Wednesday, October 01, 2014
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் சோகத்தில் கோவை அ.தி.மு.க. தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பூசாரிப்பாளையம், சத்யாநகரை சேர்ந்த செல்லமுத்து என்பவருடைய மகன் ரஜினிகாந்த் (வயது 35), அ.தி.மு.க. உறுப்பினர். கட்டிடங்களுக்கு அலுமினிய ஜன்னல் மற்றும் கம்பிகளை பொருத்தும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடந்த 27–ந் தேதி முதல் ரஜினிகாந்த் சோகத்தில் இருந்தார்.
கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்த அவர், அந்த பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களிடம், ‘ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், எனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க.வினரின் உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்தின் அண்ணன் குமார் உள்பட பலர் கலந்துகொள்ளச்சென்றனர். வீட்டில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு அந்த படத்தின் முன்பு ரஜினிகாந்த் சோகமாக காணப்பட்டார்.
திடீரென்று விஷத்தை எடுத்து குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கோவில் மண்டபம் இடிந்து விழுந்து பூசாரிகள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், மேதர் பிள்ளையார் கோவில் தெருவில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, அதிகாலையில் எழுந்து பூஜை செய்வதற்காக இந்த கோவிலின் பூசாரிகள் பழனிசாமி, குமார், மணிகண்டன் மற்றும் கோத்தகிரி பண்ணாரி அம்மன் கோவில் பூசாரி சோமசுந்தரம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கோவில் மண்டபத்திலேயே படுத்து தூங்கினர்.
இரவில் அந்த பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோவிலில் நின்று கொண்டிருந்த பங்களா மேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில் (வயது 35) மற்றும் அவருடைய நண்பர் பிரபாகரன் (27) ஆகியோரும் பூசாரிகளுடன் கோவில் மண்டபத்திலேயே தூங்கினார்கள்.

பலத்த மழை காரணமாக நள்ளிரவு 1 மணியளவில் கோவில் மண்டபம் அருகே இருந்த சாக்கு குடோன் சுவர் இடிந்து மண்டபம் மீது விழுந்தது. இதில் மண்டபத்தின் மேற்கூரை உடைந்து உள்ளே தூங்கிக் கொண்டு இருந்தவர்களின் மேல் விழுந்தது. இதனால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
வெளியே வரமுடியாததால் 6 பேரும் காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர். ஆனால் பலத்த மழையால் அவர்களது சத்தம் வெளியே கேட்கவில்லை.
நேற்று காலை 6 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் மண்டபம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் பூசாரிகள் பழனிசாமி, குமார் மற்றும் பிரபாகரன் ஆகியோர் பரிதாபமாக பலியாகி இருந்தது தெரியவந்தது. போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லாரி டிரைவர் செந்தில் (35), பூசாரிகள் சோமசுந்தரம் (36), மணிகண்டன் (25) ஆகியோர் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்தவர் சுப்பிரமணியன் சாமி ஆவார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அவர் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என்று வர்ணித்தார். "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். ரூ.100 கோடி அபராதம் என்பது அவருக்கு ஒன்றுமேயில்லை. என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலை ஜெயிலில் வைக்கும் பணியினை செய்ய உள்ளேன். கிறிஸ்துமஸ்க்குள் முடியும் என்று நம்புகிறேன். என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்தவர் சுப்பிரமணியன் சாமி ஆவார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அவர் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என்று வர்ணித்தார். "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். ரூ.100 கோடி அபராதம் என்பது அவருக்கு ஒன்றுமேயில்லை. என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலை ஜெயிலில் வைக்கும் பணியினை செய்ய உள்ளேன். கிறிஸ்துமஸ்க்குள் முடியும் என்று நம்புகிறேன். என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு காலை உணவாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது. அவர், தமிழ், ஆங்கில செய்தித்தாள்களை படித்ததாகவும் தகவல்கள் வெளியாக இருக்கிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.130 கோடி அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு சிறையில் தனிஅறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த அறையில் மின்விசிறி, மெத்தை, சுடு தண்ணீர், தொலைகாட்சி பெட்டி, குளிர்பதன (ரெப்ரிஜிரேட்டர்) ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. சிறையில் உள்ள தனி அறையில் நேற்று நள்ளிரவு தூங்கிய ஜெயலலிதா, அதிகாலை 5.30 மணியளவில் எழுந்து விட்டதாகவும், அதன்பிறகு, சிறை வளாகத்திலேயே சிறிது நேரம் அவர் நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பிறகு, அவருக்கு காலை உணவாக சிறையில் தயாரிக்கப்பட்ட ‘புலாவ்‘ வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு ‘புலாவ்‘ சாப்பிட்ட விருப்பம் இல்லை என்று ஜெயலலிதா சொன்னதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து, வெளியில் இருந்து இட்லி மற்றும் சாம்பார் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை அவர் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர 3 தமிழ் செய்தித்தாள்களும், 2 ஆங்கில செய்தித்தாள்களும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. அந்த 