என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார் என்பது தெரியவில்லை.பணம் இருப்பதால் எதையும் சாதிக்கலாம் என நினைத்துக் கொண்டு உள்ளார் . தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க தற்போது மீடியாவை பயன்படுத்தி வருகின்றார். தற்போது இவர்களுடன் இருக்கும் கருப்பு பணத்தை மாற்ற ஏ ஆர் ரகுமான் அவர்களை வைத்து திருச்சியில் மாபெரும் இசை நிகழ்ச்சி வழங்க உள்ளார். முழுவதுக்கும் இவர்கள் ஸ்பான்சர் வழங்கியுள்ளனர். அதாவது 10,000 பேர் வந்தால் 10 லட்சம் பேர் வந்ததாக கணக்கு காட்டி கருப்பை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்பின் பற்றி மாற்றம் மக்கள் நல சங்கம் சார்பில் திருச்சி காவல்துறையிடம் பொதுமக்கள் 45 பேர் புகார் அளித்தனர் அந்த மாற்றம் மக்கள் நல சங்கத்தை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பெருமையாக கூறி வருகிறார். தாது பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்துள்ளார். நான் அவர்களுக்கு வளைந்து போகாததால் தான் எனது மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ரமேஷ் .காவல்துறை பொது மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்கிறேன்.

இவர்களிடம் (எந்தப் பத்திரிகையிலும் இல்லாமல் நான் பத்திரிகைகள் என கூறிக்கொண்டு ) காசு வாங்கி திங்கும் சில சமூக விரோதிகள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் யூட்யூப் களில் செய்திகள் போடும் நண்பர்களை சமூக விரோதிகள் என ரமேஷ் குமார் அவர்களுக்கு ஜால்ரா அடித்து வருவது வேதனையிலும் வேதனை.

மேலும் புதிய தகவல்களுடன் தொடரும்

Sunday, February 02, 2020

On Sunday, February 02, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ELFIN  திட்டத்தால் போக்குவரத்து பாதிப்பா

திருச்சி பிரீஸ் ஹோட்டலில் நடக்கும் தனியார் நிறுவனம் எல்பின் நிகழ்ச்சிக்கு திருச்சி கலையரங்க வளாகத்தில் பார்க்கிங் அனுமதி அளித்தது யார்....
முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்றது

அதற்கு வாகன நிறுத்த இடம் இல்லை அதனால் வாகனங்கள் சாலையில் நிறுத்தி உள்ளார்கள்.

எல்பின் கவர்ச்சி திட்டங்கள்

*ELFIN E COM PRIVATE LIMITED*


*HIGHWAY  ECM*
Rs84,000
(PV 7)
✓10000 Members  only Eligible•••
✓1000 Members only mega price •••

✓First price
 100 Members 600 sqrFit home(House)•••

✓Second price
10 Members car•••

✓Third price 100 Members Plot•••

✓Fourth price 100 Members 5 பவுன் GoldChain•••

✓Fifth price  100 members Royal Enfield•••

✓Sixth price 100 members 3 பவுன் gold Chain•••

✓Seventh price 490 members 65 inches LED TV , DVD Player, Home theater•••

•••Balance 9000 Members-ku
LED TV....FREE••••
*****************************
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மாவட்ட நலப்பணி நிதி குழு கையூட்டு பெறப்பட்டதா மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
On Sunday, February 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி எல்பின் நிறுவனம் மீது பொதுமக்கள் நலன் கருதி புகார் அளித்த நபருக்கு எதிராகபாலியல் புகார்.
                       
சத்தியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சேர்ந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் திருச்சி கல்லுக்குழி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எல்லோரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ஒரு நபர் இந்த கம்பெனியில் இணைவதற்கு 12 ஆயிரம் பணத்தை வாங்கி அதற்கு மதிப்புள்ள பொருட்களை தருகிறோம் என்றும் உங்களுக்கு கீழ் நான்கு நபர்களை சேர்த்தால் இந்த நான்கு நபர்களும் ஒரு நபர் வீதம் 5000 கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மேலும் எங்கள் கம்பெனி ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதங்களில் 9 லட்சம் தருவோம் என்று கூறுகிறார்கள் மக்களை திசைதிருப்பி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்கள் தற்போது

