Wednesday, September 24, 2014
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இடைக்கால இழப்பீட்டுத் தொகை
வழங்க
வேண்டும். மேலும்
, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க
வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் புதன்கிழமை (செப்.24) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் புதன்கிழமை (செப்.24) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடுமலைபேட்டையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி லீலாவதி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டல் தொழிலாளி சந்திரா என்ற பெண்ணை காவல்துறையினர் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக பல நாட்கள் தனியாக அடைத்து வைத்து கொடூரமாக சித்ரவதை செய்த விபரம் சென்னை உயர்நீதிமன்ற விசாரணை மூலம் வெளிவந்தது.
குறிப்பாக அவரை நிர்வாணப்படுத்தியும், பிறப்பு றுப்பில் லத்தியால் குத்தியும், தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தும், நகக்கண்களில் ஊசியை குத்தி, விரல்களைச் சிதைத்தும் சித்ரவதை செய்திருப் பதாக அவரது மகள் ராஜகுமாரி நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் விபரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான இந்த செயல், மனித உரிமை மீறல் குற்றம் ஆகும்.
இது குறித்து தமிழக அரசு தவறிழைத்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நியாயம் வழங்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தவறிழைத்த காவலர்களை தமிழக அரசு காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியிருந்தது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சந்திரா தரப்புக்கு ஆதரவாக
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பிலும் தலையீட்டு
மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கி ழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்கள், காவல் துறையின் குற்றத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் பாதிக்கப்பட்ட
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு வரவேற்கிறது. நீதிமன்றத்தின்
சந்திராவுக்கு
ரூ. 2லட்சம் இடைக்கால
இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இத்துடன் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு வரவேற்கிறது. நீதிமன்றத்தின்
இந்த உத்தரவை ஏற்று பாதிக்கப்பட்ட சந்திராவுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த தொகையை
மாநில அரசு வழங்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதீஸ் என்ற சதீஸ்பாண்டி (வயது 21). எலக்ட்ரீசியன். இவரும் சிவன் தியேட்டர் ரோட்டை சேர்ந்த கார்த்திக் (22), கோபால் (22) ஆகியோரும் நண்பர்கள்.
சம்பவத்தன்று நண்பர்கள் 3 பேரும் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினர். அப்போது கார்த்திக்கும் கோபாலும் நண்பர் சதீசிடம் பணம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என்று சதீஸ் கூறினார்.
இந்நிலையில் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தத்துக்கு 3 பேரும் வந்தனர். தொடர்ந்து பணம் கேட்டு கார்த்திக்கும், கோபாலும் நச்சரித்தனர். தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று முடிவாக சதீஸ் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீசின் தலையில் வெட்டினர்.
வெட்டுக்காயம் அடைந்த சதீசுக்கு ரத்தம்கொட்டியது. அதிர்ச்சியடைந்த சதீஸ் சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த நண்பர்கள் 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.
பொதுமக்கள் சதீசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சதீஸ் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கார்த்திக்கும், கோபாலும் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதியின் உத்தரவையடுத்த 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து சப்–இன்ஸ் பெக்டர் சசிகலா, ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பூருக்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை பழனியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (வயது 50) ஓட்டி வந்தார்.
காங்கயம் அருகே கொடுவாய் வழியாக பஸ் வந்தபோது கொல்லி வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் பஸ்சும், திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பழனியை சேர்ந்த ராமலட்சுமி (72) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் புதுப்பட்டியை சேர்ந்த காளியப்பன் (42), பஸ் டிரைவர் தங்கவேல் (52) உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்ததும் அவினாசி பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக தங்கவேல் உள்பட 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் வீடு திரும்பினர்.
வெள்ளகோவில், செப். 24–
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழனிச் சாமி(வயது 45). இவரது நண்பர் குப்புசாமி(55). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள லக்கமநாயக்கன் பட்டியில் தங்கியிருந்து கிணறு தோண்டும் வேலை செய்து வந்தனர்.
