Friday, March 06, 2020
On Friday, March 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி:
ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தெற்கு ரயில்வே அனைத்து கோட்ட மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஈகிள் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துராமன், பொருளாளர் வெங்கடாசல பெருமாள் உட்பட ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து இதில் ஈகிள் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருச்சி, சேலம், மதுரை, சென்னை ஆகிய 4 கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 300 ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கடந்த ஆறு மாத காலமாக இந்த நிலுவைத் தொகையை வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.
ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தபோது ஒப்பந்த தொகை உடனடியாக வழங்கப்பட்டது. தற்போது பொது பட்ஜெட்டுடன் இணைந்த பிறகு நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நாங்கள் இந்த போராட்டத்தை அறிவித்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி இருக்கிறார்கள். எனினும் உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வில்லை. அதனால் இந்த போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொகை நிலுவையில் இருப்பதால் பணியாளர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை. வங்கிகளில் கடன் திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால் தொழில் பாதித்துள்ள து என்றார்.
On Friday, March 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
டாக்டர் ரமணி தேவி ,மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
டாக்டர் ரமணி தேவி பேசுகையில்,
கொரோனா வைரஸ் நோய் தற்போது ஈரான், இத்தாலி, சீனா, கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
நம் கைகள் மூலம் மூக்கு வாய் போன்றவற்றை அடிக்கடி தொடக்கூடாது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலவும் வெப்பநிலையில் கொரோனா நோய் பரவ வாய்ப்பு கிடையாது. 15 டிகிரி செல்சியஸ் இருந்தாலே கொரோனா கிருமி அழிந்துவிடும். மூச்சுத் திணறல், உடல் வலி, தலைவலி, இருமல், சளி போன்றவை இந்நோய்க்கான அறிகுறியாகும். இத்தகைய அறிகுறி இருந்தாலே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நோய் தாக்குதல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நோய் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து உயிர் இழப்பை சந்திக்க நேரிடும். 100 பேருக்கு இந்நோய் இருந்தால் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இறப்புகளை சந்திக்கின்றனர்.
52% பேர் குறைந்த அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 15 சதவீதம் பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். 3 சதவீதம் பேர் மட்டுமே சிக்கலுக்கு ஆளாகின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு செல்வதை தவிர்த்து தனிமையில் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களுக்கு இத்தகைய நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கை கழுவுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பேட்டி: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்
Thursday, March 05, 2020
On Thursday, March 05, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் என்றழைக்கப்படும்
ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்
ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வரும் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் 7ம் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான அன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து
மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9ம் திருநாளான 6ம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்
மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9ம் திருநாளான 6ம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
On Thursday, March 05, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
இன்பச் சுற்றுலாவில் கைதானவர்கள். ஜாமீனில் வந்தாலும் ஜாமீன் ரத்து செய்தாலும் கவலையில்லை.
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை இடம் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி வரும் நிறுவனம் எல்பின்.
இந்நிறுவனத்தின் சார்பில் கடந்த மாதம் தஞ்சாவூரில் பிரசன்னா வெங்கடேஷ் என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனுமதியில்லாத இக்கூட்டத்தை தஞ்சை போலீசார் தடுத்து நிறுத்தி கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரசன்ன வெங்கடேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார், கிங்ஸ்லி சில நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். காவல்துறை இருவரையும் கைது செய்தது.
