Tuesday, May 19, 2020

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் 
சிவராசு தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 67 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்
இதில் 64 நபர்கள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி 
வைக்கப்பட்டுள்ளனர். 
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து 
திருச்சிராப்பள்ளிக்கு திரும்பிய 1 நபருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி 
செய்யப்பட்டுள்ளது. 
 தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை சார்ந்த 4 நபர்களும் பெரம்பலூர் 
மாவட்டத்தை சார்ந்த 14 நபர்கள் அரியலூர் மாவட்டததை சார்ந்த 2 நபர்கள் ஆக 
கூடுதல் 20 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அனைத்து நபர்களும் நலமுடன்
உள்ளனர்

 வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்;கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல் 
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க வேண்டும். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக 
மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 18

மத்திய நிதிஅமைச்சரின் கொரோனா நிதி 
20இலட்சம் கோடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தந்தது - விவசாயிகள்  கோவனதுடன் அறை நிர்வாணத்துடன் ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர்  அய்யாக்கண்ணு  தலைமையிலும், திருச்சி மாநகர தலைவர் மேகராஜன், மாநில செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  கோவணம் கட்டிக்கொண்டு,
அறை நிர்வாணத்துடன் 
ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அதில் இந்திய ஜனத்தொகை130 கோடியில் 85 கோடி பேர் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள்.

பிரதமர் மோடி கொரோனா-வால் பாதித்த மக்களுக்கு ரூ.20 லட்சம் கோடி நிவாரணநிதி ஒதுக்கியவுடனே இந்திய விவசாயிகள் எல்லோரும் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும் என்றும் கூறினீர்கள். ஆனால் 40கிலோ நெல்லுக்கு 
ரூ.60முதல் ரூ.80 வரை லஞ்சம் கொடுத்துதான் விற்றோம். சூறாவளியால் அழிந்த வாழை மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு நஷ்டஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், 
கிடைக்கவில்லை.
நிதியமைச்சரின் அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. ஜனத்தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் விவசாயத்தை சார்ந்தவர்களுக்கு சுமார் 14 இலட்சம் கோடி  நிவாரணமாக கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், விவசாயிகளை கடன்காரர்களாக ஆக்குவதற்காகவும், வங்கி மேலாளர்களை கண்டு விவசாயிகள் ஓடி ஒழியும் அடிமைகளாக்குவதற்காகவும், விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுப்பது எதுவும் இல்லாமலும், கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவது, விவசாயிகள் கடனிலேயே பிறக்க வேண்டும், கடனோடு வாழ வேண்டும் என தான் உள்ளது.
விவசாயிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது சம்மந்தமாகவோ, நிதியமைச்சர் அறிக்கையில் எதுவும் இல்லை.
வெள்ளம் வந்தாலும், வறட்சி வந்தாலும் 
எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் எல்லோரையும் காப்பாற்றுங்கள்.
எனவே, நிதியமைச்சர்  விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்கும்வரை, அதுவரை கடன் தள்ளுபடியும், ஏக்கருக்கு ரூ.20,000/- நஷ்டஈடும்
60வயதடைந்த விவசாயிகளுக்கு சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்று பார்க்காமல் மகன், மகள் இருந்தாலும், நிலம் இருந்தாலும் அரசு ஊழியருக்கு பென்ஷன் கொடுப்பதுபோல் மாதம் ரூ.5,000/- ஓய்வூதியமும், தனிநபர் இன்சூரன்ஸ்-ம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: அய்யாக்கண்ணு,
மாநில தலைவர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்.
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 18

திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள்  மாவட்ட அலுவலகம் முற்றுகை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை
சுமார் 500க்கும் மேற்பட்டமுடி திருத்தும் தொழிலாளர்கள்
இன்று காலை  முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்த ஊரடங்கினால் பல்வேறு தொழில்களும் முடக்கப்பட்டு பொது மக்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து, இருக்கின்றனர்.
தற்போது சில  விதிமுறைகளால் தளர்த்தப்பட்டு பல தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் முடிதிருத்தும் தொழில் மட்டும்
அனுமதி வழங்கவில்லை திருச்சி மாவட்ட சுமார் 1500க்கு மேற்பட்ட கடைகள் உள்ளது.
 இவர்கள் தங்களது வாழ்வாதரங்காள இழந்து தவிக்கின்றனர் எனவே தமிழக அரசு தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம்தோறும் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் மேலும் மேலை நாடுகளில் உள்ளது போல வாடிக்கையாளர்களின் முகவரி அலைபேசி எண் மற்றும் அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் கருவி மூலம் நாள்தோறும் அங்குள்ள அரசிற்கு கொடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்தனர்.


பேட்டி: செல்வராஜ்
 தலைவர்,
திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்.

Monday, May 18, 2020

On Monday, May 18, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே பேரூர் கிராமத்தில் 100 நாள் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி மாரடைப்பில் மரணம் 
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் போது பெண் கூலித்தொழிலாளி மாரடைப்பில் மரணம் அடைந்த சம்பவம் தொழிலாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


 முசிறி ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி அமைந்துள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திருமணத் தான் வாரியில்  உறிஞ்சு குழி அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பேரூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி (55) என்ற பெண்ணும் ஈடுபட்டிருந்தார் அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் இதையடுத்து தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இதுகுறித்து முசிறி ஒன்றிய ஆணையர்கள் உரிய விசாரணை செய்து வருகின்றனர்
On Monday, May 18, 2020 by Tamilnewstv in    
எல்பின் திருச்சியில் தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களை பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி ஏமாற்றி சம்பாதிக்கும் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.

பொதுமக்கள் தற்போது இது போலி நிறுவனம் என்பதை உணர தொடங்கி உள்ளனர்.

 இதனைத்தொடர்ந்து அறம் மக்கள் நல சங்கம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி ஏழை, எளிய பொதுமக்களுக்கும் மற்ற நலிவடைந்தவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்குகிறோம் என்ற போர்வையில் வெளியில் உலா வந்து கொண்டு இருக்கின்றனர்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க தினசரி பத்திரிக்கை, உள்ளூர் தொலைக்காட்சி. தற்போது அடுத்த கட்டமாக சன் பிக்சர்ஸ் நிகராக தற்போது அறம் பிச்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் திரைப்படங்கள் தயாரித்து வருகின்றனர். ( இதில் தானே நஷ்ட கணக்கு பெரியளவில் காட்ட முடியும்) 

இவர்கள் மீது திருச்சி, தஞ்சை, மதுரை என பல ஊர்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என நாம் பலமுறை பதிவிட்டும் காவல்துறை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை. இவர்கள் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன என்பது இன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதல்வர் நிவாரண பணிக்கு ரூ.50 லட்சம் எல்பின் நிறுவனத் தலைவர் ராஜா என்னும் அழகர்சாமியின் பிறந்த நாளுக்கு இரண்டு லட்சம் பேருக்கு நலத் திட்டங்கள் என பணத்தை வாரியிறைக்கும் இவர்களுக்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை வழங்காதது ஏன் ? இதனை தமிழக காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்களை ஏமாற்றிய  இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் செய்தி பரப்புவோர் மீது கொலை முயற்சி நடத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

 தற்போது இவர்கள் நடத்தி வரும் மக்கள் ராஜ்யம் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர்கள் என்னிடம் உதவிகள் மற்றும் பணம் கேட்பார்கள் நான் அவர்களுக்குக் கொடுத்தேன், தர முடியாத சூழ்நிலையில் என்னைப் பற்றியும் எங்கள் நிறுவனம் எல்பின் பற்றியும் அவதூறாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்புகின்றனர் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் யார் யாருக்கு பணம் கொடுத்தார், என்ன காரணத்திற்காக கொடுத்தார், அவர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன, அது யாருடைய பணம் ? மக்களின் பணமா ?இவர் உழைத்து சம்பாதித்த பணமா ? என பட்டியல் வெளியிடுவாரா ?

