Saturday, April 18, 2020

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    

முசிறி அருகே விழுப்புரத்திற்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்.
 நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஐந்து பேர் விழுப்புரத்திற்கு நடந்து சென்றனர்.
இவர்களை கண்ட சமூக ஆர்வலர்கள் உணவு வாங்கிக் கொடுத்து விழுப்புரத்துக்கு அழைத்து சென்று உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (65) ,விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் மனைவி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்டம் ,பவுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் .தற்போது வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  நல்லதம்பி வேலை வாய்ப்பின்றி சிரமப்பட்டு உள்ளார். போக்குவரத்து தடை செய்யபட்ட நிலையில் விழுப்புரம் அருகே உள்ள சொந்த ஊரான திருக்கோயிலூர் சென்றுவிட கூலித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரும் நடை பயணமாகவே விழுப்புரத்திற்கு  செல்ல தீர்மானித்து பயணத்தை தொடங்கினர். சுமார் 150 கிலோ மீட்டர் நடை பயணத்திற்கு தயாரான தொழிலாளர்கள் மனதில் இருந்த நம்பிக்கை அளவிற்கு உடலில் தெம்பில்லாமல் மிகுந்த சோர்வுடன் திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் நடந்து சென்றுள்ளனர். இவர்களை பார்த்த போலீசார் அதே பகுதியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் சமுக தொண்டு நிறுவணத்தின்  உதவியுடன் உணவு வாங்கிக் கொடுத்து ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து விழுப்புரம் அருகே உள்ள திருக் கோவிலூர் கிராமத்தில் கொண்டு விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். கூலித் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லாத நிலையில் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய தா.பேட்டை போலீசார் மற்றும் வாசவி கிளப் குழுவினர்களுக்கு கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Friday, April 17, 2020

On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி
மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவில் பணியாற்றி வருகின்ற மருத்துவர் ரோஹைய கூறுகையில்

மேலும் ஒரு ஊரடங்கு உத்தரவை மக்கள் சந்தித்து விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்

ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை பிரதமர் மோடி நீடிப்பு செய்துள்ளார்
மே 3ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்பு மக்கள் வெளி உலகத்திற்கு வரும்பொழுது ஊரடங்கு உத்தரவில் வீட்டிலிருந்து தங்களுடைய எதிர்ப்பு சக்தியை உணவுகள் மூலமாக மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே மக்கள் வெளி நடமாட்டத்திற்கு வரும் பொழுது கொரோனா நோய்தொற்று அவர்களை தாக்காமல் இருக்கும் என்பதற்காக மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மேலும் நியாயவிலைக்கடை அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கும் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக ஒருவார காலத்திற்கு உரிய உணவுகள் இதனால் வரை வழங்கியுள்ளோம் மேலும் தொடர்ச்சியாக வரும் 20 ஆம் தேதி அன்று ஆயிரம் நபர்களுக்கு இலவசமாக ஒரு வார காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க உள்ளோம் என்றும்

தலைவர் வைகோ அவர்களின் புதல்வர் துரை வைகோ அவர்கள் தொடங்கிய இந்த குழு தமிழகமெங்கும் தொடர்ச்சியாக நாங்கள் சேவை செய்து வருகிறோம் மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவிற்கு பின்பு மேலும் ஒரு ஊரடங்கு உத்தரவை சந்திக்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று மதிமுகமாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹைய தெரிவித்தார்
On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே தொட்டியத்தில் கொரோனோ விழிப்புணர்வு ஓவியம்

 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் கரோனா வைரஸ் ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 முசிறி அருகே தொட்டியத்தில் வாணப்பட்டறை மைதானம், காவல் நிலையம் அருகே கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வீட்டில் தனித்திருப்போம், விழித்திருப்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து தொட்டியம் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது
On Friday, April 17, 2020 by Tamilnewstv in    

முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார்
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட்டியம் பகுதிகளில் 144 தடை உத்தரவு காரணமாக சிரமப்பட்டு வரும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முசிறி தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார்.

  முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணிபுர்pயும் தூய்மைபணியாளர்கள், திருநங்கைகள், சுயஉதவி குழுவினர்கள் உள்ளிட்ட 95 நபர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முசிறி தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பேரூராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 17

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த வகையில் முக்கிய சாலைகள், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சி என்.எஸ்.பி ரோடு, பெரிய கடை வீதி, மேல பொலிவார் ரோடு, காந்தி மார்க்கெட், வெல்லமண்டி, வெங்காய மண்டி, வான பட்டறை மாரியம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு கை தெளிப்பான் மற்றும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் சாலைகளின் இருபுறங்களிலும் கிருமிநாசினி தெளித்தனர். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக கிருமி நாசினி  தெளித்தார்.


