Saturday, September 27, 2014
காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் ஆட்டு பட்டியில் புகுந்து ஆடுகளை திருடியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு வேன், மற்றும் ரூ.4¼ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் அடிக்கடி பட்டிகளில் இருந்து ஆடுகள் திருட்டு போவதாக கடந்த 2 மாத காலமாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. காங்கயம் பகுதியில் அழகுகவுண்டன்புதூர் மற்றும் முள்ளிப்புரம் பகுதியில் செலாம்பாளையம் என்ற இடத்திலும் 84 செம்மறி ஆடுகளும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஓலப்பாளையத்தில் 60 ஆடுகளும், என மொத்தம் 144 ஆடுகள் திருட்டு போனதாக வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் உத்தரவின் பேரில், காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.சுருளிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கே.கே.மகாலிங்கம், செல்வத்தங்கம், சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் பி.சாஸ்தாஇந்துசேகரன், அப்சல்அகமது, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமை காவலர்கள் பெரியசாமி, மணிமுத்து, மற்றும் போலீசார் ஜெகதீஷ்பிரபு, செந்தில்குமார், கார்த்தி, நீலமேகம், இளைஞர் காவலர் சங்கிலிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, காங்கயம் அருகே பாப்பிணி வீரசோழபுரம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு வாகனத்துடன் நின்றிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆடுகள் திருடப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம்,கம்பளியம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மகேந்திரன் (29) ஈரோடு முத்தம்பாளையம் ரெட்டபாளி வலசு என்ற பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் பிரகாஷ் (22), ஈரோடு ரங்காம்பாளையம் அன்னை சத்யா நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் துரைசாமி (24), அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் பெரியசாமி (23), கணேசன் என்பவரின் மகன் ராகவேல் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் திருடிய ஆடுகளை விற்பனை செய்துவிட்டதாக கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து ஆடுகளை விற்ற பணம் ரூ.4லட்சத்து 29 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேனும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் கரூர் மாவட்டம் தென்னிலை போன்ற பகுதிகளிலும் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த திருட்டு கும்பலின் தலைவனாக மகேந்திரன் செயல்பட்டுள்ளார். இவர் ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். பகல் நேரத்தில் இவர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆடுகள உள்ள பகுதியை நோட்டம் இடுவது. பின்னர் இரவு நேரத்தில் அந்த ஆடுகள் உள்ள பகுதியில் வேனை நிறுத்தி ஆடுகளை திருடி வேனில் போட்டு சென்று விடுவார்கள். பின்னர் திருடிய ஆடுகளை பழனி பகுதியில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து விடுவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Friday, September 26, 2014
ருப்பூர், செப்.26-
திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குத் தேவையான உள்கட்டமைப்பு, மருத்துவர்கள் வசதி கோரியும்,இங்குள்ள சீர்கேடுகளை களைய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
19 லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும்,நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற வாய்ப்புள்ளது மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையே.ஆனால் இங்கு தேவையான படுக்கை வசதிகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்குத் தேவையான உபகரண வசதி இல்லை.முழு நேர மருந்தகம், ரத்த வங்கி பணியாளர் இல்லை, விபத்துக் காயம், தலைக்காய சிகிச்சை வசதி இல்லை. பிணவறையில் போதிய வசதி இல்லை. இது போதாதென்று மகப்பேறு பிரிவு உள்பட அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் கையூட்டுப் பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் அரசு தலைமை மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும், முறைகேடு,லஞ்சத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக உயர்த்தக் கோரியும் சனியன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி கூறியுள்ளார்.
