Monday, December 15, 2014
மதுரை மாவட்டத்தில் உரிமம் வழங்கப்பட்ட 195 குவாரிகளில், 83 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த குவாரிகளால் ஏறத்தாழ ரூ.13 ஆயிரம் கோடிக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், ஒவ்வொரு குவாரிக்கும் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க குவாரி உரிமதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கடந்த ஆண்டில் விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக விசாரணை நிறுத்தப்பட்டது. தடையாணை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, 70 குவாரிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன்படி, டிசம்பர் 3 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் முன்பு, குவாரி உரிமதாரர்கள் சார்பில் அவர்களது வழக்குரைஞர்கள் ஆஜராயினர். சனிக்கிழமை வரை, 70 குவாரிகளின் தரப்பிலும் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, அபராதம் விதிப்பு முறைப்படி கணக்கிடப்படவில்லை.
விற்பனைக்குரிய கற்களைக் கணக்கிட்டால், அனுமதிக்கப்பட்ட அளவுக்குத்தான் குவாரிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என, குவாரி உரிமதாரர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவான விளக்கம் அளிக்க காலஅவகாசம் கோரியுள்ளனர்.
முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த விசாரணை டிசம்பர் 18, 19ஆம் தேதிகளில் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான இரண்டாவது நோட்டீஸ், 70 உரிமதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் உரிமதாரர்கள் நேரடியாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குப் பிறகு, அபராதம் இறுதி செய்யப்பட்டு, அத்தொகையை வசூலிப்பதற்கு மூன்றாவது நோட்டீஸ் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில், பெண் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெயிலாயி (28), வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இரும்புக் கம்பிகளை பெருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்குச் சென்ற வெயிலாயி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லையாம். அவரைத் தேடியுள்ளனர். பின்னர், சனிக்கிழமை மதியம் அவர் குப்பைகளுக்கு மத்தியில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெயிலாயி (28), வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இரும்புக் கம்பிகளை பெருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்குச் சென்ற வெயிலாயி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லையாம். அவரைத் தேடியுள்ளனர். பின்னர், சனிக்கிழமை மதியம் அவர் குப்பைகளுக்கு மத்தியில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
தமாகா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி செல்ல விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு வந்த ஜி.கே.வாசன் இங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் த.மா.காவினர் செயல்படுவர். தென்மாவட்டங்களில் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. இதை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்க வருகிறார்கள். தற்போது ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
ஜி.கே.வாசனுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர்அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
விருதுநகர்: விருதுநகர் வந்த வாசனை, ஐ.என்.டி.யு.சி. பாலசுப்பிரமணியம், நகராட்சி உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் காமராஜரின் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு வாசன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமராஜரின் வழியில் த.மா.கா.வை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். கட்சியில் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார். முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் விஸ்வநாதன், சித்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகோபால், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமாகா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி செல்ல விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு வந்த ஜி.கே.வாசன் இங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் த.மா.காவினர் செயல்படுவர். தென்மாவட்டங்களில் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. இதை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்க வருகிறார்கள். தற்போது ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
ஜி.கே.வாசனுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர்அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
விருதுநகர்: விருதுநகர் வந்த வாசனை, ஐ.என்.டி.யு.சி. பாலசுப்பிரமணியம், நகராட்சி உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் காமராஜரின் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு வாசன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமராஜரின் வழியில் த.மா.கா.வை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். கட்சியில் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார். முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் விஸ்வநாதன், சித்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகோபால், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sunday, December 14, 2014
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பால் கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சாரக் கட்டண உயர்வையும் சுமத்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளியன்று மின் கட்டணம் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அன்று மாலையே திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மின் கட்டணம் 15 சதவிகிதத்தை உயர்த்தியிருப்பதற்கு தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், மாநகரக்குழுச் செயலாளர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு அடுத்தடுத்து மக்களின் அடிப்படை தேவைகளின் மீது சுமைகளைச் சுமத்தி வருகிறது. பால் கட்டணத்தை உயர்த்தியது, தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் மக்கள் விரோத கொள்கைகளை திணித்து வருகிறது. எனவே இரு அரசுகளின் மக்களுக்கு எதிரான கொள்கைகளை தடுத்து நிறுத்த சாமானிய மக்கள் இடதுசாரிகளின் பின்னால் அணிதிரள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். இதில் மாநகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஆராதனை, மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் துவங் கியது. சபரிமலை முன்னாள் சபரிமலை தந்திரி கண்டரு மோகனரு தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து 1008 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது.12ம் தேதி நவகல அபிஷேகம், 15ம் தேதி சபரிமலை தந்திரி மகேஸ்வரன் தலைமையில் பவானி கூடுதுறையில் ஆராட்டு உற்சவம் நிகழ்ச்சி ஆகியன
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் வி.ஏ.வி., பள்ளி இணைந்து, துாய்மை பாரத திட்டத்தில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை துாய்மைப்படுத்தினர்.மாணவ மாணவியர், பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிப்பது குறித்து, துாய்மையை வலியுறுத்தும் வாசகங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு, வினியோகித்தனர்.