பல நாட்களாக சிறையில் இருந்த இருவரையும் எல்பின் சகோதரர்கள் ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் பல கோடி ரூபாய் பணம் கட்டி ஜாமீனில் வெளியே எடுத்தனர். இவர்களுடன் சத்யபிரியா என்ற பெண்மணி தேடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அழகர்சாமி என்கிற ராஜா எஸ்ஆர்கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் ஆகியோர் துபாயில் இருந்துகொண்டே அழகர்சாமி என்கிற ராஜா தமிழக காவல்துறையே வியக்கும் வகைபில் தஞ்சை காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் ஆடியோ வெளியிட்டிருந்தார்
இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் என கூறி 800க்கும் மேற்பட்டோர் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பல நூறு பவுன் வரை பரிசளிக்க உள்ளனர் எல்பின் நிறுவனர்கள் அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஜாமினில் வெளிவந்துள்ள பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி இருவரும் இவர்களுடன் இன்பச்சுற்றுலா துபாய் சென்றுள்ளனர்
இப்படி சென்றதற்கு முறையாக நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றார்களா ? அல்லது எந்த அனுமதி பெறாமல் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் தெரியாமல் அறிவிக்காமல் துபாய் சென்று உள்ளார்களா அவர்களது பாஸ்போர்ட்டில் சென்றார்களா அல்லது போலி பாஸ்போர்ட்டில் சென்றார்களா என தெரியவில்லை. முறைப்படி அனுமதி வாங்காமல் எப்படி ஜாமினில் வெளியில் வந்தவர்கள் வெளிநாடு உடனடியாக எப்படி சென்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது?
இப்படி பட்ட சம்பவங்கள் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் வகையில் உள்ளது. இதற்கு மத்திய புலனாய்வுத்துறை மற்றும் காவல்துறை தான் உடனடி ஆக்சன் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா, 1500 ஆடுகளின் ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார்.
திருச்சி புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா சிறப்பு வாய்ந்தது, இந்த ஆண்டு மாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று ஓலை பிடாரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் இன்று காலை புத்தூர் மந்தையில் கோலாகலமாக துவங்கியது.
ஓலை சப்பரத்தில் அம்மன் புத்தூர் மந்தைக்கு கொண்டுவரப்பட்டது, இதைத்தொடர்ந்து குட்டிக்குடி துவங்கியது முதல் மரியாதையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்பட்டது, கழுத்தைக் கடித்து ரத்தத்தை மருளாளி சிவக்குமார் குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார், இதில் சுமார் 1500 கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளால் கிராமம் காலணி தெருவைச் சேர்ந்தவர் முரளிராஜாவின் மகன் முரளி(32). இவருக்கு வெற்றிச்செல்வி என்ற மனைவியும்,10 வயதிற்க்குள் 2 மகன் களும்,ஒரு மகளும் உள்ளனர். சொந்தமாக வீடு இல்லாத நிலையில் கூலி வேலை செய்து பிழைப்புபிழைப்பு நடத்தி வருகிறார்.அதேபோல சற்று அருகே இவருடைய அண்ணன் பிரபு(35) தன் மனைவி சுதாவுடன் தனியாக வசித்து வருகிறார். பிரபு வீட்டிற்கு நேர் எதிரே வசிக்கும் கலியமூர்த்தி மகன் வசந்தகுமார் (24).இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதில் பிரவு,,முரளியின் மனைவிகள் அக் கா,தங்கைகளாவார்கள்
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன் குடிபோதையில் பிரபுவின் வீட்டிற்கு இரவில் தவறான நோக்கத்துடன் அத்துமீறி உள்ளே புகுந்துள்ளார். இதை கண்ட பிரபு வசந்தகுமாரை பிடித்து விசாரிக்கையில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். வசந்தகுமார் இங்கிருந்தால் பிரச்சனையாகிவிடும் எண்ணி அவனது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்று மறைந்து கொள்ளும்படி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவரிடம் முரளி குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். ஊர் பெரியவர்களும் வசந்தகுமாரின் பெற் றோரிடம் அவனை ஊருக்கு வரச்சொல்லியுள்ளனர். ஆனால் கிராமத்தின் விசாரணைக்கு முன் வசந்தகுமார் முரளி கண்முன் மோட்டார் சைக்கிளில் போக்கு காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளி தன் அண்ணன் பிரபுவை கூட்டிக் கொண்டு வசந்தகுமாரிடம் கேட்க வீட்டிற்கு சென்றுள்ளார்.