Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டை காட்ட வேண்டும், எல்லையில் இரு நாடுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்திக் கொள்ளவேண்டும் மற்றும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் துப்பாக்கி சூடு தொடர்பாக சீனா வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ பேசுகையில் “நிலைமையை சீனா மிகவும் கவனத்துடன் கவனித்து வருகிறது. அண்டைய மற்றும் நண்பர்களான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு பக்கங்களிலும் கட்டுப்பாட்டை காட்டுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும். பிரச்சனையை தீர்க்க இருநாடுகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.” என்றார். மேலும், ஹாங் பேசுகையில், தெற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை பாதுகாக்க அவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். என்று கூறினார்.
On Sunday, October 19, 2014 by farook press in ,    
கடந்த 1–ந் தேதி முதல் காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் ஆத்திரமூட்டும் வகையில் தொடர் தாக்குதல்கள் நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயம் அடைந்தனர். இந்தியாவும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. இதில் அந்த தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா விடுத்த எச்சரிக்கை காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பாகிஸ்தான் அமைதியை கடைப்பிடித்து வருகிறது. ஆனாலும், அவ்வபோது பாகிஸ்தான் வேலையை காட்ட ஆரம்பிக்கிறது. இந்தியா பதிலடி கொடுக்கிறது.
இந்நிலையில் 'பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதலை முன்னெடுக்க முடியாது' என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் எல்லை நிலவரம் குறித்து பேசிய சுர்தாஜ் அஜிஸ், பாகிஸ்தானை குற்றம் சாட்ட, எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கு இந்திய அரசின் சதியே காரணம், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக, எல்லைப் பிரச்சனையை சுயநலத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதலை முன்னெடுக்க முடியாது. அத்தகைய நடவடிக்கையில் பாகிஸ்தானின் பதிலடி தெரியும். எல்லையில் ராணுவம் முழு எச்சரிக்கையுடன் உள்ளது. சரியான பதிலடி கொடுக்கும் திறன் ராணுவத்திற்கு உள்ளது. இருநாடுகள் இடையில் நல்ல நட்புறவு இருந்தால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க சாத்தியம் உள்ளது.  என்று கூறியுள்ளார். 
On Sunday, October 19, 2014 by farook press in ,    
அந்நாட்டு சட்டத்தின்படி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது சொத்துமதிப்பை ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்க வேண்டும். இந்த ஆண்டு சொத்துமதிப்பை தெரிவிக்க உறுப்பினர்களுக்கு கூடுதலாக 15 நாட்கள் தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருந்தது. தேர்தல் ஆணையம் உறுப்பினர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க அக்டோபர் 15-ம் தேதியை இறுதி நாளாக அறிவித்தது. ஆனால் 210 உறுப்பினர்கள் தங்களது சொத்து மற்றும் பொறுப்புக்களை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து தாக்கல் செய்யாத நபர்களை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் கலந்துக் கொள்ள முடியாத வண்ணம் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. எனினும், உறுப்பினர்கள் தங்களது கடமையை நிறைவேற்றும் போது அவர்கள் உறுப்பினராக செயல்பட முடியும். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரதமர் நவாஸ் செரீப்பின், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
On Sunday, October 19, 2014 by farook press in ,    
சிக்மகளூர் மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஒரு அரசியல் பிரமுகரின் மகளின் ஆபாச படம் ஒன்று செல்போன்களில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக என்.ஆர்.புராவை சேர்ந்த அகமத் பாஷா, சிவகுமார், செபாஸ்டின், தஸ்தகீர், கிருஷ்ணா, அசோக், சுஜீத், சந்தோஷ் சர்மா உள்ளிட்ட 8 பேரை என்.ஆர்.புரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் கடந்த 12–10–2012 அன்று ஜாமீனில் வெளியே வந்த 8 பேரும், தங்களது மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று என்.ஆர்.புரா தாசில்தார் மூலமாக ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்தனர்.ஆனால் அதன் பின்னர் அவர்களது கடிதம் தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 8 பேரும்  சிக்மகளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.பின்னர் அவர்கள் கலெக்டர் சேகரப்பாவிடம் கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–நாங்கள் ஆபாச படங்களை செல்போனில் பகிர்ந்து கொண்டதாக போலீசார் எங்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பொய்யான வழக்கு எனக் கூறியும், இந்த வழக்கில் இருந்து விடுக்கவிக்கவும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினோம். ஆனால் இதுவரை எங்களது கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை.மேலும் இந்த பொய் வழக்கால் எங்களது 8 பேரின் குடும்பத்தினரும் பெரும் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளனர். நாங்களும் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே பொய்யாக தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சேகரப்பா, இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஆபாச படங்கள் விற்றதாக கைதான 8 பேரும் கருணை கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கோரி மனு கொடுத்த சம்பவம் சிக்மகளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
On Sunday, October 19, 2014 by farook press in ,    
மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால், பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்று சென்னையில் சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போட் கிளை அலுவலகம் செயல்படுகின்றன. இந்த 3 அலுவலகத்திலும் நாள் ஒன்றுக்கு பாஸ்போட் கேட்டு 1,850 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. தற்போது, விண்ணப்பங்கள் அதிக அளவில் வருவதால், நாள் ஒன்றுக்கு 2,080 விண்ணப்பங்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் அண்மை காலமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பம் நாள் ஒன்றுக்கு 110-ல் இருந்து 180 ஆக உயர்ந்துள்ளது. எனவே, சென்னையில் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் வருகிற நவம்பர் 1-ந் தேதி ‘பாஸ்போர்ட் மேளா’ நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களது இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ் மற்றும் அதனுடைய 2 நகல்களையும் கொண்டு வரவேண்டும்.