இவர் நேர்மையாக நிதி நிறுவனம் நடத்தி வந்தால், இவர்கள் மீது முதலில் வழக்கு தொடர்ந்த நபரை இவர் ஏன் தங்களுடன் வைத்துள்ளனர். செய்தி link அனுப்பும் ஓர்  முன்னணி பத்திரிக்கையின் முன்னாள்  நிருபரை, தனது உள்ளூர் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வரும் ஒருவர் முலம் அழைத்து பல லட்சம் பேரம் பேசியது ஏன் ? 


 இவர்கள் பற்றி ஆடியோ வெளியிடும்  புதுக்கோட்டை சத்தியமூர்த்தி மீது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல்  புகார் அளித்தது ஏன் ?

இப்படி தங்களின் பத்திரிக்கையை தங்கள் சுயலாபத்திற்காக நடத்தும் நபர்கள் மக்களின் நலனை அக்கறை கொண்டிருந்தால் இவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு இவர்கள் பணத்தை திருப்பி அளித்திருப்பார்கள் வழக்கில் பார்த்துக்கொள்ளலாம் இன்று இவரால் பாதிக்கப்பட்ட நபர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதும் தங்களைப் பற்றித் தாங்களே புகழ்ச்சியாக பத்திரிகைகள் போட்டுக் கொள்வதும் தங்கள்  மேலுள்ள வழக்குகளை மறைப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பணம் பிடுங்கும் நோக்கத்துடன் நடக்கிறார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக இருந்தால் காவல்துறை அதிகாரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு புகார் கொடுக்க வேண்டியதுதானே ?பொய்யான புகார்களை வைத்தால் காவல்துறையினரிடம் அசிங்கப்பட தான் வேண்டும்.

நாங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு உதவி செய்கிறோம் என்றால் என்ன உதவி செய்துள்ளனர். எவர் எவருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளனர்,
இவர்களால் உதவி உதவி பெற்றவர்கள் யார் யார் என்ற ஆதாரத்துடன் பட்டியலிட முடியுமா? அப்படி இல்லை என்றால் தேவை இல்லாமல் இவர்கள்தான் வதந்தியை பரப்புகிறார்கள் நீதிமன்றத்தில் வழக்கு காவல்துறையால் பதியப்பட்டு உள்ள நிலையில் இவர்கள் நாங்கள் யோகிதை என்பது சொல்வது காவல்துறையை குற்றம் சாட்டுவது போன்று உள்ளது நீதித்துறையை குற்றம் சாட்டுவது போன்று உள்ளது.

இப்படியெல்லாம் பொய்யான தகவல்களை தங்கள் செய்தித்தாளில் பரப்புவதற்காக நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வருகின்றனர்.

விஷயம் மாண்புமிகு. நீதிமன்றத்திற்கு பார்வைக்கு கொண்டு சென்றாள் பத்திரிக்கை தடைசெய்யும் வாய்ப்புள்ளது என்பது நன்றாக படித்த வழக்கறிஞர்களை வைத்து ஆலோசித்து பதிவிட வேண்டும். இல்லை என்றாள் பத்திரிக்கை சட்டப்படிதடை செய்யப்படும்.
உள்ளூர் தொலைக்காட்சி என்று வைத்துக் கொண்டு தங்களுடைய தொலைக்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள செய்திகளை வெளியிடுவது எந்த சட்டத்தின் கீழ் வருகிறது என்று கூற முடியுமா ?தங்களுடைய செய்தித்தாளின் முகவரி எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவரத்துடன் வெளியிடப்படுமா?


