Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி கடைசி ஞாயிறு வழிபாட்டையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

ஆவணி சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு புகழ்பெற்ற புண்ணிய தலம் நாகர்கோவில் நாகராஜா கோவில். இதில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்றால் மிகவும் பிரசித்தம். களக்காட்டை தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட பூதல வீரஉதயமார்த்தாண்ட மன்னன் சருமநோயால் அவதிப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலில் வழிபட்டு குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கோவிலில் கட்டுமான பணிகளை முதன்முதலில் அந்த மன்னன் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. 

இத்தகைய சிறப்பு பெற்ற ஆவணி ஞாயிறு வழிபாடு அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மாத சிறப்பு வழிபாடு கடந்த 5 வாரங்களாக நடைபெற்றது. 5–வது ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, திருவனந்தபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

நீண்ட வரிசை

இவர்களில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட வந்த பக்தர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். இந்த வரிசை, கோவிலில் இருந்து அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை நீண்டது. வழக்கமான நேரத்துக்கு முன்னதாகவே கூட்டம் அலைமோதியதால், அங்கு ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பே நேற்று திறக்கப்பட்டுவிட்டது. அதைப்போல மதியமும் நடை அடைக்கப்படுவதில் காலதாமதம் செய்யப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

அன்னதானம் 

மேலும், பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சி பாரம்பரியப்படி ஆண்டுதோறும் ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய அன்னதான நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) சுப்பிரமணி தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் ஹெரால்டு ஈனாக், அனிதாசாந்தி, உதவி பொறியாளர்கள் வல்சன்போஸ், ஜெயகுமார், மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

பக்தர்கள் வருகையையொட்டி கோவில் வளாகம் மற்றும் கோவிலின் எதிரில் உள்ள ரதவீதியில் திருவிழா கடைகள் தொடங்கப்பட்டிருந்தன. பால் விற்பனையும் நடைபெற்றது. நாகராஜா திடல் முழுவதும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. 

On Monday, September 15, 2014 by farook press in ,    
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீர மைக்ககோரி அரசு ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2 ஆண் டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வாகனங் கள் பழுதடைந்த சாலையில் செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்ற னர்.
இதனால் இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அனைத்து பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சாலை அமைக்க ரூ.18 கோடி டெண்டர் விடப் பட்ட நிலையில் பணிகள் தொடங்காமல் காலம் தாழ்த் தப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மத்திய– மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில், இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பு செயலாளர் அன்பழகன், முதுகலைப்பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சங்கர், சி.ஐ.டி.யூ. கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என். எல். அருட்செல்வம், செய்தலி, சுனில்குமார், பத்மநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்ன தாக செயலாளர் கருணாநிதி வரவேற்றார் முடிவில் ஒருங்கி ணைப்பு குழு பொருளாளர் அஜயகுமார் நன்றி கூறி னார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கொலக்கம்பையில் இருந்து மேட்டுப் பாளையத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள் ளனர்.

கொலக்கம்பை கிராமம்

கொலக்கம்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி களில் 50-க்கும் மேற்பட்டகிரா மங்கள் உள்ளன. இந்த கிராமங் களில் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசித்து வருகிறார் கள். மேலும் கொலக்கம்பை கிராமத்தில் அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள், வங்கிகள், தபால் நிலையம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரு கின்றன.