On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகிய ஜி வி மணிமாறன்


அவர்கள் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார் வங்கி நேரத்தை காலை பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை குறைக்கப்பட வேண்டும் 

மத்திய நிதி அமைச்சகம் நிவாரணத் தொகையை அந்தந்த பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அப்படி வரவு வைக்கப்பட்ட தொகையை அவரவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று எங்களுடைய பணியாளர்கள் 90 சதவீதம் மேல் எங்களுடைய வங்கிப் பணியாளர்கள் விநியோகம் செய்து விட்டார்கள் அதை ஏற்றுக்கொண்டு ஸ்டேட் லெவல் பேங்கர்ஸ் கமிட்டி 15. 4 .2020 சுற்றறிக்கை அனுப்பி இருந்தது நிவாரண தொகையை அனைத்து பயனாளிகளுக்கும் கிடைத்து விட்ட காரணத்தால் காலை நேரம் 10 மதியம் 2 மணி வரை செயல்படும் என்று அறிவித்திருந்தது


மேலும்  அந்தந்த வங்கியின் மேலாளர்கள் தங்களுக்கு வருகைத் தந்துள்ள பணியாளர்களை வைத்து விரைவில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் தற்போது 40 சதவீதத்திற்கு பெண்கள் வேலை செய்துவருகின்றனர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வாகனத்தில் வந்து செல்கின்றனர் பெண்கள் அவர்கள் வீட்டிற்கு விரைவாக பத்திரமாக சென்று விடவேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம் 

இந்த ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்த காலத்திலிருந்து கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக தினமும் 50 நபர்களுக்கு மேல்  உணவு வழங்கி வருகிறோம் தற்போது இன்று மனநலம் குன்றிய நபர்களுக்கு கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கனரா வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர்  ராஜகோபால் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட செயலாளர் தியாகராஜன், தலைவர் ராஜசேகர் மற்றும் அறிவழகன் ஆகியோர் உதவிகளை வழங்கினர்.
On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 16

திருச்சியில் கொரோனா பாதிப்பு 43 பேரில் 32 பேர் வீடு திரும்பினர் - கைதட்டலுடன் விடைபெற்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி
மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
அனைவரும்
நல்ல நிலையில்
உள்ளனர்.

தற்போது 
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1நபருக்கும், அரியலுூர் மாவட்டத்தை
சார்ந்த 1நபருக்கும்
பெரம்பலூர்
மாவட்டத்தை சார்ந்த
1 நபருக்கும்
திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த 40நபருக்கும் உறுதி செய்யப்பட்டு
மேற்கண்ட 43நபர்களும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களின் ரத்த பரிசோதனை பெறபட்டு 
32பேர் சிகிச்சை முடிந்து இன்று காலை 
9மணிக்கு அரசு மருத்துவமனையிலிருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வீடு திரும்பினர். 
அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா, ஆகியோர் பழங்கள் கொடுத்த வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் கைகளை தட்டி விடை கொடுத்தனர்.
இவர்கள் தொடர்ந்த அவர்களது வீடுகளில் 14 நாள் தனிமை படுத்தபவார்கள் அதன் பின்னர் மருத்துவ சோதனைக்கு பின்னர் வழக்கமான பணியில் ஈடுப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பேட்டி : சிவராசு,
மாவட்ட ஆட்சியர்.
On Friday, April 17, 2020 by Tamilnewstv in    



Dear Friends,

The very purpose of     AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows:

1. Continue to serve the customers though the footfalls became very less due to lock out.

2. All the public conveyance like metros,buses, autos are stopped and the officers and employees are relying on their personal mode of conveyance.

3. In cities, the bankers are travelling even 40 kms one way in two wheelers.

4. About 40% of the workforce in the banks are women and majority of them are relying on the other male family members at home for dropping and pick up.

5. After 0500 pm the restrictions by the law enforcers are very strict and every corner the bankers are stopped to establish their identity.

6. It is strictly advised by the police not to move around after 0500 pm.

7. ABOVE ALL EVEN AFTER THE BUSINESS HOURS WE NEED MINIMUM OF TWO HOURS TO FINISH THE CLOSING RELATED WORKS TO PROCEED.

Thus to facilitate the bankers to reach home well in advance the demand of the AINBOF is acceded by THE GOVERNMENT Dominated SLBC.

So,
AINBOF requests every BANKER to understand the spirit behind this relaxation and PERMIT THE COMMITTED COLLEAGUES CONTINUE TO WORK FOR THE NATION WITHOUT INFLICTING DAMAGE TO THEMSELVES.

MANIMARAN G V

Wednesday, April 15, 2020

On Wednesday, April 15, 2020 by Tamilnewstv in    
Dear Canpals,

Our benevolent management has already issued guidelines which paved the way for permitting the handicapped, visually impaired and pregnant women to work from home.


By permitting the roster, it is indicated to permit the staff to come on rotation.

It may further be noted that the branch incharge shall take a decision at their level to implement the Bank’s directions and send the details for information to ROs.

Today the SLBC has also relaxed certain conditions like 10 to 2 pm Business hours, which was with the sole intention of permitting the bank staff to reach home early on completion of business hours and day closing related activities.

It is also permitted to retain 50% of the staff after permitting deserving people to work from home.

Kindly be in touch with the local government authorities and comply with their directions fully.

Follow the government guidelines on social distancing strictly and also seek the assistance of the police wherever required.

All the statutory issues are deferred till June which includes even the obtention of AOD.

Be careful in sending notices on recovery as it involves the reputation of our great bank.

On 13th almost all the bank branches, which includes 20 branches of Canara bank in Tiruvellore District are closed.

In Hubli, good number of our officers were asked to rest at home for 22 days from today as they have come across one corona patient a week back in the branch.

The above incidences must have given sufficient insight in to the need of the hour, for the responsible and seasoned bankers like us.

Country is undergoing health emergency and thus kindly take care of yourself and the society too which is more important at this juncture.

Branch managers are literate, committed and responsible individuals in the field level and they are capable of taking right decision at their level in the interest of our country, public and our great bank.

All the best.

Manimaran G V🙏