Tuesday, April 07, 2020
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 07
நிவாரணம் வழங்க கோரி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
கொரனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் கடைகளை அடைத்து வைத்துள்ளோம்.
இதனால் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் குடும்பத்தினர்
சுமார்10 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் கடை, மற்றும் வீட்டு வாடகை கட்ட முடியாமலும், தேவையான எதையும் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். தமிழக முதல்வர் அமைப்பு சாரா நவாரிய சங்கத்திற்கு அறிவித்துள்ள உதவிகளை எங்களுக்கும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பேட்டி பாலசுப்ரமணியம்.
மாவட்ட செயலாளர்.
நிவாரணம் வழங்க கோரி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
கொரனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் கடைகளை அடைத்து வைத்துள்ளோம்.
சுமார்10 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் கடை, மற்றும் வீட்டு வாடகை கட்ட முடியாமலும், தேவையான எதையும் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். தமிழக முதல்வர் அமைப்பு சாரா நவாரிய சங்கத்திற்கு அறிவித்துள்ள உதவிகளை எங்களுக்கும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பேட்டி பாலசுப்ரமணியம்.
மாவட்ட செயலாளர்.
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சியில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைகப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தைகள்,திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269 கடைகள் , மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
எனவே நாள்தோறும் ஏராளமான நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்து மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி தெளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே அதனை எளிதாக்கும் வகையில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதேபோன்று அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் இந்த கிருமிநாசினி சுரங்கம் தொடர்ச்சியாக மருத்துவமனை நேரங்களில் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள் இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் பல இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.

Monday, April 06, 2020
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தீராம்பாளையம் கிராம நியாய விலைக்கடையில் தமிழக அரசின் ஆணைக்கு புறம்பாக
நியாயவிலைக்கடை ஊழியர் கடையில் மக்கள் சமூக இடைவெளி விடாமல் நிற்கவைத்து கொரோனா நிவாரணதொகையும், டோக்கன் விநியோகம் செய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் சென்று கேட்ட பொழுது நியாய விலைகடையிலேயே வைத்து விநியோகம் செய்யுங்கள்,
இரவு 8 மணியனாலும் பரவாயில்லை விநியோகம் செய்யுங்கள் என்று மேலிடத்து உத்தரவு என்று கூறுவதாகவும், இவ்வாறு மக்களை அலட்சியபோக்கோடு,
முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி இல்லாமல் கூட்டமாக விநியோகம் செய்து வருவது திருச்சியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்துகிறது
நியாயவிலைக்கடை ஊழியர் கடையில் மக்கள் சமூக இடைவெளி விடாமல் நிற்கவைத்து கொரோனா நிவாரணதொகையும், டோக்கன் விநியோகம் செய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் சென்று கேட்ட பொழுது நியாய விலைகடையிலேயே வைத்து விநியோகம் செய்யுங்கள்,
முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி இல்லாமல் கூட்டமாக விநியோகம் செய்து வருவது திருச்சியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்துகிறது
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி முசிறி
முசிறி தெருக்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் காய்கறிகள் விற்க ஏற்பாடு எம் எல்ஏ துவக்கி வைத்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தெருக்களில் சென்று காய்கறிகளை விற்பதற்காக லோடு ஆட்டோ மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது .முசிறி பேரூராட்சி சார்பாக வாரந்தோறும் புதன்கிழமை திருச்சி ரோட்டில், டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள சந்தையில் காய்கறிகள் விற்பனை நடைபெறும் .இந்த வார சந்தையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு பயன்படுத்துவது வழக்கம் .இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வார சந்தை விடுமுறை விடப்பட்டது. இதனால் வியாபாரிகள் சந்தையில் கடை போடுவது தடைபட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது .தெருக்களில் வந்து காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் சிலர் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக லோடு ஆட்டோ ஒன்றில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக உழவர் சந்தையில் வாங்கி வியாபாரத்திற்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து முசிறியைச் சேர்ந்த குடும்பத்தலைவிகள் வாரந்தோறும், காய்கறிகளை சந்தையில் வாங்கி பயன்படுத்தி வந்தோம். வாரசந்தை நடைபெறாததால் சிரமம் ஏற்பட்டது. அதனை போக்கும் வகையில் பேரூராட்சி பேரூராட்சி நிர்வாகம் தெருக்களில் காய்கறிகளை விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த ஆறுதலைத் தருகிறது பொதுமக்களுக்கு கட்டுப்படியாகும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது என்றனர். முன்னதாக காய்கறி விற்பனையை முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், முசிறி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.அப்போது மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திரன் , பேரூராட்சி தலைமை எழுத்தர் சேவியர் சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இதற்காக தையல் கலைஞர் ஒருவரை அணுகி சுமார் ஆயிரத்து இருநூறு முக கவசங்களை தங்களது சொந்த செலவில் தயார் செய்து அதனை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு ,அதனுடன் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டையையும் வைத்து ஒட்டி தா.பேட்டை நியாயவிலை கடைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் தெருக்களில் வீடு வீடாக சென்று முகக் கவசங்கள் இலவசமாக வழங்கியதோடு சுத்தமாக இருக்கவும், வெளியே வரவேண்டாம் எனவும், முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அயல் நாடுகளில் தற்போது முக கவசத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தையல் கலைஞர் உதவியோடு பனியன் துணியில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி சலவைத் தொழிலாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

முசிறி அருகே தாங்களாகவே முன்வந்து கிராமத்தை வெளி தொடர்பிலிருந்து தனிமை படுத்திகொண்ட கிராமத்தினர் - சமூக ஆர்வலர்கள் பாராட்டு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களே தங்கள் கிராமத்தை வெளிதொடர்புகளிலிருந்து துண்டித்து தனிமைபடுத்தி கொண்ட சம்பவம் சமூகஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
முசிறி அருகே மங்கலம்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க வெளியாட்களை கிராமத்திற்குள் வராமல் இருக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராமத்திற்கு வரும் இரண்டு பிரதான வாயில்களை தடுப்புகள் அமைத்து அடைத்தனர். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு, 144 தடை உத்தரவு, அந்நியர்கள் கிராமத்திற்குள் நுழையதடை விதித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கலக்கி கிருமி நாசினி மருந்தாக கிராமங்களின் தெருக்களில் தெளித்தனர். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவையும் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூகஇடைவெளியை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது கிராமத்தை தனிமை படுத்திகொண்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கட்டணாம்பட்டி கிராமத்தில் சமூக விரோதிகளால் பஞ்சாயத்து ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் தள்ளி விடப்பட்டு கற்களைக் கொண்டு மூடப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆதனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கட்டணாம்பட்டி கிராமம் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் தேவைக்காக சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சில சமூகவிரோதிகள் ஆழ்துளை கிணற்றுக்குள் மின் மோட்டார் மற்றும் வயர்களை உள்ளே தள்ளிவிட்டு கற்களைக் கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய கோரி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் இப்பகுதியில் பொதுமக்களும் பஞ்சாயத்து தலைவரும் புகார் அளித்துள்ளனர்.

On Monday, April 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*விவசாயிகளுக்கு நிவாரணதொகை வழங்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் மாண்புமிகு. பாரத பிரதமருக்கும், மாண்புமிகு. தமிழக முதல்வருக்கும் மனு*
