Friday, October 03, 2014
திருப்பூர், அக்.3-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு தெரிவித்து, அக்.4 சனிக்கிழமை திருப்பூரில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய சங்கங்களின் சார்பாக ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோரியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சூழ்நிலையில், கடந்த நான்கைந்து நாட்களாக ஆளும்கட்சியினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவினர் அமைதியான முறையில் உண்ணாவிரதம், கறுப்புச் சட்டை அணிதல் போன்று செயல்படுவது அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால், நீதிமன்றம் சட்டரீதியாக தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை ஆட்சேபிப்பதாக இருந்தால், சட்டப்படி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜனநாயகரீதியாக கருத்து சொல்வதற்கு அனைத்து தரப்பினருக்கும் உரிமை இருக்கிறது. ஆகையால் தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த விசயத்தில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். ஆனால் திருப்பூர் போன்ற பல லட்சம் தொழிலாளர் உழைக்கும் நகரில், இதுபோன்ற காரணங்களுக்காக உற்பத்தி நிறுத்தம் செய்வது,தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, வருவாய் இழப்பை ஏற்படுத்தும், பொது மக்களுக்கு மேலும் பலவித பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அத்துடன் எதிர்காலத்தில் இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது.
ஆகையால், பொது மக்கள் நலன் கருதி இந்த உற்பத்த நிறுத்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுசெயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி வழிபாட்டு தலங்களில் சர்வ மத பிராத்தனை நடந்தது.
அண்ணா தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்கும்போது எல்லாம் திருப்பூர் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ரெயில்வே மேம்பாலம், குமரன் மகளிர் கல்லுரி, புதிய பஸ் நிலையம், 103 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வாளகம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, மாநகராட்சிக்கு 330 கோடியில் 60 வது வார்டுகளுக்கும் சம நிலையில் வளர்ச்சி பணிகள், தினசரி குடிநீர் வழங்க ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இது தவிர பள்ளிகூடங்களை தரம் உயர்த்துவது, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது உள்ளிட்ட வைகலும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக தனி நீதி மன்றம் அவருக்கு தவரான தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அவருக்கு எதிரான தீர்ப்பு என்று மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட அநீதி என்று அவர் மீண்டு வர வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அறவழியில் போராடி வருகின்றனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் தேவாலயம், எஸ்.ஏ.பி.தியேட்டர் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் மசூதி ஆகியவற்றில் மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில், மகளிர் அணி செயலாளரும், மேயருமான அ.விசாலா ட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வசகு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த மூன்று நிகழ்சிகளிலும் நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன்,உஷா ரவிக்குமார், கலைமகள் கோபால்சாமி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம், யுவராஜ் சரவணன், கவுன்சிலர்கள் கணேஷ், சேகர்,ஈஸ்வரன், ஆகியோர்களும், சொர்க்கம் நீதிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சி.எஸ்.ஐ.தே வாலயத்தில் நடந்த சிறப்பு பிரத்தனியில் பாதிரியார் விஜயன், செயலாளர் ஜெபரூபன் ஜான்சன், பொருளாளர் ஜான் சந்திரராஜ், கமிட்டி உறுப்பினர் ஜெயராஜ் உள்ளிட்ட ஏராளமான அண்ணா தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.மேலும் திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் நிலை பனியன் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கம், பிரிண்டிங் மற்றும் கம்பக்டிங் சங்கம் ஆகியவை சார்பிலும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டமும் நடந்தது.
‘கிரிக்கெட்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உற்சாகமடையாத ஒருவர் இருக்க
முடியுமா என்ன? அதையே தனது கனவாக, தன் லட்சியமாக நினைத்து அதற்காக உழைக்கும்
ஒரு இளைஞனின் போராட்டமே ‘ஜீவா’ என்கிற திரைப்படம். சுகங்களும் வலிகளும்
நிறைந்ததே வாழ்க்கை. தான் நினைத்த லட்சியத்தை அடைய தன் வாழ்வின் அத்தனை
சுகங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கிரிக்கெட்டை தன் மூச்சாக நினைத்து
பயணிக்கிறான் ஜீவா. அவன் கனவில் கல்வீசியவர்கள் யார்? அவனுக்கு
நம்பிக்கையின் வாசல் திறக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘ஜீவா’ என்கிற திரைப்படம்.
