Friday, May 29, 2020

On Friday, May 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். 

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கையை அவமானப்படுத்தும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சில காட்சிகள் காட் மேன் படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. 




மேலும் 
அந்த படத்தில் பிராமணர்களை பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் அவதூறு கருத்துக்களும், கொச்சையான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது திட்டமிட்டு வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. 


அதனால் அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், தனியார் டிவி சேனல் (zee 5) நிர்வாக இயக்குனர் மற்றும் அதன் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 பேட்டி: தினேஷ்

Thursday, May 28, 2020

On Thursday, May 28, 2020 by Tamilnewstv   
திருச்சி மே 28

கொரோனா பாதிப்பு கால  நிவாரணம் வழங்க வலியுறுத்தி எல்ஐசி முகவர் சங்கத்தினர் அலுவலக வாயில் ஆர்ப்பாட்டம்.

இந்தியா முழுவதும்  
கொரோனா
பாதிப்பினால் பல தொழில்கள் நலிவடைந்து பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முதன்மை பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் பணிபுரிபவர்களுக்கு முகவர்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை மேலும் கேரளா மாநிலத்தில் கேரள அரசு எல்ஐசி முகவராக பணிபுரியும் ஒருவருக்கும் தலா ரூபாய் 5000 வழங்கி உள்ளதாக கூப்படுகிறது. பல ஆயிரம் கோடி வருமானத்றை ஈட்டி தரும் முகவர்களுக்கு 
தமிழக அரசு இதுவரை எந்த விதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக எல்ஐசி முகவர்கள் அனைவருக்கும்  ரூபாய் 50ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி எல் ஐ சி  முகவர் சங்கத்தின் தலைவரும்
முதன்மை காப்பீட்டு ஆலோசகருமான
பூமிநாதன் தலைமையில் திருச்சி எல்ஐசி அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட உரையை தென் மண்டல குழு உறுப்பினர் பொன்.வேலுசாமி வழங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில்
உடனடியாக கொரோனா நிவாரண நிதியாக 
ரூ 50ஆயிரம் வழங்க வழங்கவேண்டும்,  எல்ஐசி முகவர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மேலும் 
டார்கெட் வைத்து  செயல்படும் நிலையை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை 
வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜோசப்,  செல்வராஜ்  உட்பட
25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
On Thursday, May 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, பெரம்பலூா், கரூா், அரியலூா் ஆகிய 4 மாவட்டங்களைச் சோந்தவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவா்களுக்கு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலுள்ள சிறப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்திலிருந்து இதுவரை 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சோந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையிலுள்ள கைதி ஒருவருக்கும், சோமரசம்பேட்டையைச் சோந்த தம்பதிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து இவா்கள் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சோக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 79 என உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் இருந்தவா்களில் திருச்சியைச் சோந்த மேலும் ஒருவா் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளாா். தற்போது திருச்சி மாவட்டத்தைச் சோந்த 10 பேர், பெரம்பலூா், தேனி மாவட்டத்தைச் சோந்த தலா ஒருவா் என மொத்தம் 12 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.
On Thursday, May 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் ,
முசிறி அருகே தா.பேட்டைக்கு  மும்பையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

முசிறி தாலுகா தா.பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் .இவர் கடந்த பத்து வருடங்களாக மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்துடன் மும்பையில் வசித்த செந்தில்குமார்   மும்பையிலிருந்து விமானம் மற்றும் கார் மூலம் பயணித்து மனைவி தீபா மகன் கவின் அஸ்வின் ஆகியோருடன் தா.பேட்டைக்கு நேற்று  வந்துள்ளனர் . வரும் வழியில்

 இவர்களுக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை  முடிவில் தீபா, கவின் ,அஸ்வின் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் தகவல் தா.பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு கோவையில் இருந்து தெரியவந்தது. இதையடுத்து தா.பேட்டை சேர்ந்த சுகாதார குழுவினர் மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதிகளில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது . இச்சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது .மேலும் தா.பேட்டை முழுவதும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
On Thursday, May 28, 2020 by Tamilnewstv in    
பட்டா பதிவுக்கு அதிகபணம் வசூல் ! அரசு


 94 கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டி செக்ரட்டரி செல்வராஜ் என்பவரின்  மனைவி அஞ்சலா தேவி,  செல்வராஜ் அவர்கள் பணிபுரியும் கூட்டுறவு சொசைட்டியில் தமிழக அரசின் இ-சேவை மையம் அமைந்துள்ளது, 94கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டி செகரட்டரி செல்வராஜ் என்பவர்  தமிழக அரசின் இ-சேவை மையம் இ சேவை பாஸ்வேர்டு யூசர் ஐடி  ஆகியவற்றை தனது மனைவி அஞ்சலி தேவி என்பவர் மூலம் மனச்சநல்லூர் சமயபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஆரியமாலா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ளது மங்கை சென்டரில் திருட்டுத்தனமாக உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளதாகவும் 

  