திருப்பூர், செப்.26-
பெரும்பான்மை மதவாத அரசியலை எதிர்கொள்ள சிறுபான்மை மதவாத அரசியல் துணை செய்யாது. இதனால் பெரும்பான்மை மக்கள் அச்சத்தின் பிடியில் தள்ளப்படுவார்கள். எனவே ஜனநாயக அரசியலின் மூலம்தான் மதவாத அரசியலை முறியடிக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பூர் அரிசிக்கடை வீதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் கே.தங்கவேல் பேசியதாவது:
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு திருப்பூரில் மதவாத சக்திகள் செயல்பாடு அதிகரித்துள்ளன. இவற்றை உழைப்பாளி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிறமதத்தினரின் வழிபாட்டு உரிமையில் தலையிட்டு இந்து மதவெறியர்கள் தகராறு செய்யும்போது, அரசு நிர்வாகம், அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்காமல், சிறுபான்மை மதத்தினரை விட்டுக் கொடுத்து போங்கள் என புத்திமதி சொல்கின்றனர். அரசு நிர்வாகமே இந்து அமைப்புகளுக்கு ஒருதலைப்பட்சமாக சாய்மானமாக நடந்து கொள்கின்றனர்.
ஏதேனும் கோரிக்கை அல்லது பிரச்சனைக்காக கம்யூனிஸ்ட் கட்சியோ, இதர அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் ஏகப்பட்ட கெடுபிடி செய்யும் காவல் துறையினர், இந்து மத அமைப்புகளுக்கு அவர்களே வேண்டிய பாதுகாப்புகளைச் செய்து தருகின்றனர்.
10 சதவிகிதம் முஸ்லீம்கள் ஓட்டுப் பொறுக்குவதற்காக மதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என கம்யூனிஸ்ட்டுகளைச் சொல்லும் இந்து மதவெறியர்கள் 80 சதவிகிதம் இருக்கக்கூடிய இந்துக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான் மதத்தை அரசியலுடன் கலக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கைக்காக அவர்கள் மதத்தைப் பயன்படுத்தவில்லை. மக்களின் மதஉணர்வை பயன்படுத்தி அரசியல் நடத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் மதவாத அரசியல் நடத்துகிறார்கள். அதில் அவர்கள் தற்போது வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். எனவே இதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது உழைப்பாளி மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதாக இருக்கிறது.
இந்து மதவாத அரசியலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு சிறுபான்மை மத அரசியலைச் சில அமைப்புகள் கையில் எடுக்கின்றன. முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என மத அரசியலில் ஈடுபட்டால், ஒரு மத அரசியலை எதிர்க்க மற்றொரு மத அரசியல் என்று போகும்போது அது பெரும்பான்மை மக்களிடம் அச்ச உணர்வைத்தான் ஏற்படுத்தும். எனவே மத அரசியலுக்கு மத அரசியல் மாற்றாகாது. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உழைக்கும் மக்களின் ஜனநாயக அரசியலில் ஈடுபடும்போதுதான் மதவாத அரசியலைத் தடுக்க முடியும். அதற்கான போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்று கே.தங்கவேல் கூறினார்.

நரேந்திர மோடி குறித்து உ.வாசுகி கிண்டல்
திருப்பூர், செப்.26-
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மனோகரா திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல நீண்ட வசனத்தைப் பேசிக் கொண்டிருந்த நரேந்திர மோடி, பிரதமர் ஆன பிறகு எந்த முக்கியப் பிரச்சனையிலும் வாய் திறந்து பேசாமல், மன்மோகன் சிங் போல,மௌன சாமியார் ஆகிவிட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய உ.வாசுகி கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு 370சிறப்பு அந்தஸ்து இருப்பது போல குஜராத், மகாராஷ்டிராவின் சில பிரதேசங்களுக்கும் 371 பிரிவு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. 371 ஏ முதல் ஐ வரை நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், ஆந்திரா,சிக்கிம், மிஜோராம், அருணாசலபிரதேசம், கோவாவுக்கும் சில சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி முதல்வராக இருந்த குஜராத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது பற்றி அவரோ அவர் கட்சியோ வாய் திறந்தார்களா? காஷ்மீர் பிரச்சனையில் மட்டும் இவர்கள் 370 பிரிவை நீக்க வேண்டும் எனப் பேசுவதில் சிறுபான்மை மத எதிர்ப்பு அரசியல் செய்கின்றனர்.
