Wednesday, October 01, 2014
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் ஜாமீன் மீதான விசாரணையை வழக்கமாக மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி விடுமுறை கால நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டுள்ளார்.
இதனால், இந்த வழக்கு, அக்டோபர் 7 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.
அரசுத் தரப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்கிறீர்களா என நீதிபதி கேட்டதும், தான் தயாராக இருப்பதாக பவானி சிங் தெரிவித்தார். ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
உடனடியாக நீதிபதி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால், இதனை விடுமுறைக் கால நீதிபதியான, தான் விசாரிக்க முடியாது என்றும் வழக்கமாக மேல் முறையீடுகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டார்.
கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருப்பதால், விடுமுறை முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், "கர்நாடக உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே, வழக்கை கேட்காமலேயே ஒத்திவைத்தது இதுதான் முதல் முறை. தலைமை நீதிபதி தலையிட்டு, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறினார்.
கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த கார்கேவ் நகரின் மையத்தில் அமைந்துள்ள லெனின் சிலையை ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்து வந்த கிரிமியா மக்கன், பொது வாக்கெடுப்பு நடத்தி, 97 சதவிகித மக்களின் ஆதரவுடன் ரஷ்யாவுடன் கடந்த மார்ச் மாதம் இணைந்தது.
இதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் மக்களும் ரஷ்யாவுடன் இணைய விரும்பி தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் அரசு பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில், அம்மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் ஐரேப்பிய யூனியனுடன் உக்ரைனை இணைப்பதற்கு ஆதரவாகவும் சிலர் வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள், கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த் கார்கேவ் நகரின் மையத்தில் பிரமான்டமாக அமைந்துள்ள லெனின் சிலையை சேதப்படுத்தினர். சர்வதேச மக்களின் தலைவராக லெனின் திகழ்வதாகக் கூறி, ஐரேப்பிய ஆதரவாளர்களின் இந்த வெறிச் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு இந்தியா ஆதரவு தரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுதிதியுள்ளது.
இது குறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் வேளையில், ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு எதிரான போரில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு அந்நாடு முயற்சிக்கலாம்.
எந்தச் சூழ்நிலையிலும் அந்நாட்டின் வலையில் சிக்கி நாம் இரையாகிவிடக் கூடாது. இதை நமது அரசு மனதில் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக மனிதத்துவக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் இணைய வேண்டும் என்பது போன்ற அவர்களின் தந்திரமான பேச்சுக்கு நாம் உடன்பட்டுவிடக் கூடாது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக எந்த சர்வதேச நாடு அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தாலும், அந்த நாடு ஐ.நா வின் ஒப்புதலை பெற்றாக வேண்டும்.
அதை மீறி செயல்படும் நாடு நீதிக்கு எதிராக செயல்படுவது போலாகும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணமான வழமையான இலக்குகளைத் தாண்டி செல்லவேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவின் உண்மையான சாத்தியக்கூறுகள் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் இருவரும் இணைந்து எழுதிய கட்டுரையில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரங்களில் அவர் வகித்த சர்ச்சைக்குரிய பங்குக்காக அமெரிக்கா அவருக்கு விசா தர மறுத்த பின்னணியில், இப்போது அவருக்கு அமெரிக்கா தந்திருக்கும் வரவேற்பு நேரடி மாறுபாடானது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக தேக்கம் பெற்றுள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.
மோடியின் அமெரிக்க விஜயம் இந்த உறவுக்கு புத்துணர்வை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களை சந்தித்துப் பேசியுள்ள இந்தியப் பிரதமர் மோடி, இஸ்ரேலியப் பிரதமர், இலங்கை அதிபர் உள்ளிட்ட பிற நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.நாகராஜ் கூறியது:
கடந்த 2011-ஆம் ஆண்டு திருப்பூரில் இயங்கி வந்த அனைத்து சாய, சலவைப்பட்டறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டபோது, பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை நடைமுறைப்படுத்த ரூ. 200 கோடி வட்டியில்லா கடனாக வழங்கி மீண்டும் திருப்பூரில் சாய, சலவைப்பட்டறைகளை திறக்க உதவிய முன்னாள் தமிழக முதல்வர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, உடனடியாக விடுதலை செய்யக்கோரி, புதன்கிழமை அனைத்து சாயத் தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர், காதர்பேட்டை இரண்டாம் தர பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்படுகின்றன. இது குறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவர்கள் குமார், நாகராஜ் ஆகியோர் கூறியது:
பனியன் தொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, திருப்பூர், காதர்பேட்டையில் உள்ள செகண்ட்ஸ் பனியன் வியாபாரிகள் புதன்கிழமை ஒருநாள் தங்கள் கடையடைப்பில் ஈடுபட உள்ளனர்.
