Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் 41–வது மாநில அளவிலான இளையோர் ஆண்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மின்னொளியில் நடைபெறும் இந்த போட்டியை மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் தொடங்கி வைக்கிறார். மாநில கபடி கழக கொடியை தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலை எம்.ராஜாவும், மாவட்ட கபடி கழக கொடியை தலைவர் நாச்சிமுத்தும் ஏற்றி வைக்கிறார்கள். திருப்பூர் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை சேர்மன் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். மாநில அமெச்சூர் கபடி கழக பொதுச்செயலாளர் சபியுல்லா முன்னிலை வகிக்கிறார். 4–ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறும் 2–ம் நாள் போட்டியை போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசும், 5–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனும் தொடங்கி வைக்கிறார்கள். முடிவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
32 அணிகள் பங்கேற்பு
இந்த போட்டி குறித்து மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருப்பூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் காலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 32 அணிகள் திருப்பூர் வருகின்றன. இவர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 12 கிராம் தங்க காசும்,2–ம் இடம் பிடிக்கம் அணிக்கு 6 கிராம் தங்க காசும் வழங்கப்படுகிறது.முன்னதாக வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் முன் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை நடக்கிறது. இந்த ஊர்வலத்தை திருப்பூர் கபடி கல்வி அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் கூறினார். அப்போது மாவட்ட கபடிக்கழக தலைவர் நாச்சிமுத்து, துணைத்தலைவர் சிவபாலன்,செயலாளர் முத்துசாமி, துணைசெயலாளர் பத்மநாபன், பொருளாளர் சீகல் துரைசாமி, கொங்கு முருகேஷ் ஆகியோர் அருகில் இருந்தனர்.
On Wednesday, October 01, 2014 by farook press in ,    
திருப்பூர் கல்லூரி சாலை மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த அழகுராஜா(வயது 30). பனியன் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி(28). கடந்த 25–ந்தேதி அதிகாலையில் அழகுராஜாவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி, ஜெயலட்சுமியின் 2 செல்போன்கள், ரூ.400–ஐ திருடிச்சென்று விட்டனர். காலையில் எழுந்த ஜெயலட்சுமி தனது செல்போனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் அவர் விடாமல் தனது எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது திடீரென செல்போனை திருடியவன், ஜெயலட்சுமியிடம் பேசினான். அப்போது அவன், செல்போனை கொடுக்க வேண்டுமானால் தனக்கு ரூ.3 ஆயிரம் வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு எனது வீட்டுக்கு வந்து செல்போனை கொடுத்துவிட்டு ரூ.3 ஆயிரத்தை வாங்கி செல்லுமாறு ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை ஜெயலட்சுமி வீட்டுக்கு 16 வயது சிறுவன் செல்போன்களை கொண்டு வந்தான். உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை பிடித்து திருப்பூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த சிறுவன், தான் திருடியதை ஒப்புக்கொண்டான். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
On Wednesday, October 01, 2014 by farook press in ,    
திருப்பூரில் புதிய தொழிற்பேட்டைகளை அமைத்து பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று சைமா சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் மகாசபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்து பேசினார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமாவின் 58–வது ஆண்டு மகாசபை கூட்டம் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமையில் சைமா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொது செயலாளர் பொன்னுசாமி ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:– வெளிமாநில பின்னலாடை விற்பனையில் ‘சி‘படிவம் சமர்ப்பிக்காதவர்கள் 5 சதவீதம் செலுத்தி 4 சதவீதம் திரும்ப பெறும்போது ஏற்படும் தாமதத்தை தமிழக அரசை கேட்டுக்கொள்வது, பனியன் பொருட்களுக்கு பேக்கிங் கமாடிட்டி எனப்படும் எடையளவு சட்டத்தில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை கேட்டுக்கொள்வது, தடையில்லாத மின்சாரம் வழங்கவும், பனியன் தொழில் சார்ந்த அனைத்து உப தொழில்களுக்கும் மின்சார உபயோகத்திற்கு தொழிற்சாலைக்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது, தொழிலாளர்கள் பயன்பெற இ.எஸ்.ஐ மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் பேசும்போது கூறியதாவது:–
