Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    

குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை குளங்களில் மீன் வளர்ப்பதற்கான ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) போஸ்லின் வின்சென்ட்சாம், வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) பொன்காத்தபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்டோ, விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் மருங்கூர் செல்லப்பா, புலவர் செல்லப்பா, முருகேசபிள்ளை, அந்தோணி, வறுக்கத்தட்டு தங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனுமதியின்றி மீன்வளர்ப்பு

கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் குளங்களில் மீன்வளர்ப்பதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மீன்வளர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியின்றி மீன்வளர்ப்பு உரிமம் ஏலம் விடப்பட்டிருப்பதாகவும், எனவே, அந்த ஏலஉரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் பதில் அளித்தனர்.

நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் விடுவதற்கான பல்லிக்கூட்டம் அணை திட்டத்தின் தற்போதைய நிலை, பொய்கை அணையின் நீர்வரத்து கால்வாயான சுங்கான்ஓடை, இரப்பையாறு கால்வாய்களை சீரமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை, பேச்சிப்பாறை அணையை தூர்வாரும் திட்டத்தின் தற்போதைய நிலை போன்றவற்றை விவசாயிகள் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், அரசு மட்டத்தில் இந்த திட்டங்கள் உள்ளன. அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்றனர்.

வருவாய் இழப்பு

பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்டோ, “தக்கலை பகுதியில் பட்டுப்போன மரங்களை வெட்டுவது தொடர்பான கோப்புகள் 50-க்கும் மேல் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார். இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில், சாவித்திரி ரக நெல் விதைகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. விவசாயம் தொடர்பான அனைத்து துறைகளையும் இணைத்து கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டு விட்டன. நெல் விலை ஏற்றத்தாழ்வை சரிசெய்ய அரிசி ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவேண்டும். வராத பட்சத்தில் அவர்களது சார்பாக கலந்து கொள்ளும் அதிகாரிகள், கூட்ட நடவடிக்கைகளை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றனர்.

முன்னதாக, நீர்நிலை புறம்போக்கு இடங்களை அளவீடு செய்ய சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுத்ததற்கு வருவாய் அதிகாரிக்கு விவசாயிகள் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 
On Saturday, September 20, 2014 by farook press in ,    
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் கொடி நாள் நிதியாக வசூலிக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித் துள்ளார்.

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது:-

கொடிநாள் நிதி

முன்னாள் படைவீரர் களுக்கு என தமிழக அரசு சார்பில் ‘கொடிநாள்‘ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இருந்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கென ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் நிதி வசூல் இலக்காக நிர்ணயிக்கப் பட்டு ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் ரசீது புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய அலுவலகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, பொதுமக்களிடம் ரசீது கொடுத்து வசூல் செய்யப் பட்டது. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதற்கான பாராட்டு பத்திரம், சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

புகார் தெரிவிக்கலாம்

கொடிநாள் ரசீது புத்தகம் ரூ. 50, 100 என அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் அதாவது சுமார் ரூ. 4½ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், கொடி ரசீது இல்லாமல் வெளிநபர் மற்றும் முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் நேரில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் பழனிசாமி தெரிவித் துள்ளார்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் சின்னதாராபுரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பரமத்தி சண்முகம் தொடங்கி வைத்தனர். தொழில் அதிபர் கள் வி.கே. துரைசாமி, வி.கே. டி. ராஜ்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தண்ணீர் திறந்துவிட வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய பொருளாளர் கார்வலிஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சூடாமணி, கருப்பசாமி, அஞ் சூர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் கோபால், தென் னிலை தெற்கு துரைசாமி, மொஞ்சனூர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் ரகு நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், நல்லுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னதாராபுரம் ஊராட்சி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
அமராவதி அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் விவ சாயிகள் வாக்குவாதம் செய்ததை தொடர்ந்து கலெக்டர் தலைமையில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்புஏற்பட்டது.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட் டத்திற்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.கூட் டத்தில் நடைபெற்ற விவாதங் கள் விவரம் வருமாறு:-

தங்கவேல் (விவசாயி); கடவூர் ஊராட்சிக்கு உட் பட்ட சுக்காம்பட்டி - இடையப்பட்டி சாலையில் உள்ள ஆற்றுவாரியில் பாலம் கட்டிதர வேண்டும்.