சுகாதாரத்தை பின்பற்றுவது குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சுற்றுப்பகுதியை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், வி.ஏ.வி., பள்ளி நிர்வாகிகள் நிர்மலா, அசோக்குமார், பள்ளி முதல்வர் ஸ்ரீஜா மற்றும் நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம், தற்போது 6 மாத கால தயாரிப்பு (மெர்ச்சென்டைசிங்), கம்ப்யூட்டர் பேட்டர்ன் மேக்கிங், தையல் பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், நிட்டிங், டையிங், பிரிண்டிங், ப்ளேனிங், கார்மென்ட் காஸ்டிங், பேட்டன் வடிவமைப்புப் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது.
இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களிலும், அதன் துணை நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் பெற முடியும். இது தவிர, இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு 100 சத வீதம் வேலைவாய்ப்பினை ஏ.டி.டி.சி நிறுவனம் பெற்றுத்தருகிறது.
பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால் சுயமாகத்தொழில் தொடங்குபவர்களுக்கும் இந்த பயிற்சிகள் உதவியாக இருக்கும்.
பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழாவை நடத்தி வருகின்றனர். இதன் 12-ஆவது ஆண்டு புத்தகத்திருவிழா வருகின்ற 2015-ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகின்றன.
இதற்காக புத்தகக்கண்காட்சி வரவேற்புக் குழுவின் அமைப்புக்கூட்டம் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ட்ரிபிள் எக்ஸ். குப்புசாமி தலைமை தாங்கினார்.பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். புத்தகக்கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார்அகமது ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் புதிய வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழுத்தலைவராக ஆர்.ஏ.ஜெயபால், செயலாளராக செ.முத்துக்கண்ணன், பொருளாளராக அ.நிசார்அகமது, மேலும், 29 பேர் துணைத்தலைவர்களாகவும், 32 பேர் உதவிச்செயலாளர்களாகவும்1 32 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தொழிலதிபர்கள் எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத்அலி, பிரிண்டிங் குமாரசாமி, திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர்.ஏ.முருகநாதன், திருப்பூர் கலை இலக்கியப்பேரவை பொதுச்செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எம்.தங்கராஜ், யுனிவர்சல் கல்வி நிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜனிகாந்த் 65 வது பிறந்த தின விழா மற்றும் அவர் நடித்து நேற்று வெளியான லிங்கா திரைப்படம் தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பூர் அவினாசி ரோடு காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 1000 குழந்தைகளுக்கு பால்,பிரெட் பிஸ்கட் ஆகியன வழங்கும் விழா திருப்பூர் புது பஸ் நிலையம் பகுதியில் உள்ள சக்தி தியேட்டர் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கி 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரஜனி படம் போட்ட மஞ்சள் பையில் பால்,பிரெட் பிஸ்கட் ஆகிய உணவு பொருட்களை போட்டு வழங்கினார். நிர்வாகிகள் தென்றல் என்கிற தென்னவன்,அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி கவுரிகனகு வரவேற்று பேசினார். விழாவில் நிர்வாகிகள் ராஜேஷ், தங்கராஜ், ரகுராமன், தனபால், கென்னடி, கண்ணம்மாள், சுலோச்சனா, ராஜாத்தி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் பூவாத்தம்மாள் நன்றி கூறினார். தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரஜனி ரசிகர்களுக்காக பிரத்யேகிதமாக காலை 4 மணிக்கே லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்காக தியேட்டர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் ஏராளமான ரஜினி நடித்த லிங்கா பட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது அப்பகுதி முழுவதும் பின்னர் 7 மற்றும் 11 மணி,மதியம் 3, மாலை 6, இரவு 10 மணி என 6 காட்சிகள் காட்டப்பட்டது. அப்போது ரஜனி ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்துடன் வந்து படத்தை ரசித்து பார்த்து சென்றனர். தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியதாவது: எங்கள் சங்கம் சார்பில் கடந்த 20 வருடங்களாக ரஜனி பிறந்த நாள் கொண்டாடிவருகிறோம். அப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறோம்.இந்த ஆண்டு 1000 குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கியுள்ளோம்.லிங்கா படம் மிக அருமையாக,நன்றாக வந்துள்ளது. ரஜனிக்கு பெயர் சொன்ன பாட்சா படத்தை விட 1000 மடங்கு இந்த படம் நன்றாக வந்துள்ளது. இதில் தன்னுடைய நிலைப்பாடு, மனதில் உள்ளதை ரஜனி கூறியுள்ளார். இந்தப்படம் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும். அதனால் ரஜனி 100 ஆண்டுகள் எந்த நோயும் வராமல் வாழவேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...





