Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
வால்பாறையில் யானை கள் அட்டகாசத்தை தடுக்க கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யானைகள் அட்டகாசம்

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வால்பாறையை அடுத்த தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழக (டேன்டீ) நிர்வாகத்திற்கு சொந்தமான பெரியகல்லார், சின்னக்கல்லார், சின்கோனா ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு 15 யானைகள் கொண்ட கூட்டம் பெரியகல்லார் எஸ்டேட் பகுதிக்குள்ளும், 10 யானைகள் கொண்ட கூட்டம் சின்னக்கல் லார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்தன. இதில் சின்னக்கல்லார் எஸ்டேட் குடியிருப்பில் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களுக்கு வழங்க ரேஷன் பொருட்கள் வைக்கப் பட்டு இருந்த அறையின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. ஆனால் அங்கு ரேஷன் பொருட்கள் ஏதும் இல்லாத தால் அருகில் இருந்த ஆளில் லாத குடியிருப்புகளை இடித்து தள்ளின.

வீடு சூறை

பின்னர் கண்ணன் என்பவ ரின் வீட்டின் முன்புற அறையை இடித்து துதிக் கையை உள்ளே விட்டு சாப்பி டுவதற்கு ஏதும் கிடைக்குமா? என்று தேடின. ஆனால் அங்கு ஒன்றும் இல்லாததால் முன் அறையில் நிறுத்தப்பட்டிருந்த மோட் டார் சைக்கிள், கேபிள் இணைப்பு வழங்கும் கருவி கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை உடைத்து வீட்டை சூறையாடின.

உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணன், தனது வயதான தாயாரை வீட்டின் பின்பக்க வழியாக அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று விட்டார். பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து யானைகளை துரத்தினார்கள். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கே நின்று, கொண்டுதொழிலாளர்களை துரத்தின. தொடர்ந்து வனத்துறையின ருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. வனத்துறையினர் வருவ தற்குள் மீண்டும் யானைகள் வீட்டை சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் சென்றன.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

இந்த நிலையில் யானை களின் அட்டகாசத்தை தடுக்க கோரி சின்னக்கல்லார் எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று அந்த பகுதியின் வார்டு கவுன் சிலர் சுதாகர் மற்றும் வால்பாறை கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் பெருமாள் ஆகியோர் தலை மையில் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது, தொடர்ந்து காட்டுயானைகளால் பாதிப் புக்குள்ளாகி வருகிறோம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை டேன்டீ நிர்வாகமும், வனத்துறையின ரும் எடுக்க வேண்டும். யானை கள் நடமாட்டம் அதிகமுள்ள நாட்களில் 2 கும்கி யானை களை கொண்டு வந்து பாது காப்பு பணியில் ஈடுபட வேண்டும். கூடுதலாக வனத் துறையினரை போதிய வாகன வசதியுடன் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட வேண் டும். டேன்டீ நிர்வாகம் சார் பில் காட்டு யானைகள் நிற்கக் கூடிய இடங்களை கண்டறிந்து வனத்துறையினருக்கு முன் கூட்டியே தெரிவிப்பதற்கு போதிய பணியாட்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

ரூ.10 லட்சம்

இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டேன்டீ டிவிசன் மேலாளர் விக்ரம், மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் அறிவொளி, ஆகியோர் வந்த னர். அப்போது தொழிலாளர் கள் அவர்களை முற்றுகை யிட்டு தங்களது கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவோ அல்லது ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வீதம் கொடுத்து தங்களை பணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் அறி வொளி, சின்னக்கல்லார் பகுதியில் குடியிருந்து வரும் தொழிலாளர்களின் வீடுகள் அருகருகே இல்லை. இதனால் காட்டு யானைகள் எளிதாக குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பி.ஏ.பி. நிர்வாகத்திற்கு சொந்தமான பல குடியிருப்புகள் காலியாக உள்ளன. இந்த வீடுகளுக்கு எஸ்டேட் தொழிலாளர்களை மாற்றி விட்டால் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இருக்காது என்று டிவிசனல் மேலாளரிடம் தெரிவித்தார்.

அப்போது அங்கு வந்த வால்பாறை தாசில்தார் நேரு விடமும், எஸ்டேட் தொழி லாளர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்ட ரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் நேரு எஸ்டேட் தொழிலாளர்களி டம் உறுதி கூறினார்.