பதில்: இந்த திட்டத் திற்கு ரூ.50 லட்சம் மதிப்பீடு தயாரித்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

சுப்பிரமணியம் (கவுண் டம்பட்டி); சம்பா சாகு படிக்கு கடை மடை பகுதி வரை தண்ணீர் திறந்து விட நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், ‘‘ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு கடை மடை பகுதி வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினர். அப்போது விவசாயி அங்குள்ள வாய்க் கால்களின் மதகுகள் அனைத்தும் பழுதாகி உள்ளது. எப்படி கடை மடை பகுதிக்கு தண்ணீர் செல்கிறது என்று அதிகாரி கூறுகிறார் என்று கூறினார். அப்போது அதிகாரி, பழுதான மதகுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

கடைமடை பகுதி

இதைத்தொடர்ந்து கலெக்டர் குறுக்கிட்டு இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து கடை மடை பகுதி யான சேப்ளாபட்டி வரை விவ சாயத்திற்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

புதிய வாய்க்கால்

பிரகாஷ்கண்ணா (விவசாயி); கரூர் திருச்சி மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து புதிய வாய்க்கால் வெட்டி, வெள்ள காலங்களில் ஏரி, குளங்களுக்கு நீரை நிரப்பும் திட்டம் தயாரித்து செயல்படுத்த வேண்டும்.

அதற்கு பதில் அளித்த அதி காரி ‘‘மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணையில் இருந்து குண்டாறு வரை புதிய வாய்க்கால் மூலம் வெள்ள நீரை கொண்டு செல்லும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. மற்ற புதிய வாய்க்கால் வெட்டும் திட்டத்திற்கு சாத்தியமில்லை. காரணம் கரூர் மாவட்டத்தின் அமைப்பு அவ்வாறு உள்ளது என்று கூறினார்.

அப்போது விவசாயிகள் பலர் எழுந்து மேற்கண்ட திட்டத்திற்கு காமராஜர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த திட்டம் செயல்படுத்தவில்லை. எனவே இந்த திட்டம் செயல் படுத்தினால் பல கிராம மக்க ளுக்கு குடிநீர் தங்கு தடை யின்றி வழங்கலாம். அதே போன்று விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம் என்று கூறி னர்.

தண்ணீர் வழங்கவில்லை

அப்போது மேலும் பலர் எழுந்து கரூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு எங்கெங்கோ தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீத்தப்பட்டிக்கு தண்ணீர் வழங்கவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் தங்கள் சொந்த வயல்களை விட்டு விட்டு, கரூரில் வந்து கூலிக்கு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே நாங்கள் உயிர் வாழ இந்த திட்டத்தை செயல்படுத்தி குடிக்க தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறினர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

வழங்க வேண்டும்

ராமசாமி (விவசாயி); அமராவதி ஆற்றில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை வழங்க வேண்டும்.

திருப்பூரில் 8 வாய்க்கால் களுக்கு தண்ணீர் வழங்கப்படு கிறது. கரூர் மாவட்ட வாய்க்கால்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்று கூறினார். அதற்கு பதில் அளித்த அதிகாரி ‘‘ஆண்டு தோறும் கரூர் மாவட்டத்திற்கு நீர் இருப்பு பொறுத்தே ஒரு போகம் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் வருகிற 22-ந் தேதி முதல் 19.1.2015 வரை பாசனத்திற்கு 120 நாட் களுக்கு அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட அரசுக்கு கருத்துரு அனுப் பப்பட்டு உள்ளது’’ என்று கூறினார். அப்போது விவசாயிகள் பலர் எழுந்து கரூர் மாவட்டத்தில் 2 போகம் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு போகம் தண்ணீர் விடப்படும் என்று அதிகாரி எப்படி கூறலாம்? கடந்த ஆண்டு அமராவதி அணையில் 84 அடி தண்ணீர் இருந்த போது 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விடப்படும் என்று தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர். ஆனால் ஒரு முறை மட்டும் தண்ணீர் வந்தது. அதன் பிறகு தண்ணீர் வரவில்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் காய்ந்து போனது. திருப்பூரில் 1,200 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

சாகுபடி செய்யவில்லையா?

கரூரில் குறுவை சாகுபடி இல்லையா? கடந்த காலங்களில் கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று தண்ணீர் மூலம் மஞ்சள், வாழை, கரும்பு பயிர் சாகுபடி செய்யவில்லையா?

கரூர் மாவட்டத்திற்கு அமராவதி ஆற்றில் தண்ணீர் விடவில்லை என்றால், கரூருக்கு அமராவதி பாசனம் என்பதை வரைபடத்தில் மேப்பில் இருந்து தூக்கி விடுங்கள்.

மேலும் அமராவதி ஆற்றில் இருந்து கரூருக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து 18 ஆண்டுகள் ஆகிறது என்று கூறினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது பதில் அளித்த அதிகாரி ‘‘தற்போது 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று கூறினார்.

மேலும் இந்த கால கட்டத்தில் அமராவதி அணை 2 முறை நிரம்ப வேண்டும் என்று கூறினார்.

அதற்கு விவசாயிகள் குறுக்கிட்டு திருப்பூருக்கு ஏன் தண்ணீர் கொடுக்கிறீர்கள்? அமராவதி அணையின் வரலாறு கரூர் மாவட்டத்தின் கடை மடை பகுதி வரை தண்ணீர் தர வேண்டும் என்பது தான். அதன் பிறகு தான் மற்றவர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.அப்போது கலெக்டர் குறுக்கிட்டு கடந்த திங்கட் கிழமை நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமராவதி அணையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கொடுத்த மனு மீது உடன் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று கூறினார்.