பழனிச்சாமியும், குப்புசாமியும் வெள்ளகோவிலில் இருந்து லக்கம நாயக்கன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
லக்கமநாயக்கன் பட்டியை நெருங்கிய போது மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குப்புசாமி பலத்த காயமடைந்தார்.
பழனிச்சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே குப்புசாமி பரிதாபமாக இறந்தார். லேசான காயமடைந்த பழனிச்சாமி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார்.
உலக நன்மைக்காக... வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகே கடந்த 4 மாதத்திற்கு முன் ஒரு சாமியார் வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக அங்குள்ள கோவில் அருகே உள்ள தோப்பில் தங்கினார்.
அந்த சாமியார் பெயர், ஊர் விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. சாமியார் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகள் பேசுகிறார். சத்துவாச்சாரியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சாமியாரிடம் ஆசி பெற்று வந்தனர். பிரத்தியங்கரா தேவி அருள் பெற்றவர் என கூறிக்கொண்ட சாமியார் பல்வேறு பூஜைகள் செய்து வந்தார். தற்போது வேலூரில் மழை பெய்ததால் அவர் வ.உ.சி.நகர் 4–வது தெருவில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் உலக நன்மைக்காக அவர் வணங்கும் பிரத்தியங்கரா தேவியை வேண்டி தனது வீட்டில் சிறப்பு பூஜை செய்து மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதற்காக பக்தர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
மிளகாய் பொடி அதன்படி நேற்று மிளகாய் பொடி அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. சாமியார் பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர் ஒரு அண்டாவில் அமர்ந்தார். 31 கிலோ மிளகாய் பொடி கரைக்கப்பட்ட தண்ணீரை சாமியார் மீது பக்தர்கள் ஊற்றி அபிஷேகம் செய்தனர். சுமார் 150–க்கும் மேற்பட்ட பக்தர்கள் மிளகாய் பொடி கரைத்த தண்ணீரை எடுத்து சாமியாருக்கு அபிஷேகம் செய்தனர்.
மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்த அதிசய சாமியாரை பற்றி தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து பார்த்து ஆச்சரியமடைந்து சாமியாரிடம் ஆசி பெற்று சென்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பூக்களைக் கொடுத்து எண்ணத்தை வெளிப்படுத்தும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் பாரசீகர்கள். 18–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவீடன் நாட்டு அரசரான பனிரெண்டாம் சார்லஸ் (1682– 1718) அவருடைய இளம் வயதில் நாடு கடத்தப்பட்டு துருக்கியில் வசித்தார். அவர் பூங்கொத்து கொடுக்கும் வழக்கத்தை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.
பாரசீகத்தில் ஒவ்வொரு மலருக்கும் ஓர் அர்த்தமுண்டு. இந்தக் கருத்தை ஐரோப்பியர்கள் வரவேற்றனர். அதனால், சில நேரங்களில் முழு பேச்சுவார்த்தையையும் விதவிதமான மலர்களை மாற்றிக்கொள்வதன் மூலமே நடத்தினர். மலர் களின் மொழியில், காதலையும் நேசத்தையும் ரோஜா மலர் வெளிப்படுத்துகிறது. அதனால் 1 டஜன் ரோஜா மலர்களைக் கொடுப்பது, அன்பை உரக்கச் சொல்வது போல ஆகும்.
‘வேலன்டைன் டே’ எனப்படும் காதலர் தினத்தில் ரோஜா மலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் அன்றைய தினத்துக்கான மலராக வயலட் இருந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. காரணம், காதலர் தினத்தின் காரணகர்த்தாவான செயின்ட் வேலன்டைன் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன் தங்கியிருந்த சிறை அறைக்கு வெளியே வயலெட் மலர்கள் பூத்துக் குலுங்கின. அவர், கடிதம் எழுதுவதற்கான மையைக் கூட வயலெட் மலர் களைப் பிழிந்து தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
பூக்களின் வண்ணங்களும் அர்த்தங்களும்
காலம்காலமாக அன்பின் அடையாளமாகவும், மரியாதை நிமித்தமாகவும் கொடுக்கப்படும் மலர்கள், அவற்றின் வண்ணத்துக்கு ஏற்ப ஒவ்வொரு அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.
