Tuesday, May 19, 2020

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
மழைநீர் வயல்களில் தேங்கியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த மழையால் வயல்களிலும் மழைநீர் புகுந்தது.
இதனால் வையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் முற்றிலுமாக சாய்ந்து விட்டது.
இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் நெற்கதிர்கள் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு கடும் வறட்சியிலும் விவசாயம் செய்து வைத்திருந்த விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகள் நலன்காத்திட உரிய உதவி செய்திட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
*திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 23 மாவட்டங்களை சேர்ந்த 558 நபர்கள் டெல்லியில் இருந்து 
சிறப்பு ரயில் மூலம் திருச்சிராப்பள்ளி ஜங்சன் ரயில்வே நிலையத்திற்கு 
வருகைபுரிந்தனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்.* 

டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள் 292 நபர்கலும் இதர 266 நபர்களும் ஆக 
மொத்தம் 558 நபர்கள் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் திருச்சிராப்பள்ளி இரயில்வே 
ஜங்சன் வந்து சேர்ந்தனர். 


266 நபர்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 64 நபர்கள் 202 நபர்கள் இதர 
மாவட்டங்களை சேர்நதவர்கள் 
புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் திண்டுக்கல் மதுரை தேனி கரூர் ஈரோடு
திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி சேலம் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகபட்டினம்
அரியலூர் பெரம்பலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை கடலூர் ஆகிய 22
மாவட்டத்தை சேர்ந்த 202 நபர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு 
போக்குவரத்துக்கழகம் 5 சிறப்பு பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி 
வைக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான 
பரிசோதனை செய்யப்படுவார்கள். 
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64 நபர்களையும் தமிழ்நாடு அரசு 
போக்குவரத்துக்கழகத்தின் 2 சிறப்பு பேருந்துகள் மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று 
பரிசோதனை செய்து தனிமை படுத்துவதற்காக சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரிக்கு 
அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு 
வருகின்றனர். 
மீதமுள்ள 292 நபர்கள் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள். இவர்களை 
திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சனில் இருந்து தனியார் கல்லூரி பேருந்துகள் மூலம் காஜாமலை 
பகுதியில் உள்ள அரபிக்கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களும் 14 
நாட்கள் தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ராஜ்மோகன்
திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் முசிறி வருவாய் கோட்டாட்சியர்
(பொ) 
பழனிதேவி காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மணிகண்டன் 
அலுவலக மேலாளர் பொது சத்தியமூர்த்தி திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர்
மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
தமிழகத்தில் 24 மாவட்டங்களை சேர்ந்த 494 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரிந்த 


தொழிலாளர்களை புனே ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு 
திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தது. ரயிலில்வந்தவர்களை அந்தந்த 
மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 12 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக 
இடைவெளி கடைபிடித்து மாவட்ட ஆட்சித்தலைவர் 
சிவராசு இன்று (19.5.2020) 
பயணிகளை அனுப்பி வைத்தார். 

 இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது

மத்திய‌மாநில அரசுகள் புலம் பெயர்ந்து வேலை செய்யும்தொழிலாளர்களை அந்தந்த 
மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சிறப்பு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று 
அறிவிக்கப்பட டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த 494 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணி புரிந்த 
நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர். 
அதனன்படி அரியலூர் 8 கோயமுத்தூர் 16 திண்டுக்கல் 39 ஈரோடு 44 காரைக்கால் 1கரூர் 25 
மதுரை 17 நாகப்பட்டினம் 25 நாமக்கல் 9நிலகிரி 7பெரம்பலூர் 15 புதுக்கோட்டை 80சிவகங்கை 
30தஞ்சாவ10ர் 29தேனி 26 திருச்சிராப்பள்ளி 25 திருப்பூர்10 17 திருவாரூர் 62 சேலம் 08 தர்மபுரி 05
கிருஷ்ணகிரி 2 விழுப்புரம் 1 திருவண்ணாமலை 1திருப்பத்தூர் 2 ஆகிய 24 மாவட்டங்களை 
சேர்ந்த 494 நபர்கள் சிறப்பு இரயில் மூலம் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் வருகை புரிந்தனர். 
இவர்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து 
கழகத்தின் 12 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து அனுப்பிவைக்கப்பட்டனர். 
இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று உள்ளதா என பரிசோதனை 
செய்யப்படுவர்கள். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச்சேர்ந்த 25 நபர்களும் சேதுராப்பட்டி அரசு தொழில்நுட்பக்
கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முகாமில் 14 நாட்கள் தனிமைப ;படுத்தப்பட்டுள்ளனர். 
இவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும். 
மேலும் நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் உணவு வழங்கப்பட்டது என 
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித ;துள்ளார். 
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக 
உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் 
சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் 
சிவராசு தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 67 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்
இதில் 64 நபர்கள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி 
வைக்கப்பட்டுள்ளனர். 
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து 
திருச்சிராப்பள்ளிக்கு திரும்பிய 1 நபருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி 
செய்யப்பட்டுள்ளது. 
 தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை சார்ந்த 4 நபர்களும் பெரம்பலூர் 
மாவட்டத்தை சார்ந்த 14 நபர்கள் அரியலூர் மாவட்டததை சார்ந்த 2 நபர்கள் ஆக 
கூடுதல் 20 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அனைத்து நபர்களும் நலமுடன்
உள்ளனர்

 வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்;கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல் 
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க வேண்டும். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக 
மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 18

மத்திய நிதிஅமைச்சரின் கொரோனா நிதி 
20இலட்சம் கோடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தந்தது - விவசாயிகள்  கோவனதுடன் அறை நிர்வாணத்துடன் ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர்  அய்யாக்கண்ணு  தலைமையிலும், திருச்சி மாநகர தலைவர் மேகராஜன், மாநில செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  கோவணம் கட்டிக்கொண்டு,
அறை நிர்வாணத்துடன் 
ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அதில் இந்திய ஜனத்தொகை130 கோடியில் 85 கோடி பேர் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள்.

பிரதமர் மோடி கொரோனா-வால் பாதித்த மக்களுக்கு ரூ.20 லட்சம் கோடி நிவாரணநிதி ஒதுக்கியவுடனே இந்திய விவசாயிகள் எல்லோரும் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும் என்றும் கூறினீர்கள். ஆனால் 40கிலோ நெல்லுக்கு 
ரூ.60முதல் ரூ.80 வரை லஞ்சம் கொடுத்துதான் விற்றோம். சூறாவளியால் அழிந்த வாழை மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு நஷ்டஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், 
கிடைக்கவில்லை.
நிதியமைச்சரின் அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. ஜனத்தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் விவசாயத்தை சார்ந்தவர்களுக்கு சுமார் 14 இலட்சம் கோடி  நிவாரணமாக கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், விவசாயிகளை கடன்காரர்களாக ஆக்குவதற்காகவும், வங்கி மேலாளர்களை கண்டு விவசாயிகள் ஓடி ஒழியும் அடிமைகளாக்குவதற்காகவும், விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுப்பது எதுவும் இல்லாமலும், கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவது, விவசாயிகள் கடனிலேயே பிறக்க வேண்டும், கடனோடு வாழ வேண்டும் என தான் உள்ளது.
விவசாயிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது சம்மந்தமாகவோ, நிதியமைச்சர் அறிக்கையில் எதுவும் இல்லை.
வெள்ளம் வந்தாலும், வறட்சி வந்தாலும் 
எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் எல்லோரையும் காப்பாற்றுங்கள்.
எனவே, நிதியமைச்சர்  விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்கும்வரை, அதுவரை கடன் தள்ளுபடியும், ஏக்கருக்கு ரூ.20,000/- நஷ்டஈடும்
60வயதடைந்த விவசாயிகளுக்கு சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்று பார்க்காமல் மகன், மகள் இருந்தாலும், நிலம் இருந்தாலும் அரசு ஊழியருக்கு பென்ஷன் கொடுப்பதுபோல் மாதம் ரூ.5,000/- ஓய்வூதியமும், தனிநபர் இன்சூரன்ஸ்-ம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: அய்யாக்கண்ணு,
மாநில தலைவர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்.
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 18

திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள்  மாவட்ட அலுவலகம் முற்றுகை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை
சுமார் 500க்கும் மேற்பட்டமுடி திருத்தும் தொழிலாளர்கள்
இன்று காலை  முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்த ஊரடங்கினால் பல்வேறு தொழில்களும் முடக்கப்பட்டு பொது மக்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து, இருக்கின்றனர்.
தற்போது சில  விதிமுறைகளால் தளர்த்தப்பட்டு பல தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் முடிதிருத்தும் தொழில் மட்டும்
அனுமதி வழங்கவில்லை திருச்சி மாவட்ட சுமார் 1500க்கு மேற்பட்ட கடைகள் உள்ளது.
 இவர்கள் தங்களது வாழ்வாதரங்காள இழந்து தவிக்கின்றனர் எனவே தமிழக அரசு தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம்தோறும் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் மேலும் மேலை நாடுகளில் உள்ளது போல வாடிக்கையாளர்களின் முகவரி அலைபேசி எண் மற்றும் அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் கருவி மூலம் நாள்தோறும் அங்குள்ள அரசிற்கு கொடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்தனர்.


பேட்டி: செல்வராஜ்
 தலைவர்,
திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்.

