Thursday, May 28, 2020
On Thursday, May 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் ,
முசிறி அருகே தா.பேட்டைக்கு மும்பையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
முசிறி தாலுகா தா.பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் .இவர் கடந்த பத்து வருடங்களாக மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்துடன் மும்பையில் வசித்த செந்தில்குமார் மும்பையிலிருந்து விமானம் மற்றும் கார் மூலம் பயணித்து மனைவி தீபா மகன் கவின் அஸ்வின் ஆகியோருடன் தா.பேட்டைக்கு நேற்று வந்துள்ளனர் . வரும் வழியில்
இவர்களுக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவில் தீபா, கவின் ,அஸ்வின் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் தகவல் தா.பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு கோவையில் இருந்து தெரியவந்தது. இதையடுத்து தா.பேட்டை சேர்ந்த சுகாதார குழுவினர் மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதிகளில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது . இச்சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது .மேலும் தா.பேட்டை முழுவதும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
On Thursday, May 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
பட்டா பதிவுக்கு அதிகபணம் வசூல் ! அரசு
94 கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டி செக்ரட்டரி செல்வராஜ் என்பவரின் மனைவி அஞ்சலா தேவி, செல்வராஜ் அவர்கள் பணிபுரியும் கூட்டுறவு சொசைட்டியில் தமிழக அரசின் இ-சேவை மையம் அமைந்துள்ளது, 94கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டி செகரட்டரி செல்வராஜ் என்பவர் தமிழக அரசின் இ-சேவை மையம் இ சேவை பாஸ்வேர்டு யூசர் ஐடி ஆகியவற்றை தனது மனைவி அஞ்சலி தேவி என்பவர் மூலம் மனச்சநல்லூர் சமயபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஆரியமாலா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ளது மங்கை சென்டரில் திருட்டுத்தனமாக உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளதாகவும்
தமிழக அரசின் இ-சேவை மையத்தில் பாஸ்வேர்டு, ஐ டி ஆகியவற்றை உபயோகப்படுத்தி செல்வராஜ் மனைவி அஞ்சலி தேவி என்பவர் தனியாக ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் தமிழக அரசின் அனைத்து விதமான விண்ணப்பங்கள் என ஊரில் அமைந்துள்ள மங்கை சென்டரில் பதிவேற்றம் செய்வதாகவும், மேலும் தமிழக அரசின் தொகையை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்கிறார் எனவும் தமிழக அரசின் உத்தரவுப்படி பதிவேற்றம் செய்யாமல் ஜெராக்ஸ் மட்டும் வைத்து விண்ணப்பம் பதிவேற்றம், பட்டா பெயர் மாற்றம் செய்ய அரசு உத்தரவுகளை பின்பற்றாமல் அடக்கமான கடன் பத்திரங்களிலும் பதிவேற்றம் , மேலும் வில்லங்க சான்று இல்லாமல் பதிவேற்றம் செய்வதாகவும், ஜெராக்ஸ் வைத்து பதிவேற்றம் செய்வதற்கு 500 முதல் 1000 ரூபாய் மேலும் வில்லங்கமான பாத்திரங்களை பதிவேற்றம் செய்வதற்கு 1000 முதல் 1500 வரை வசூல் செய்வதாகவும், படிப்பறிவு இல்லாதவர்கள் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது நானே பட்டா வாங்கி தருகிறேன் என்று அவர்களிடம் ரூபாய் 5000 முதல் 1500 வரை வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது, படிப்பறிவு இல்லாத மக்கள் விரைவில் பட்டா வரவேண்டி அஞ்சலிதேவி கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர் மேலும் தமிழக அரசின் இ-சேவை (சிஎஸ்சி) மையத்தின் பாஸ்வேர்ட் யூசர் ஐடி ஆகியவற்றை உபயோகப்படுத்தி செல்வராஜ் மனைவி அஞ்சலி தேவி என்பவர் மாதம்தோறும் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார் எனவும் செல்வராஜ் என்பவர் கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டியின் தமிழக அரசின் இ-சேவை சிஎஸ்சி பாஸ்வேர்டு அண்ட் யூஸர் ஐடி யை உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Wednesday, May 27, 2020
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
*திருச்சி வருகை தந்த பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு*
கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 78 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று 27.5. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ஜெகநாத், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி ஆட்சியர் பயிற்சி சித்ரா விஜயன் துணை ஆட்சியர் பயிற்சி செல்வி சரண்யா மற்றும் பலர் உடன் உள்ளனர்.திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 38 நபர்கள் இண்டிகோ விமானம் மூலம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் செல்கின்றனர்.
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்க விழிப்புணர்வுக்காக செய்திகள் வெளியிட்டு வருகிறோம் .