திருப்பூர் நகரின் கடந்த கால வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க சுமார் 5 ஆயிரம் பேர் வேலை செய்யும் அளவில் திருப்பூரில் இருந்து 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமங்களில் 4 அல்லது 5 தொழிற்பேட்டைகளை அமைத்து அதில் அந்த கிராமத்தை சேர்ந்த, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களையும், அதில் 50 சதவீதம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் சுமார் 25 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். இதனால் வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் குறிப்பாக மகளிர் பாதுகாப்பாக வேலைகளில் சேர வாய்ப்புள்ளது. இதன் மூலம் திருப்பூரின் பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க முடியும். சைமா சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுமானப்பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. பனியன் தொழில் குறித்த அனைத்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சைமா சங்கம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சங்க துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், முன்னாள் தலைவர் கரோனா சாமிநாதன், பொருளாளர் ராமசாமி, ஆடிட்டர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Wednesday, October 01, 2014 by farook press in ,    
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம்,கொழுமம்,குமரலிங்கம் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிகோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை கண்டித்தும், அந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரியும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமம் பஸ் நிலையம் அருகே மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. பேராட்டத்தில் பேரூராட்சி செயலாளர் கே.பி.ரவி, மடத்துக்குளம் பேரூர் துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் ராமுத்தாய், கொழுமம் ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ், வீரமணி, முத்துராமலிங்கம், மைதீன்பாட்சா, சுப்பிரமணி, வடிவேலு, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் கே.என்.ராசு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே.ராமகிருஷ்ணன், கே.கே.பன்னீர் செல்வம், ராஜ்குமார், சிவலிங்கம், கணியூர் பேரூராட்சி தலைவர் தேவி, துணைத் தலைவர் காஜாமைதீன், முத்துசாமி, சிராஜூதீன், முருகேசன், கணேசமூர்த்தி, மணி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரலிங்கத்தில் பேரூர் செயலாளர் கே.ஏ.வரதராஜன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கே.ஆர்.சிவக்குமார், துணைத்தலைவர் எம்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் குமரலிங்கம் வாய்க்கால் பாசன தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் மற்றும் அ.திமு.க.வினர் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதே போல் துங்காவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
On Wednesday, October 01, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் ஜெயலலிதா மீண்டு வர ஈஸ்வரன்கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தடைகளை தகர்த்தெரிந்து தமிழனத்தை காத்திட அவர் மீண்டு வர வேண்டி ஈஸ்வரன் கோவிலில் உள்ள விஸ்வேஸ்வரா சுவாமி, சண்முக சுப்பிரமணியர் மற்றும் விசாலாட்சி அம்மன் ஆகிய மூன்று கொவில்களில்  இன்று 8 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்  மாநகர் மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் எம்.மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், விஜயகுமார், தெற்கு  தம்பி மனோகரன், கருணாகரன், கோமதிசம்பத்,4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சின்னு, கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி எம்.சி., மற்றும் ஈஸ்வரமூர்த்தி, யுவராஜ் சரவணன்,ரஞ்சித் ரத்னம், ரத்தினகுமார், பி.லோகநாதன், சுரேந்தர், வளர்மதி சாகுல்அமீது, தாமோதரன், அசோக் குமார், நீதிராஜன், தலைமை கழக பேச்சாளர்கள் பாரதி பிரியன், எம்.ஜி.குணசேகர், பார்வார்டு பிளாக்  பொது செயலாளர் என்.ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் பேபி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டானர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,   சார்பில்  திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகில்  'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதாவின், ' மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை துணை மேயர் சு.குணசேகரன், அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.  வடக்கு தொகுதி செயலாளர் ஜான் . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி,ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள்,  அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல்,  நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி, கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத்  ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன், பார்வார்டு பிளாக்  கதிரவன், ராஜசேகர், அசோக் குமார், பாரதி பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


