Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு சார்பில் விழா

பெரியாரின் 136-வது பிறந்தநாளை நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சிறப்பாக கொண்டாடினார்கள். கோவையில் அரசு சார்பில் நடந்த விழாவில், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் சின்னச்சாமி, தாமோதரன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, தா.மலரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவை முன்னிட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே பெரியாரின் நினைவு தூண் முன்பு பெரியாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தமிழக நகராட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், ஆதிநாராயணன், ஜெயராமன் மற்றும் சி.டி.சி. ஜப்பார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-ம.தி.மு.க.

கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கா.ரா.சுப்பையன், கார்த்திக்செல்வராஜ், மகுடபதி, நாச்சிமுத்து உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் ம.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அ.சேதுபதி, மு.தியாகராஜன், சூரிநந்தகோபால், கணபதி செல்வராஜ், ஆர்.சற்குணம், மு.ராமநாதன், வெள்ளியங்கிரி, ஷாஜகான், யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கோபால், சாஜித், ஆறுச்சாமி, ராமசாமி, இளங்கோ, பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

கோவை வெங்கிட்டாபுரத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வக்கீல் சி.பி.சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கதிரவன், ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலா, அன்பு, ஓவியா உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு பெரியாரின் கொள்கைகள் இடம்பெற்ற நோட்டீசுகளும் வினியோகம் செய்யப்பட்டன.

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஸ்டீபன் ராஜ் மாலை அணிவித்தார். இந்தநிகழ்ச்சியில் இளங்கோ, சி.டி.சி.சுப்பிரமணி, பி.எஸ்.ஸ்டீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவாடானையில் புதி தாக கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு மையத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத் தார்.

புதிய கட்டிடம்

திருவாடானையில் ஊரக உட்கட்டமைப்பு இடை நிரப்பு நிதி 2013-14ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மையம் ரூ.5½ லட் சம் செலவில் புதிதாக கட்டப் பட்டுள்ளது. இந்த கட்டி டத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத்தார். திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு 3 சக்கர மிதி வண் டிகளை வழங்கினார். அத னைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளால் தயாரிக்கப் படும் கைவினைப் பொருட் களை பார்வையிட்டார். அதன் பின்னர் மாற்றுத்திற னாளி மையம் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும், மையத் துக்கு புதிதாக சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும் என்று தெரி வித்தார்.

அதனை தொடர்ந்து திரு வாடானையில் ரூ.1.54 கோடி செலவில் புதிதாக கட்டப் பட்டு வரும் பஸ் நிலைய கட் டிடப்பணிகளை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் நிலை யத்தின் வரைபடத்தை பார் வையிட்டு ஆய்வு செய்த அவர் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் பஸ் நிலையத்தில் திருவாடானை ஊராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.

ஆய்வு

திருவாடானை அரசு ஆஸ் பத்திரிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கு செவிலி யர்களிடம் பணியாளர்கள், நோயாளிகள் வருகை குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங் கினார். திருவாடானை யூனி யன் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கோர்ட்டு, நீதிபதி குடி யிருப்பு, நூலகம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி, வட்டார குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலக கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் யூனியன் அலுவல கத்துக்கு புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பாக அதி காரிகளுடன் ஆலோசனை செய்தார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் பழனி, யூனியன் தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கள் காந்தி மாறன், ஊராட்சி தலைவர்கள் முத்து, காளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பொதுமக்கள் உணவாக பயன்படுத்தாமல் தென்னை மரங்களுக்கு உரமாக மாறுவது சங்காயம் எனப்படும் மீன்கள்தான்.

சங்காயம் மீன்கள்

ராமேசுவரம், பாம்பன் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கும் பலவகையான மீன்கள் உணவுப்பொருளாக உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மீனவர்கள் பிடித்து வரும் சங்காயம் என்ற பெயருடைய சிறிய வகை மீன்கள் உணவாக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இவை கோழித் தீவனமாகவும், தென்னை மரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தப்படுவதுடன், இதற்காகவே ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்று காலை மீன்களுடன் கரை திரும்பினர். அவர்களில் ஒரு சிலரின் படகுகளில் சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை சங்காயம் மீன்கள் சிக்கியிருந்தன.

