Thursday, June 18, 2020

On Thursday, June 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டத்தில் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி தமிழகமெங்கும் மோசடி வழக்குகள் இருந்தும் 


அவர் பதவி வகிக்கும் கட்சியின் கட்சித் தலைவரை இழிவாக பேசிய ரகசிய வீடியோ

 தற்போது திருச்சியில் மையமாக வைத்து எல்பின் என்ற போலி நிறுவனம் நடத்தி வருபவர்கள் எல்பின் நிதிநிறுவன உரிமையாளர்கள் 


எல்பின் நிதி  நிறுவனத்தை பற்றி உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய வீடியோ

ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இவர்களைப் பற்றி பல்வேறு ரகசிய தகவல்களை வெளியிடும் பரமசிவம் என்கிற பரம வளவன் இவர்கள் மட்டுமன்றி தான் பொறுப்பு வகிக்கும் கட்சித் தலைவரை அசிங்கமாகவும் இழிவுபடுத்திப் பேசிய வீடியோவால் தமிழகத்தில் பரபரப்பு


மேலும் பல உண்மை வீடியோ ஆதாரங்களுடன் சந்திப்போம்


Wednesday, June 17, 2020

On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. 

  திருச்சி-கரூர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். 

 அப்போது வாரணாசி தேர்தலில் போட்டியிட வேண்டாம். 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். நதிகள் இணைக்கப்படும். விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்கப்படும். 5 லட்சம் ரூபாய் கடன் வட்டி இல்லாமல்  கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். 

 ஆனால் ஓராண்டாகியும் இன்னும் அவற்றை நிறைவேற்றப்படவில்லை. அதனால் நதிகளை இணைக்க வேண்டும். அதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். லாபகரமான விலை கொடுக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டி விரைவில் டெல்லி சென்று நிர்வாண போராட்டம் நடத்தப்படும். கொரோனா பாதிப்புக்கு 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார். ஆனால் விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

 குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  தற்போது உள்ள தண்ணீர் 40 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடைமடை பகுதிகளுக்கு இரண்டு நாட்களில் சென்றுவிடும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் 10 நாட்கள் ஆனாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையாது என்றார். 
On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி புத்தூர் சின்ன மைதான மார்க்கெட்டில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக 60 வியாபாரிகள் இங்கு காய்கறி, மீன், கருவாடு, கோழி மற்றும் ஆடு இறைச்சி  கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இங்குள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இங்குள்ள மார்க்கெட்டை நம்பி தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. அதனால் எங்களுக்கு மாற்று ஏற்பாடு ஏதேனும் செய்து கொடுக்கவேண்டும். செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி இன்று காய்கறி, மீன் மற்றும் கோழிக்கறி வியாபாரிகள் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டத்தில் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வைத்து நிதி நிறுவனம்.

 நடத்தி தமிழகமெங்கும் மோசடி வழக்குகள் இருந்தும் தற்போது திருச்சியில் மையமாக வைத்து எல்பின் என்ற நிறுவனம் நடத்திவரும் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ஆர் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அவர்களின் கூட்டாளிகள் பலரின் மீது தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 சமீபத்தில் ராஜ்குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளரை நேரடியாக சந்தித்து 45 லட்சம் பெற்று தருமாறு புகார் அளித்திருந்தார் தற்போது இன்றைக்கு சேகர் என்பவர் மேலும் ஒரு புகாரை புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். 
அவர் அளித்துள்ள புகாரில்

அந்தப் புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயின் மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருச்சி கல்லுக்குழி யை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனம் என்ற சார்பு நிறுவனமான ஸ்பாரோ குளோபல் டிரேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய புதுக்கோட்டை மூவர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.


 அந்த கூட்டத்தில் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று  ராஜா என்கிற அழகர்சாமி ஆசை வார்த்தையை நம்பி மேற்கூரிய நிறுவனத்தில் கடந்த 29.11.2019 ஆம் ஆண்டு  மொத்தம் 4 1/2 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் இந்த முதலீட்டிற்கு இரண்டு மடங்கு கூடுதலாக தருவதாகவும் செய்தி மொழி முதலீட்டு தொகையாக 9 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர்.