On Sunday, October 19, 2014 by farook press in ,    
மேலும் பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கார் டிரைவர்தட்சிணகன்னட மாவட்டம் சுள்ளியா தாலுகா அஜ்ஜாவர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். கார் டிரைவர். இவரது மனைவி ஷோபா (வயது 35). இதற்கிடையே ஷோபா தனது கணவர் வெளியே சென்றவுடன், தனது வீட்டில் விபசாரம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த குமார், மனைவி ஷோபாவை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து விபசாரம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குமார் வெளியே சென்றிருந்தார். பின்னர் இரவில் அவர் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது குமாரின் வீட்டில் ஜெயநகரை சேர்ந்த ஆஷா, சுள்ளியாவில் உள்ள தனியார் கல்லூரி ஊழியர் கருணாகர் ஆகியோர் விபரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவரது மனைவி ஷோபாவும் வீட்டின் உள்ளே இருந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், 3 பேரையும் வீட்டினுள் வைத்து வெளிப்புறமாக கதவை பூட்டியுள்ளார். பின்னர் சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் குமாரின் வீட்டிற்கு விரைந்து வந்து 3 பேரையும் பிடித்தனர்.மேலும் சம்பவம் பற்றி சுள்ளியா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் குமாரின் மனைவி ஷோபா விபசார புரோக்கராக செயல்பட்டதும், தனது கணவர் வெளியே செல்லும் நேரத்தில் அவர் வீட்டில் வைத்து விபரசாரத் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து ஷோபா, ஆஷா, கருணாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் விபசாரம் நடத்தி வந்த மனைவியை, கணவனே போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
On Sunday, October 19, 2014 by farook press in ,    
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு சென்றபோது பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணையம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருணையாம்மாளின் கணவர் அருணாசலம் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Sunday, October 19, 2014 by farook press in ,    
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
உடுமலை காந்தி சவுக் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 32). பழக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது தாயாரை பார்ப்பதற்காக சென்று விட்டு உடுமலைக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலனி அருகே வந்தபோது ஒரு வாலிபர் கையை காட்டி மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்.
குணசேகரன் மோட்டார்சைக்கிளை நிறுத்தியதும், அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.420–ஐ பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தான் அங்கிருந்து குறிப்பிட்ட தூரம் சென்று மறையும் வரை சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்து விட்டு புறப்பட்டதாகவும், சிறிது தூரம் சென்றதும் குணசேகரன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே சத்தம் கேட்டு அங்குவந்தவர்களை அந்த வாலிபர் மிரட்டி தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து குணசேகரன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்ததாக கூறப்படும் வாலிபரை தேடிவந்தனர். போலீசாருடன் குணசேகரன் வழிப்பறி செய்த வாலிபரை அடையாளம் காட்டுவதற்காக சென்றார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை உடுமலை–பழனி ரோட்டில் மத்திய பஸ் நிலையம் அருகே சென்றபோது அங்கு அந்த வாலிபர் வந்துகொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபரிடம் கத்தி மற்றும் ஆயுதம் இருந்தது.இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தாலப்பள்ளியைச் சேர்ந்த பொம்மணன் என்கிற ராசப்பன் என்பவரது மகன் கோவிந்தராஜ் (வயது 24) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் உடுமலை காந்தி நகரைச் சேர்ந்த விவேகானந்தன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 9½ பவுன் நகையை திருடி சென்றதும் தெரியவந்ததுஇதேபோல் செந்தில்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் கதவை உடைத்து வீட்டில் இருந்து 3¾ பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடியதும், அண்ணா குடியிருப்பில் வெளியூர் சென்றிருந்த ஈஸ்வரசாமி என்பவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ.650 ரொக்க பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து வாலிபர் கோவிந்தராஜ் கொடுத்த தகவலின் பேரில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதேபோல் பல வழிப்பறி, திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது.
On Sunday, October 19, 2014 by farook press in ,    
வாகன ஓட்டுனர்களிடம் ஆவணங்கள், நள்ளிரவு நேரத்தில் எங்கு செல்கிறார்கள்?, அந்த நபரின் முகவரி உள்ளிட்டவை குறித்து தீவிரமாக விசாரித்து அனுப்புகிறார்கள்.
இதன்மூலமாக இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.