இந்த மீன்கள் முழுவதும் கடற்கரையிலேயே உலர வைக்கப்பட்டன. இந்த பணியில் மீனவர்களும், மீனவ பெண்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

தென்னை மரங்களின் உரம்

சங்காயம் மீன்கள் அதிக அளவில் கிடைத்தது குறித்து பாம்பனை சேர்ந்த மீன் வியாபாரி ஸ்டீபன் என்பவர் கூறியதாவது:-

விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் சங்காயம் மீன்களை மொத்த விலைக்கு வாங்குவோம். பின்னர் அவற்றை கடற்கரையிலேயே உலர வைத்து லாரி, வேன் மூலம் நாமக்கல், சேலம் போன்ற இடங்களுக்கு கோழித் தீவனத்திற்கு அனுப்பி வைப்போம். அத்துடன் தென்னை மரங்களுக்கு உரமாகவும் சங்காயம் மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மீன்களை உப்புடன் சேர்த்து தென்னை மரத்தின் அடிப்பகுதியில் குழி தோண்டி புதைத்து வைத்தால் மரம் நன்றாக வளர்ச்சி அடைவதுடன், விளைச்சலும் அதிகமாக இருக்கும். இதனால் தமிழகத்தில் ஏராளமான ஊர்களுக்கு சங்காயம் மீன்கள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மீன் உலர்த்தப்பட்ட நிலையில் 1 கிலோ ரூ.32 முதல் ரூ.35 வரை விலை போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களுக்கும் இந்த மீன்கள் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
சீரகாப்பாடி அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தாங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த மாணவர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை வைத்துள்ளனர். இதனை ஒரிரு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த ஜான்பாட்ஷா (22) ஆகியோரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் பிரசாந்த் (வயது 16) மற்றும் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் மகன் ஆனந்த் (19) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த ஆடம்பர மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.-தி.மு.க.

தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவருடைய சிலைக்கு நேற்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. சார்பில் பன்னீர்செல்வம் எம்.பி., மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் சூடாமணி தலைமையில், மாநகர செயலாளர் கலையமுதன், மாநகர துணை செயலாளர்கள் குணசேகரன், முரளி முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கம்யூனிஸ்டு கட்சி- பா.ம.க.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் சேலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாநகர செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ம.தி.மு.க. சார்பில் மாநகர பொறுப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில், லிவ்யசந்திரசேகர், தைரியசீலன்,மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பா.ம.க. சார்பில் மாநில துணைபொதுச்செயலாளர் அருள் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளர் ராசரத்தினம், மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநகர் மாவட்ட தலைவர் அன்புகரசு, மாநில நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் பழனிபுள்ளையண்ணன் தலைமையில், மண்டலதலைவர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் ஜவகர், சிவக்குமார் உள்பட திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பல்வேறு அமைப்புகள்

பகுஜன்சமாஜ் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில், மாவட்ட பொதுசெயலாளர் காஜாமைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையிலும், எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அம்பேத்கார் மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் தங்கம் அம்பேத்கார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அகில உலக தர்மசாஸ்தா ஐயப்பா மிஷன் சார்பில். அதன் நிறுவனர் ராஜமங்கலம் மற்றும் சக்தி ஆகியோர் மாதுளம் பழங்களால் ஆன மாலையை பெரியார் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதுதவிர பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்சங்கம்

