Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் காலி யாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பொள் ளாச்சி வட்டார பகுதியில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு நேற்று முன்தினம் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் 12–வது வார்டில் 71 சதவீத வாக்குகளும், கோட்டூர் பேரூராட்சி 16–வது வார்டில் 82.5 சதவீத ஓட்டுகளும், வேட் டைக்காரன்புதூர் பேரூராட்சி 9–வது வார்டில் 87 சதவீத வாக்குகளும் பதிவாகின.
77.45 சதவீதம்
கோமங்கலம் ஊராட்சி 6–வது வார்டில் 81 சதவீதமும், பில் சின்னாம்பாளையம் ஊராட்சி 6–வது வார்டில் 89 சதவீதமும், பெத்தநாயக்கனூர் ஊராட்சி 7–வது வார்டில் 69 சதவீதமும், 9–வது வார்டில் 57 சதவீதமும், கரியாஞ்செட்டிபாளையம் ஊராட்சி 2–வது வார்டில் 81 சதவீதமும், சூலக்கல் ஊராட்சி 3–வது வார்டில் 79 சதவீதமும், தேவ ணாம்பாளையம் ஊராட்சி 8–வது வார்டில் 78 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. பொள்ளாச்சி வட்டார பகு தியில் 10 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பூட்டி சீல் வைக்கப் பட்டன. ஊராட்சிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம், ஆனைமலை ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் ஓட்டுப் பெட்டிகளும், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் பேரூ ராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மின்னணு வாக் குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பெட்டிகள், மின் னணு வாக்குப்பதிவு எந்தி ரங் கள் வைக்கப்பட்டுள்ள அறை கள் பூட்டி சீல் வைக்கப் பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள் ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் கள்.
பதிவான ஓட்டுகள் அந்தந்த மையங்களில் வருகிற 22–ந் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலைக்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஊத்துக்குளி தாலுகாவில் சாயகழிவு நீரால் தரிசான 10 ஏக்கர் நிலத்தை சீரமைத்து அதில் தென்னை நாற்றுகளை வேளாண்மைத்துறையினர் நடவு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
சாயகழிவு நீரால் பாதிப்புதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் நொய்யல் ஆறு பாசனம் பெறும் பகுதிகள் சாயகழிவு நீரால் மாசுபட்டன. இதில் ஒரு சில பகுதிகளில் பட்டா நிலங்களே மாசுபட்டு பயிர் சாகுபடி இல்லாமல் உள்ளன. இதை மேம்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட நிலங்களை சீர்திருத்தி விவசாய பணிக்கு கொண்டுவர திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, ஊத்துக்குளி தாலுகா மொரட்டுப்பாளையம் கிராமம் செம்பாவள்ளம் பகுதியில் தரிசாக கிடக்கும், 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சீரமைக்க வேளாண்மை துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தில் இருந்த முள் புதர்கள் அகற்றப்பட்டு 10 ஏக்கரிலும் குழிகள் எடுத்து தென்னை நடவுக்கு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தென்னை நடவுஇந்தநிலையில் அந்த நிலத்தில் தென்னை நாற்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தென்னை நடவுக்கு தேவையான 800 நெட்டை தென்னங்கன்றுகள் பவானிசாகர் தென்னை நாற்று பண்ணையில் இருந்து வேளாண்மை துறை மூலம் எடுத்துவரப்பட்டு உரங்களும் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணைஇயக்குனர் சந்தானகிருஷ்ணன் தென்னை நாற்றுகளை நட்டு நடவு பணியை தொடங்கிவைத்தார்.
அப்போது, சாயகழிவு கலந்த நொய்யல் நதிநீர் பாதிப்பினால் தரிசாக கிடக்கும் நிலங்களை சீர்திருத்தம் செய்து தென்னை, ராகி, பருத்தி போன்ற பயிர்களை பயிரிடும் படி பிற விவசாயிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். தென்னை நடவுக்கான ஏற்பாடுகளை ஊத்துக்குளி உதவி வேளாண்மை இயக்குனர் அரசப்பன், வேளாண்மை அலுவலர் செல்லம்மாள், அட்மாதிட்ட மேலாளர் ராதிகா, உதவி வேளாண்மை அலுவலர்கள் பெஞ்சமின்,முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வியாபாரிதிருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகரை சேர்ந்த முகமதுவின் மகன் அப்துல்ஹக்கீம்(வயது 26). இவர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காதர்பேட்டை பகுதியில் கடைவைத்து இரண்டாம் தர பனியன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் வியாபார நிமித்தமாக பனியன்கள் கொள்முதல் செய்வதற்கு திருப்பூர் ராம்நகர் 3–வது வீதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு தனது காரில் தனியாக சென்றார். அப்போது ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து தனது அருகில் வைத்திருந்தார்.
மிளகாய்பொடி தூவி பணம் பறிப்புபனியன் நிறுவனம் அருகில் காரை நிறுத்திய சில வினாடிகளில் காரின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன், அப்துல்ஹக்கீம் முகத்தில் மிளகாய் பொடியை தூவினான். உடனே அப்துல்ஹக்கீம் பணப்பையை பிடித்துக்கொள்ள முயன்றார். அதற்குள் அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றான். இதுபற்றி அப்துல்ஹக்கீம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
அக்கம்பக்கத்தினர் அப்துல் ஹக்கீமை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அப்துல்ஹக்கீம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், சேகர்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துடன் சென்ற மர்ம ஆசாமியை பிடிக்க அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு நள்ளிரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புக்காக பொது சுற்றுச்சுவர் இல்லாத சிமெண்டு ஆலைகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண் டுகள் இளங்கோ, செல்லதுரை, துணை சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், வின்சென்ட் ஜெய ராஜ், ஜெயங்கொண்டம் உட் கோட்ட பகுதிகளில் உள்ள சிமெண்டு ஆலைகளின் நிர் வாக அதிகாரிகள், பாது காப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் பேசியதாவது:-

ஆலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுப் புறங்களில் ஏதேனும் குற்ற நிகழ்வுகள் நடந்தால் கண்டு பிடிப்பதற்கு ஆலை நிர்வாகம் உதவுவது சம்பந்த மாகவும் ஆலோசிக்கப்பட் டது.

கண்காணிப்பு கேமரா

கயர்லாபாத் அரசு சிமெண்டு ஆலையில் எந்த இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில் லை. தேவையான இடங் களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். ஆலைகளில் பிரதான வாச லில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங் களை கண்காணிக்க பொருத் தப்பட்டுள்ள கேமராக்களின் தகுதி மற்றும் பதிவு திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஓட்டுனர்கள் ஓய்வு எடுக்கும் அறை மற்றும்¢ உணவக விடுதி களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண் டும். அப்படி பொருத் தினால்தான் அன்னிய நபர்களை கண்டு பிடிக்க முடியும். யார்டுக்கு வந்து செல்லும் வாகனங் கள் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

வாகன சோதனை

பிரதான சாலைகளில் இருந்து ஆலைக்கு பிரிந்து செல்லும் இடத்தில் பிரதான சாலையை நான்கு பக்கங்களும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட வேண் டும்.

ஆலைகளின் பிரதான வாச லில் வந்து செல்லும் வாக னங்கள் முழுமையாக சோத னை செய்யப்பட வெண் டும். ஆலைகளின் பிரதான வாசல் மற்றும் இதர வாசல் களில் வந்து செல்லும் வாகனங் களின் ஓட்டுனர் மற்றும் கிளீ னர்கள் ஆகியோர்களின் புகைப்படத்துடனான அடை யாள அட்டையை சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

சுற்றுச்சுவர்

ஆலைகளில் உள்ள லாரி நிறுத்தும் இடம், உணவக விடுதியில் இருப்பவர்களை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆலைகளின் பிர தான வாசல் மற்றும் இதர வாசல்களில் வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் ஆவணங் களை சரிபார்க்கும் அளவிற்கு போதிய காவலர்கள் நியமிக்கப் பட வேண்டும். மேலும் அந்த வாசல்களின் வழியாக வந்து செல்லும் வாகனங்களின் எண் மற்றும் ஓட்டுனர் முக வரியை நேரப்படி தனியாக ஒரு ஆவணத்தில் எழுதப்பட வேண்டும்.

ஆலைகளில் பாதுகாப்பில் உள்ள காவலர்களை அதிக அளவில் தணிக்கை செய்யப் படவேண்டும். பொது சுற்றுச் சுவர் இல்லாத ஆலைகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். சுற்றுச்சுவர் இல் லாத லாரி நிறுத்தங்களில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். இவற்றை ஆலை நிர்வாகிகள் பின்பற்ற வேண் டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