காரசார விவாதங்கள்

அப்போது விவசாயிகள் பலர் எழுந்து அமராவதி அணையில் 40 அடி தண்ணீர் இருந்தாலே, கரூர் கலெக்டர் ஒப்புதல் பெற்று தான் தண்ணீர் திறக்க வேண்டும்.

எனவே கரூர் கலெக்டர் ஒப்புதல் இல்லாமல், அம ராவதி அணையில் தண்ணீர் திறக்க கூடாது என்று கூறி னர்.இதே போன்று நேற்று நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அருணா, வேளாண்மை இணை இயக் குனர் தெய் வேந்திரன், கூட் டுறவு சங்க இணைப் பதிவாளர் சந்தானம் உள்பட விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள குளக்குடிபட்டியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(வயது 60). இவருடைய அண்ணன் பெரியசாமி(வயது 65) விவசாயி. இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தது. இந்தநிலையில் கடந்த 19.3.2013 அன்று பெரியசாமிக்கும், சங்கப்பிள்ளையின் மகன் பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி அரிவாளால் பிரகாசை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் இறந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, பெரியசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி உத்திராபதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும்" விதித்தார்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் தட்டு ரிக்ஷாக்களில் மோட்டார்கள் பொருத்தி அதிவேகமாக இயக்கி வருவதாகவும், இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கு புகார்கள் வந்தது. தட்டு ரிக்ஷாக்களில் மோட்டார் பொருத்தி இயக்கக்கூடாது என்று உத்தரவு அமலில் இருந்தபோதும், இதுபோன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்பட்டு வந்ததால், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகர போலீசாருக்கு கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து திருச்சி மாநகரில் காந்திமார்க்கெட், கண்டோன்மெண்ட், கோட்டை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறை மீறி மோட்டார்களுடன் இயக்கப்பட்ட தட்டு ரிக்ஷாக்களை மடக்கி பிடித்து காந்திமார்க்கெட் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு தட்டு ரிக்ஷாக்களில் பொருத்தி இருந்த மோட்டார்கள் அகற்றப்பட்டன. நேற்று ஒரேநாளில் காந்திமார்க்கெட்டில் 22, கண்டோன்மெண்ட்டில் 3, கோட்டையில் 2 ஆகியவை சேர்த்து மொத்தம் 27 தட்டுரிக்ஷாக்களில் மோட்டார்கள் அகற்றப்பட்டன. மாநகர பகுதிகளில் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருச்சி மாநகர காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றாற்போல், ‘வாட்ஸ்அப், ‘பேஸ்புக்‘ மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் கூறினார்.

இது குறித்து அவர் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நவீன தொழில்நுட்பம்

திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது புதிதாக ‘வாட்ஸ்அப்’ மூலம் புகார் தெரிவிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தநேரமும் வாட்ஸ்அப்பில் தகவல்களை கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். தற்போது இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. காவல்துறையிலும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் 9626273399 என்ற எண்ணுக்கு ஈவ்டீசிங், போக்குவரத்து நெரிசல், விபத்து, குற்ற சம்பவங்கள் குறித்து தகவல்களை அனுப்பலாம்.

இதனை சுழற்சி முறையில் எந்நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இது தவிர மாநகர போலீசில் பேஸ்புக் மூலமும் தகவல்களை தெரிவிக்க முடியும். சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் போலீஸ்நிலையங்கள் உள்பட மொத்தம் 24 போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா 3 கேமரா வீதம் 72 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த போலீஸ் நிலையங்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் கண்காணிக்கப்படும்.

ஓட்டுனர் உரிமம் ரத்து

கடந்த 2013-ம் ஆண்டு 44 கொள்ளை வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 25 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டில் 20 கொலை வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 12 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதாய கொலை ஒன்று மட்டும் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது. ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 127 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 110 பேர் இறந்துள்ளனர். கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 52 வழக்குகளில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 64 பேருடைய உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் இவர்கள் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதி, பெற்றோரை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, துணை கமிஷனர்கள் அபினவ்குமார், ஜெயந்தி, கூடுதல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


On Saturday, September 20, 2014 by farook press in ,    
கல்லக்குடி அருகே தவறி விழுந்து இறந்ததாக கருதப்பட்ட 94 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதனால் மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
வையம்பட்டி பகுதியில் குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

வையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.வையம்பட்டி மற்றும் கருப்பரெட்டியபட்டி காலனி ஆகிய பகுதிகளில் சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், மரியபிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

முற்றுகை முயற்சி

இதே போல் கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்டோ நகர் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அப்பகுதி மக்கள் நேற்று மதியம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.இது பற்றி அறிந்த ஆணையர் லதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவங்களால் மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.