சேலம் தமிழ்சங்கத்தின் சார்பில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாணிக்கம், துணை தலைவர் ராஜ்மோகன், செயலாளர் குமரவேலு, துணை செயலாளர் சங்கரன் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
துபாய் நாட்டில் இறந்த கட்டுமானத் தொழிலாளியின் உடலை மீட்டுத் தரக்கோரி அவரது குடும்பத்தினர் சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கட்டுமானத் தொழிலாளி
சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மருதன் (வயது 28). இவரது மனைவி மேனகா(24). இவர்களது மகன் தஞ்சன் (3). இந்தநிலையில் மாரிமுத்து மருதன் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு பணியில் நீடித்த அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் போனில் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி இரவு அவரது குடும்பத்தினருக்கு துபாயில் இருந்து ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், நான் மாரிமுத்து மருதனின் நண்பர் என்று கூறினார். அத்துடன் மாரிமுத்துமருதன் இறந்து விட்டதாகவும், 3 நாட்களில் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாரிமுத்துமருதனை போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது. ஆனாலும் அவர் பணியில் இருந்த நிறுவனத்தினை தொடர்பு கொண்டபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல் இதுவரை ஊர் வந்து சேரவில்லை.
நடவடிக்கை தேவை
இதையடுத்து மாரிமுத்து மருதனின் தம்பி ஜெயக்குமார் என்பவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜாராமனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. நான் கூலி வேலை பார்த்து பெற்றோரை காப்பாற்றி வருகிறேன். என் அண்ணனின் மனைவி, மகன் ஆகியோர் அவரது வருமானத்தை நம்பியே இருந்தனர். எங்களுக்காகவே என் அண்ணன் பணத்தை கடன் வாங்கிச் செலுத்திவிட்டு துபாய் நாட்டில் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்த எங்கள் குடும்பத்தினர் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர்.
அத்துடன் அவரது உடலை பார்க்க முடியவில்லையே என்று நாங்கள் அனைவரும் வேதனையில் தவித்து வருகிறோம். எனவே எனது சகோதரனின் உடலை மீட்டு இங்கு கொண்டு வருவதற்கு அரசுத்தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தஞ்சை அருகே நகர் ஊரமைப்புத்துறையில் முறையாக விண்ணப்பிக்காமலும், தொழில்நுட்ப அனுமதி பெறாமலும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பல முறை அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டும், கல்லூரி உரிமையாளர் முறையாக அனுமதி பெற விண்ணப்பம் அளிக்கவில்லை. இதையடுத்து தஞ்சை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் முரளி மற்றும் அதிகாரிகள் நேற்று முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த தனியார் கல்லூரியின் முதல்அறை, அலுவலக அறை ஆகியவற்றிற்கு நகர் ஊரமைப்பு சட்டம் 1971(பிரிவு 56 மற்றும் 57)–ன் கீழ் மூடி சீல் வைத்தனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தஞ்சையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போக்குவரத்துப்பிரிவு போலீசார் சோதனை

பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்(ஏர்ஹாரன்) பொருத்தக்கூடாது என்று சட்டவிதி உள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படாமல் பெரும்பாலான பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குறுகலான சாலைகளிலும் தனியார் பஸ்கள் அதிக ஒலியை எழுப்பி கொண்டு செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையோரம் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் இருந்து பயத்தில் கீழே விழுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதனால் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பானை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சை நகர போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியிலும், தஞ்சை பழைய பஸ் நிலையம், தொம்மங்குடிசை ஆகிய பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வழிமறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மக்களை அச்சுறுத்தும் வகையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்டப்படி நடவடிக்கை

மேலும் இது போன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என்று பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது குறித்து போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் அந்த வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் கும்பகோணம் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகள்
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தாள் பிரகதீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலையும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையும், சிலைக்கடத்தல் மன்னன் கபூர் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது. அவை அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அங்குள்ள சிலைகளை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அந்நாட்டு பிரதமர் டோனிஅபோட், அந்த சிலைகளையும் தனி விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்திருந்தார். பின்னர் அந்த சிலைகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலைகள் மீட்பு
இந்நிலையில் அந்த சிலைகளை சென்னை கொண்டுவர தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அந்த சிலைகள் கடந்த 11–ந்தேதி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் அந்த சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நேற்று அர்த்த நாரீஸ்வரர் சிலையை விருத்தாசலம் கோர்ட்டிலும், நடராஜர் சிலையை ஜெயங்கொண்டம் கோர்ட்டிலும் ஒப்படைத்தனர்.
பாதுகாப்பு மையத்தில் சேர்ப்பு
பின்னர் 2 சிலைகளும் கோர்ட்டு உத்தரவின்படி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று இரவு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்நடராஜன் தலைமையில் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சிலைகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் மாரியப்பன் பெற்றுக்கொண்டார். உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையங்கள் தமிழ்நாட்டில் திருவாரூர் மற்றும் கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. ஜெயங்கொண்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பாதுகாப்பு மையமாக கும்பகோணம் உள்ளதால் இங்கு இச்சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.