Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகளை காவல் துறை குற்றவாளிகளைப் போல் பாவிக்கக் கூடாது. இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான சட்டத்தை அரசு நிர்வாகம் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் சிஐடியு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று வடமாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இங்கே தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்துத் தெரிவித்தனர். சீனிவாசன் இந்தியில் அவர்களிடம் சிஐடியு செயல்பாடு குறித்து விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சமமான கூலி வழங்க வேண்டும், கூலி வழங்குவதில் காலதாமதம் செய்வது, பாரபட்சம் காட்டுவது கூடாது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, தங்குமிட வசதி, மருத்துவ வசதி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை அனைத்து மாவட்டங்களிலும், திருப்பூர் மாவட்டத்திலும் முறையாக அமல்படுத்த வேண்டும். வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை காவல் துறையினர் பல்வேறு வகையிலும் துன்புறுத்துவது, சந்தேகக் கண்ணோடு பார்ப்பது என அணுகுமுறை உள்ளது. வடமாநிலத் தொழிலாளர்களை பாரபட்சமாகவோ, குற்றவாளிகளைப் போலோ காவல் துறை பார்க்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அனைவரையும் குற்றவாளிகளாக நினைக்கக் கூடாது. இந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். ஜனஸ்ரீ பீம யோஜனா காப்பீட்டுத் திட்டத்தில் இத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
அக்டோபர் 5ம் தேதி மிகப்பெருமளவில் வடமாநிலத் தொழிலாளர்களைத் திரட்டி அவர்கள் கோரிக்கை குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
---------------
ஜெயலலிதாவுக்கு தண்டனை
தலித் விடுதலை இயக்கம் வரவேற்பு
திருப்பூர், செப்.27-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 4 ஆண்டு தண்டனை வழங்கியிருப்பது நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக தலித் விடுதலை இயக்க இணைப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா சனியன்று தெரிவித்தார்.
-----------

On Monday, September 29, 2014 by farook press in ,    






திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,கழகம் சார்பில், முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கர்நாடகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில் ஈடுபட்டனர். அங்கு சுப்பிரமணியசுவாமி உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைதாகி காங்கயம் ரோட்டில் உள்ள காயத்திரி திருமண மஹாலில் போலீசாரால் சிறைவைக்கப்பட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி., கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் நா.சக்திவேல், வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், தம்பி மனோகரன், கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், கலைமகள் எம்.கோபால்சாமி எம்.சி.,உஷா ரவிக்குமார்,எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன், எம்.ஹரிஹரசுதன், சி.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன்,மாமன்ற உறுப்பினர்கள் கே.செல்வம், பிரியா சக்திவேல், நீதிராஜன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,பரமராஜன், பங்க் ரமேஷ்,வளர்மதி கூட்டுறவு ராமச்சந்திரதேவர், முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன்,பாரதிபிரியன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், மகளிர் அணி நிர்வாகிகள் ருக்குமணி, கோமதி சம்பத்,சுந்தராம்பாள் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இந்த நிலையில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தீவிர விசுவாசியும், அண்ணா தி.மு.கழக தொண்டருமான திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சைக்கிள் பூபதி என்பவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அளித்த தீர்ப்பை கேட்டு தனது பெருவிரலை அறுத்துக்கொண்டார்.அவரை அண்ணா தி.மு.கழக மூத்த நிர்வாகிகள் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.