சிறு
வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை இருந்தும், பக்கத்து வீட்டில் பிள்ளையாய்
வளர்கிறான் ஜீவா. சிறு வயதிலிருந்தே அவனுக்கு கிரிக்கெட் மீது அதிக
ஆர்வம். நன்றாக படித்து வந்தவன்
கிரிக்கெட் மேல் உள்ள கவனத்தால் படிப்பில் பிலோ அவரேஜ் ஸ்டுடெண்டாக
மாறுகிறான். ‘கிரிக்கெட்டெல்லாம்... வேண்டாம்’ என்று தந்தை சத்தம் போட, ’கிரிக்கெட்டில் ஜீவா பெரிய ஆளா வருவான்’ என பாராட்டுகிறார் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்.
இதற்கிடையில்
ஜீவா (விஷ்ணு) - ஜெனி (ஸ்ரீதிவ்யா) காதல் இரண்டு வீட்டாருக்கும் தெரியவர.
பிரச்சனை வெடிக்கிறது. ஜீவா மதுவுக்கு அடிமையாகிறான். வாழ்க்கையே கேள்விக்குள்ளாகிறது.
இதிலிருந்து திசைத் திருப்ப ஒரே வழி அவனுக்கு பிடித்த கிரிக்கெட் தான்
என்று முடிவு செய்கிறார்கள் சுற்றியிருப்பவர்கள்.
ஒருவரின்
சிபாரிசு மூலமாக சென்னை கிரிக்கெட் கிளப்பில் விளையாட வாய்ப்பும்
கிடைக்கிறது. தொடக்கத்தில் மோதிக் கொண்டாலும், உயிருக்கு உயிராக பழகும்
ரஞ்சித் (லக்ஷ்மண்) நண்பனாக கிடைக்கிறான். இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் வல்லவர்களாக திகழ்கிறார்கள்.

ஆனால்,
அடுத்தடுத்த கட்டத்திற்கு மேலே செல்லும் போதுதான், எதிர்பார்க்காத
திருப்பங்கள் ஏற்படுகிறது. ‘நாமம்’ போட்டவர்கள் நடத்தும் அர்ப்ப அரசியலில்,
லீக் மேட்சில் விளையாடும்
வாய்ப்பு பரிபோகிறது. இவர்களின் எதிர்காலம் என்ன ஆனது? தன் சமூகத்தை
சேர்ந்தவர்களே தேர்வு செய்யும் ‘பார்த்தசாரதி’யை எதிர்த்து கேள்வி கேட்க முடிந்ததா
என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது அடுத்தடுத்த காட்சிகள். க்ளைமாக்ஸ்
காட்சியின் சுவாரஸ்யம், இதுவரை எந்த படத்திலும் கிடைக்காத புதிய அனுபவம்.
கிரிக்கெட்
விளையாட்டின் சுவாரஸ்யம் ஒரு பக்கம் இருந்தாலும், நண்பனை இழந்த கோகம்,
லட்சியத்திற்காக காதலை தூக்கி எறியும் தருணம், மகன் மீது வைத்திருக்கும் தந்தையின்
பாசம் என உணர்வுகளை கோர்த்து நம் இதயங்களை நனைத்து வெளியே அனுப்புகிறார்
இயக்குனர் சுசீந்திரன். அதிகார வர்க்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு துணிச்சலான முயற்சியை எடுத்து வெற்றிப் பூமாலைகளோடு வலம் வருகிறார் இயக்குனர்.

‘ஏன்னா, அவங்க உங்க ஆளுங்க!’,‘இத்தனை வருஷமா எங்க ஆட்கள்ல ஒருத்தன் கூடவா திறமைசாலி இல்லை’என்று ‘அவாள்’ அரசியலை எதிர்த்து குரல் எழுப்பும்
வசனங்களையும், தட்டிக்கொடுக்கும் சாக்கில் பூணூல் இருக்கிறதா என்று
தடவிப்பார்க்கிறேரே அந்த பெரியவாள்... அந்தக் காட்சியையும் படத்தில்
வைக்கவும் ஒரு தில் வேண்டுமே! அது சுசீந்திரனிடம் நிறையவே இருக்கிறது.
விஷ்ணு
உண்மையாகவே கிரிக்கெட் வீரர் என்பதால், நடிப்பாக இல்லாமல், காட்சிக்கு
காட்சி வேகத்தோடும் உற்சாகத்தோடும் சக்கைப்போடு போடுகிறார். நண்பனை இழந்து
கண்ணீர் விடும் காட்சியிலும், ஸ்ரீதிவ்யாவிடம் கிரிக்கெட் தான் முக்கியம்
என்று சொல்லி கண்கலங்கும் காட்சியிலும் தான் இயக்குனர்களின் நடிகன் என்பதை மீண்டும்
நிரூபித்திருக்கிறார். விஷ்ணுவுக்கு அடுத்து, ஏன்? சில காட்சிகளில்
விஷ்ணுவை மிஞ்சுகிற அளவிற்கு அதிரடி நடிப்பைக் கொடுத்திருக்கிறார்,
‘அன்னக்கொடி’ படத்தில் அறிமுகி, இதில் விஷ்ணுவின் நண்பனாக வரும் லக்ஷ்மண்.