5 செய்தித்தாள்களையும் அவர் படித்ததாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.130 கோடி அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு சிறையில் தனிஅறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த அறையில் மின்விசிறி, மெத்தை, சுடு தண்ணீர், தொலைகாட்சி பெட்டி, குளிர்பதன (ரெப்ரிஜிரேட்டர்) ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. சிறையில் உள்ள தனி அறையில் நேற்று நள்ளிரவு தூங்கிய ஜெயலலிதா, அதிகாலை 5.30 மணியளவில் எழுந்து விட்டதாகவும், அதன்பிறகு, சிறை வளாகத்திலேயே சிறிது நேரம் அவர் நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பிறகு, அவருக்கு காலை உணவாக சிறையில் தயாரிக்கப்பட்ட ‘புலாவ்‘ வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு ‘புலாவ்‘ சாப்பிட்ட விருப்பம் இல்லை என்று ஜெயலலிதா சொன்னதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து, வெளியில் இருந்து இட்லி மற்றும் சாம்பார் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை அவர் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர 3 தமிழ் செய்தித்தாள்களும், 2 ஆங்கில செய்தித்தாள்களும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. அந்த 5 செய்தித்தாள்களையும் அவர் படித்ததாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.
திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் 41–வது மாநில அளவிலான இளையோர் ஆண்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மின்னொளியில் நடைபெறும் இந்த போட்டியை மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் தொடங்கி வைக்கிறார். மாநில கபடி கழக கொடியை தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலை எம்.ராஜாவும், மாவட்ட கபடி கழக கொடியை தலைவர் நாச்சிமுத்தும் ஏற்றி வைக்கிறார்கள். திருப்பூர் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை சேர்மன் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். மாநில அமெச்சூர் கபடி கழக பொதுச்செயலாளர் சபியுல்லா முன்னிலை வகிக்கிறார். 4–ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறும் 2–ம் நாள் போட்டியை போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசும், 5–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனும் தொடங்கி வைக்கிறார்கள். முடிவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
32 அணிகள் பங்கேற்பு
இந்த போட்டி குறித்து மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருப்பூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் காலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 32 அணிகள் திருப்பூர் வருகின்றன. இவர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 12 கிராம் தங்க காசும்,2–ம் இடம் பிடிக்கம் அணிக்கு 6 கிராம் தங்க காசும் வழங்கப்படுகிறது.முன்னதாக வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் முன் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை நடக்கிறது. இந்த ஊர்வலத்தை திருப்பூர் கபடி கல்வி அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் கூறினார். அப்போது மாவட்ட கபடிக்கழக தலைவர் நாச்சிமுத்து, துணைத்தலைவர் சிவபாலன்,செயலாளர் முத்துசாமி, துணைசெயலாளர் பத்மநாபன், பொருளாளர் சீகல் துரைசாமி, கொங்கு முருகேஷ் ஆகியோர் அருகில் இருந்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலை மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த அழகுராஜா(வயது 30). பனியன் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி(28). கடந்த 25–ந்தேதி அதிகாலையில் அழகுராஜாவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி, ஜெயலட்சுமியின் 2 செல்போன்கள், ரூ.400–ஐ திருடிச்சென்று விட்டனர். காலையில் எழுந்த ஜெயலட்சுமி தனது செல்போனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் அவர் விடாமல் தனது எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது திடீரென செல்போனை திருடியவன், ஜெயலட்சுமியிடம் பேசினான். அப்போது அவன், செல்போனை கொடுக்க வேண்டுமானால் தனக்கு ரூ.3 ஆயிரம் வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு எனது வீட்டுக்கு வந்து செல்போனை கொடுத்துவிட்டு ரூ.3 ஆயிரத்தை வாங்கி செல்லுமாறு ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை ஜெயலட்சுமி வீட்டுக்கு 16 வயது சிறுவன் செல்போன்களை கொண்டு வந்தான். உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை பிடித்து திருப்பூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த சிறுவன், தான் திருடியதை ஒப்புக்கொண்டான். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூரில் புதிய தொழிற்பேட்டைகளை அமைத்து பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று சைமா சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் மகாசபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்து பேசினார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமாவின் 58–வது ஆண்டு மகாசபை கூட்டம் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமையில் சைமா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொது செயலாளர் பொன்னுசாமி ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:– வெளிமாநில பின்னலாடை விற்பனையில் ‘சி‘படிவம் சமர்ப்பிக்காதவர்கள் 5 சதவீதம் செலுத்தி 4 சதவீதம் திரும்ப பெறும்போது ஏற்படும் தாமதத்தை தமிழக அரசை கேட்டுக்கொள்வது, பனியன் பொருட்களுக்கு பேக்கிங் கமாடிட்டி எனப்படும் எடையளவு சட்டத்தில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை கேட்டுக்கொள்வது, தடையில்லாத மின்சாரம் வழங்கவும், பனியன் தொழில் சார்ந்த அனைத்து உப தொழில்களுக்கும் மின்சார உபயோகத்திற்கு தொழிற்சாலைக்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது, தொழிலாளர்கள் பயன்பெற இ.எஸ்.ஐ மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் பேசும்போது கூறியதாவது:–