Sunday, September 28, 2014

On Sunday, September 28, 2014 by Unknown   

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (TUJ) -ன் விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் 28.09.2014 காலை 10 மணி அளவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட �TUJ தலைவர் ஜனசக்தி நிருபர் s.பழனிக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் கு.வெங்கட்ராமன் வரவேற்பு உரை நிகழ்த்த மாவட்ட செயலாளர் m.சடையப்பன் முந்நிலை வகித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நவம்பர் 8 தேதி குற்றாலத்தில் 14வது மாநில மாநாடு நடத்த முடிவு செய்ய பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் தினமணி நிருபர் கோ.ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கபட்டதை குறித்து மாநில தலைவரால் பாராட்டப்பட்டது. மாநில தலைவர் டி.எஸ்.ஆர் . சுபாஷ். பேசுகையில், "ஒருவர் சமூகத்திற்காக ஆசிரியராக பணி புரிவது பெரிய பேறு, பத்திரிகையாளராக பணி புரிவது அதைவிட பெரிய பேறு. இந்த இரண்டும் கலந்த ஒரு சிறந்த நபராக அதாவது ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் விளங்கி கொண்டிருக்கும் தோழர்.ஜெயக்குமார் அவர்களுக்கு அகில இந்திய அளவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும், அதற்கான விழாவை நம்முடைய TUJ சங்கமே நடத்த வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இவ்விழாவில் TUJ அமைப்பு செயலாளர் நெல்லை G.பரமசிவம், �S.K.ராஜேந்திரன், சக்திவேல், ராஜா, J.பரமசிவம், M.திருமூர்த்தி, N.பாலமுருகன், P.மணிகண்டன், கார்த்திக் ராஜா, M.கார்த்திகேயன், J.செந்தில்குமார், பிரபாகரன், சிவா, M.ஜெயராஜ், L.முருகன், திலீபன், மணிகண்டன், M.கண்ணன்,  கேப்டன் செந்தில்குமார், �V.சரவணன், தீக்கதிர் முத்துகுரி உட்பட விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தீர்மானம் 1.
இந்த கூட்டத்தில் மறைந்த விருதுநகர் மூத்த பத்திரிகையாளரும் TUJ ன் பொது செயலாளருமான சுந்தர்ராஜன் அவர்களின் மறைவிற்கும், ஆனந்த முரசு J.ராஜா மற்றும் தினபூமி நிருபர் கமலநாதன் ஆகியோரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் 2.
ஆதித்தனார் அவர்களின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் அவருடைய பெயரில் விருதுகள் தருவது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 3.
TUJ ன் கோரிக்கையை ஏற்று 24மணி நேரத்தில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்து வந்த சென்னை மாநகராட்சியின் சூளை ராட்லர் தெருவில் இருந்த TUJ ன் பழைய தலைமை அலுவலகத்தை சீல் வைத்து, போலியான நிர்வாகிகளை வெளியேற்றிய சென்னை மாநகர மேயருக்கு TUJன் நிர்வாக குழு நன்றி தெரிவித்து கொண்டது.
தீர்மானம் 4.
மறைந்த தலைவர் டி.எஸ்.ஆர். -ன் பெயரில் ஒதுக்கப்பட்ட பழைய அலுவலக கட்டிடத்தை தலைவரின் வாரிசும், அகில இந்திய தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட TUJ ன் மாநில தலைவருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து முறையாக சங்கத்தை அதே இடத்தில் நடத்த நிலுவை தொகையில் சலுகை அளித்து உதவ வேண்டும் என மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தது.
தீர்மானம் 5.
குற்றாலத்தில் நவம்பர் 8ல் நடைபெற இருக்கும் 14வது மாநில மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

-செய்தி
உதயகுமார்

Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் கார் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அவரை வாழ்த்தி அவர்கள் கோஷமிட்டனர்

On Saturday, September 27, 2014 by farook press in ,    
சென்னை : பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதால், வழக்கில் நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல உள்ளார்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பரப்பன அக்ரஹாரத்திற்கு அருகில், ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஒசா ரோடு சந்திப்பில் அருகே தடுப்புக்களை தாண்டி, கோர்ட் வளாகம் அருகே சிலர் செல்ல முயன்றனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் : "மக்காச்சோளத்துக்கு யூரியா தேவைப்படும் நேரத்தில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலை கடுமையாக உயர்த்தப்படுகிறது,' என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வேளாண் துறை இணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன், நேர்முக உதவியாளர் அல்தாப் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க பிரதிநிதிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அவர்கள் பேசியதாவது:
துரைசாமி, தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் : உடுமலை உதவி வேளாண் அலுவலக வளாகத்தில், வீணாகக் கிடக்கும் நான்கு எக்டர் நிலத்தில், கிடங்கு அமைக்க வேண்டும். பி.ஏ.பி., தண்ணீர் திறப்பில், தலா 3.5 சுற்று என்ற முடிவை, ஐந்து சுற்றுகளாக மாற்றி, கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும்.
பாலசுப்ரமணியம், உழவர் <உழைப்பாளர் கட்சி மாநில நிர்வாகி: அருள்புரம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு உட்பட்ட சாய ஆலைகள், கழிவுநீரை நிலத்துக்குள் இறக்குவதால், அமராவதிபாளையம், அவரப்பாளையம், வீரபாண்டி, நொச்சிபாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரமூர்த்தி, தாராபுரம் பாசன சபை சங்க தலைவர்: தாராபுரம் தாலுகாவில் உள்ள நான்கு வாய்க்கால்களை, ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிப்பதற்கு பதிலாக, பாசன சங்கத்துக்கு நிதி ஒதுக்கி, அதன் மூலம் பராமரிக்க வேண்டும். நெல்லுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்காச்சோளத்துக்கு யூரியா உரம் தேவைப்படும் நேரத்தில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, உரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது; விலை பட்டியலும் வைக்கப்படுவதில்லை.
லோகநாதன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க அமைப்பாளர் : ஆவின் பால் விலை கட்டுப்படியாகாமல் உள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில், 2.40 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் கொள்முதல், 1.60 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாட்டுப்
பாலுக்கு லிட்டருக்கு ஐந்து ரூபாய், எருமைப்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும்.
பழனிசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர்: திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகே, ரோட்டில் வியாபாரிகள் கடை வைக்கின்றனர்; ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பாதிக்காத வகையில், உழவர் சந்தையை முறைப்படுத்த வேண்டும்.
பரமசிவம், உடுமலை
விவசாயி: தோட்டக்கலைத்துறை திட்டங்கள் குறித்து, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூடுதல் மானியம் பெற்று, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.வெங்கடாசலம், பொங்கலூர் விவசாயி: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டு வராத நிலையில், கடன் வசூலிப்பில் வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. வங்கி நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும்.ரமேஷ்குமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவசாயிகள் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பு
செயலாளர் : திருப்பூர் விவசாயிகள் பாதிக்கும் வகையில் ஓடைகள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில், சாயக்கழிவுகளை கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசுபடு
கிறது. இதை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொன்னுசாமி, பி.ஏ.பி., மங்கலம் பாசன சபையின் முன்னாள் தலைவர்: ஆண்டிபாளையம் மின் அலுவலகம் அருகே உள்ள கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டம்பாளையம், குளத்துப்புதூர் பகுதிகள், இடுவம்பாளையம் மின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இடையூறு ஏற்படுவதால், ஆண்டிபாளையம் அலுவலகத்துக்கே மாற்ற வேண்டும்.இவ்வாறு, விவசாயிகளின் பிரதிநிதிகள் பேசினர்.