இதனால் இப்பகுதி மக்க ளின் நலனை கருத்தில்கொண்டு குன்னூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலக்கம்பையில் இருந்து ஊட்டி, மேட்டுப் பாளையம், திருப்பூர், உள் ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பஸ் இயக்க கோரிக்கை

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப் பாளையத்தில் இருந்துகொலக் கம்பை வரை இயக்கப்பட்ட அரசு பஸ் திருப்பூர் வரை செல்ல வழித்தடம் நீட்டிக்கப் பட்டது. பின்னர் அதன் பயண நேரமும் மாற்றப்பட் டது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பள்ளி மாணவ- மாணவிகள், கூலி தொழிலா ளர்கள் பல மணி நேரம் பஸ் நிலையத்தில் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை ஏற் பட்டு உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதி காரிகள் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கொலக்கம்பையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை–மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது குண்டடம். குண்டடத்தில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த சுமார் 50–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பஸ் ஏறி வெளியூருக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் இங்கு காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே குண்டடத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் குண்டடத்தை சேர்ந்த திருநந்தி சித்தா மருத்துவ அறக்கட்டளை மருத்துவர் செல்வக்குமார் நிழற்குடை அமைக்கவும், பஸ் நிறுத்தம் அருகே உள்ள 4 ரோடு சந்திப்பை அழகுபடுத்தி பூங்கா அமைக்கவும் முன்வந்துள்ளார். அதற்காக அவர் ரூ.5 லட்சம் நிதியை ருத்ராவதி பேரூராட்சி நிர்வாகத்திடம் வழங்கி உள்ளார். அதை தொடர்ந்து பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் ருத்ராவதி பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சீனிவாசன், திருநந்தி சித்தா மருத்துவ அறக்கட்டளை மருத்துவர் செல்வக்குமார், கவுன்சிலர்கள் நந்தகுமார், வேல்ராமன், அ.தி.மு.க குண்டடம் நகர செயலாளர் தமிழரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
தாராபுரம்– ஒட்டன்சத்திரம் சாலை மோட்டல் அருகே காட்டுக்குள் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் கோவை வடவள்ளியை சேர்ந்த காவலாளி மனைவி செல்லம்மாள் என அடையாளம் தெரிந்தது.
பெண் பிணம்
தாராபுரம்–ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ஒரு மோட்டல் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஒரு புதரில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் கோவையில் புதைக்கப்பட்டது. மேலும் அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை ஆய்வு செய்ய அவருடைய உடல் உறுப்புகள் சென்னையில் உள்ள ரசாயன பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தனிப்படை
முதலில் அந்த பெண் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஏட்டு முகமது ரபி, சர்க்கிள் ஏட்டு சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்த பெண் உடல் அருகே பையில் இருந்து கைப்பற்றப்பட்ட பஸ் டிக்கெட்டை வைத்து அவர் கோவை சிங்காநல்லூரில் இருந்து பஸ் ஏறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தும் அடையாளம் காணமுடியில்லை. எனவே கோவை மாநகர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பெண் காணாமல் போனதாக புகார் ஆகி உள்ளதா? எனவும் விசாரித்தனர். ஆனால் புகார் எதுவும் வராததால் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அடையாளம் தெரிந்தது
இதற்கிடையில் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடவள்ளியை சேர்ந்த காவலாளி அழகர் (50) என்பவர் மணப்பாறை சென்ற தனது மனைவி செல்லம்மாளை (45) காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறு புகார் கொடுத்தார். இது பற்றிய தகவல் தாராபுரம் போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே தனிப்படை போலீசார் ஏற்கனவே அந்த பெண் உடல் அருகே கைப்பற்றப்பட்ட பொருட்களை அழகரிடம், காட்டினார்கள். மேலும் அந்த பெண் உடலில் இருந்த மச்சங்களையும் எடுத்து கூறினார்கள். இதையடுத்து மோட்டல் அருகே இறந்து கிடந்த பெண் தனது மனைவி செல்லம்மாள் என்று அழகர் அடையாளம் காட்டினார். இதனால் மோட்டல் அருகே இறந்து கிடந்த பெண் ஒரு மாதத்திற்கு பிறகு அடையாளம் காணப்பட்டுள்ளது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
மும்பையில் வீரார் பகுதியில் 
பாய் தாகூர் என்பவர் வீட்டிலும்,
அலுவலகத்திலும் வருமான வரித்துறை
யினர் நடத்திய சோதனையில்13000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய
"ரெய்டு" என்று கூறப்படுகிறது...