  இந்த காசோலையை பெறுவதற்கு சேகர் அலைந்து திரிந்து இரண்டு மாதங்கள்  பின்பு தான்   ஒரு வருடம் பின் தேதியிட்ட மேற்படி காசோலையை எல்பின் சகோதரர்கள் ஆலோசனையின் பேரில் இவர்களுக்கு கைக்கூலியாக பினாமியாக உள்ள நபர் பாபு கொடுத்துள்ளார்.


 இதற்கு முன்னர் பணம் கட்டியவர்களுக்கு 10 மாதம் கழித்துதான் அவர்களுடைய முதலீட்டை மட்டுமே திருப்பித் தருகிறார்கள் என சேகர் அறிந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு விசாரித்த போது இதேபோல் நிறுவனத்தில் செயல்பாடுகள் அனைத்திலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதால் இதில் உங்களுடைய முதலீட்டை திருப்பிக் கேட்க சென்ற போது நீங்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் தகாத வார்த்தைகளால் நிறுவனத்தில் பங்குதாரர் பாபு என்பவர் திட்டி அனுப்பி உள்ளனர் வேறுவழியில்லாமல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டி என்ற பெயரில் மக்களை மோசடி செய்து வரும் ராஜா என்கிற அழகர்சாமிப் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்கள் அறிவுமணி பால்ராஜ் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

 மேலும் இவர்களின் மீது பல்வேறு புகார்கள் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி என்பவர் தொடர்ச்சியாக இணையதளத்தில் மக்களுக்கு இந்த மோசடி நிறுவனம் குறித்த பல்வேறு தகவல்களை மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் மக்களுக்கு செய்தியை அளித்து வந்தார்.

 ஆனாலும் மக்கள்  இவர்களின் மூளைச்சலவை ஆசை வார்த்தை நம்பி இவர்களிடம் பணம் செலுத்தி  பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக தனது சமூக பணியை மக்கள் பாதிக்காத அளவிற்கு மக்களின் பணத்தை மீட்டு இவர்களின் போலி முகத்திரையை கிழித்து இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும்வரை ஓயமாட்டேன் என்று சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

Tuesday, June 16, 2020

On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
 திருச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு முழுவதும், நோயாளிகளுக்கு, 'ஆக்சிஜன்' செலுத்தும் வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  
 திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு உள்ளது. 

 இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோரை தங்க வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. சில வாரங்களாக, திருச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், எதிர்கால தேவை கருதி, இந்த அரசு மருத்துவமனையில், ஆறு மாடிகள் உடைய, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை கட்டடத்தில் உள்ள வார்டுகள் அனைத்தும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன

 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தும் வகையில், இங்குள்ள, 350 படுக்கைகளுக்கும், பிரத்யேக குழாய் அமைத்து, 'ரெகுலேட்டர்'கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே, 'கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருவோருக்கும், புதிதாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், இந்த வார்டில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது' என, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்
On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி

கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மஞ்சதிடல் பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  
பெண்கள் சிலர் சாமி வந்து ஆடியதால் அப்பகுதி பதட்டத்துடன் காணப்படுகிறது.

 பாதுகாப்பு காரணங்களுக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக நாடு தழுவிய கண்டன நாள் என்ற தலைப்பில் மாநில மத்திய அரசை எதிர்த்து ஆர்பாட்டம்
 மத்திய_மாநில_அரசுகளே!கொரோனாவால்_பாதிக்கப்பட்ட_மக்களுக்கு_நிவாரணம்_வழங்கக் கோரி அகில_இந்திய_அளவிலான #ஆர்ப்பாட்டம்_ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M) சார்பில் திருவெறும்பூர்_காந்தி நகர், செல்வபுரம் கிளை_சார்பில்_செல்வபுரம் ரேசன் கடை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் தஸ்தகீர் தலைமையில்
பா.லெனின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் தவுலத் பாண்டியன், ராதா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
மோடி அரசே!
எடப்பாடி அரசே
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,
   குடும்பத்துக்கு ரூ7500/- மாதா மாதம் நிவாரணம் வழங்கு,
    100நாள் வேலையை200 நாட்களாக உயர்த்தி 256/- தினக்கூலியை கொடு.
     வங்கி_தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனக்கான வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்.
    முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே,
   நகர்புற வேலையில்லாதோர்களுக்கு நிவாரணம் வழங்கு வேண்டி