திருப்பூர் நகரின் கடந்த கால வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க சுமார் 5 ஆயிரம் பேர் வேலை செய்யும் அளவில் திருப்பூரில் இருந்து 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமங்களில் 4 அல்லது 5 தொழிற்பேட்டைகளை அமைத்து அதில் அந்த கிராமத்தை சேர்ந்த, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களையும், அதில் 50 சதவீதம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் சுமார் 25 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். இதனால் வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் குறிப்பாக மகளிர் பாதுகாப்பாக வேலைகளில் சேர வாய்ப்புள்ளது. இதன் மூலம் திருப்பூரின் பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க முடியும். சைமா சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுமானப்பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. பனியன் தொழில் குறித்த அனைத்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சைமா சங்கம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சங்க துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், முன்னாள் தலைவர் கரோனா சாமிநாதன், பொருளாளர் ராமசாமி, ஆடிட்டர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம்,கொழுமம்,குமரலிங்கம் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிகோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை கண்டித்தும், அந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரியும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமம் பஸ் நிலையம் அருகே மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. பேராட்டத்தில் பேரூராட்சி செயலாளர் கே.பி.ரவி, மடத்துக்குளம் பேரூர் துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் ராமுத்தாய், கொழுமம் ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ், வீரமணி, முத்துராமலிங்கம், மைதீன்பாட்சா, சுப்பிரமணி, வடிவேலு, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் கே.என்.ராசு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே.ராமகிருஷ்ணன், கே.கே.பன்னீர் செல்வம், ராஜ்குமார், சிவலிங்கம், கணியூர் பேரூராட்சி தலைவர் தேவி, துணைத் தலைவர் காஜாமைதீன், முத்துசாமி, சிராஜூதீன், முருகேசன், கணேசமூர்த்தி, மணி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரலிங்கத்தில் பேரூர் செயலாளர் கே.ஏ.வரதராஜன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கே.ஆர்.சிவக்குமார், துணைத்தலைவர் எம்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் குமரலிங்கம் வாய்க்கால் பாசன தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் மற்றும் அ.திமு.க.வினர் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதே போல் துங்காவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் ஜெயலலிதா மீண்டு வர ஈஸ்வரன்கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தடைகளை தகர்த்தெரிந்து தமிழனத்தை காத்திட அவர் மீண்டு வர வேண்டி ஈஸ்வரன் கோவிலில் உள்ள விஸ்வேஸ்வரா சுவாமி, சண்முக சுப்பிரமணியர் மற்றும் விசாலாட்சி அம்மன் ஆகிய மூன்று கொவில்களில் இன்று 8 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் எம்.மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், விஜயகுமார், தெற்கு தம்பி மனோகரன், கருணாகரன், கோமதிசம்பத்,4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சின்னு, கவுன்சிலர் கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி எம்.சி., மற்றும் ஈஸ்வரமூர்த்தி, யுவராஜ் சரவணன்,ரஞ்சித் ரத்னம், ரத்தினகுமார், பி.லோகநாதன், சுரேந்தர், வளர்மதி சாகுல்அமீது , தாமோதரன், அசோக் குமார், நீதிராஜன், தலைமை கழக பேச்சாளர்கள் பாரதி பிரியன், எம்.ஜி.குணசேகர், பார்வார்டு பிளாக் பொது செயலாளர் என்.ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் பேபி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டானர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகில் 'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதாவின், ' மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை துணை மேயர் சு.குணசேகரன், அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். வடக்கு தொகுதி செயலாளர் ஜான் . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி,ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், எஸ்.ஆர்.ஜெயக்குமா ர்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி, கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத் ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன், பார்வார்டு பிளாக் கதிரவன், ராஜசேகர், அசோக் குமார், பாரதி பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...