On Saturday, September 27, 2014 by farook press in ,    
தாராபுரத்தில் வங்கியில் போலி நகை கொடுத்து ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

நகைக்கடன் 


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதுபஸ்நிலையம் அருகே நாச்சிமுத்துபுதூரில் வங்கி ஒன்றில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடத்தூர் முத்துநாயக்கன்பட்டி குருவன்வலசை சேர்ந்த நாராயணசாமியின் மகன் முத்துசாமி (வயது 34) என்பவர் நகைக்கடன் வாங்க வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அலுவலரிடம் தான் கொண்டு வந்த நகையை காட்டி, அதற்கு ஈடுடாக ரூ.4 லட்சம் கடன் வேண்டும் என்று முத்துசாமி கேட்டுள்ளார்.


உடனே வங்கி அலுவலர்கள் முத்துசாமி கொண்டு வந்த நகையை வாங்கி அது அசல் நகைதானா? என பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் கொடுத்த நகை அனைத்தும் 22 காரட் தங்கம் என தெரியவந்தது. மேலும் முத்துசாமி கொண்டு வந்த 186 கிராம் நகையின் எடைக்கு ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கடன் தர முடியும் என்று வங்கி அலுவலர்கள் கூறினார்கள்.
ரூ.3½ லட்சம் கடன் 
ஆனால் முத்துசாமி ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் 186 கிராம் நகையை முத்துசாமி வங்கி அலுவலரிடம் கொடுத்தார். ஆனால் வங்கி அலுவலர்களோ மீண்டும் அந்த நகையை பரிசோதித்து பார்க்காமல் ரூ. 3 லட்சத்து 42 ஆயிரத்தை முத்துசாமியிடம் கொடுத்தனர். பணத்தை வாங்கிய முத்துசாமி அங்கிருந்து சென்று விட்டார்.
அன்று மாலை வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வங்கியில் உள்ள நகையை பரிசோதித்து பார்த்தார். அப்போது முத்துசாமி கொடுத்த நகை அனைத்தும் போலி என தெரியவந்தது.
இதையடுத்து வங்கி தலைமை கிளை மேலாளர் ராஜகோபால் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொம்மு, சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் முத்துசாமி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முத்துசாமி இதுபோல் வேறு எங்கும் மோசடி செய்தாரா? வங்கியில் அவர் கொடுத்த முகவரி உண்மையானது தானா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை 
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்கேற்ப நிலைய வளாகத்திற்குள் சுமார் 70–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் நேற்று ரெயில்வே அதிகாரிகளின் உத்தரவு பேரில் ஆட்டோ நிறுத்தம் ரெயில் நிலையத்தின் வெளியே திடீரென்று மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள் ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ரெயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியதாவது:–
திருப்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் சுமார் 70–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறோம். நேற்று ரெயில்வே அதிகாரிகள் திடீரென்று ரயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்காமல், வெளியே ரோட்டோரத்தில் நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் ரெயில் நிலையத்தின் வெளியே ஆட்டோக்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. எனவே திருப்பூர் ரெயில் நிலையத்தின் வளாகத்திலேயே ஆட்டோக்களை நிறுத்தி தொழிலை தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் ஆட்டோ ஓட்டுனர்கள் ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு பழைய இடத்தையே எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரி ஆட்டோ ஓட்டுனர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் கலைந்து சென்றனர்.
தகுந்த நடவடிக்கை
இது குறித்து திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரி குயிலன் கூறும்போது:–

ரெயில் நிலைய வளாகத்திற்குள் இருந்து வந்த ஆட்டோ நிறுத்தம், மேல் அதிகாரிகளின் உத்தரவுபடி வளாகத்திற்கு வெளிபுறமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடம் தங்களுக்கு வசதியானதாக இல்லை. இதனால் வளாகத்திற்குள்ளேயே எங்கள் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் ரெயில் நிலைய கோட்ட அதிகாரி திருப்பூர் ரெயில் நிலைய ஆய்வுக்காக இங்கு வர உள்ளார். அப்போது அவரிடம் ஆட்டோ ஓட்டுனர்களின் குறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.