 தமிழக அரசின் இ-சேவை மையத்தில் பாஸ்வேர்டு, ஐ டி ஆகியவற்றை உபயோகப்படுத்தி செல்வராஜ் மனைவி அஞ்சலி தேவி என்பவர் தனியாக ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் தமிழக அரசின் அனைத்து விதமான விண்ணப்பங்கள் என ஊரில் அமைந்துள்ள மங்கை சென்டரில் பதிவேற்றம் செய்வதாகவும், மேலும் தமிழக அரசின் தொகையை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்கிறார் எனவும் தமிழக அரசின் உத்தரவுப்படி பதிவேற்றம் செய்யாமல் ஜெராக்ஸ் மட்டும் வைத்து விண்ணப்பம் பதிவேற்றம்,  பட்டா பெயர் மாற்றம் செய்ய அரசு உத்தரவுகளை பின்பற்றாமல் அடக்கமான கடன் பத்திரங்களிலும் பதிவேற்றம் , மேலும் வில்லங்க சான்று இல்லாமல் பதிவேற்றம் செய்வதாகவும்,  ஜெராக்ஸ் வைத்து பதிவேற்றம்  செய்வதற்கு 500 முதல் 1000 ரூபாய் மேலும் வில்லங்கமான பாத்திரங்களை பதிவேற்றம் செய்வதற்கு 1000 முதல் 1500 வரை வசூல் செய்வதாகவும், படிப்பறிவு இல்லாதவர்கள் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது நானே பட்டா வாங்கி தருகிறேன் என்று அவர்களிடம் ரூபாய் 5000 முதல் 1500 வரை வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது, படிப்பறிவு இல்லாத மக்கள் விரைவில் பட்டா வரவேண்டி அஞ்சலிதேவி கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர் மேலும் தமிழக அரசின் இ-சேவை (சிஎஸ்சி) மையத்தின் பாஸ்வேர்ட் யூசர் ஐடி ஆகியவற்றை உபயோகப்படுத்தி செல்வராஜ் மனைவி அஞ்சலி தேவி என்பவர் மாதம்தோறும் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார் எனவும் செல்வராஜ் என்பவர் கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டியின் தமிழக அரசின் இ-சேவை சிஎஸ்சி பாஸ்வேர்டு அண்ட் யூஸர் ஐடி யை உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Wednesday, May 27, 2020

On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    
*திருச்சி வருகை தந்த பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு* 

கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம்  மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 78 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு  அவர்கள் இன்று             27.5. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ஜெகநாத், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர்  விஸ்வநாதன், உதவி ஆட்சியர் பயிற்சி  சித்ரா விஜயன் துணை ஆட்சியர் பயிற்சி செல்வி சரண்யா மற்றும் பலர் உடன் உள்ளனர்.திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 38 நபர்கள் இண்டிகோ விமானம் மூலம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் செல்கின்றனர்.
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    

                          


திருச்சி மன்னார்புரத்தில்  அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்க  விழிப்புணர்வுக்காக செய்திகள் வெளியிட்டு வருகிறோம் .
                        

மேலும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒன்றுக்கு மூன்று தருவதாக கூறி ஒரு வருடம் முடிந்த பின்பு அவர்கள் பணம் கேட்டு வந்தால் கொடுப்பதை வாங்கிக் கொள் இல்லை என்றால் தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் எங்களுக்கு உள்ளது அதோடு நீ கொடுக்கும் வழக்கும் ஒன்றுதான் என்று அதன் நிறுவனர் ராஜா என்கிற அழகர்சாமி,ரமேஷ்குமார் என்கிற எஸ் ஆர் கே ரமேஷ் இருவரும் முதலீட்டாளர்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து பேசுகிறார்களாம் நாங்கள் எந்தத் துறைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டியது கொடுத்து தான் நாங்கள் இந்த தொழிலை நடத்தி வருகிறோம்.

                           
 என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முதலீட்டாளர்களை கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இவர்கள் நடத்தி வரும்அறம் மக்கள் நல சங்கம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இரண்டு லட்சம் நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இரண்டு லட்சம் நபர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குகிறார்கள் என்று நினைத்தால் அதையும் அவர்கள் பிசினஸாக செய்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களது எல்பின் நிறுவனத்தில் உள்ள முக்கிய லீடர் ஒருவர் நிறுவனத் தலைவர் ராஜாவுக்கு அனுப்பிய வீடியோ பதிவை பார்த்த  பின்பாவது பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்பதே நமது நோக்கம்.  மத்திய அரசு மாநில அரசு முறையான  விசாரணை மேற்கொண்டு இந்நிறுவனத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.*

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் இராணுவ இடத்தின் பிரச்சினையால் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை செயலர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் இன்று ஜங்ஷன் மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது இதனை நெடுஞ்சாலைத்துறை செயலர் மேம்பாலப் பணிகளை விரைவில் முடிப்பதற்க்கான சாத்தியக்கூறுகளை இன்று ஆய்வு செய்தார். மாற்று இடமாக தமிழக காவல் துறை  இடத்தை  இராணுத்திற்க்கு வழங்க இருப்பதாக கூறினார். அதற்க்கான திட்டம் வரையறுக்கப்பட உள்ளதாகவும் விரைவில் மேம்பாலப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
மாட்டு வண்டியில் மணல் திருடி மலைபோல் வீட்டில் குவிப்பு.
2 பேரை கைது செய்த போலீசார். மணலை பறிமுதல் செய்த வருவாய்துறையினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக திருச்சி மத்திய மண்டல டி.ஜ.ஜி பாலகிருஷ்ணனுக்கு தகவல் சென்று கொண்டிருந்தது. இதே போல் இன்றும்  மாட்டு வண்டிகளில் மணலை திருடிச் சென்று வீட்டில் குவித்து வைத்து விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் அரியாறு பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் சென்று வீடுகளில் குவித்து வைப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 40, சித்தநாதன் வயது 29 ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரியா வயது 28 என்பதை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் மலைபோல் மணல் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மணப்பாறை வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு எடுத்து வந்து குவித்து வைத்துள்ளனர்.