இந்த அரசியல் சட்ட பிரிவு சேர்க்கப்பட்டபோது நேரு அமைச்சரவையில் சியாமா பிரசாத் முகர்ஜி அமைச்சராக இருந்து அவரும் இதை ஏற்றுக் கொண்டார். சில காலம் கழித்து அவரே 370பிரிவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இடையில் என்ன நடந்தது? காஷ்மீர் முதலமைச்சராக இருந்த ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தினார்.நிலக்கிழார்களுக்கு ஒரு பைசா கூட இழப்பீடு தராமல் நிலச்சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டது. அப்போது நிலத்தை இழந்த நிலக்கிழார்கள் இந்துக்களாக இருந்தனர். நிலம் பெற்ற ஏழை விவசாயிகள் இஸ்லாமியர்களாக இருந்தனர். காஷ்மீரில் நிலம் இழந்த நிலப்பிரபு வர்க்கத்தின் பிரதிநிதியாகத்தான் சியாமா பிரசாத் முகர்ஜி பேசினார். உள்ளே இருந்த வர்க்கப் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளிவிட்டு மதரீதியான பிரச்சனையாக, 370 பிரிவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளைப் பார்த்து முன்வைக்கப்படும் கேள்வி, "இந்தியாவில் தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? மக்கள் உங்களை நிராகரித்து விட்டார்கள்"என்கின்றனர். அரசியல் என்பது எம்.எல்ஏ., எம்.பி. வெற்றி பெறுவது மட்டுமல்ல. இந்த நாட்டின் உழைப்பாளி மக்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான போராட்டத்தில், பெண்கள், மாணவர்கள்,இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னே நிற்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக மனோகரா திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் போல் நீண்ட வசனம் பேசிக் கொண்டிருந்த மோடி,பிரதமர் ஆனபிறகு, மன்மோகன் சிங் போல மௌன சாமியாராகிவிட்டார். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தின் மூலம் மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளைத்தான் பாஜக அமல்படுத்துகிறது. இது ஐ.மு.கூட்டணி 3ன் ஆட்சி என்று காங்கிரஸ் காரர்களே சொல்கிறார்கள். இடதுசாரிகள் சொல்வதும் அதுவேதான்.பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசும், பாஜகவும் ஒரே கொள்கையைத்தான் அமல்படுத்துகிறார்கள். இவர்களுக்கு வித்தியாசம் கிடையாது. இவர்களது பொருளாதாரக் கொள்கை நாட்டுக்கு நல்லதல்ல.
கல்வியில் காவிமயம், பொருளாதாரத்தில் கார்ப்பரேட் மயம் என பாஜக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் வாய் திறந்து பேசக்கூடியவராக தமிழகத்தை ஆளும் முதல்வர் ஜெயலலிதா இல்லை. இந்த நிலையில் மக்களைத் திரட்டும் வேலையில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு உ.வாசுகி பேசினார்.
இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா அரசு முயற்சிப்பது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாகும், இது புத்திசாலித்தனமானதல்ல என்று
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கௌரவத் தலைவர்
பேராசிரியர் அருணன் கூறினார்.
