Monday, February 24, 2020

On Monday, February 24, 2020 by Tamilnewstv in ,    
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.                                                                     திருச்சியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தே தகுதிப்பட்டை வழங்கப்பட்டது.                                              
                  
 ஷோட்டோ கான் கராத்தே வேர்ல்டு பெடரேஷன் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிறைவு விழா திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். தாங்கள் பெற்ற பயிற்சியினை அவர்கள் செய்முறை வழியாக வெளிப்படுத்திய பின் தகுதி அடிப்படையில் கராத்தே பட்டைகள் வழங்கப்பட்டது. வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் தகுதி பட்டைகளை தலைமை பயிற்சியாளர் சங்கர் வழங்கினார்.  இது குறித்து திருச்சி மாவட்ட தற்காப்பு பயிற்சி தலைமை பயிற்சியாளர் பத்மா கூறும்போது..... பெண்களுக்கு சவால் தரும் காலகட்டம் தற்போது நிலவி வருகிறது. எனவே இதன் அவசியத்தை கருதி பெண்கள் கராத்தே பயில்வதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழக அரசு இதனை பள்ளிகளில் பாடமாகக் கொண்டு வந்து பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்தார்.

Sunday, February 23, 2020

On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    
திருச்சியில் 6 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பேருந்து பயணியர் நிழற்குடையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.

                   

திருச்சி செந்தண்ணீ புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே  பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்து தர, திருச்சி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்தனர்.  இதனை தொடர்ந்து தனது  தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து பயணியர் நிழற்குடையை கட்டினார். 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த பேருந்து பயணியர் நிழற்குடையை அவர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது....... நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் மக்கள் என்னிடம் வைக்கும் பத்து கோரிக்கைகளில் என்னால் முடிந்த இரண்டு, மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன். திமுக ஆட்சி அமையும்போது பத்துக்கு பத்து என அனைத்து கோரிக்கைகளும்  நிறைவேற்றித் தருவேன் என்றார். இவ்விழாவில் பகுதி செயலாளர் தர்மராஜ், வட்டச்செயலாளர்கள் ரெங்கநாதன், சண்முகம், துரை, வரதராஜன், மணி, தவசீலன் தங்கவேல் , செல்வராஜ், இளைஞரணி ஜோஸ்வா, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    


புதுகை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில்

எல்பின் நிறுவனத்தினர் மதுரையில் தங்களது டாப் லீடர் களை அழைத்து கூட்டம் நடத்த இருந்தனர் ஆனால் பலத்த எதிர்ப்பு இருந்ததால் சென்னையில் ஆளுங்கட்சி காவல்துறையை எதிர்த்து நமது பலத்தை காட்ட வேண்டும் என்று மாமல்லபுரம் அருகில் உள்ள ஓர் 7 நட்சத்திர ஹோட்டலில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்களது பிசினஸ் கூட்டத்தை நடத்துகின்றனர். இவர்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்னதான் காவல்துறை திறம்பட செயல்பட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் 20 முதல் 30 சதவீத உறுப்பினர்களைத் திரட்டி ஆளும் கட்சிக்கு எதிராக மாபெரும் கூட்டத்தைத் திரட்டினர். காவல்துறை டிஜிபி திரிபாதி அவர்கள் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைத்து வருகிறார் அவரை ஏமாற்றி இவர்கள் நடத்தும் கூட்டத்தில் காவல்துறையினர் நுழைய முடியாதபடி கூட்டத்தை நடத்துகின்றனர். என்னதான் நாம் தினமும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் வீடியோ அனுப்பினாலும் அவர்கள் மூளையை சலவை செய்து எல்பின் அழகர்சாமி என்கிற ராஜா ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்



 பொதுமக்கள் பணத்தை ஆட்டையை போடுவதில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.. பொதுமக்கள் ஏமாந்தால் காவல்துறையை நோக்கித்தான் வருவார்கள். எனவே காவல்துறை டிஜிபி அவர்கள் இந்த கூட்டம் முடியட்டும் இனி இதுபோல் எந்த கூட்டமும் தமிழகத்தில் நடைபெற விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஜெய் ஹிந்த்

....................................................................................