On Monday, September 15, 2014 by farook press in ,    
நீராதாரங்களில் 2.40 டி.எம்.சி., கையிருப்பு உள்ளதால், சென்னையில், இரண்டரை மாதத்திற்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, கோடை வெயில் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்களில், நீர்இருப்பு கணிசமாக குறைந்தது. 

வறட்சி : இதனால், சோழவரம், வீராணம் ஏரிகள் வறண்டுவிடும் நிலையை எட்டின.சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானதால், வீராணம் ஏரியில், ஆழ்துளை குழாய்கள் அமைத்து, தண்ணீரை சென்னைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரிநீர், தற்போது வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

உயர்வு : தற்போதைய நிலவரப்படி, 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட, வீராணம் ஏரியில் தற்போது, 1,075 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. ஏரிக்கு, விநாடிக்கு 995 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதேநிலை, தொடரும்பட்சத்தில், விரைவில் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. இதேபோல, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியில், தற்போது 682 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. 

புழல் ஏரியில், 1,118 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில், 582 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.சோழவரம் ஏரியில் நீர் இருப்பு இல்லை என்ற போதிலும், மற்ற நான்கு ஏரிகளையும் சேர்த்து 2.40 டி.எம்.சி., நீர்இருப்பு கைவசம் உள்ளது.இதன்மூலம், சென்னையில் அடுத்த இரண்டரை மாதத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கிஉள்ளது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருவொற்றியூர் : திருவொற்றியூர் சுனாமி அரசு மருத்துவமனையில், கடந்த நான்கு மாதங்களாக, வலி நிவாரண மருந்தான, 'ஜெல் ஆயின்மென்ட்' கிடைக்காமல், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

திருவொற்றியூரில், சுனாமி நிவாரண திட்டத்தில், அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இரண்டு மாடிகள் கொண்ட அந்த மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.அங்கு, தினசரி, 600 முதல் 700 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.கடந்த நான்கு மாதங்களாக, உடல் வலியால் அவதிப்படும் முதியோருக்கு வழங்கப்படும், வலி நிவாரண மருந்தான, 'ஜெல் ஆயின்மென்ட்' இருப்பு இல்லை.இதனால், நீண்ட தொலைவிலிருந்து வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.'ஜெல் ஆயின்மென்ட்' மருந்தை, தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது.

வியாசர்பாடியில் பழமைவாய்ந்த ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. அது, மிகவும் தாழ்வாக இருப்பதால், கனரக வாகனங்கள் அடிக்கடி சிக்கின. இதைகருத்தில் கொண்டு, வியாசர்பாடி சுரங்கப் பாலத்திற்கு மாற்றாக, 80.68 கோடி ரூபாய் செலவில், 1,720மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை இணைந்து, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் பணிகளை துவக்கின. கடந்த 2013ம்ஆண்டு மார்ச் மாதத்தில், மேம்பாலப்பணியை முடித்து போக்குவரத்துக்கு திறந்துவிட திட்டமிடப்பட்டது.ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் இருந்ததால், மேம்பாலப்பணிக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒருவழியாக, ஆக்கிரமிப்புகள் அகற்றி, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தன.

ரயில்வே நிர்வாகம், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மேம்பால பணியை துவங்காமல் காலம் தாழ்த்தியது. மேம்பால பணியை, கடந்தாண்டு மார்ச் மாதம் ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் பழனிச்சாமி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.அதன்பிறகும், பணிகள் வேகமெடுக்கவில்லை. சமீபத்தில் நடந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்திலும், அக்., மாதத்திற்குள் மேம்பால பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டது.ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், துாண்கள் அமைக்கும் பணியே இன்னும் நிறைவடையவில்லை. இதனால், அக்., மாதத்திற்குள் மேம்பால கட்டுமான பணிகள் முடிய வாய்ப்பில்லை.