இவர்கள் மீது  வழக்குகள் விவரம் FIR  நம்பருடன் சரியான தகவலை நாம் வெளியிட்டும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க  மத்திய மாநில அரசுகள் கண்காணித்து தான் வருகின்றது. செயின் திருட்டு வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது மூன்று வழக்குகள் இருந்தாலே சட்டப்படி அவர்கள் திருந்த  குண்டர் சட்டம் போடுகிறார்கள். இவர்கள் மீது அப்படி குண்டர் சட்டம்போடப்படுமா? பொதுமக்கள் இவர்களது மாய வலையில் சிக்காமல் இருக்க மத்திய மாநில அரசு அதிகாரிகள் இவர்களுக்கு தகவல் சொல்லும் கருப்பாடுகளை எடுத்து உடனடி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆவல்


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்)

 இதுநாள் வரை நிறுவனத்தின் மீது திருச்சி
( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தில் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்கள் இன்று வரை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற போலி நிதி  நிறுவனம் ஒன்று தில்லை நகரில் குற்றப் பொருளாதாரப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து சீல் வைக்கப்பட்டது



மேலும் பல உண்மை தகவல்கள் மற்றும் ஆதாரங்களுடன் விரைவில் சந்திப்போம்.......

 பொது மக்களை பாதுகாப்போம்........

Sunday, May 17, 2020

On Sunday, May 17, 2020 by Tamilnewstv in    
*இறப்பில் எஸ்பிஐ பதவி உயர்வு பெற்ற காவலர்* 

காவல்துறை செய்தி


திருச்சி  காவல்துறையில் 1986ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 35 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பணி செய்து வந்தவர் முருகேசன் இவர் காவல்துறையில் எஸ் எஸ் ஐ என்ற பதவி வகித்து இவரது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார் திருச்சி கே கே நகர் காவல்நிலையத்தில் குற்றப் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

 தற்பொழுது ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக காவல்துறையினர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு விதிமுறைகளை பாதுகாக்க வேண்டி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென எஸ்எஸ்ஐ முருகேசன் அவர்களுக்கு வாந்தி மயக்கம் வந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


  இந்நிலையில் மே7 அன்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக தனியார் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர் தனியார் மருத்துவமனையில் இருதய நோயால் இறந்ததாக தெரிவித்துள்ளனர் ஆனால் நேற்று இரவு இவருக்கு தொற்று ஏதேனும் வழி உள்ளதா என்பதற்கு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் அறிவிப்பு கிடைத்துள்ளது 


பின்னர் அவருடைய இறுதிச்சடங்கு குண்டுகள் முழங்க நடைபெற்றது.
இச்சம்பவம் காவல்துறையினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 16

திருச்சியில்  நிருபர் வெட்டிக்கொலை - கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு 
                 

திருச்சி தாரநல்லூர், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நடேசன் இவரது மகன் மணி (எ) மணிகண்டன் (38)
இவருக்கு 
பழனியம்மாள் என்ற மனைவியும் ஷிவானி, சிவசாமி  மற்றும் சிவஹரி என்ற மூன்று பிள்ளைகளை கொண்டு இவர் "போலீஸ் பார்வை" என்ற மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தார்.  அதே பகுதியில் பால்ராஜ் என்பவர் சேவியர் அரிசி ஆலையில் நடத்தி வருகிறார். அங்கு முறைகேடாக  ரேஷன் கடை அரிசியை வாங்கி அதை விற்று வருவதாக அறிந்த அவர் இது குறித்து செய்தியை எடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரிசி மில் உரிமையாளர் பால்ராஜிக்கும் மணிக்கு தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30மணி அளவில் மணி விட்டிற்க்கு வந்த காம் தூக்கும்  தொழிலாளர்களான அலங்காநதபுரத்தை  சேர்ந்த ஜான், அஜித்குமார் மற்றும் பாலு ஆகியோர்  வீட்டிலிருந்த மணியை வாசலுக்கு இழுத்து வந்து அவரின் மனைவி பிள்ளைகள் கண் எதிரே சாமரியாக   வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து தகவல் திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஜான், அஜித்குமார், பாலு ஆகியோரை தேடி வருகின்றனர்
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
மனவேதனையால் மாற்றுத் திறனாளி ரெயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.