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
On Sunday, February 23, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியின் முடிவில் நடந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

நாங்கள் முஸ்லீம்கள் இல்லை. இருப்பினும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு காரணம், நாங்கள் ஜனநாயக சக்திகள். இந்து மத கொள்கை மீது மிகுந்த பற்று கொண்ட காந்தியையே கோட்சே சுட்டுக் கொன்றான் என்றால் ஆர்எஸ்எஸ்சை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்சிற்கு பல அணிகள் உண்டு. அதில் ஒரு அரசியல் அணிதான் பிஜேபி. சங் பரிவாரின் வெறுப்பு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தான். தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகள் ஆனது யாரும் போட்ட பிச்சை அல்ல. அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டமே அதற்கு காரணம். முஸ்லீம்களை தனிமைப்படுத்த நாங்கள் விடமாட்டோம்" எனக் கூறினார்.
On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (சனிக்கிழமை) 'தேசம் காப்போம் பேரணி' திருச்சியில் நடைபெற்றது

 எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியிலிருந்து தொடங்கிய இப்பேரணி, எடமலைப்பட்டி புதூர் வழியாக கிராப்பட்டி வந்தடைந்தது. பேரணியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.


அதுமட்டுமின்றி இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிஏஏ-விற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரணிசுமார் 50 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி
                   

என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் - விடுதலை சிறுத்தைகள்  கட்சித் தலைவர்  எழுச்சித்தமிழர்  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தோல் .திருமாவளவன் பேட்டி


திருச்சியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் என்.ஆர்.சி,என்.பி.ஆர் ஆகியவற்றை செயல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் தேசம் காப்போம் பேரணி இன்று திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் எட்டு கோடி பேர் நாடற்றவர்களாக மாறும் நிலை உருவாகும்.26558 தடுப்பு முகாம்கள் கட்ட இருக்கிறார்கள்.இதற்கு 12 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய நேரிடும் என கணகிடப்பட்டுள்ளது.இது இந்தியாவின் பொருளாதராத்தை பாதிக்கும்.
மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடு இருள்மயமாகி விடும்.

இந்த சட்டத்தால் முஸ்லீம்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என நம்பினால் அது மிகப்பெரிய மூட நம்பிக்கை.

என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்.
நாட்டு மக்களை திசை திருப்பி ஏமாற்றும் முயற்சியில் அவர்கள் 
ஈடுபட கூடாது.பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் நடவடிக்கை.

அரசியலமைப்பு சட்டத்தை வலுவிழக்க செய்து அதை சிதைப்பது சங்பரிவாரிகளின் நீண்ட நாள் கனவு.

முதலமைச்சர் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்த விரும்புகிறார்.ஆளும் பா.ஜ.க வின் பாவசெயலுக்கு முட்டு கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.கூட்டணி தர்மத்திற்காக பா.ஜ.க செய்யும் பாவ செயலுக்கு அ.தி.மு.க,பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் துணை போகிறது.

ஒ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக வி.சி.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

தாழ்த்தப்பட்ட சமூகங்களை நீதிபதிகளாக நியமித்தது குறித்து ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு வருத்தமும்,அதிர்ச்சியும்,வலியையும்அளிக்கிறது. அவர் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதால் மேலும் அது குறித்து பேச தேவையில்லை என்றார்.
On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    

திருச்சி பிராட்டியூரில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களுக்கும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் கட்டைகளாலும், பீர் பாட்டில்களாலும் தாக்கி கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த மோதல் சாலைக்கும் சென்றது. மோதலில் 8 பேர் மண்டை உடைந்தது. 4பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக திருச்சி போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 28 மாணவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆயுதங்களால் தாக்கி கொள்ளுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.

இதனிடையே இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டதால் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி 28 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு செய்தனர். அந்த மனு மாண்புமிகு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அழகுமணி, இந்த மாணவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வழக்கு நிலுவையில் இருந்தால்அவர்களின் எதிர்காலம் பாதிக்கும். இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல விரும்புகின்றனர்.

