Friday, May 22, 2020

On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
சுதந்திரத்திற்கு பின் 
நம்நாட்டிலேயே அகதிகள் போல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்வதற்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.
ஜோதிமணி எம்.பி.பேட்டி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கிருமி நாசினி இயந்திரம் மற்றும் முழுகவச உடை உள்ளிட்டவைகளை கரூர் எம்.பி.ஜோதிமணி வழங்கினார்.
பின்னர் சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
இந்த நேரத்திலும் கூட டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது என்பது மிகுந்த வேதனை என்ற நிலையிலும் மேலும் 2 மணி நேரத்தை கூட்டியிருப்பது அதை விட வேதனை.
நம் நாட்டில் சுதந்திரத்திற்கு பின் சொந்த நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அகதிகளைப் போல் காலில் ரத்தம் வடிய நடந்து செல்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அப்படி ஏதும் கொடுக்கப்படவில்லை. அப்படியானால் ஒரு லட்சம் கோடியை மக்களின் வங்கிக் கணக்கில் 7500 வீதம் செலுத்தி இருக்கலாம் என்று கூறினார்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 22

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். 


ஊரடங்கு உத்தரவு ஆரம்பத்திலிருந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 45 நாட்களுக்கு மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இன்று திருச்சி காஜப்பேட்டை தண்ணீர் தொட்டி 
வளாகத்தில்
 பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவகர், வெல்லமண்டி சண்முகம், சந்திரு, கணேஷ் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 68 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 நபர்கள்
பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகைபுரிந்த 282 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டதில் 278 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 
நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க  வேண்டும்விழித்திரு - 
விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க  வேண்டும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை 
கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொது மக்கள் அனைவரும் முழு 
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டனர்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக தடை உத்தரவு அமலில் 
உள்ளதால் தமிழக முதலமைச்சர் அவர்கள் வெளிமாநில 
தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு 
பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆணையிட்டுள்ளார்.
அதன்படி 15
மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த இராஜஸ்தான் மாநிலத்தை 
சேர்ந்த தொழிலாளர்கள் 773 நபர்கள் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் ரயில் 
நிலையத்திலிருந்து சமூக இடைவெளி கடைபிடித்து இரவு உணவு வழங்கி
சிறப்பு இரயில் மூலம் பயணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு இன்று (22.05.2020) அனுப்பி வைத்தார்
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 
அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 தேதி 
அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை 
செய்யப்படுகிறது. 

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள் 
விழா அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 
மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் 
சிவராசு அறிவிப்பு 

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள் விழா 
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும்  தெரிவித்ததாவது
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 144 – தடை உத்தரவு அமலில் 
உள்ளதால் பொது மக்களின் நலன் கருதியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
எனவே வருகின்ற (23.5.2020) அன்று மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு 
அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை 
செலுத்துவார்கள். 144 – தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் 
கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் திருவுருவச்சிலைக்கு 
செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறதுஇவ்வாறு மாவட்ட 
ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில்  அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் என் மாறுவதை தடுக்கும் விதமாக விரிவான செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.  


இன்று நாம் எந்த செய்தியும் வெளியிடவில்லை. அவர்களது எல்பின் நிறுவனத்தில் உள்ள முக்கிய லீடர் ஒருவர் நிறுவனத் தலைவர் ராஜாவுக்கு அனுப்பிய ஆடியோ பதிவை கேட்ட பின்பாவது பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்பதே நமது நோக்கம். இந்த ஆடியோ வெளியிட்ட சங்கரிடம்  காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு இந்நிறுவனத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Thursday, May 21, 2020

On Thursday, May 21, 2020 by Tamilnewstv in    
 திருச்சி வருவாய் ஆய்வாளருக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் பிர்காவில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த  சேகர் என்பவர் 20.5.2020 அன்று வாகன விபத்தில் படுகாயமடைந்தார்.

 திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 21.5.2020  அதிகாலை இறந்துவிட்டர் .

 பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பிறகு ஈமச்சடங்கு நிதியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
On Thursday, May 21, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

திருச்சியில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம் சமுதாய மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண பொருட்களை அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

 கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பலர் வருவாய் இழந்து உணவன்றி ஏழை - எளியவர்கள், ஆதரவற்றோர் தவித்து வருகின்றனர்.


 அவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பலர் அரிசி, காய்கறி ஆகியவற்றை உதவி செய்து வருகின்றனர். 


 இந்த வகையில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்.

 அதன் ஒரு பகுதியாக இன்று சையது முத்தரசா பள்ளியில் நிவாரண பொருட்களை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் ஜவஹர்லால் நேரு, வெல்லமண்டி சண்முகம், பகுதி செயலாளர் அன்பழகன், சந்து கடை சந்துரு,   பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, May 20, 2020

On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in ,    
மணப்பாறை அருகே
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை.
உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
             

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியைச் சேர்ந்தவர் பிச்சாண்டவர். விவசாயி. இவருக்கும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்த தாமரைச் செல்விக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் நடைபெற்றது.


             
பின்னர் நிறைமாத கர்ப்பிணியான தாமரைச் செல்விக்கு கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி நள்ளிரவு மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் 10 ம் தேதி காலை பிறந்த குழந்தையின் தொடையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையிலேயே 15 நாட்களாக தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆனாலும் குழந்தைக்கு அவ்வபோது காய்ச்சல் ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதுதொடர்பாக மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு முறை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போதும் கொரோனா காலகட்டமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி 45 நாட்களுக்கு பின்னர் அந்த குழந்தைக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை இன்று காலை முதல் காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்து கதறி அழவே வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தொடையில் முதலில் தடுப்பூசி போட்ட இடத்தை பார்த்த போது அதில் லேசாக ஊசி ஒன்று தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து லேசாக அமுக்கி பார்த்த போது பாதி ஒடிந்த நிலையில் இருந்த ஊசி முழுவதுமாக வெளியே வந்தது.
இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான தாமரைச் செல்வி குடும்பத்தினர் மீண்டும் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறி தொடையில் உடைந்த நிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஊசியை காண்பித்தனர்.
மேலும் முதலில் தடுப்பூசி போட்டு ஊசி உடைந்து தொடையிலேயே விட்டுச் சென்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி மருத்துவ அதிகாரியிடம் புகாரும் அளித்தனர்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு இரண்டாவது நாளே போடப்பட்ட ஊசி உடைந்த நிலையில் சுமார் 70 நாட்கள் தொடையிலேயே இருந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட செவிலியரை உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.

பேட்டி :
1. தாமரைச்செல்வி, குழந்தையின் தாய்.
2. அமிர்தம், குழந்தையின் அம்மாச்சி.