புதுக்கோட்டை ஆலங்குடி எங்கும் கூட்டங்கள் நடக்காத படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த நபர்கள் திருச்சியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி மக்களிடம் பணம் பறிக்கின்றனர் இப்படி ஆசை வார்த்தைகள் காட்டி பணம் கொள்ளையடித்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி கூறியுள்ள இதனை எதிர்கொள்ள முடியாத எல்பின் நிறுவனம் சத்தியமூர்த்திக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை கொடுத்து வழக்கை வாபஸ் பெறக்கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
On Sunday, February 02, 2020 by Tamilnewstv in ,    
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள் மோசடி காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் காவல்துறை  அறிவிப்பு*

திருச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில்  ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் பாதுஷா சாகுல் ஹமீது  என்கிற அழகர்சாமி பஷீர் ஆகியோர் ELFIN என்ற நிறுவனம் துவக்கினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பரிசுப்பொருட்கள் முதலீடு தொகை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர் குறிப்பாக பத்தாயிரம் ரூபாய் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் காலிமனை கிடைக்கும் என்றும் வருடத்திற்கு பிறகு 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறி பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது
கடந்த சில ஆண்டுகளில் என்ற நிறுவனம் மதுரை திண்டுக்கல் திருவண்ணாமலை திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் சுமார்  ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக செய்ததாக புகார் எழுந்துள்ளது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர் ஆனால் திருச்சியில் இன்றுவரை தொடர்ந்து எல்பின் நிறுவனம் தனது கூட்டம் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திவருகிறது

 இந்நிலையில் தன்னிடம் பணம் வசூல் செய்த ELFIN நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக திருவாரூரைச் சேர்ந்த குமார் என்பவர்  குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் அந்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி மன்னார்புரம் பல்துறை கட்சி அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது காவல்துறை
0431-2422220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Tuesday, January 28, 2020

On Tuesday, January 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி: திருச்சியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.



ஈரநிலம் அமைப்பின் சார்பில் ஓவியர் தமிழரசனின் அன்னை பூமி என்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி முதல் கடலூர் வரையிலான இந்த ஓவியக் கண்காட்சி திட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக இன்று திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சகாயராஜ் தலைமை வகித்தார்.
ஓவிய கண்காட்சியை மத்திய சுங்க துறை இணை ஆணையர் வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார். பள்ளியின் முதல்வர் சின்னப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் பண்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.

 பேட்டி:
 ஓவியர் தமிழரசன்

Sunday, January 19, 2020

On Sunday, January 19, 2020 by Tamilnewstv in    

திருச்சி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்



திருச்சிராப்பள்ளி உலக சுகாதார நிறுவனம் மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது கடந்த பதிமூன்று 1 2011 முதல் இன்று வரை இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லை இதைத் தொடர்ந்து நிலையான நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் போலியோ நோயை அறவே ஒழிப்பதற்கு இந்த முறையை மிகவும் சிரத்தையோடு பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1279 மையங்களிலும் திருச்சி மாநகராட்சியில் 244 மையங்களிலும் துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும் மணப்பாறை நகராட்சி 23 மையங்களிலும் மொத்தம் ஆயிரத்து 563 மையங்களில் சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார மையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகரங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது ஸ்ரீரங்கம் குணசீலம் சமயபுரம் வயலூர் ஆகிய கோயில்கள் மசூதிகள் ஆலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் விமான நிலையம் முக்கொம்பு போன்ற சுற்றுலாத் தலங்க ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது செய்துள்ளது ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியில் இன்று செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணம் செய்யும் ஐந்து வயதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் 16 74 69 குழந்தைகளுக்கும் நகர்புறங்களில் 97 47 4 குழந்தைகளுக்கும் இடம்பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 527 பெயர்களுக்கும் ஆக மொத்தம் 265470 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட திட்டமிட்டுள்ளது இம்முகாமில் 6650 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்

Tuesday, January 07, 2020

On Tuesday, January 07, 2020 by Tamilnewstv in ,    
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் கைது செய்யப்பட வேண்டும்

திருச்சி நெல்லை முபாரக் பேட்டி (மாநிலத் தலைவர் எஸ்டிபிஐ கட்சி)
திருச்சி வன்முறையை தூண்ட கூடியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்

பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் அவரை ஏன் கைது செய்யவில்லை குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த அதுதான் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி

திருச்சியில் இன்று (ஜன.07)  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், துணைத் தலைவர் அம்ஜத் பாஷா,பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் அகமது நவவி, அபுபக்கர் சித்திக், வழ.சஃபியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஏ.கே.கரீம், சபியுல்லா, ஷஃபிக் அகமது மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி:

அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான, ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை, பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதுதொடர்பாக நாடு முழுவதும் சுமார் 5000 நிகழ்ச்சிகளை நடத்தி, குடியுரிமை சட்டத்திருத்தம் என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி. சம்மந்தமான பா.ஜ.க. மற்றும் சங்பரிவார்களின் பொய் மற்றும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முறியடித்து, அதன் மத அடிப்படையிலான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தகர்க்கவும்,  நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஜனவரி 18 அன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மிகப்பெரும் பேரணி நடத்தவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மக்கள் விரோத சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:

அரசியலமைப்பின் உன்னத கொள்கைகளை, கட்டளைகளை அப்பட்டமாக  மீறும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். அதனை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, மக்கள் தொகை கணெக்கெடுப்பின் போது இதுவரை கேட்கப்படாத பெற்றோரின் பிறப்பு, அவர்கள் பிறந்த இடம் உள்ளிட்ட  கூடுதலான கேள்விகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஏற்கனவே, நாடு முழுவதும் என்.பி.ஆர் தரவுகளின் அடிப்படையில் என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்திலும், பல்வேறு இடங்களிலும்  மோடி அரசு கூறியுள்ளது.

அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி. கணக்கெடுப்பானது நாடு முழுவதும் நடைபெறும் என்று உள்துறை அமித் ஷா கூறியுள்ளார். அவ்வாறு என்.ஆர்.சி. நடைபெற்றால் ஆவணங்களை திரட்ட முடியாத கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை ரத்தாகும் போது, முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களை தவிர மற்ற அனைவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மீண்டும் தங்களது குடியுரிமையை பெறுவார்கள் என்பதிலிருந்தே மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. எத்தகைய  அபாயகரமானது என்பது விளங்கும். இந்த மூன்று சட்ட நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

ஆகவே, தமிழக அரசு சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது எனவும், இச்சட்டங்களுக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்கனவே, அதிமுக துணையுடன் தான் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதிமுகவின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு ஆதரவான நிலைபாட்டை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான எதிர்வினையை மக்கள் காட்டத் தொடங்கியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணித்ததன் காரணமாக, அதிமுகவிற்குள்ளே உட்கட்சி பூசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் விரோத மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக  தொடருமானால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பினை அது சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து, சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்து வருகின்றது. இதுவரை தமிழகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் விரோத சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசை விமர்சித்து பேசுபவர்கள் மீது பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் சிறைகளில் அடைப்பக்கப்பட்டுள்ளனர். தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் அநீதியான முறையில் கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் அரசியல் சாசனத்தையும், பன்முகத்தன்மைமையும் பாதுகாப்பதற்காக குடிமக்கள் நடத்தும் போராட்டங்களை வழக்குகள், கைது நடவடிக்கைகள் மூலம்  தடைபோட முயலும் அதிமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போராடுபவர்களையெல்லாம் சிறையில் அடைக்க தீர்மானித்தால் நாட்டின் சிறைச் சாலைகள் போதாது. போராட்டங்களை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உந்துசக்தியாக மாறும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, பொதுமக்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிகையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை:

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக்குள் வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் கொண்டுவரப்படவில்லை. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என நாங்கள் குற்றஞ்சாட்டுகின்றோம். தேர்தல் ஆணையம் அதன் பொறுப்பை தட்டிக்கழித்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சேவையை அங்கீகரித்த மக்கள்,  ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நிச்சயம் நிறைவேற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜனவரி 08 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு  எஸ்.டி.பி.ஐ. ஆதரவு:

மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ரயில்வே, வங்கி, பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும்,  ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நாளை (ஜனவரி 08)  நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவிக்கின்றது. தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜே.என்.யு. மாணவர்கள் மீதான ஏபிவிபி குண்டர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது:

முகமூடி அணிந்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் பெரும்திரளான குண்டர்கள், ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நுழைந்து, மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அய்ஷே கோஷ் மற்றும் மாணவ-மாணவிகள் மீது இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மாணவர் விடுதிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வன்முறை தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜே.என்.யு. மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலில் சம்மந்தப்பட்ட ஏபிவிபி சமூகவிரோதிகளை காலம்தாழ்த்தாமல் கைது செய்வதோடு, கடுமையான சட்டப்பிரிவுகளைக் கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்

பேட்டி .....
நெல்லை முபாரக்