விருதுநகர் மாவட்டம், கே.புதூர் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் வயது 36. இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில்வே ஊழியராக (கிளர்க்) வேலை பார்த்து வருவதோடு ரெயில்வே குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான காசிநாதனுக்கு அவ்வபோது மதுரைக்கும் பணிக்கு அனுப்பதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது பொது போக்குவரத்து முடக்கத்தால் மதுரைக்கு செல்ல முடியாமல் தவித்த காசிநாதன் இன்று இரவு தான் வசித்த வீட்டில் தூக்கில் தொங்கி அந்த ஒயர் அறுந்த நிலையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீட்டில் ஒரு பேப்பரில் இறப்பிற்கான காரணம் எழுதப்பட்டிருந்தது. அதில் பொது போக்குவரத்தே இல்லாத சூழலில் மதுரைக்கு செல்லச் சொல்கிறார்கள், 120 கிலோ மீட்டர் மதுரைக்கு எப்படி செல்ல முடியும் என்ற வேதனையை கடிதத்தில் எழுதி இருந்தார்.
மாற்றுத்திறனாளியான காசிநாதன் ரெயில்வே ஊழியராக உள்ள நிலையிலும் கூட போக்குவரத்து இல்லாத சூழலில் அடுத்த இடத்திற்கு பணிக்கு செல்ல அறிவுறுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
*வையம்பட்டி வட்டாரம் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது*.

வையம்பட்டி வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் மண் மாதிரி சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.விவசாய நிலங்களில் இருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு அதன் அடிப்படையிலேயே உரம் மற்றும் இடுப்பொருள்கள் பரிந்துரைக்கப்படுகிறது .

மேலும் அந்த மண்மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு மண்வள அட்டைகள் சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி பருவத்திற்க்கு முன்னதாக வழங்கப்படும் . அதற்காக நம் வையம்பட்டி வட்டாரத்தில் முகவனூர் தெற்கு , பழையக்கோட்டை , குமாரவாடி , அனியாபூர் , நடுப்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உதவி வேளாண்மை அலுவலர் மூலம் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது .
                   உரச்செலவைக் குறைக்கவும் மகசூலை அதிகரிக்கவும் மற்றும் களர் , உவர் நிலங்களை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து மகசூல் அதிகரிக்கவும் , மண் தன்மைக்கேற்ப பயிர் செய்து விளைச்சலை பெருக்கவும் மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள உர அளவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . எனவே விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மண்வளத்தை பரிசோதித்து அதன் அடிப்படையில் உரமிட்டு பயன்பெறும்படி வையம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு திருமதி பூ.வசந்தா அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் .

12.05.2020 அன்று வையம்பட்டி வட்டாரத்திற்கு திருச்சி மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) திரு.இளங்கோவன் அவர்கள் ஆய்வு பணிக்கு வருகை தந்த போது தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - பயறு மற்றும் சிறுதானிய பயிர்கள், விநியோகம் திட்டத்தில் லெட்சம்பட்டி கிராமத்தில் அமைத்துள்ள  உளுந்து விதைப்பண்ணை, வம்பன்8,மற்றும் தெற்கு அம்மாபட்டியில் கம்பு, தனசக்தி விதைப்பண்ணையை ஆய்வு பணி செய்தார்கள்,ஆய்வு பணியின் போது தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், மாவட்ட ஆலோசகர் திரு.சந்தான கிருஷ்ணன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) திருமதி. பூ.வசந்தா, வேளாண்மை அலுவலர் மேனகா,உதவி விதை அலுவலர் நா.செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் எஸ்.சிவக்குமார், இராமசுப்பிரமணியன்,அட்மா அலுவலர் கலைச்செல்வன், பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர்.