ஸ்ரீதிவ்யா,
பள்ளி சிறுமியாகவும், கல்லூரி மாணவியாகவும் இருவேறு வித்தியாசமான
தோற்றத்தில் நம்மைக் கொள்ளையடிக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவான
நடிப்பைக் கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்கிறார் என்றே சொல்லலாம். சூரி,
வழக்கம்போலவே சிரிக்க வைக்கிறார். சீனியர் கிரிக்கெட் வீரராக வரும் அவர், பந்தை தேடிக்கொண்டிருப்பதும், விஷ்ணுவுக்கு ஈடுகொடுத்து ரன்கள் எடுக்க ஓடிவருவதும் ரசிக்கவைக்கிறது.

டி.இமான்
வித்தியாசமான பாடல்களை கொடுத்து அசத்துகிறார். ‘ஒவ்வொன்றாய்
திருடுகிறாய்...’ பாடல் காதலர்களின் இதயத்தை திருடிவிட்டது என்பது
நிச்சயம். எஸ்.பி.பி குரலில்
‘மீண்டு வா தோழா...’ பாடல் கண்களை ஈரமாக்குகிறது. ஒளிப்பதிவாளர் மதி,
நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் அழகாய் பதிவு செய்திருக்கிறார். ‘ஒரு ரோசா...’ டாஸ்மாக் பாடலைத் தவிர்த்திருக்கலாம்.
குறைகள் எதையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, தன் பணியை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

மரணம் நோக்கி ஒரு பயணம்-
உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி
மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.
ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம்.
எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக
நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.
ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்,தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.
,‘இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.
காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில் களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்! (காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம்)
இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.
காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.
ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!
அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.
இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்’! இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது.
அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.
இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார்.
ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.
இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது, உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.
இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.
இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள் வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!
காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள். தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.
விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு. தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.
அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.
கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு- மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் ‘மணிகர்ணிகா கட்’ உள்ளது. இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடு த்துச் செல்லப்படுகிறது.
அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.
அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள். அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.
அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது.
இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த ‘அரிச்சந்திர கட்’ கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.
ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ என்பது நம்பிக்கையாக்கப்பட்டிருக்கி றது.
காசியில் எல்லாமுமே நம்பிக்கைதான்! நம்பிக்கையின்றி வேறு எதுவும் இல்லை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர்
வீரணன். இவரது மனைவி தேனம்மாள். இவர்களது மகள் விமலாதேவி (வயது21).
ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த
திலீப்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விமலாதேவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன்னை யாரும் கடத்த வில்லை என விமலாதேவி போலீசில் தெரிவித்தார்.
அதன்பின்னர் பெற்றோருடன் விமலாதேவி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விமலாதேவி நேற்று முன்தினம் திடீரென இறந்தார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த பெற்றோர் உறவினர்கள் உதவியோடு உடலை எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் போலீசில் புகார் செய்தார்.
தாசில்தார் கஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி, துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் விமலாதேவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர். அவர் தூக்குப்போட்டுதான் தற்கொலை செய்தாரா? அல்லது கவுரவக்கொலை நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விமலா தேவியின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முதல் கட்டமாக விமலாதேவியின் தந்தை வீரணன், தாய் தேனம்மாள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம், அக்.1: அதிமுக பொதுச்செயலர்
ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலைபெற ஜெயலலிதா பேரவை சார்பில்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை
சிறப்பு வழிபாடும், அங்கப்பிரதட்சணமும் நடைபெற்றன.
பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.தர்மராஜ், நகரச் செயலர்கள் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஹமிதாஅக்பர்அலி, நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் இரா.சுப்பிரமணி, கீழக்குயில்குடி பாண்டி, வீரமணி, பசுமலை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், பேரவை முன்னாள் மாவட்டச் செயலர்கள் எஸ்.எஸ்.டி.மனோகரன், கோ.பாரி, தொழிற்சங்க செயலர்கள் பி.எம்.முருகன், குமரவேல், கருத்தப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் சுமதிமதி, ஊராட்சித் தலைவர்கள் கருத்தக்கண்ணன், சிவகாமி முத்துராமன், கிளைச்செயலர் கே.மாயி, மின்வாரிய கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநகரில் உருவபொம்மை எரிப்பு: ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுக பொதுச் செயலர் அன்பழகன், தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் நகர் செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் பாலமுருகன், பேரவைச் செயலர் சீனிவாசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி, மாணவரணி செயலர் சசிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் பெரியார் நகரை சேர்ந்தவர் எஸ்தர் ஏஞ்சலினா கிறிஸ்டி. இவர்
வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பெங்களூரில் இருந்து அவரது அண்ணன் வில்பிரட் பிராங்கோலீசிடம் போனில்
இன்ஸ்சூரன்ஸ் கட்ட வேண்டியுள்ளது என்று ஞாபகபடுத்தினாராம்.
உடனே வில்பரட் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகைகள் மற்றும் எல்.ஐ.சி. பாண்டு மற்றும் பாங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆர்.சி. புத்தகம் ஆகியவை திருடு போயிருந்தது.
உடனே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வசந்தராணி வழக்குப்பதிவு செய்து பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்.

மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று (03.10.2014) திறந்து வைத்தார், மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தகுமார், துணை முதல்வர் சந்தான லக்ஷ்மி , மருத்துவ கண்காணிப்பாளர் வடிவேல் முருகன் கலந்து கொண்டனர், இந்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை கல்லூரியின் குழு தலைவர் K . தினேஷ் அவர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார் . மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி முகாமில் நோய்கள் விழிப்புணர்வு குறித்தும், நோய்கள் தடுத்தல், மற்றும் விடுகளில் அவசர காலங்களில் எடுக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள், அரசு மருத்துமனைகளில் உள்ள சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்தும் நடைபெற்றது.
இந்த மருத்துவ கண்காட்சி திறப்பு நாளான இன்று (03.10.2014) முதல் (12.10.2014) வரை நடை பெறுகிறது.

Thursday, October 02, 2014
உடுமலை ஒட்டுக்குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன.
உடுமலையில் ஏழுகுளம் பாசன பகுதிகள் என்று அழைக்கப்படும் குளங்களுக்கு உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளிவாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரப் பட்டு பாசன பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஏழு குளம் பகுதியின், கடைசி குளம் ஒட்டுக் குளம். இந்த ஒட்டுக் குளம் 10.150 சதுர கிலோமீட்டர் பரப்பளவு (நீர்பிடிப்பு பகுதி) கொண்டது. இந்த ஒட்டுக்குளத்தின் மூலம் சுண்டக்காம்பாளையம், வடபூதனம் ஆகிய கிராமங்களில் பாசன வசதி பெறக்கூடிய நிலப் பரப்பு சுமார் 430 ஏக்கர் உள்ளது.
இந்த ஒட்டுக்குளத்தில் நீர் தேங்கும் பரப்பில், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப் பிற்கு சொந்தமான ஏரியின் ஒரு பகுதியில் 5 ஏக்கர் 63 சென்ட் நிலப்பரப்பை 11 பேர் ஆக்கி ரமித்து நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.அங்கு 42 இளம் தென்னைமரங்களும் உள்ளன. கரும்பு பயிர் மகசூல் எடுக்கப்படும் தற்போது கட்டை கரும்பு துளிர் விட்ட நிலையில் உள்ளது.
ஒட்டுக்குளத்தில் தனியார்களின் ஆக்கிரமிப்பினால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பொதுப்பணித்துறையை கேட்டுக்கொண்டார்.அத்துடன் சென்னை கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப் பணித்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர்.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றறப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு சென்னை கோர்ட் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ.குணசேகரன், தாசில்தார் எஸ்.சைபுதீன், நிலவருவாய் ஆய்வாளர் ராமலிங்கம். பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் செல்லமுத்து, இளம்பொறியாளர் சரவணன், தலைமை நில அளவர் தர்மலிங்கம், ஆகியோர் நேற்று ஒட்டுக்குளம் சென்றனர். பாதுகாப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வைத்தியலிங்கம், அன்பரசு, அனந்தநாயகி ஆகியோர் தலைமையில் 50 போலீசாருடன் சென்றிருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் முன்னிலையில் ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த இடம் பொதுப்பணித்துறைக்கு கையகப்படுத்தப்பட்டன.இந்த நடவடிக் கைகள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி 2007–ம் ஆண்டு தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...