பிரபு தூங்கிக் கொண் டிருந்நதால் திரும்பிய முரளியை வசந்தகுமார் அம்மா புஷ்பா திட்டியதால் இதைக் தட்டி கேட்ட முரளியை வசந்தகுமார், தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா,வசந்தகுமாரின் அக்கா கணவர் நாகராஜ் மற்றும் உறவினர்கள் என 6 பேர் கொண்ட கும்பல் முரளியை தாக்கியுள்ளனர். ஏற்கனவே கொலைத் திட்டத்தோடு மதுபோதையில் இருந்த வசந்தகுமார் அன் கோ கத்தியால் சரமாரியா குத்தியுள்ளனர். 9 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (60) என்பவர் தடுக்க முயன்ற போது அவருக்கு கத்திகுத்து விழுந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். வசந்நகுமார்,அவரது அக்கா கணவர் நாகராஜ்,தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து ்வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளால் கிராமம் காலணி தெருவைச் சேர்ந்தவர் முரளிராஜாவின் மகன் முரளி(32). இவருக்கு வெற்றிச்செல்வி என்ற மனைவியும்,10 வயதிற்க்குள் 2 மகன் களும்,ஒரு மகளும் உள்ளனர். சொந்தமாக வீடு இல்லாத நிலையில் கூலி வேலை செய்து பிழைப்புபிழைப்பு நடத்தி வருகிறார்.அதேபோல சற்று அருகே இவருடைய அண்ணன் பிரபு(35) தன் மனைவி சுதாவுடன் தனியாக வசித்து வருகிறார். பிரபு வீட்டிற்கு நேர் எதிரே வசிக்கும் கலியமூர்த்தி மகன் வசந்தகுமார் (24).இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதில் பிரவு,,முரளியின் மனைவிகள் அக் கா,தங்கைகளாவார்கள்
தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். வசந்நகுமார்,அவரது அக்கா கணவர் நாகராஜ்,தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து ்வருகின்றனர்.
Wednesday, March 04, 2020
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தவளை தன் வாயால் கெடும் அதிர்ச்சியில் ELFIN சகோதரர்கள்
தொடர்ச்சியாக காவல்துறைக்கு எதிராக ஆடியோ வெளியிட்டதால் இவர்களுடைய பல பழைய வழக்குகளை காவல்துறை அதிகாரிகள் தூசு தட்டுகிறார்கள்
( RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )
இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல் துறை வட்டாரங்களில் பேசப்படுகின்றன
ஆனால் இவர்கள் எதையும் பற்றிக் கவலைப்பட வில்லை ஏனென்றால் தங்களுடைய பினாமியாக ராஜப்பா
தலைமையில் 60 நபர்களை நியமித்து தங்கள் கொள்ளை அடித்த பணம் அனைத்தும் தாங்கள் பிரித்து கொடுத்துள்ளதாகவும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அஞ்சப் போவதில்லை மத்திய புலனாய்வுத்துறை வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தங்களுடைய வட்டாரங்களுக்கு எல்பின் சகோதரர்கள் தைரியம் அளித்து உள்ளனர்.
காவல் துறைக்கு இறுதி எச்சரிக்கை தரும் எல்பின் ராஜா.
திருச்சி மன்னார்புரம் அருகே தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் போலி நிறுவனம் தான் எல்பின் . இந்நிறுவனத்தின் சார்பில் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் SRK (எ) ரமேஷ் குமார் தலைமையில் சுமார் 800 பேர் துபாய் இன்பச் சுற்றுலா என கூறி சென்று உள்ளனர். அங்குள்ள உயரமான கட்டிடத்தில் வரும் 6-ஆம் தேதி அழகர்சாமி ( எ ) ராஜா சிறப்புரையாற்றி சிறப்பாக செயலாற்றிய அந்த 800 பேருக்கும் பல கோடி ரூபாய் செலவு செய்து தங்க நாணயம், செயின், மோதிரம் போன்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் தர உள்ளாராம். இந்த அண்ணன் தம்பி இருவர் மீதும் பல மாவட்டங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இவர்களது பாஸ்போர்ட்கள் இன்னும் அரசு முடக்காதது வியப்பாக இருக்கிறது. மொத்தமாக பணத்தை சுருட்டிக்கொண்டு விஜய் மல்லையா போல் இவர்களும் ஒருநாள் வெளிநாடு ஓடுவதற்கு வசதியாக இன்னும் பாஸ்போர்ட்களை நமது அரசு முடக்க வில்லை போல் தெரிகிறது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை இந்தியாவிலிருந்து வெளிநாடு கொண்டு சென்றார்களா ? அல்லது பல கோடி ரூபாய் பணத்தை துபாய் எடுத்துச் சென்று அங்கு தங்கங்களை வாங்கினார்களா ?