எனவே மாணவர்கள் ரத்ததானம் செய்யவோ, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவோ, மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பணிளை செய்வது என எந்த நிபந்தனை விதித்தாலும் செய்ய தயாராக உள்ளனர். இந்த நீதிமன்றம் மாணவர்களின் நலன்கருதி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி வழக்கில் உள்ள 28 மாணவர்களும், இன்று 22-ந்தேதி திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு சென்று பொது வார்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் சான்றிதழ் பெற்று வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

கோர்ட்டு உத்தரவையடுத்து 28 மாணவர்களும் இன்று திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் ஏதோ ஒரு மனநிலையில் மோதிக்கொண்டோம். தற்போது மனம் திருந்தி அனைவரும் ஒற்றுமையாகி விட்டோம். இருப்பினும் செய்த தவறை உணர வேண்டும் என்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனையை ஒரு நாள் முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு நீதிபதி நூதன தண்டனை விதித்தார். அதன்படி இன்று மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இந்த தண்டனையை நாங்கள் வாழ்க்கையில் ஒரு விழிப்புணர்வாக கருதுகிறோம் என்று கூறினர் 

Saturday, February 22, 2020

On Saturday, February 22, 2020 by Tamilnewstv in ,    
சென்னையில் மாபெரும் கூட்டம் ?
               

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நமக்கு வந்த தகவலின்படி மதுரையில் ஒரு மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதாக  என்பின் நிறுவனத்தினர் கூறி இருந்தனர், இது விழிப்புணர்வு கூட்டம் அல்ல பிசினஸ் கூட்டம்தான் நாம் கூறியிருந்தோம். 


                       
மதுரையில் போலீசாரையும் ரவுடிகளையும் சரி செய்து விட்டோம் ஏன் ஜம்பம் செய்து வந்தார்கள். ஆனால் மதுரை காவல்துறையினர் கைது நடவடிக்கையில் தீவிரமாக இருந்ததை தொடர்ந்து இந்தக் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் நடத்த உள்ளனர்.

                    
 எல்பின் அடையாள அட்டை உள்ள அனைத்து உறுப்பினர்களும் சுமார் பத்தாயிரம் பேர் இங்கு திரண்டு நாம் ஆட்சிக்கு சவாலாக உள்ளோம் என்பதை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல். வரும் மார்ச் மாதம் முதல் நாம் புதிய கட்டத்திற்கு செல்ல இருக்கிறோம் அதை நிரூபிக்கும் வண்ணம் இந்த கூட்டம் இருக்க வேண்டும் என கூறி உள்ளனர். இங்கு எங்கும் கூட்டம் நடத்த அனுமதி இல்லை இதைத்தொடர்ந்து ஐடி கார்டு உள்ள அனைவரும் வரவேண்டும் என்பதால் இதுவும் ஒரு பிஸ்னஸ் கூட்டம்தான் எனத் தெரிகிறது. 2012 தமிழகம் முதல் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது அதனை அனைத்தையும் நிவர்த்தி செய்துவிட்டு இவர்கள் தொழில் செய்தால் பரவாயில்லை 

                
ஆனால் தற்போது தங்களிடம் உள்ள  பொருளாதாரத்தால் முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்து ( முன்னாள் அரசு பணியில் உயர் பதவியில் இருந்தவர்கள் ) தமிழக அதிகாரத்தை கையில் எடுக்க  வேண்டும். நம் மீது புகார் அளிப்பவர்கள், அதனை செய்தியாக பரப்புபவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பதற்காக மக்களை ஏமாற்றுவது எப்படி என்று ஒரு டீம் ரெடி செய்ய போவதாக தகவல். காவல்துறை டிஜிபி அவர்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். நாளை பொதுமக்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அது காவல்துறைக்கு தான் பொதுமக்களுக்கு பதில் சொல்ல நேரிடும். எனவே காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக இக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது நன்றி ஜெய் ஹிந்த்.