மேலும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒன்றுக்கு மூன்று தருவதாக கூறி ஒரு வருடம் முடிந்த பின்பு அவர்கள் பணம் கேட்டு வந்தால் கொடுப்பதை வாங்கிக் கொள் இல்லை என்றால் தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் எங்களுக்கு உள்ளது அதோடு நீ கொடுக்கும் வழக்கும் ஒன்றுதான் என்று அதன் நிறுவனர் ராஜா என்கிற அழகர்சாமி,ரமேஷ்குமார் என்கிற எஸ் ஆர் கே ரமேஷ் இருவரும் முதலீட்டாளர்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து பேசுகிறார்களாம் நாங்கள் எந்தத் துறைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டியது கொடுத்து தான் நாங்கள் இந்த தொழிலை நடத்தி வருகிறோம்.
மேலும் இவர்கள் நடத்தி வரும்அறம் மக்கள் நல சங்கம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இரண்டு லட்சம் நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இரண்டு லட்சம் நபர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குகிறார்கள் என்று நினைத்தால் அதையும் அவர்கள் பிசினஸாக செய்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களது எல்பின் நிறுவனத்தில் உள்ள முக்கிய லீடர் ஒருவர் நிறுவனத் தலைவர் ராஜாவுக்கு அனுப்பிய வீடியோ பதிவை பார்த்த பின்பாவது பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்பதே நமது நோக்கம். மத்திய அரசு மாநில அரசு முறையான விசாரணை மேற்கொண்டு இந்நிறுவனத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.*
திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் இராணுவ இடத்தின் பிரச்சினையால் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை செயலர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் இன்று ஜங்ஷன் மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது இதனை நெடுஞ்சாலைத்துறை செயலர் மேம்பாலப் பணிகளை விரைவில் முடிப்பதற்க்கான சாத்தியக்கூறுகளை இன்று ஆய்வு செய்தார். மாற்று இடமாக தமிழக காவல் துறை இடத்தை இராணுத்திற்க்கு வழங்க இருப்பதாக கூறினார். அதற்க்கான திட்டம் வரையறுக்கப்பட உள்ளதாகவும் விரைவில் மேம்பாலப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
மணப்பாறை அருகே
மாட்டு வண்டியில் மணல் திருடி மலைபோல் வீட்டில் குவிப்பு.
2 பேரை கைது செய்த போலீசார். மணலை பறிமுதல் செய்த வருவாய்துறையினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக திருச்சி மத்திய மண்டல டி.ஜ.ஜி பாலகிருஷ்ணனுக்கு தகவல் சென்று கொண்டிருந்தது. இதே போல் இன்றும் மாட்டு வண்டிகளில் மணலை திருடிச் சென்று வீட்டில் குவித்து வைத்து விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் அரியாறு பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் சென்று வீடுகளில் குவித்து வைப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 40, சித்தநாதன் வயது 29 ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரியா வயது 28 என்பதை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் மலைபோல் மணல் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மணப்பாறை வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு எடுத்து வந்து குவித்து வைத்துள்ளனர்.
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சனில் இருந்து பீகார் மாநிலத்தை சர்ந்த 839 நபர்கள்
சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு இன்று (27.5.2020) அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்
தமிழக அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்தில் உள்ள
சொந்த ஊர்களுக்கு சிறப்பு இரயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்று
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்
அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 248 அரியலூர் மாவட்டத்தில் 133
புதுக்கோட்டை மாவட்டத்தில் 157
பெரம்பலூர் மாவட்டத்தில் 148 திண்டுக்கல் 139 கரூர்
14 ஆகிய 6 மாவட்டங்களில் பணிபுரிந்த வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 339
நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தின் சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக
இடைவெளியை கடைபிடித்து திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சனுக்கு அழைத்து
வரப்பட்டு மதிய உணவு வாட்டர் பாட்டில் பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள்
ஒவ்வொருக்கும் வழங்கப்பட்டு இன்று (27.05.2020) பீகார் மாநிலத்திற்கு சிறப்பு இரயில்
மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மாவட்ட
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.
Tuesday, May 26, 2020
On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 26
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.
கோவிந்தராஜூலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி ஆட்சியரை சந்தித்தோம். கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தி எங்களது குறைகளையும், அரசு செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறினோம். மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான ஊழியர்கள் சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. மே மாதத்திற்கான சம்பளம் தற்போது நிலுவையில் உள்ளது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் வரி, மின்சார கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் தெரிவித்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பான முடிவை அரசு எடுத்து அறிவிக்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும். சனிக்கிழமை முதல் தொழில் நிறுவனங்களை திறந்து தொழில் புரியலாம் என்று தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் வெள்ளிக் கிழமைக்குள் அரசு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.
On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிகர்நாடக மாநிலத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அந்த 72 பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 72 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று 26.5. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...