நேற்று வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதில் காவல்துறையை எச்சரிக்கும் வண்ணம் பேசியுள்ளார். அதில் தஞ்சையில் கைது செய்த இருவரையும் நாம் ஜாமீனில் வெளியே எடுத்து விட்டோம்.
தற்போது சத்யபிரியா வெளிநாட்டிற்கு பயணம் செய்யப்போவதாக தகவல்
ஆனால் தொடர்ந்து காவல்துறையினர் என்னையும்(ராஜா) ரமேஷையும் பொய் வழக்கில் கைது செய்ய பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். அது நடக்கவே நடக்காது. தற்போது பல டீம் லீடர் களிம் சென்று எங்கள்மீது பொய் புகார் தருமாறு மிரட்டி வருகிறார்கள் . நீங்கள் யாரும் பயப்படாதீர்கள் காவல்துறையால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. தங்களைத் தேடி யாராவது காவல்துறையினர் தங்களை சந்திக்க மப்டியில் வந்தால்கூட போட்டோ மற்றும் வீடியோ எடுங்கள். போனில் அழைத்தால் கால் ரெக்கார்ட் செய்யுங்கள். நம் மீது பொய் வழக்கு பதிவு செய்தால் காவல்துறையினர் அதற்கான பதிலை சொல்லியே ஆகவேண்டும். யாரும் கவலைப்பட வேண்டாம் எல்பின் குடும்பத்தினரை காவல்துறையினரால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து எல்பின் ராஜா காவல்துறையினரே எச்சரிக்கும் வகையில் பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எந்த தைரியத்தில் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை காவல்துறையினர் அனைவரும் பணத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பார்கள் என நினைத்தாரா என தெரியவில்லை. மற்ற மாவட்டங்களில் துரித நடவடிக்கை இல்லை என்றாலும் தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை..
தொடர்ச்சியாக காவல்துறைக்கு எதிராக ஆடியோ வெளியிட்டதால் இவர்களுடைய பல பழைய வழக்குகளை காவல்துறை அதிகாரிகள் தூசு தட்டுகிறார்கள்
( RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )
இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல் துறை வட்டாரங்களில் பேசப்படுகின்றன
ஆனால் இவர்கள் எதையும் பற்றிக் கவலைப்பட வில்லை ஏனென்றால் தங்களுடைய பினாமியாக ராஜப்பா
தலைமையில் 60 நபர்களை நியமித்து தங்கள் கொள்ளை அடித்த பணம் அனைத்தும் தாங்கள் பிரித்து கொடுத்துள்ளதாகவும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அஞ்சப் போவதில்லை மத்திய புலனாய்வுத்துறை வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தங்களுடைய வட்டாரங்களுக்கு எல்பின் சகோதரர்கள் தைரியம் அளித்து உள்ளனர்.
காவல் துறைக்கு இறுதி எச்சரிக்கை தரும் எல்பின் ராஜா.
திருச்சி மன்னார்புரம் அருகே தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் போலி நிறுவனம் தான் எல்பின் . இந்நிறுவனத்தின் சார்பில் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் SRK (எ) ரமேஷ் குமார் தலைமையில் சுமார் 800 பேர் துபாய் இன்பச் சுற்றுலா என கூறி சென்று உள்ளனர். அங்குள்ள உயரமான கட்டிடத்தில் வரும் 6-ஆம் தேதி அழகர்சாமி ( எ ) ராஜா சிறப்புரையாற்றி சிறப்பாக செயலாற்றிய அந்த 800 பேருக்கும் பல கோடி ரூபாய் செலவு செய்து தங்க நாணயம், செயின், மோதிரம் போன்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் தர உள்ளாராம். இந்த அண்ணன் தம்பி இருவர் மீதும் பல மாவட்டங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இவர்களது பாஸ்போர்ட்கள் இன்னும் அரசு முடக்காதது வியப்பாக இருக்கிறது. மொத்தமாக பணத்தை சுருட்டிக்கொண்டு விஜய் மல்லையா போல் இவர்களும் ஒருநாள் வெளிநாடு ஓடுவதற்கு வசதியாக இன்னும் பாஸ்போர்ட்களை நமது அரசு முடக்க வில்லை போல் தெரிகிறது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை இந்தியாவிலிருந்து வெளிநாடு கொண்டு சென்றார்களா ? அல்லது பல கோடி ரூபாய் பணத்தை துபாய் எடுத்துச் சென்று அங்கு தங்கங்களை வாங்கினார்களா ?