திருப்பூரில் வியாழக்கிழமை
இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மையும், 370வது சட்டப் பிரிவும் என்ற
சிறப்புக் கருத்தர
ம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில்
அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு குறித்து பேராசிரியர் அருணன் பேசியதாவது: இந்தியாவின் சௌந்தர்ய பூமியாக காஷ்மீர் இருந்தது. ஆனால் இப்போது காஷ்மீர் சிக்கலில் சிக்கி நிற்கிறது.காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது கிடையாது. அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு, காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்திருக்கும் முக்கியப் பிரிவாக இருக்கிறது.அதை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சொல்வது இந்திய ஒற்றுமை மீது நம்பிக்கை இல்லாமல் அதை பிளக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகும். இப்படிச் செய்வதன் மூலம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்.ஒரே இந்தியா எனச் சொல்லி தாங்கள்தான் ஒற்றுமைக்காக நிற்பதாக பாஜவினர் பம்மாத்து செய்கின்றனர். அவர்களது நிலைபாடு புத்திசாலித்தனமானதல்ல. 370வது பிரிவை நீக்கினால் காஷ்மீர் பிரச்சனையை சர்வதேசப் பிரச்சையாக பாகிஸ்தான் மாற்றிவிடும். பாகிஸ்தானும், பிரிவினைவாதிகளும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
370வது சட்டப் பிரிவால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலம் வாங்க முடியாது என்று கூறுகின்றனர். இன்றைக்கு பாஜகவினர் அதானிக்கும், அம்பானிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விற்றுவிட வேண்டும் என துடிக்கின்றனர். காஷ்மீரில் மட்டுமல்ல வேறு சில மாநிலங்களிலும் இது போன்ற உரிமை வேறு சில அரசியல் சட்டப் பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
370வது பிரிவை நீக்க வேண்டும் என்பதற்காக பெண் உரிமை, பெண் சொத்துரிமை போன்ற பலபிரச்சனைகளில் வம்பாக முடிச்சுப் போட்டு பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33சதவிகிதம் இட ஒதுக்கீடு பற்றி மூச்சுக்கூட விடாமல் காஷ்மீரில் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு பெண் உரிமை பிரச்சனையில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் காஷ்மீர் சட்டமன்றத்திலே இப்போதே குரல் கொடுக்கலாமே?
370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது வரலாற்று கண்ணோட்டத்திலும், மாநில சுயாட்சிக் கண்ணோட்டத்திலும் தவறானது. மக்கள் ஒற்றுமை ஓங்க வேண்டும், தேச ஒற்றுமை வளர வேண்டும் என விரும்புவோர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு செவி சாய்க்க வேண்டும் என்றார் பேராசிரியர அருணன்.
மதசார்பின்மை அவசியம்
"இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை" என்ற தலைப்பில்மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின
ர்
மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நம் நாட்டில் மதச்சார்பின்மை என்பதை பலரும் தவறாக அர்த்தம் கொள்கின்றனர். எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்று செயல்படுகின்றனர். ஆனால் மதச்சார்பின்மை என்றால் எல்லா மதங்களில் இருந்தும் அரசும், அரசியலும் விலகி இருப்பது என்றுதான் அர்த்தம். இன்று
செவ்வாய் கிரகத்துக்கு
மங்கள்யா
ன்
விண்கலம் அனுப்பும் சாதனையை இந்திய விஞ்ஞானிகள் படைத்திருக்கிறார்கள்.அந்த இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் மதநம்பிக்கை உடையவர். அவர் மதநம்பிக்கை கொண்டிருப்பது பிரச்சனை இல்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் விண்கலம் செலுத்தும்போது, அவர் திருப்பதி கோயிலுக்குச் சென்று அந்த ராக்கெட் மாதிரியை வைத்து வழிபாடு நடத்திவிட்டு வருவது சரியல்ல. இஸ்லாமிய, கிறிஸ்துவ,புத்த, சீக்கிய மத நம்பிக்கை இருப்பவர்கள் இதுபோல் செய்தால் சரியாக இருக்குமா? அரசு செலவில் அரசுத் துறையில் செயல்படுத்தும் ஒரு திட்டத்தில் யாருடைய மதநம்பிக்கையையும் பயன்படுத்தக் கூடாது.
இன்று மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மதச்சார்பின்மை மிகப்பெரிய கேள்விக் குறியாகி நிற்கிறது. மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட்டால்தான் நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க முடியும் என்றார் மதுக்கூர் ராமலிங்கம்.
தத்துவப் போராட்டம்
அறிமுக உரை ஆற்றிய மார்க்சிஸ்ட் ஆசிரியர்குழு உறுப்பினர் பேராசிரியர் சந்திரா கூறியதாவது: திராவிட இயக்கம் இன்றைக்கு தத்துவார்த்தரீதியாக தோல்வி அடைந்து செயல்பட முடியாத நிலையில் போய் நிற்கிறது. சாதிய, மதவாத எதிர்ப்புப் போராட்டத்தைத் தத்துவார்த்தரீதியாக நடத்தக்கூடிய வல்லமை கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி திகழ்கிறது.
ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் செயல்படும் பாஜக ஆட்சி கல்வியை இந்தியமயமாக்க வேண்டும் எனச் சொல்லி இந்து மயம் ஆக்க முயற்சிக்கிறது. கல்வித்துறையில் அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான கல்வியைக் கொடுக்க முயல்கின்றனர். மிக நுணுக்கமாக சின்னச்சின்ன விசயங்களில் இந்துத்துவ சக்திகள் தங்கள் கருத்தைத் திணிக்கின்றனர்.
இதற்கு எதிராக சரியான நிலைபாட்டை சுயமாக கற்றுத் தெரிந்து செயல்பட மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவின்போது ஆபாச நடனம்
ஆடியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் அரசு வக்கீல் கந்தசாமி
தெரிவித்தார்.
மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய் துள்ளார். அதில் கூறப் பட்டுள்ளதாவது:–
கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் வடஇந்திய நடிகர்–நடிகைகள் கலந்து கொண்டு ஆபாச நடனம் ஆடினர். அவர்களது செயல்பாடு பார்த்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இது கலாச்சாரத்திற்கு எதிரானது.
இதுகுறித்து நடவடிக்கை கேட்டு போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் கந்தசாமி ஆஜராகி, மனுதாரர் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருபாகரன் மனு மீதான விசாரணையை முடித்து வைத்தார்.

மதுரையில் இன்று சட்டக் கல்லூரி மாணவி நந்தினி பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந் தார்.
மதுரை சட்டக்கல்லூரியின் 2–ம் ஆண்டு மாணவி நந்தினி. இவர் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறார். இதற்காக பலமுறை கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று சட்டக்கல்லூரி வளாகத்தில் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பூரண மது விலக்கை வருகிற 2–ந் தேதிக்குள் அமுல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வரும் மாணவி நந்தினியை சக மாணவ–மாணவிகள் பாராட்டினர்.

உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட் டும். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் காணப்படும். குடும்பத்துடன் வருபவர்கள் தவிர கள்ளக்காதல் ஜோடிகளின் புகலிடமாகவும் இது திகழ்கிறது. மாலை 5 மணிக்கு மேல் அருவிக்கு செல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வனத்துறையினர் 2 பேர் கீழே இறங்கி வந்தனர். அப்போது அகஸ்தியர் அருவிக்கு செல்லும் மெயின் சாலையில் நீண்ட நேரமாக ஒரு பைக் நிற்பதை கவனித்தனர். அதன் அருகில் யாரும் இல்லாததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. யாராவது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பைக்கை இங்கு விட்டுச் சென்றனரா என்ற பதைபதைப்புடன் அவர்கள் பழைய பாதை படிக்கட்டு வழியாக இறங்கிச் சென்று தேடினர்.
அப்போது ஒரு மறைவிடத்தி லிருந்து �சிணுங்கல்� சத்தம் கேட்கவே அதிர்ச்சியுடன் சென்று பார்த்தனர். அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இளம்பெண்ணுடன் கட்டிப்பிடித்தபடி சிரித்து பேசிக்கொண்டிருந் தார். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் திடுக்கிட்டு எழுந்து வந்தனர். அவர்களிடம் வனத்துறை ஊழியர்கள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
உடனே அந்த நபர், தான் போலீஸ்காரர் என்றும் விருதுநகரில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியதோடு அதற்கான அடையாள அட்டையையும் எடுத்து காண்பித்தார். இதையடுத்து அந்த ஜோடியை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போலீஸ்காரருடன் வந்த பெண் கள்ளக்காதலியாக இருக்கக்கூடும் என்றும் விருதுநகரில் இருந்து அவரை பைக்கில் அழைத்து வந்திருக்ககூடும் என்றும் தெரிகிறது
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...