On Wednesday, October 01, 2014 by Unknown in ,    





தலைமை தமயந்தி மாசிலாமணி  மாவட்ட  கவுன்சிலர் தலைமையில்  சி .மாசிலாமணி தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி முன்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம் எஸ் .கனகராஜ் உப  .தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி  வி .மயில்சாமி ஒன்றிய கவுன்சிலர்  சி .ஜெயபிரகாஸ்  மாணவரணி  செயலாளர் உட்பட 2000 ம் பேர்  உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர் .  
On Wednesday, October 01, 2014 by Unknown in ,    





திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்   சார்பில்  திருப்பூர் மாநகராட்சி முன்புறம்   'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வர கர்நாடக கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 3-வது நாளாக துணை மேயர் சு.குணசேகரன், தலைமையில் அ.தி.மு.க., வினர் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேற்பட்டோர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், புறநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுந்தரராஜ், டி.என்.எஸ்.டி.சி., திருப்பூர் மண்டல செயலாளர் கிருஷ்ணன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான் ,அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் ,அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,  தம்பி மனோகரன், ஜெகதாம்பாள், பி.கே.முத்து, மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், ஸ்டீபன்ராஜ், ஆனந்தகுமார், ஏ.எம்.சதீஷ், 
ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார்நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி,  கே.கே.காளியப்பன், வி.கே.பி.மணி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பார்வார்டு பிளாக் ராஜசேகர்,  தீரன் சின்னமலை பேரவை பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, காயிதே மில்லத் யூனியன்  லீக் மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா,  
தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சி.டி,சி.தேவராஜ், கே.ஜி.பழநியப்பன்,  மணி, சி.எஸ்.கண்ணபிரான், ராஜசேகர், பொன்னுசாமி,  சுகுமார்,கோபால், சோமு, பாலுச்சாமி, பன்னீர்செல்வம், குணசேகரன், விஸ்வநாதன், பாலு, சின்னசாமி, வினோத், ராஜேந்திரன், முபாரக்,  சேகர்,கிருஷ்ணன், நாட்டுக்காவலன்,  மகளிரணி ருக்குமணி, சுந்தராம்பாள், சரஸ்வதி,  அன்னபூரணி,மல்லிகா,  சரசம்மாள், 
 உஷா ரவிக்குமார், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, எஸ்.பி.என்.பழனிசாமி, வே.அய்யாசாமி,சிவில் சப்ளை பாலு, ராஜேந்திரன்,  பி.கே.எஸ்.சடையப்பன்,  கவுன்சிலர்கள் முருகசாமி, ஆனந்தன், 
கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத்  ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, வே.அய்யாசாமி, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், பாசறை சதீஷ், கோகுல், பேபி தர்மலிங்கம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன் அசோக் குமார், பாரதி பிரியன், மோட்டார் பாலு, சாரதா, இசாக், எம்.ஜி.குணசேகரன், கேபிள் ரபி, முகமது ஜக்கிரியா, பரமராஜன், செல்லமுத்து, முகமது யூனுஸ், செல்வராஜ் நித்தியானந்தம், 

Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம்
திருப்பூர்

அன்புடையீர்வணக்கம்.


            பொருள்பண்டிகை கால சிறப்புப் பேருந்துகளைஇயக்குதல் – உரிய கட்டணம் வசூலிப்பதை உத்தரவாதப்படுத்த –கோருதல் – தொடர்பாக

தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளின் போது திருப்பூர் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான வெளிமாவட்டங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வர வேண்டியுள்ளதால்சிறப்பு பேருந்துகள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இதிலும் சாதாரண பேருந்து கட்டணங்களை வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதலான முறையில் கட்டணக் கொள்ளையடிக்காமல் உரிய முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 
இதுதவிர திருப்பூரிலிருந்து கோவை செல்ல அவிநாசி,பல்லடம் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில்அவிநாசி வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அவிநாசிக்குச் செல்லும் பயணிகளை பெரும்பாலும் ஏற்றுவதில்லை. லாப நோக்கோடுகோவை செல்லும் பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டுஇதர பயணிகளை வயதானவர்களாக இருந்தாலும்கூடஇடையிலேயே நிறுத்தி இறக்கி விட்டு செல்லும் அவலமும் நடைபெறுகிறது.

எனவே இது போன்ற செயல்களையும் தடுத்து நிறுத்தி பொதுப் பயன்பாட்டிற்கான சேவைப்பிரிவில் இயங்கும் போக்குவரத்தை, லாப நோக்கோடு மட்டும் பார்க்கும் தனியார் பேருந்து நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட மக்கள் நலன் சார்ந்த இந்த பிரச்சனைகளின் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்திருப்பூர் மாவட்டக்குழு சார்பில்கேட்டுக் கொள்கிறோம்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,