நேற்று வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதில் காவல்துறையை எச்சரிக்கும் வண்ணம் பேசியுள்ளார். அதில் தஞ்சையில் கைது செய்த இருவரையும் நாம் ஜாமீனில் வெளியே எடுத்து விட்டோம்.
தற்போது சத்யபிரியா வெளிநாட்டிற்கு பயணம் செய்யப்போவதாக தகவல்
தொடர்ந்து எல்பின் ராஜா காவல்துறையினரே எச்சரிக்கும் வகையில் பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எந்த தைரியத்தில் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை காவல்துறையினர் அனைவரும் பணத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பார்கள் என நினைத்தாரா என தெரியவில்லை. மற்ற மாவட்டங்களில் துரித நடவடிக்கை இல்லை என்றாலும் தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை..
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தஞ்சாவூரில், சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த,
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியை கனிமொழி என்பவரின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு தானம் செய்யப்பட்ட நிலையில் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. `சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர், இன்று தன் உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்துவிட்டு, எங்களை விட்டுச் சென்றுவிட்டார்’ என்று கண்ணீரில் குடும்பத்தினர், .
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரே உள்ள தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கார் மோதி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக கனிமொழியை மீட்டு, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கனிமொழி மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதிசெய்து, அவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கனிமொழியின் உடல் உறுப்புகளைத் தானமளிக்க, அவரது பெற்றோர்கள் முன்வந்தனர்.ஒரு சிறுநீரகம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தஞ்சை அரசு பொதுமருத்துவமனைக்கும் என மொத்தம் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து விமானத்தில் மதுரை மற்றும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன அவர்கள் குடும்பத்தினர் கூறும்போது
எங்களுக்கு மட்டுமல்ல எங்க ஊருக்கே பெருமை தேடித் தந்தவர். சின்ன வயசிலேயே தொல்பொருள் அறிஞராக வர வேண்டும் என நினைத்தார். அதன்படி, தான் நினைத்ததைத் தன் கடின உழைப்பால் சாதித்தார். இன்னும் சாதிக்கவேண்டிய பொண்ணு. அதற்குள் இந்த விபத்து, அவர் கனவில் மட்டுமல்ல எங்கள் எல்லோர் மனத்திலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. வாழ்கையில் பெரும் உயரத்திற்குச் செல்லக்கூடியவளை, இவ்வளவு சீக்கிரமே இறைவன் அழைத்துக்கொண்டு, எங்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளான். இதை எப்படி நாங்க தாங்கப் போகிறோம் எனத் தெரியவில்லை.சிறு வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்தவள், தன் உடல் உறுப்புகளைப் பலருக்குத் தானமாகக் கொடுத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிருக்கிறாள் என்று அவர்கள் குடும்பத்தினர் கூறினார்கள்

குடியிருப்பு பகுதியை போலி ஆவணம் மூலம் காலி செய்ய முயற்சிப்பதாக ஆட்சியர் சிவராசுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேலசிந்தாமணி, பழைய கரூர் சாலையில் நங்கவரம் பண்ணைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் நாடார் தெருவை உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு குடியிருப்பதற்காகபிரித்து வழங்கப்பட்டது.
பல தலைமுறைகளாக சுமார் 100 குடும்பத்தினர் அங்கே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தை சேலத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் போலி ஆவணத்தை வைத்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று அந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதன் ஒரு கட்டமாக அந்த இடத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணிக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி தலைவர் சகாதேவ பாண்டியன் தலைமையில் திரண்டு வந்தனர். ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
பேட்டி: ரவி

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...