Sunday, November 02, 2014

On Sunday, November 02, 2014 by Unknown in ,    

கரூர் மாவட்டத்தில்  அரசு கல்லூரி மாணவர்கள் ஒருமைப்பாடு தின பேரணி....                                                                 அரசு கலைக்கல்லூரியில் வல்லபாய்படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒருமைப்பாட்டு தின பேரணி நடைபெற்றது.

 சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி நேற்று கரூர் அரசுகலைக் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பேரணி நடத்தினர். 
250 மாணவ மாணவிகள், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
 கல்லூலூரி முதல்வர் பாரி, மாணவர்கள் தேச ஒற்றுமையை காக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்க செய்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரியில் இருந்து பேரணி கரூர் சுங்ககேட் வரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. 

பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுந்தரராஜ், துரைப்பாண்டி, செல்வகுமார், லட்சுமணசிங், மகாலட்சுமி ஆகியோர் வழி நடத்தினர்.                                        

On Sunday, November 02, 2014 by Unknown in ,    

கரூர் மாவட்டத்தில்   இந்திராகாந்தி நினைவு தினம் ...............                                                                                                                                இந்திராகாந்தி நினைவுநாளையொட்டி படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.

 முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 30ம் ஆண்டு நினைவுதினம் கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உப்பிடமங்கலத்தில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதே சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டிருந்த படத்திற்கும் மாலை அணிவித்தார். உப்பிடமங்கலம் காங்கிரஸ் தலைவர் முருகேசன், நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், மனோகரன், சின்னையன், முத்துசாமி, தாந்தோணி கமிட்டி தலைவர் ராமலிங்கம், அணி நிர்வாகிகள் சிவக்குமார், செல்வராஜ், நாகவள்ளி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.                                        

On Sunday, November 02, 2014 by Unknown in ,    
  பால் விலை உயர்வை எதிர்த்து வி.சிறுத்தை ஆர்ப்பாட்டம்     
                                                                                                                                                                                                                               விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தபால், தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பாஸ்கரன் பகலவன் தலைமை தாங்கினார்.
துணை செயலாளர் சதீஷ், பொறியாளர் அணி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை செயலாளர் இன்குலாப் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பால் விலை உயர்வை கண்டித்தல். மேலும் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
மின் கட்டண உயர்வை உயர்த்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் அணி செயலாளர் ராமச்சந்திரன், அரவைக் குறிச்சி ஒன்றிய செயலாளர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர சயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown in ,    
Displaying NEWS 2 TAMTHAV.JPGமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் ரஹ்மதுல்லா,அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னிறுத்தி செயல்படுவதாகவும் ,அதன் ஒரு பகுதியாக வருகிற 12 ம் தேதி விளக்குத்தூண் பகுதியில் அமைதிப் பேரணியும் ,16 ம் தேதி நூர் பள்ளி வளாகத்தில் ரத்த தான முகாமும்  நடைபெற உள்ளதாக தெரிவித்தார் .தீவிரவாதத்திற்கு  மதம் இல்லை.தீவிரவாதம்  எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்போம்.குறிப்பாக அல் கொய்தா  போன்ற அமைப்புகளை எப்போதுமே இந்திய முஸ்லீம்கள் எதிர்ப்போம் என்றும் ,அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் உண்மையான இஸ்லாத்தை போதிப்பதில்லை என்றும் ,தங்களுடைய நாவாலும் ,கையாளும் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருப்பதே உண்மையான இஸ்லாம் என்றும் கூறினார் .இதனை தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறினார் மாவட்ட தலைவர் யூனுஸ் கான் ,மாவட்ட செயலாளர் ஜாகிர் உசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்  
On Saturday, November 01, 2014 by Unknown in ,    
Displaying NEWS 1 GH DEAN.jpg

மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்த 3 நாட்கள் கருத்தரங்கு குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சாந்தகுமார், இளம் மருத்துவ நிபுணர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் .தேவதாஸ் மருத்துவமனை டாக்டர் தேவதாஸ் ,டாக்டர் சதீஷ் தேவதாஸ் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் .
On Saturday, November 01, 2014 by Unknown in ,    

