Monday, March 09, 2015
திருப்பூர் ஓடக்காடு பகுதியில் நடைபெற்ற இந்த கொடியேற்று விழாவுக்கு மாதர் சங்க ஓடக்காடு கிளைத் தலைவர் பிந்து தலைமை ஏற்றார். கிளை பொருளாளர் மகேஸ்வரி மாதர் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஏ.சங்கரன் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பொன்மணி குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஓடக்காடு கிளை சார்பில் மாதர் சங்கத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
-------------
-------------
Sunday, March 08, 2015
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு
அதிமுக, திமுகவிற்கு மாற்று அணியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் மதுரை பசுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தலில் ஊழலை ஒழிக்க செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும். பிரதமர் மோடி இலங்கை செல்வது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அவர் அங்குள்ள தமிழர்கள் நலன்காக்க வட கிழக்கு மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். ஊழலை ஒழிக்க "லோக் ஆயுக்தா' சட்டத்தையும், பொதுச் சேவைகளுக்கான உரிமைச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். தவறினால் அதற்காக காந்திய மக்கள் இயக்கம் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் முதல்வர் கனவை மறந்துவிட்டு அதிமுக, திமுகவிற்கு மாற்று சக்தியாக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு இப்போதே மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து கூட்டாக போராட்டங்களை நடத்த வேண்டும். அந்த கூட்டணியில் காந்திய மக்கள் இயக்கமும் பங்கேற்கும். காந்திய மக்கள் இயக்கம் 2021 இல் தமிழகத்தின் தவிர்க்க முடியாக சக்தியாக உருவெடுக்கும் என்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்க மாநிலத் துணைத் தலைவர்கள் கந்தசாமி, கோயில்பிள்ளை, பொருளாளர் குமரய்யா, பொதுச்செயலர் துரைக்கண்ணு, செய்தி தொடர்பாளர் ஜி. அய்யல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றன

காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 40 ஆயிரம் பேர்
பங்கேற்பது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கங்களின் போராட்டக்
குழு முடிவு செய்துள்ளது.
போராட்டக் குழு சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. போராட்டக் குழு மாநில அமைப்பாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்துப் பேசினார்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மா.விஜயபாஸ்கர், பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.மகாலிங்கம், ஓவர்சியர்கள் சங்க மாநிலத் தலைவர் தே.ஆறுமுகப்பெருமாள், சாலை ஆய்வாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம், கணினி உதவியாளர்கள், முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப நல நிதித் திட்டத்தை விரிவுபடுத்துதல், சாலை ஆய்வாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு முறையே பணிமேற்பார்வையாளர் உதவிப்பொறியாளர் பதவி உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்றும், இதில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மார்ச் 18 ஆம் தேதி வட்டார அளவில் ஆர்ப்பாட்டம், மார்ச் 19 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது

திருப்பூர்,மார்ச்.8-
அண்ணா தி,மு,க,வை எதிர்க்கும் சக்தி இனி எவருக்குமில்லை என சவால் விடும் வகையில் திருப்பூரில் பாசறை பேரணி அமைந்துள்ளது என அமைச்சர் எம்.எம்.எம்.ஆனந்தன் கூறினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறையின் எழுச்சிப் பேரணி புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இருந்து சுமார்.7ஆயிரம் பேர்களுடன் துவங்கியது.பேரணியை மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து கலந்து கொண்டார். பேரணி முக்கிய வழியாக மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
பேரணி முடிவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.விற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறை தோற்றுவித்துள்ளார்.இன்று இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இன்று நடந்த பேரணி திருப்பூர் மாநகர் மாவட்டம் என்றும் ஜெயலலிதாவின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்கும் வகையிலும், இனி ஜெயலிதாவை எதிர்க்கும் சக்தி எவருக்குமில்லை என சவால் விடும் வகையில் பறைசாற்றியுள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியனாலும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்ட கழகத்தை விட அதிக அளவில் முக்கியம் தந்து திருப்பூர் மாநகர் மாவட்டம் தான் முதலிடம் வகிக்கும் வகையில் சிறப்பு சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணா தி.மு.க.இயக்கத்தில்தான் சாதாரண தொண்டன் கூட உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க தலைவர்கள், எம்.பி.,எம்.எல்.ஏ., அமைச்சர் ஆக முடியும் இன்று பேரணியில் கலந்து கொண்ட நீங்கள் நாளை மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன் உயர்ந்த பதவிக்கு வரலாம். அண்ணா தி.மு.க.வில் மட்டுமே உழைப்பவர்களுக்கு நிச்சயம் பதவி கிடைக்கும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் பாசறையினர் கடுமையாக பணி செய்ததின் பயனாக 39 தொகுதிக்கு 37 தொகுதி பெற்று இருகிறோம் அதேபோல் வருகின்ற 2016ம் ஆண்டு நடை பெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் 234 தொகுதியிலும் அண்ணா தி.மு.க.வெற்றிக்கு இந்த பேரணியே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தனது வாழ்த்துரையில், எள் போட்டால் எண்ணையாகும் வகையில் மிக பிரமாண்டமான எழுச்சி பேரணி நடந்துள்ளது. கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அமைந்துள்ள பேரணி அண்ணா தி.மு.க. இயக்கத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பின்னால் நம்மையெல்லாம் தன் இமைபோல் கட்டி காத்து வரும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதையாகி தமிழகத்தின் நிரந்தர முதல்வராக பொறுப்பேற்று நமையும், இந்த் நாட்டையும் வழி நடத்துவார் என பேசினார்.