Monday, May 18, 2020

On Monday, May 18, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே பேரூர் கிராமத்தில் 100 நாள் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி மாரடைப்பில் மரணம் 
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் போது பெண் கூலித்தொழிலாளி மாரடைப்பில் மரணம் அடைந்த சம்பவம் தொழிலாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


 முசிறி ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி அமைந்துள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திருமணத் தான் வாரியில்  உறிஞ்சு குழி அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பேரூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி (55) என்ற பெண்ணும் ஈடுபட்டிருந்தார் அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் இதையடுத்து தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இதுகுறித்து முசிறி ஒன்றிய ஆணையர்கள் உரிய விசாரணை செய்து வருகின்றனர்
On Monday, May 18, 2020 by Tamilnewstv in    
எல்பின் திருச்சியில் தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களை பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி ஏமாற்றி சம்பாதிக்கும் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.

பொதுமக்கள் தற்போது இது போலி நிறுவனம் என்பதை உணர தொடங்கி உள்ளனர்.

 இதனைத்தொடர்ந்து அறம் மக்கள் நல சங்கம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி ஏழை, எளிய பொதுமக்களுக்கும் மற்ற நலிவடைந்தவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்குகிறோம் என்ற போர்வையில் வெளியில் உலா வந்து கொண்டு இருக்கின்றனர்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க தினசரி பத்திரிக்கை, உள்ளூர் தொலைக்காட்சி. தற்போது அடுத்த கட்டமாக சன் பிக்சர்ஸ் நிகராக தற்போது அறம் பிச்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் திரைப்படங்கள் தயாரித்து வருகின்றனர். ( இதில் தானே நஷ்ட கணக்கு பெரியளவில் காட்ட முடியும்) 

இவர்கள் மீது திருச்சி, தஞ்சை, மதுரை என பல ஊர்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என நாம் பலமுறை பதிவிட்டும் காவல்துறை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை. இவர்கள் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன என்பது இன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதல்வர் நிவாரண பணிக்கு ரூ.50 லட்சம் எல்பின் நிறுவனத் தலைவர் ராஜா என்னும் அழகர்சாமியின் பிறந்த நாளுக்கு இரண்டு லட்சம் பேருக்கு நலத் திட்டங்கள் என பணத்தை வாரியிறைக்கும் இவர்களுக்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை வழங்காதது ஏன் ? இதனை தமிழக காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்களை ஏமாற்றிய  இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் செய்தி பரப்புவோர் மீது கொலை முயற்சி நடத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

 தற்போது இவர்கள் நடத்தி வரும் மக்கள் ராஜ்யம் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர்கள் என்னிடம் உதவிகள் மற்றும் பணம் கேட்பார்கள் நான் அவர்களுக்குக் கொடுத்தேன், தர முடியாத சூழ்நிலையில் என்னைப் பற்றியும் எங்கள் நிறுவனம் எல்பின் பற்றியும் அவதூறாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்புகின்றனர் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் யார் யாருக்கு பணம் கொடுத்தார், என்ன காரணத்திற்காக கொடுத்தார், அவர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன, அது யாருடைய பணம் ? மக்களின் பணமா ?இவர் உழைத்து சம்பாதித்த பணமா ? என பட்டியல் வெளியிடுவாரா ?

இவர் நேர்மையாக நிதி நிறுவனம் நடத்தி வந்தால், இவர்கள் மீது முதலில் வழக்கு தொடர்ந்த நபரை இவர் ஏன் தங்களுடன் வைத்துள்ளனர். செய்தி link அனுப்பும் ஓர்  முன்னணி பத்திரிக்கையின் முன்னாள்  நிருபரை, தனது உள்ளூர் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வரும் ஒருவர் முலம் அழைத்து பல லட்சம் பேரம் பேசியது ஏன் ? 


 இவர்கள் பற்றி ஆடியோ வெளியிடும்  புதுக்கோட்டை சத்தியமூர்த்தி மீது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல்  புகார் அளித்தது ஏன் ?

இப்படி தங்களின் பத்திரிக்கையை தங்கள் சுயலாபத்திற்காக நடத்தும் நபர்கள் மக்களின் நலனை அக்கறை கொண்டிருந்தால் இவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு இவர்கள் பணத்தை திருப்பி அளித்திருப்பார்கள் வழக்கில் பார்த்துக்கொள்ளலாம் இன்று இவரால் பாதிக்கப்பட்ட நபர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதும் தங்களைப் பற்றித் தாங்களே புகழ்ச்சியாக பத்திரிகைகள் போட்டுக் கொள்வதும் தங்கள்  மேலுள்ள வழக்குகளை மறைப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பணம் பிடுங்கும் நோக்கத்துடன் நடக்கிறார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக இருந்தால் காவல்துறை அதிகாரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு புகார் கொடுக்க வேண்டியதுதானே ?பொய்யான புகார்களை வைத்தால் காவல்துறையினரிடம் அசிங்கப்பட தான் வேண்டும்.