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக திருச்சி மாநகரில் 70 மையங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Monday, June 15, 2020

On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்

அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 2014 வரை சிங்கப்பூரில் பணி செய்து வந்ததாகும் பணியின் போது நடந்த விபத்தினால் கிடைத்த இழப்பீடு தொகையாக 48 லட்சம் ரூபாயை சிங்கப்பூர் அரசு அவருக்கு நஷ்ட ஈடாக கொடுத்ததை கடந்த 2019ஆம் ஆண்டு ஆயின் மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருச்சி கல்லுக்குழி யை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனம் என்ற சார்பு நிறுவனமான ஸ்பாரோ குளோபல் டிரேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய புதுக்கோட்டை மூவர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

 அந்த கூட்டத்தில் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று  ராஜா என்கிற அழகர்சாமி ஆசை வார்த்தையை நம்பி மேற்கூரிய நிறுவனத்தில் கடந்த 13.11.2019 ஆம் ஆண்டு முதல் 5.12.2019 வரை மொத்தம் 45 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் இந்த முதலீட்டிற்கு இரண்டு மடங்கு கூடுதலாக தருவதாகவும் செய்தி மொழி முதலீட்டு தொகையாக 90 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர் இந்த காசோலையை பெறுவதற்கு இவர்கள் இரண்டு மாதங்கள் ராஜ்குமாரை படைத்துள்ளனர் பின்பு 48 நாட்கள் கழித்து பின் தேதியிட்ட மேற்படி காசோலையை கொடுத்துள்ளனர்.

 இதற்கு முன்னர் பணம் கட்டியவர்களுக்கு 10 மாதம் கழித்துதான் அவர்களுடைய முதலீட்டை மட்டுமே திருப்பித் தருகிறார்கள் என ராஜ்குமார் அறிந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு விசாரித்த போது இதேபோல் நிறுவனத்தில் செயல்பாடுகள் அனைத்திலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதால் இதில் உங்களுடைய முதலீட்டை திருப்பிக் கேட்க சென்ற போது நீங்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் தகாத வார்த்தைகளால் நிறுவனத்தில் பங்குதாரர் பால்ராஜ் என்பவர் திட்டி அனுப்பி உள்ளனர் வேறுவழியில்லாமல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டி என்ற பெயரில் மக்களை மோசடி செய்து வரும் ராஜா என்கிற அழகர்சாமிப் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்கள் அறிவுமணி பால்ராஜ் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும் இவர்களின் மீது பல்வேறு புகார்கள் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஓலா கால்டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்தவரின் கோடீஸ்வரரான ரகசியம் தங்கிய வாடகை ரூம் வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் மானத்திற்கு அஞ்சி தூக்கில் தொங்கி விடுவதாக ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டு இருந்த நபரின் கோடீஸ்வரரான ரகசியம் பல 100 கோடி கொள்ளை அடித்தது எப்படி பல ஆதாரங்களுடன்
On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 15

 திருச்சி ஜி கார்னரில் செயல்பட்டு  வரும் காய்கறி வியாபாரிகள்  தங்கள் கடைகளை மீண்டும் காந்தி மார்கெட்டிற்கு  மாற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர் 


 இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 7ஆம் தேதி திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் காந்தி மார்க்கெட்  அனைத்து காய்கறி சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜுலு இக்கூட்டத்தில் அவருடன் 50க்கு மேற்பட்டோர்கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். 

 இதனை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து அமைச்சர்களை சந்தித்து முறையிட கடந்த வாரம் அவர் சென்னை சென்று வந்தார் இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது 


 இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி தேவர் ஹாலில் வியாபாரிகளும் கொரோனா பரிசோதனை அரசு மருத்துவர்  சாந்தி தலைமையில் நடைபெற்றது.

   நூற்றுக்கும் மேற்பட்ட  பி.ஆர்.சி எனப்படும் கொரோனா தொற்று  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முன்னதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி பரிசோதனை நடைபெறுவதை  பார்வையிட்டார்.