மேலும் பல்லடம் எம்.எல்.ஏ.,பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், ஆகியோர் வாழ்த்தி பேசினார்.மாவட்ட பாசறை செயலாளர் ஏ.எம்.சதீஷ் வரவேற்று பேசினார்.துணை மேயர் சு.குணசேகரன் பேரணியின் உறுதிமொழியை வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சார்பு அணி மாவட்ட, நகர,ஒன்றிய நிர்வாகிகள் வடக்கு தெற்கு, தொகுதி நிர்வாகிகளால்.பல்லடம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியகுழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற, தலைவர்கள், கவுன்சிலர்கள் மாமனர் உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Saturday, March 07, 2015
திருப்பூர் அருகே கோவில் ஊழியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறதாவது:
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த பள்ளபாளையம் சர்ச் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). இவர் வாழைதோட்டத்து அய்யன்கோவிலில் உண்டியல் காப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் கதிரேசன் (29). கார் டிரைவர். கடந்த 2–ந்தேதி இரவு பள்ளபாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆட்டோஸ்டேண்ட் அருகே கதிரேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஆமோஸ்சுந்தர்சிங் (27) என்பவர் கதிரேசனிடம் வாடகைக்கு ஆட்டோ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் நான் ஆட்டோ டிரைவர் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கதிரேசன் அங்கிருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஆமோஸ் சுந்தர்சிங் மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கதிரேசனை தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு சென்ற கதிரேசனின் தந்தை கணேசன் ஆமோசை சுந்தர்சிங்கை தடுத்து தட்டி கேட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் கணேசனை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த கணேசனை அங்குள்ள வீதியில் விரட்டி சென்ற ஆமோஸ் அங்கு கிடந்த கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து இறந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆமோசை தாக்கியதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து தப்பி சென்ற அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆமோஸ் சுந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் அவரை திருப்பூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருப்பூர் அருகே கோவில் ஊழியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் முருகம்பாளையம் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துபெருமாள். இவரது மனைவி சந்தனமாரி (எ) குட்டி (வயது 20). இவர்களுக்கு 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் முத்துபெருமாள் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் அவருடைய அண்ணன், அவருடைய மனைவி மற்றும் சந்தனமாரி வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. மேலும் குடும்பத்தகராறில் சந்தனமாரி மனஉளைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தனமாலிரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்தனமாரியின் அக்கா பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சந்தனமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 35 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது
உடுமலையில் மாற்றுத்திறனாளி மாணவி உள்பட 4 ஆயிரத்து 446 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.
தமிழ் நாட்டில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. பிளஸ்–2 தேர்வுக்காக உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த 14 தேர்வு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 496 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு அனுமதி சீட்டு (ஹால்டிக்கெட்) வழங்கப்பட்டிருந்தது. இதில் பள்ளிகளில் அல்லாமல் தனியாக படித்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு 114 மாணவ– மாணவிகளுக்கு ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 14 மையங்களிலும் சேர்த்து மொத்த 4 ஆயிரத்து 446 மாணவ–மாணவிகள் எழுதினர். மொத்தம் 50 மாணவ–மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி (எஸ்.கே.பி.பள்ளி) தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.கிருஷ்ணவேணி, வேறு அரசு பள்ளி ஆசிரியரின் உதவியுடன் தேர்வில் பங்கேற்றார்.மாணவி கிருஷ்ணவேணி அதிக நேரம் தொடர்ந்து எழுத இயலாத மாற்றுத்திறனாளி என்பதால் அவர் சொல்கிற விடையை எழுதுவதற்கு அவர் படிக்கும் பள்ளி ஆசிரியரல்லாத வேறு பள்ளி ஆசிரியர் ஒருவரை பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அதன்படி வினாவிற்கான விடையை அந்த மாணவி கிருஷ்ணவேணி சொல்ல, சொல்ல அதை எழுதுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த ஆசிரியர் விடைத்தாளில் எழுதினார்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு நிலையான பறக்கும் படை அலுவலர் மற்றும் 2 பறக்கும் படை அலுவலர்கள், தேர்வறை கண்காணிப்பாளர், துறை அலுவலர், முதன்மை கண் காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களுக்கு வினா மற்றும் விடைத்தாள் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கும், பின்னர் தேர்வு முடிந்ததும் விடைத் தாள்களை சேகரித்து திருப்பூருக்கு கொண்டு சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையில் ஒப்படைக்கவும் 3 பிரிவுகளாக வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...