முன்னிலை p செல்வராஜ் uc r . முருகேசன் சின்னவீரம்பட்டி சுப்பிரமணி uc .பாலு அன்பழகன் குருஞ்சேரி பாலகிருஷ்ணன் மகாலிங்கம் ரத்தினசாமி சுப்பிரமணி ராஜேஸ்கண்ணா கருப்பசாமி முனி ,ராஜ் ,நாகராஜ் ,பாரதி பங்காரு ஒன்றிய பேரணி செயலாளர் TT வடிவேலு லோகன் மணி ,மஜீத் ,மாணிக்கம் ,ராம்லசுமணன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர் .
பெதப்பம்பட்டி தொகுதிச்செயலாளர் பாண்டியன் தலைமையிலான அ .இ .அ .தி .மு .க .வினர் 2000 க்கும் மேற்பட்டோர் புரட்சிதலைவி அம்மா மீது பொய்வழக்கு போடப்பட்டு தண்டனையை உடனே ரத்து செய்யக்கோரி உன்னாவிரதப்போராட்டம் தலைமை ஏ .முருகன் ஒன்றியக்குழு தலைவர் எம் .எஸ் .முரளி ஒன்றியத்துனை தலைவர் நிர்வாகிகள் அன்பர்ராஜன் ராமநாதன் நாகராஜன் ஊராட்சித்தலைவர் முருகானந்தன் ஜனார்தனன் வெங்கடேஷ் முருகன் செந்தில் கவுன்சிலர்கள் புஸ்பராஜ் சித்ரா பாலமுருகன் தண்டபாணி காந்திமதி பாசறைவிமலா சவுந்தரராஜன் கமல் கோபி முத்து பூபதி செயலாளர்கள் முத்துச்சாமி வரதராஜ் சிவானந்தம் மகேஸ்வரன் நடராஜ் ஆறுச்சாமி சின்னராஜ் ஐயப்பன் விருகல்பட்டி பிரகாஸ் தொடக்கவேளாண்மை கூடுரவுசங்கத்தலைவர் பன்னைக்கிணறு கார்த்திகேயன் முடிவில் ஊராட்சிசெயலாளர் அன்பர்ராஜா நன்றி தெரிவித்தார்
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். இந்த தீர்ப்பை பொறுத்தவரை நீதி வழங்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் பதவி ஏற்றுள்ள புதிய முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எனது சார்பிலும், கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க. தலைமையின் மீதுள்ள பாசம் காரணமாக உணர்ச்சியால், தொண்டர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவது இயல்பு. ஆனால் அது பொதுமக்களை பாதிப்பதாக இருந்துவிடக்கூடாது.
இந்த போராட்டத்தின் போது கடைகள் மீது தாக்குதல், பஸ்களுக்கு தீ வைத்தல் போன்றவை அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட அந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது தமிழக காவல்துறைக்கு ஏற்பட்ட தலைகுனிவாகும்.
பா.ஜனதா கட்சி தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி வருகிறது. பா.ஜனதாவுக்கு ரஜினிகாந்த் வந்தால் மகிழ்ச்சிதான். நல்லவர்கள் வருவது நல்லதுதான். நாட்டின் பொருளாதார தலைநகரமாக மும்பை விளங்குகிறது. அதுபோன்று தமிழ்நாட்டின் தொழில்நகரமாக கோவை விளங்குகிறது. கோவைக்கு பாதிப்பு என்றால் அது எல்லோரையும் பாதிக்கும். ஆகவே கோவை தொழில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு உதவிகரமாக இருந்து நடவடிக்கை எடுக்கும். ஜவுளிநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. சென்ற இடமெல்லாம் அவருக்கு எந்த தலைவருக்கும் அளிக்கப்படாத அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இலங்கையால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கியதால் அதிர்ச்சியடைந்த லால்குடி கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அ.தி.மு.க. உறுப்பினர். இவருடைய மகள் ஜோனாஷா டி சன்னா (வயது 19), லால்குடி பரமசிவபுரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் படித்து வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்த ஜோனாஷா டி சன்னா, ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை பார்த்ததும் மிகுந்த வேதனை அடைந்தார்.
இதனால் மனமுடைந்த அவர், தனது வீட்டு சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், வேதனை தாங்காமல் ஜோனாஷா இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவியின் உடலுக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. உள்பட அ.தி.முக. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதைப்போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் வேதனை தாங்கமுடியாமல் அலறியபடியே தெருவில் ஓடிய அவரை, அந்த பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
.jpg)