உதாரணமாக சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும், இளஞ்சிவப்பு மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டையும் வெளிப்படுத்துகின்றன. அதோடு, நேசத்துக்கான விண்ணப்பமாகவும் இளஞ்சிவப்பு மலர்கள் கருதப்படுகின்றன.
வெண்மை நிறப் பூக்கள் கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம், மவுனம் ஆகியவற்றையும், ‘பீச்’ அல்லது பவள வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. கருஞ்சிவப்பு வண்ணப் பூக்கள் நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன.
பூக்கள் சொல்லும் செய்திகள்
விதவிதமான பூக்கள், அவற்றைப் பெறுபவர்களுக்கு மட்டுமேயான பிரத்தியேக செய்தியையும் வெளிப்படுத்துகின்றன. மேலைநாட்டு வழக்கப்படி ரோஜா மலர்கள், ‘நான் உன்னை விரும்பு கிறேன் என்பதைத் தெரிந்துகொள்’ என்றும், கார்னேஷன் மலர்கள், ‘நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும், டபோடில் மலர்கள், ‘நீ நல்லவன் என்பதோடு தைரியசாலி’ என்றும், சாமந்தி, ‘நான் உனக்கு உண்மையாக இருப்பேன்’ என்பதையும், கிளாடியோலி, ‘உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்’ என்பதையும், ஐரிஸ் மலர்கள், ‘என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்’ என்றும், ஆர்க்கிட் மலர்கள், ‘நீ என் இதயத்தில் இருக்கிறாய்’ என்றும், ஸ்னேப் டிராகன்ஸ் பூக்கள், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்றும், சூரியகாந்திப் பூக்கள், ‘என் எண்ணங்கள் தூய்மையானவை’ என்றும், டூலிப் மலர்கள் ‘நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன்’ என்றும் சொல்கின்றன.
பொதுவாக பூக்கள் என்றாலே புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, உற்சாகம்தான். அதனால்தான் எல்லா நாடுகளிலும், எல்லா கலாசாரங்களிலும் முக்கிய நிகழ்வுகளில், மங்கள வைபவங்களில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. மனிதர்களை, குறிப்பாக பெண்களை பெரிதும் கவர்ந்திருக்கிற பூக்கள் இல்லாத உலகை கற்பனை செய்வது கூட கடினம்தான்!
தமிழ்நாட்டின் இரண் டாவது பெரிய நகரமும்,
தென் மாவட்டங்களின் தலைமையிடமாகவும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை
படைத்த பரபரப்பான மதுரை மாநகரில் ரயில் நிலையத்தில் நடை மேடைப் பகுதிக்கு
செல் லும் முன் ரயில் வரும், போகும் நேரங்களை ஒளிபரப்பும் தொலைக் காட்சிப்
பெட்டிகளில் தெரியும் திரைகளில் தமிழ் மொழியில் ஒளிபரப் பில்லாமல் பல
மாதங் களாக இந்தியிலும், ஆங் கிலத்திலும் மட்டுமே காண்பித்துக் கொண்டி
ருக்கிறார்கள்.
தென்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும்
ரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். அதிக அளவில் இந்தப் பகுதியில் விரைவு
வண்டி அல்லாத பாசஞ்சர் வண்டி என்று சொல்லப் படும் ரயில்களையே அம்மக்கள்
பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பா லான மக்களுக்கு
ஆங்கில மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திக்கும் இவர்களுக்கும்
தொடர்பே யில்லை. இதனை அங்கே கண்கூடாக உணர முடி கிறது. அந்த மக்கள்
யாரிடமாவது எந்த வண்டி எந்த நடை மேடை என் பதைக் கேட்டு விட்டு அந்த வண்டியை
நோக்கி ஓடுகிறார்கள்.