On Friday, September 19, 2014 by farook press in ,    
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பூஞ்சோலையில் உள்ள அமரர் சஞ்சய்காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நெசவாளர்களுககு செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பசுமை வீடுகள் கட்டப்படுவது குறித்து மாநில கைத்தறி நெசவாளர் சங்க பொதுச்செயலாளர் பூவைச்சந்திரன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
ஏழை, எளிய நெசவாளர்களின் நலன் கருதி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கிராம புறங்களில் கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், நெசவாளர் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும் மானியமாக கொடுத்து வருகிறார். நெசவாளர்களுக்கு கட்டப்படும் பசுமை வீடுகளின் உள்ளே நெசவு தறிக்கூடம் அமைப்பதற்காக மேற்கூரை 12 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கு குறைவாக கட்டினால் நெசவு நெய்ய பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும். தற்போது சீவல்சரகு ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் 15 வீடுகளும் உயரம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் பாண்டியராஜனிடம் கேட்ட போது, ‘நெசவாளர்களுக்கு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளின் மேற்கூரை 12 அடி உயரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த வீட்டிற்கு அரசு வழங்கும் நிதி உதவி நிறுத்தப்படும். இந்த கட்டிட பணி குறித்து விசாரணை செய்து வருகிறோம்’ என்றார்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
சேமநல நிதி வட்டி தொகையை வழங்கக்கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக சேமநல நிதி வட்டித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல், பணியின்போது இறந்த தொழிலாளர்களுக்கும் பண பலன்கள் வழங்கப்படவில்லை.

நிலுவையில் உள்ள சேமநல நிதி வட்டி தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

நிலுவையில் உள்ள சேமநலநிதி வட்டி தொகை மற்றும், இறந்தவர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையாளர் ராஜன் விரைந்துவந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், போராட்டக்காரர்கள் ஆணையாளரின் அறை கதவை தட்டி கோஷங் கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். நேற்று காலை 11 மணியளவில் தொடங்கிய அவர்களது போராட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.

ரூ.1 கோடியே 17 லட்சம் நிலுவை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜனிடம் கேட்டபோது, ‘சுமார் 1,600 துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேம நல நிதி வட்டி தொகை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்கான முழு நிதி இன்னும் வரவில்லை. 1990-2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் வழங்க வேண்டிய நிதி சுமார் சுமார் ரூ.1 கோடியே 17 லட்சம் வந்து உள்ளது. அந்த தொகையை அடுத்த மாதம் தொடக்கத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக பிரித்து வழங்க இருக்கிறோம். 2001-ம் ஆண்டில் இருந்து கொடுக்க வேண்டிய தொகைக்கான நிதி வந்ததும், பின்னர் கொடுக்கப்படும்’ என்றார். 
On Friday, September 19, 2014 by farook press in ,    
சித்தோடு ராயபாளையம் கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர். அவருடைய மனைவி பெரியம்மா (வயது 65). இவரை கடந்த 27–8–2003–ம் அன்று திருவாரூரை சேர்ந்த ஆதி என்கிற அருண்குமார் உள்பட 3 பேர் கொலை செய்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2004–ம் ஆண்டு ஜாமீனில் அருண்குமார் வெளியே வந்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையில் கோர்ட்டில் ஆஜராகமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அருண்குமாரை சித்தோடு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் தேனி மாவட்டம் தாமரைக்குளம் அருகே உள்ள பெரியகுளம் காலனியில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அருண்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அருண்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
ஈரோடு அருகே அனுமதியின்றி இயங்கிய தனியார் ‘சிப்ஸ்’
ஆலைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சீல் வைப்பு
ஈரோடு அருகே முள்ளாம்பரப்பை அடுத்த அசோகபுரம் பகுதியில் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ‘சிப்ஸ்’
தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை முறையாக அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் ஈரோடு மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் அந்த ஆலைக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த ஆலை அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்தது. இதையொட்டி அந்த ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பறிமுதல்
மேலும் ஆலையில் இருந்த சிப்ஸ், முறுக்கு மற்றும் எண்ணை உள்பட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி கூறும்போது,`` இந்த ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் உணவுப்பொருட்களை கோவை உணவு பகுப்பு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்னும் 15 நாட்களில் உணவுப்பொருட்களின் பரிசோதனை முடிவுதெரியவரும். தரமற்ற உணவுப்பொருட்களை தயாரித்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்`` என்றார்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
கோபி மொடச்சூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் பவானி புதிய பஸ்நிலையத்தில் இருந்து மைலம்பாடி வழியாக செல்லும் பஸ்சில்ஏறி அமர்ந்து இருந்தார். அப்போது இவர் அமர்ந்து இருந்த இருக்கைக்கு முன்பு பஸ் டிரைவர் போன்று காக்கிச்சட்டை அணிந்த ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது ஆறுமுகத்துக்கும், அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மறைத்து வைத்து இருந்த பிளேடால் ஆறுமுகத்தை கழுத்து, மார்பு மற்றும் கைகளில் அறுத்துவிட்டு தப்பி ஓடினார். அந்த மர்மநபரை பிடிக்க ஆறுமுகம் ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். ஆனால் அந்த நபரை பிடிக்க முடியவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தை பிளேடல் கீறிவிட்டு தப்பிஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.