மக்களின் உயிர்கொல்லிநோயான காலரா, சின்னமை, பெரியம்மை நோய் வராமல் தடுப்பதற்கு இயற்கையாக நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்துகொடுத்த விவசாயிகள், இன்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஊரடங்கு உத்தரவினால் அடைகின்ற துன்பத்திற்கு அளவில்லாமல் சென்றுவிட்டது. நாங்கள் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து சரியான மழை இல்லாமல் தண்ணீர் இல்லாததால், வறட்சியின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சரியாக சாகுபடி செய்ய முடியாமல், இந்த ஆண்டுதான் விளைச்சளிலும் குலைநோய் தாக்கி சாகுபடி செய்து நெல் விளைச்சல்கண்டோம். அவ்வாறு விளைந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டுசென்று போட்டால் 25 நாட்கள் கழித்துதான் எடை போட்டு எடுத்துக்கொண்டார்கள். அவ்வாறு எடுத்த நெல்லிற்கு 40கிலோவிற்கு ரூ.50/- பெற்றுகொண்டுதான் எடுத்துக்கொண்டார்கள். தர்பூசணி, முலாம் வாழை, திராட்சை போன்ற பழப்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நிலத்தில் பழுத்து அழுவி வீணாகிறது. மலர்கள் மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, செம்மங்கி மற்றும் காய்கறிகள் கேரட், கொடை மிளகாய், பச்சைமிளகாய், வாழை இலை, மரவள்ளிகிழங்கு போன்றவையும் செடியில் இருந்து பறிக்காமல் வாடி வீணாகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க அணியும் முககவசம் தயாரிக்க பருத்தி அவசியம், ஆனால் அந்த பருத்தியை விவசாயிகளிடம் பாதி விலைக்குகூட கொள்முதல் செய்ய மாட்டேங்கறங்க. அதுபோல் பால் உற்பத்தி செய்பவர்கள் பாலினை டீ கடை, ஹோட்டல் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் வீணாகி வீதியில் கொட்டும் நிலைமை ஏற்படுகிறது. எலுமிச்சை பழம் கொரோனா நோய்க்கு உகந்தது என்கிறார்கள் ஆனால் இலட்சகணக்கான எலுமிச்சையை பறித்து விற்க முடியாமல் அங்கும், இங்கும் விவசாயிகள் அழைக்கின்றனர். மாட்டுக்கு வைக்கோல் ஏற்றினால் காவல்துறை பிடிக்கிறது, அறுவடை இயந்திரம் அறுவடைசெய்ய அளவுகடந்த வாடகை கேற்கின்றனர். சாப்பாட்டு இலை ஹோட்டலும், விஷேசங்களுக்கும் இல்லாததால் வயலிலே காய்கின்றது. எல்லாருக்கும் உதவுகின்ற அரசு ஊருக்கே உணவு படைக்கின்ற விவசாயிகளுக்கு உதவவேண்டியது அரசின் கடமை. புதுச்சேரி அரசாங்கம் கூட விவசாயிகளுக்கு முதல் தவணையாக ஏக்கருக்கு ரூ. 5000/- கொடுக்கின்றனர். தமிழக அரசு விவசாயிகளை கொரோனா கோரபிடியிலிருந்து அழிந்துவிட்ட விவசாய சமுதாயத்தை காப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 20000/- கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால்தான் விவசாயிகள் வாழமுடியும். கொரோனா தாக்கத்தைவிட, 10 மடங்கு வறட்சியால் விவசாயிகள் இறப்பதற்கு வழியிருக்கிறது. கடன் வாங்கி வாழை சாகுபடி செய்த திருச்சிமாவட்டத்தை சேர்ந்த விவசாயி வாழை அழிந்துவிட்டதால் தற்கொலை செய்து சமீபத்தில் இறந்தார். இதுபோன்று விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையிலிருந்து காப்பாற்றி, தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 20000/- நஷ்டயிடு வழங்க வேண்டும். கொரோனா-வால் 10பேர் இறந்தால் வறுமையின் காரணமாக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் 100க்கனகாண விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறப்பதற்கு வழிவகுத்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாருக்கும் வாரிவழங்கும் மத்திய, மாநில அரசு பேரிடர் நிவாரணநிதியிலிருந்து தமிழக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20000/- வழங்க வேண்டும் என்று மாண்புமிகு. பாரத பிரதமர் அவர்களையும், மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களையும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக வேண்டிகேட்டுக்கொள்கிறோம். மேலும், எங்கள் சாவிலிருந்து எங்களை காக்க கொரோனா 144 தடை உத்தரவின்போது விவசாயிகளை போராடுவதற்கு வழிவகுத்துவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு *தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL* கூறியுள்ளார்.

கொரொனா எதிரொலி....
மனிதனை சார்ந்து உள்ள
பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட ஜூவராசிகளுக்கு உணவு மற்றும்
தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி
கொரொனா ஊரடங்கில் கால்நடைகள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி திருச்சி புத்தூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலால் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அனல் காற்று வீசுகின்றது.
இதனால் கால்நடைகளும், பறவைகளும் மார்ச் முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கத்தை அதிகமாக உணர்கின்றன. நீருக்காகவும், நிழல்பகுதிக்காகவும் ஒதுங்குகின்றன. கால்நடைகள் மற்றும் பறவைகள் நலன் கருதி உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டியினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக திருச்சி புத்தூர் பகுதியில் அமைத்து உள்ளார்கள். ஜீவராசிகளுக்கு
24 x 7 மணி நேரமும் கிடைக்கும் வகையில் தொட்டியில் தண்ணீர்
வைத்துள்ளனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஏற்கனவே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார்கள். தற்போது கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் உணவளித்து தாகம் தீர்க்கும் தொட்டி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...