💥 *Important Meeting* 💥

*Dear Leader's*

*அனைவருக்கும் ஒரு முக்கிய  அழகர்சாமி என்கிற ராஜா ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அறிவிப்பு.*


தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் சிறப்பு கூட்டம்  வெற்றி நிச்சயம்


*வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (23-02-20) அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 5 மணிவரை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள CONFLUENCE 7 STAR HOTEL, Mahabalipuram Resort & Convention center (ECR - OMR JUNCTION, ECR, POONJERI, MAHABALIPURAM, Chennai-603104) ல் நமது நிறுவனத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி பற்றியும் நமது நிறுவனத்தின் தூண்களாக விளங்கும் Leader's களுக்கு மிக மிக முக்கியமான Special Meeting ம் நடைபெற உள்ளது.*

*எனவே நமது நிறுவனத்தில் ID போட்டுள்ள அனைவரும் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.*

*இந்த Meeting ற்க்கு வருகின்ற அனைவரும் கண்டிப்பாக White Shirt, ஷூ அணிந்து வரவேண்டும்.*

*முக்கியமான Leader's அனைவரும் கோட் ஷூட் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.*


பின் குறிப்பு :-
திருச்சியில் தீபாவளி சில நாட்களுக்கு முன்பு தனியார் ஓட்டலில் நிருபர்கள் சிலர் சேர்ந்து ஒரு பத்திரிக்கையாளர் சங்கத்தை தொடங்கினார். அதற்கு எல்பின் வேண்டாத ஒருவரை செயலாளராக நியமித்தனர். இதை அறிந்த ரமேஷ் குமார் அந்த நபருடன் பழக்கம் வைத்தவர்கள் எங்கள் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மிரட்டி உள்ளார். இதனைத்தொடர்ந்து ரமேஷ் குமார் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ( விளம்பரத்திற்காக) அனைத்து நிருபர்களும் அந்த நபரிடம் இருந்து விலகினார்கள். ஆனால் தற்போது ரமேஷ் குமார் அந்த நபரின் காலடியில் இருந்துகொண்டு மற்ற நிருபர்களை தவிர்த்து விட்டாராம்.  அந்த நபரிடம் இதை  கேட்ட நிருபர்களிடம் அந்த நபர் நீங்கள் விளம்பரத்திற்காக என்னை விட்டு விலகி விட்டீர்கள். நான் எனது பணத்திற்காக (வருமானம் ) அவருடன் சேர்ந்து விட்டேன் என நக்கலாக கூறி வருகிறாராம்.




....................................................................................

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ( சபரிநாதன்) ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

Friday, February 21, 2020

On Friday, February 21, 2020 by Tamilnewstv in ,    
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இதில் கலந்து கொண்டார்.

                  

 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வீரமணி செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.
அவர் கூறுகையில், மணியம்மையார் நூற்றாண்டு விழாவை மார்ச் 10ஆம் தேதி சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதை வரவேற்கிறோம். இந்த நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க அழுத்தம் கொடுக்கப்படும். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை  மீறி போராட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். உயர் ஜாதியினரின் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டம் மோசடி திட்டமாகும். அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை நாங்கள் வரவேற்றோம். அதேசமயம் இந்த முயற்சியை வரவேற்றாலும், அது முழு முயற்சியாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக இல்லாமல், ஆழமாக இதை செய்து முடிக்க வேண்டும். ஐந்து மாவட்டங்களில் மட்டும் இந்த சட்டத்தை அமல்படுத்தி விட்டு விட்டால், இதர மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதனால் முழுமையாக சட்டத்தை கொண்டு வரவேண்டும். தற்போது மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையாக செயல்படுத்தியும் ஒப்புதல் பெறவேண்டும். ஒரு துறையில் நிபுணரை தேர்வு செய்வதில் தவறில்லை. அவர் எந்த ஜாதியாக இருந்தாலும் அவரை நியமித்துக் கொள்ளலாம். நாங்கள் தனிப்பட்ட பிராமணருக்கு எதிரானவர்கள் கிடையாது. பிராமணியத்தை தான் எதிர்க்கிறோம். அதனால் பிரசாந்த் கிஷோர் நியமனத்தில் தவறில்லை என்றார்.