இதைத்தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். தொழிலாளர் களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

On Saturday, September 20, 2014 by farook press in ,    
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்டிசோலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 47). சமையல் தொழிலாளி. இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் ஊட்டியில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிள் அவினாசி சாலையில் கருமத்தம்பட்டி அருகே உள்ள கொள்ளுபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, எதிரே வந்த வேன் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஆனைமலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் மீது லாரி ஏறியது. இதில் கணவர் கண் எதிரே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருமணம்
பொள்ளாச்சியை அடுத்த கோப்பனூர் புதூரை சேர்ந் தவர் அனந்தபத்மநாபன் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் உடுமலை திருமூர்த்தி நகரை சேர்ந்த உமாமகேஸ்வரி (28) என்பவருக்கும் இடையே கடந்த மாதம் 29–ந் தேதி திரு மணம் நடை பெற்றது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு அனந்தபத்ம நாபன் தனது மனைவி உமா மகேஸ்வரியுடன் ஆனைமலை மாசாணியம்மன் கோவி லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் 2 பேரும் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் கோப்பனூர்புதூ ருக்கு திரும்பி வந்தனர்.
புதுப்பெண் பலி
பொள்ளாச்சி – மீன்கரை ரோட்டில் அம்பராம் பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால், 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செங்கோடு நோக்கி சென்ற ஒரு லாரி உமா மகேஸ் வரி மீது கண்இமைக்கும் நேரத் தில் ஏறியது. இந்த விபத்தில் அனந்தபத்மநாபன் கண் முன்னே உமாமகேஸ்வரிஉடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அனந்த பத்மநாபன் காய மின்றி உயிர் தப்பினார். மனைவி இறந்து கிடப்பதை பார்த்த அவர் கதறி துடித்தார்.இது குறித்த தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் விரைந்து சென்று உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுப் பெண் உமா மகேஸ்வரி இறந்த தகவல் அறிந்ததும், அவரது உறவினர்கள் வேட்டைக் காரன் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்த விபத்து தொடர்பாக திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் மணி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. விஷ்ணுராவ் தெரிவித்தார்.

நிறைவு விழா

கோவை அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு 166 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. விஷ்ணுராவ் கோவை வந்தார்.

பின்னர் கதிர்நாயக்கன்பாளையம் சென்ற அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு

மத்திய அரசும், மத்திய ரிசர்வ் படை போலீசாரும் இணைந்து நக்சலைட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அத்துடன் ஏற்கனவே உள்ள நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள நக்சலைட்டுகளின் 80 சதவீதம் பேர் குறித்த அனைத்து விவரங்களும் எங்களிடம் உள்ளன. 20 சதவீதம் பேர் குறித்த தகவல் மட்டுமே இல்லை. இதற்கு காரணம் அவர்கள் மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். பகல் நேரத்தில் டாக்டர்களாக, என்ஜினீயர்களாக மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளனர். ஆனால் இரவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வழிகள் தடுக்கப்படும்

எனவே அவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் சென்று கண்காணித்து வருகிறார்கள். நக்சலைட்டுகளை கொல்வது எங்கள் நோக்கம் இல்லை. அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும்.

வெளிநாடுகளில் இருந்து நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதுகுறித்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது உண்மையாக இருந்தால் ஆயுதங்கள் வரும் வழிகள் தடுக்கப்படும்.

50 இடங்களில் பயிற்சி

பெரும்பாலும் வேலை இல்லாத இளைஞர்கள்தான் நக்சலைட்டுகளாக மாறி வருகிறார்கள். எனவே அவர்களை கண்டுபிடித்து, அவர்கள் தொழில் தொடங்க மத்திய அரசு மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதிதாக நக்சலைட்டுகள் உருவாகுவது தடுக்கப்பட்டு உள்ளது. எனவே நக்சலைட்டுகள் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ளவர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்துவது, நக்சலைட்டுகளை ஒழிப்பது, கலவரங்களை தடுப்பது, கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகிறது.

இவ்வாறு ஐ.ஜி. விஷ்ணுராவ் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊடுருவல் இல்லை

தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் உள்ளதா என்று கேட்டபோது, ‘தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை. இங்கு நக்சலைட்டுகள் இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை சார்பில் எங்களுக்கு தகவலும் கொடுக்கவில்லை. தமிழக போலீசார் சிறப்பாக கண்காணித்து வருகிறார்கள்’ என்றார்.

பேட்டியின்போது அவருடன் பயிற்சி பள்ளி முதல்வரும் டி.ஐ.ஜி.யுமான ஜேக்கப் உடன் இருந்தார். இந்த பள்ளியில் சிறப்பாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