ரத்தக் குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, நூதன ரத்தக் குழாய் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஆர். ரகுநாதன். இவர், 2 ஆண்டுகளுக்கு முன் ரயில் விபத்தில் சிக்கி, முழங்காலுக்கு கீழ் தனது 2 கால்களையும் இழந்தவர். இந்நிலையில், இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. அங்குள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 14 நாள்களுக்கு முன் கடும் வயிற்று வலி ஏற்பட்டதில் மயங்கியுள்ளார்.
அவரை, உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், ரத்தக் குழாய் வெடித்துள்ளது என்றும், அதற்கு தங்கள் மருத்துமனையில் அறுவைச் சிகிச்சை செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சில மருத்துவமனைகளை அணுகியுள்ளனர். ஆனால், அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய மறுத்துள்ளனர். 12 நாள்களுக்கு முன், அவரை உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். முதுநிலை மருத்துவர் சரவணன் அவரை பரிசோதித்தபோது, ரத்த அழுத்தம் 80-க்கு கீழ் இருந்துள்ளது.
உடனே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர் ஏற்பாடு செய்துள்ளார். மயக்கவியல் துறைத் தலைவர் கணேஷ்பாபு ஆலோசனையில், மயக்கவியல் மருத்துவர் கணேசபாண்டியன், மருத்துவர் சரவணனுக்கு உதவியாக இருந்தார்.
ரகுநாதனுக்கு மருத்துவர் சரவணன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது, அவரது வயிற்றுப் பகுதியில் ரத்தக் குழாய் வெடித்து, 3 லிட்டர் அளவுக்கு ரத்தம் சிதறியிருந்ததாம். அந்த ரத்தத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக 8 யூனிட் ரத்தத்தை அவருக்கு செலுத்தியுள்ளார். வெடிப்பு ஏற்பட்டிருந்த ரத்தக் குழாயில் 20 செ.மீ. அளவுக்கு வெட்டி எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்தக் குழாய்க்கு பதிலாக, செயற்கை ரத்தக் குழாய் புதிதாக பொருத்தப்பட்டு, அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 6 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சையை மருத்துவர் சரவணன் மேற்கொண்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அறுவைச் சிகிச்சைக்கு பின்னர், ரகுநாதனுக்கு மேலும் 3 லிட்டர் ரத்தம் செலுத்தப்பட்டது. 2 நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், முற்றிலுமாகக் குணமாகி வீடு திரும்புவதற்கு தயாராகியுள்ளார்.
இன்னும், ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.  அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள மருத்துவர் சரவணனுக்கு, ரகுநாதனின் மனைவி மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
On Saturday, November 01, 2014 by Unknown in ,    
 
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
  மேலூர் பகுதியில் பெய்த கனமழையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் நிவாரண உதவித் தொகையை, ஆட்சியர் எல். சுப்பிரமணியன் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
  கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரியைச் சேர்ந்த விவசாயி ராசுவுக்கு சொந்தமான வண்டிமாடு மின்னல் பாய்ந்து இறந்தது. இதற்கு, ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் ராசுவிடம் வழங்கினார். மேலும், சாத்தமங்கலத்தில் ஆறுமுகம், இடையவலசில் ஆரம்மாள் ஆகியோரது கூரை வீடுகள் சேதமடைந்ததற்கு தலா ரூ. 2,500-க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியின்போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக முன்னாள் ஆட்சியர் சகாயம் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக அரசு அனுமதி கிடைத்ததும் விசாரணை தொடங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
  நிகழ்ச்சியில், மேலூர் வட்டாட்சியர் எஸ். மணிமாறன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
On Saturday, November 01, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையோரங்களில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
  இது குறித்து, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி: மஞ்சளாறு, கோதையாறு நிரம்பி வைகை ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
மேலும், கனமழையினாலும் வெள்ளம் வர வாய்ப்பிருப்பதால், வைகை ஆற்றுக் கரையோரங்களில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  மதுரை கோ.புதூரைச் சேர்ந்த மாணவர் சதீஷ், வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, பொதுமக்கள் வைகை ஆற்றில் குளிக்கவோ, துவைப்பதற்கோ செல்லக் கூடாது. மேலும், கால்நடைகளை ஆற்றில் இறக்கவோ, குளிக்க வைக்கவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
On Saturday, November 01, 2014 by Unknown   
மதுரை ஆவின் நிறுவனத்தின் உயர்த்தப்பட்ட பால் விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை சனிக்கிழமை (நவ.1) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக மதுரை ஆவின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்திச் செலவு அதிகரித்த காரணத்தால், கொள்முதல் விலையை நவ.1 ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.5-ம், தேனி மற்றும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகையாக லிட்டருக்கு 85 காசுகளும் உயர்த்தி வழங்கப்படுகிறது. கால்நடைத் தீவனத்துக்கு கிலோவுக்கு ரூ.4-ம் மானியம் வழங்கப்படுகிறது.
 ஆவின் பால் விற்பனை விலையில் 80 சதவீதம் உற்பத்தியாளர்களுக்குச் செல்லும் வகையில், அரசு அறிவித்துள்ள விலை மாற்றத்தின் அடிப்படையில் மதுரை ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்தின் அடிப்படையில் தரமான ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆவின் டெப்போக்கள் மற்றும் சில்லரை விற்பனை மையங்களில் பொதுமக்கள் வாங்கி பயன் பெறலாம்.
 மாதாந்திர பால் அட்டைதாரர்கள் நவ.1 முதல் நவ.15 ஆம் தேதிக்குரிய கூடுதல் தொகையை, பால் அட்டை ஒன்றுக்கு ரூ.75 வீதம், டெப்போ முகவர்கள் மூலம் நவ.8 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.