இந்த அவல நிலையைப் பற்றி புகார் அறையில்
வினவிய பொழுது அங்கிருந்த ரயில்வே துறை ஊழி யர்கள் இந்த டி.வி டிஸ் பிளே
காட்டும் பணியை எல்லாம் பாலக்காட்டில் உள்ள ஒரு கம்பெனியிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களிடமே நாங்களும் பலமுறை கூறிவிட்டோம், அவர்கள்
அதை பொருட் படுத்துவதாக இல்லை என்று கூறினர்.
இதனை நாங்கள் நாளை எங்களது பத்திரிக்
கையான விடுதலையில் வெளியிடுவோம் என்று சொன்னவுடன் அந்த ஊழியர்கள் உடனே
ஓடிச்சென்று மேலதி காரியை அழைத்து வந் தனர். அவர் நம்மிடம் இப்பொழுது இந்த
பாலக்காட்டு கம்பெனி யின் ஒப்பந்தம் முடிந்து விட்டது. நாங்கள் தான் அந்தப்
பணியை செய்ய வேண்டும். இப்பொழுதே தமிழில் ஒளிபரப்பும் பணியைச் செய்கிறோம்
என்று சொன்னார்.
உடனே செய்யுங்கள். சென்னையிலெல்லாம்
தமிழில் மின்னணுத் திரையில் காண்பிக்கும் பொழுது சங்கம் வைத்து தமிழ்
வளர்த்த மதுரை யில் ரயில் நிலையத்தில் தமிழை இல்லாமல் செய்கிறீர்களே என்று
நாம் சொன்னவுடன் உடனே சரி செய்யச் சொல்கிறேன் என்றார்.
அங்கு கூடியிருந்த மக்களில் ஒருவர், நான்
தினமும் வந்து செல் கிறேன், ஆனால் ஒரு நாள் கூட தொலைக்காட்சித் திரையில்
தமிழில் காட் டியதேயில்லை என்றார். சிறிது நேரத்தில் மின் தடை ஏற்பட்டது.
அதன் பிறகு மீண்டும் மின்சாரம் வந்தபோது மின்னணுத் திரை ஒளிபரப்பே நின்று
போனது. இனி மேலாவது தமிழிலும் ஒளிபரப்பு கிறார்களா என்பதைப் பார்த்துவிட்டு
அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள கழகம் காத்துக் கொண்டிருக்கிறது.
மதுரை மாநகராட்சி பொறியாளரிடம் தன்னை உளவுத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி விசாரிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் பொறியாளராக இருப்பவர் மதுரம். இவரிடம் திங்கள்கிழமை குஜராத் மாநிலம், ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த லலித்போலோட்டியா (59) என்பவர் வந்துள்ளார். அவர் தன்னை ஐபி அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார். மாநகராட்சிப் பொறியாளர் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று ஆணையர் கதிரவனிடமும் லலித்போலோட்டியா தன்னை அறிமுகத்தியுள்ளார். அவரது செயல்பாட்டில் சந்தேகமடைந்த மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தல்லாகுளம் போலீஸார் மாநகராட்சி அலுவலகம் வந்து லலித்போலோட்டியாவை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் லலித்போலோட்டியா, வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் எனத் தெரியவந்தது. அதன்பின் அவரைக் கைது செய்ததாக போலீஸார் கூறினர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியிலும், அதைத் தொடர்ந்தும் அதிகாரிகள் சிலர் விதிமீறி செயல்படுவதாக புகார்கள் எழுகின்றன. இந்நிலையில் பொறியாளரையே மத்திய அதிகாரி என்ற பெயரில் விசாரணை நடத்த முயன்றிருப்பது மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...