On Saturday, September 20, 2014 by farook press in ,    
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் காலி யாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பொள் ளாச்சி வட்டார பகுதியில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு நேற்று முன்தினம் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் 12–வது வார்டில் 71 சதவீத வாக்குகளும், கோட்டூர் பேரூராட்சி 16–வது வார்டில் 82.5 சதவீத ஓட்டுகளும், வேட் டைக்காரன்புதூர் பேரூராட்சி 9–வது வார்டில் 87 சதவீத வாக்குகளும் பதிவாகின.
77.45 சதவீதம்
கோமங்கலம் ஊராட்சி 6–வது வார்டில் 81 சதவீதமும், பில் சின்னாம்பாளையம் ஊராட்சி 6–வது வார்டில் 89 சதவீதமும், பெத்தநாயக்கனூர் ஊராட்சி 7–வது வார்டில் 69 சதவீதமும், 9–வது வார்டில் 57 சதவீதமும், கரியாஞ்செட்டிபாளையம் ஊராட்சி 2–வது வார்டில் 81 சதவீதமும், சூலக்கல் ஊராட்சி 3–வது வார்டில் 79 சதவீதமும், தேவ ணாம்பாளையம் ஊராட்சி 8–வது வார்டில் 78 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. பொள்ளாச்சி வட்டார பகு தியில் 10 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பூட்டி சீல் வைக்கப் பட்டன. ஊராட்சிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம், ஆனைமலை ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் ஓட்டுப் பெட்டிகளும், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் பேரூ ராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மின்னணு வாக் குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பெட்டிகள், மின் னணு வாக்குப்பதிவு எந்தி ரங் கள் வைக்கப்பட்டுள்ள அறை கள் பூட்டி சீல் வைக்கப் பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள் ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் கள்.
பதிவான ஓட்டுகள் அந்தந்த மையங்களில் வருகிற 22–ந் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலைக்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஊத்துக்குளி தாலுகாவில் சாயகழிவு நீரால் தரிசான 10 ஏக்கர் நிலத்தை சீரமைத்து அதில் தென்னை நாற்றுகளை வேளாண்மைத்துறையினர் நடவு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
சாயகழிவு நீரால் பாதிப்புதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் நொய்யல் ஆறு பாசனம் பெறும் பகுதிகள் சாயகழிவு நீரால் மாசுபட்டன. இதில் ஒரு சில பகுதிகளில் பட்டா நிலங்களே மாசுபட்டு பயிர் சாகுபடி இல்லாமல் உள்ளன. இதை மேம்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட நிலங்களை சீர்திருத்தி விவசாய பணிக்கு கொண்டுவர திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, ஊத்துக்குளி தாலுகா மொரட்டுப்பாளையம் கிராமம் செம்பாவள்ளம் பகுதியில் தரிசாக கிடக்கும், 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சீரமைக்க வேளாண்மை துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தில் இருந்த முள் புதர்கள் அகற்றப்பட்டு 10 ஏக்கரிலும் குழிகள் எடுத்து தென்னை நடவுக்கு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தென்னை நடவுஇந்தநிலையில் அந்த நிலத்தில் தென்னை நாற்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தென்னை நடவுக்கு தேவையான 800 நெட்டை தென்னங்கன்றுகள் பவானிசாகர் தென்னை நாற்று பண்ணையில் இருந்து வேளாண்மை துறை மூலம் எடுத்துவரப்பட்டு உரங்களும் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணைஇயக்குனர் சந்தானகிருஷ்ணன் தென்னை நாற்றுகளை நட்டு நடவு பணியை தொடங்கிவைத்தார்.
அப்போது, சாயகழிவு கலந்த நொய்யல் நதிநீர் பாதிப்பினால் தரிசாக கிடக்கும் நிலங்களை சீர்திருத்தம் செய்து தென்னை, ராகி, பருத்தி போன்ற பயிர்களை பயிரிடும் படி பிற விவசாயிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். தென்னை நடவுக்கான ஏற்பாடுகளை ஊத்துக்குளி உதவி வேளாண்மை இயக்குனர் அரசப்பன், வேளாண்மை அலுவலர் செல்லம்மாள், அட்மாதிட்ட மேலாளர் ராதிகா, உதவி வேளாண்மை அலுவலர்கள் பெஞ்சமின்,முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வியாபாரிதிருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகரை சேர்ந்த முகமதுவின் மகன் அப்துல்ஹக்கீம்(வயது 26). இவர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காதர்பேட்டை பகுதியில் கடைவைத்து இரண்டாம் தர பனியன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் வியாபார நிமித்தமாக பனியன்கள் கொள்முதல் செய்வதற்கு திருப்பூர் ராம்நகர் 3–வது வீதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு தனது காரில் தனியாக சென்றார். அப்போது ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து தனது அருகில் வைத்திருந்தார்.
மிளகாய்பொடி தூவி பணம் பறிப்புபனியன் நிறுவனம் அருகில் காரை நிறுத்திய சில வினாடிகளில் காரின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன், அப்துல்ஹக்கீம் முகத்தில் மிளகாய் பொடியை தூவினான். உடனே அப்துல்ஹக்கீம் பணப்பையை பிடித்துக்கொள்ள முயன்றார். அதற்குள் அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றான். இதுபற்றி அப்துல்ஹக்கீம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
அக்கம்பக்கத்தினர் அப்துல் ஹக்கீமை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அப்துல்ஹக்கீம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், சேகர்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துடன் சென்ற மர்ம ஆசாமியை பிடிக்க அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு நள்ளிரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புக்காக பொது சுற்றுச்சுவர் இல்லாத சிமெண்டு ஆலைகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண் டுகள் இளங்கோ, செல்லதுரை, துணை சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், வின்சென்ட் ஜெய ராஜ், ஜெயங்கொண்டம் உட் கோட்ட பகுதிகளில் உள்ள சிமெண்டு ஆலைகளின் நிர் வாக அதிகாரிகள், பாது காப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் பேசியதாவது:-

ஆலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுப் புறங்களில் ஏதேனும் குற்ற நிகழ்வுகள் நடந்தால் கண்டு பிடிப்பதற்கு ஆலை நிர்வாகம் உதவுவது சம்பந்த மாகவும் ஆலோசிக்கப்பட் டது.

கண்காணிப்பு கேமரா

கயர்லாபாத் அரசு சிமெண்டு ஆலையில் எந்த இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில் லை. தேவையான இடங் களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். ஆலைகளில் பிரதான வாச லில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங் களை கண்காணிக்க பொருத் தப்பட்டுள்ள கேமராக்களின் தகுதி மற்றும் பதிவு திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஓட்டுனர்கள் ஓய்வு எடுக்கும் அறை மற்றும்¢ உணவக விடுதி களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண் டும். அப்படி பொருத் தினால்தான் அன்னிய நபர்களை கண்டு பிடிக்க முடியும். யார்டுக்கு வந்து செல்லும் வாகனங் கள் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

வாகன சோதனை

பிரதான சாலைகளில் இருந்து ஆலைக்கு பிரிந்து செல்லும் இடத்தில் பிரதான சாலையை நான்கு பக்கங்களும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட வேண் டும்.

ஆலைகளின் பிரதான வாச லில் வந்து செல்லும் வாக னங்கள் முழுமையாக சோத னை செய்யப்பட வெண் டும். ஆலைகளின் பிரதான வாசல் மற்றும் இதர வாசல் களில் வந்து செல்லும் வாகனங் களின் ஓட்டுனர் மற்றும் கிளீ னர்கள் ஆகியோர்களின் புகைப்படத்துடனான அடை யாள அட்டையை சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

சுற்றுச்சுவர்

ஆலைகளில் உள்ள லாரி நிறுத்தும் இடம், உணவக விடுதியில் இருப்பவர்களை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆலைகளின் பிர தான வாசல் மற்றும் இதர வாசல்களில் வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் ஆவணங் களை சரிபார்க்கும் அளவிற்கு போதிய காவலர்கள் நியமிக்கப் பட வேண்டும். மேலும் அந்த வாசல்களின் வழியாக வந்து செல்லும் வாகனங்களின் எண் மற்றும் ஓட்டுனர் முக வரியை நேரப்படி தனியாக ஒரு ஆவணத்தில் எழுதப்பட வேண்டும்.

ஆலைகளில் பாதுகாப்பில் உள்ள காவலர்களை அதிக அளவில் தணிக்கை செய்யப் படவேண்டும். பொது சுற்றுச் சுவர் இல்லாத ஆலைகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். சுற்றுச்சுவர் இல் லாத லாரி நிறுத்தங்களில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். இவற்றை ஆலை நிர்வாகிகள் பின்பற்ற வேண் டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

On Friday, September 19, 2014 by farook press in ,    
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பூஞ்சோலையில் உள்ள அமரர் சஞ்சய்காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நெசவாளர்களுககு செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பசுமை வீடுகள் கட்டப்படுவது குறித்து மாநில கைத்தறி நெசவாளர் சங்க பொதுச்செயலாளர் பூவைச்சந்திரன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
ஏழை, எளிய நெசவாளர்களின் நலன் கருதி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கிராம புறங்களில் கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், நெசவாளர் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும் மானியமாக கொடுத்து வருகிறார். நெசவாளர்களுக்கு கட்டப்படும் பசுமை வீடுகளின் உள்ளே நெசவு தறிக்கூடம் அமைப்பதற்காக மேற்கூரை 12 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கு குறைவாக கட்டினால் நெசவு நெய்ய பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும். தற்போது சீவல்சரகு ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் 15 வீடுகளும் உயரம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் பாண்டியராஜனிடம் கேட்ட போது, ‘நெசவாளர்களுக்கு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளின் மேற்கூரை 12 அடி உயரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த வீட்டிற்கு அரசு வழங்கும் நிதி உதவி நிறுத்தப்படும். இந்த கட்டிட பணி குறித்து விசாரணை செய்து வருகிறோம்’ என்றார்.