நாங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு உதவி செய்கிறோம் என்றால் என்ன உதவி செய்துள்ளனர். எவர் எவருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளனர்,
இவர்களால் உதவி உதவி பெற்றவர்கள் யார் யார் என்ற ஆதாரத்துடன் பட்டியலிட முடியுமா? அப்படி இல்லை என்றால் தேவை இல்லாமல் இவர்கள்தான் வதந்தியை பரப்புகிறார்கள் நீதிமன்றத்தில் வழக்கு காவல்துறையால் பதியப்பட்டு உள்ள நிலையில் இவர்கள் நாங்கள் யோகிதை என்பது சொல்வது காவல்துறையை குற்றம் சாட்டுவது போன்று உள்ளது நீதித்துறையை குற்றம் சாட்டுவது போன்று உள்ளது.

இப்படியெல்லாம் பொய்யான தகவல்களை தங்கள் செய்தித்தாளில் பரப்புவதற்காக நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வருகின்றனர்.

விஷயம் மாண்புமிகு. நீதிமன்றத்திற்கு பார்வைக்கு கொண்டு சென்றாள் பத்திரிக்கை தடைசெய்யும் வாய்ப்புள்ளது என்பது நன்றாக படித்த வழக்கறிஞர்களை வைத்து ஆலோசித்து பதிவிட வேண்டும். இல்லை என்றாள் பத்திரிக்கை சட்டப்படிதடை செய்யப்படும்.
உள்ளூர் தொலைக்காட்சி என்று வைத்துக் கொண்டு தங்களுடைய தொலைக்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள செய்திகளை வெளியிடுவது எந்த சட்டத்தின் கீழ் வருகிறது என்று கூற முடியுமா ?தங்களுடைய செய்தித்தாளின் முகவரி எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவரத்துடன் வெளியிடப்படுமா?


இவர்கள் மீது  வழக்குகள் விவரம் FIR  நம்பருடன் சரியான தகவலை நாம் வெளியிட்டும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க  மத்திய மாநில அரசுகள் கண்காணித்து தான் வருகின்றது. செயின் திருட்டு வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது மூன்று வழக்குகள் இருந்தாலே சட்டப்படி அவர்கள் திருந்த  குண்டர் சட்டம் போடுகிறார்கள். இவர்கள் மீது அப்படி குண்டர் சட்டம்போடப்படுமா? பொதுமக்கள் இவர்களது மாய வலையில் சிக்காமல் இருக்க மத்திய மாநில அரசு அதிகாரிகள் இவர்களுக்கு தகவல் சொல்லும் கருப்பாடுகளை எடுத்து உடனடி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆவல்


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்)

 இதுநாள் வரை நிறுவனத்தின் மீது திருச்சி
( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தில் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்கள் இன்று வரை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற போலி நிதி  நிறுவனம் ஒன்று தில்லை நகரில் குற்றப் பொருளாதாரப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து சீல் வைக்கப்பட்டது



மேலும் பல உண்மை தகவல்கள் மற்றும் ஆதாரங்களுடன் விரைவில் சந்திப்போம்.......

 பொது மக்களை பாதுகாப்போம்........

Sunday, May 17, 2020

On Sunday, May 17, 2020 by Tamilnewstv in    
*இறப்பில் எஸ்பிஐ பதவி உயர்வு பெற்ற காவலர்* 

காவல்துறை செய்தி


திருச்சி  காவல்துறையில் 1986ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 35 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பணி செய்து வந்தவர் முருகேசன் இவர் காவல்துறையில் எஸ் எஸ் ஐ என்ற பதவி வகித்து இவரது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார் திருச்சி கே கே நகர் காவல்நிலையத்தில் குற்றப் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

 தற்பொழுது ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக காவல்துறையினர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு விதிமுறைகளை பாதுகாக்க வேண்டி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென எஸ்எஸ்ஐ முருகேசன் அவர்களுக்கு வாந்தி மயக்கம் வந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


  இந்நிலையில் மே7 அன்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக தனியார் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர் தனியார் மருத்துவமனையில் இருதய நோயால் இறந்ததாக தெரிவித்துள்ளனர் ஆனால் நேற்று இரவு இவருக்கு தொற்று ஏதேனும் வழி உள்ளதா என்பதற்கு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் அறிவிப்பு கிடைத்துள்ளது 


பின்னர் அவருடைய இறுதிச்சடங்கு குண்டுகள் முழங்க நடைபெற்றது.
இச்சம்பவம் காவல்துறையினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது