Wednesday, October 08, 2014
கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சாணை பிடிக்கும் கல் விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். நஷ்டஈடு வழங்க கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த கவுண்டச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம். அவருடைய மகன் ஆதிசங்கர் (வயது 27). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் எந்திரங்கள் பிரிவில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு இவர் கார் உதிரிபாகங்களை கல்லில் சாணை பிடித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கல் உடைந்து ஆதிசங்கர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆதிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் இறந்த ஆதிசங்கரின் உறவினர்கள் 100-க் கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ரவுண்டானாவில் ஒன்று கூடினார்கள். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆதிசங்கரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இறந்த ஆதிசங்கரின் குடும்பத்துக்கு தொழிற்சாலை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு போலீசார், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

ஈரோடு எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் காலி நிலத்தில் திடீரென்று நீரூற்று தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடி விழுந்ததால் இந்த நீரூற்று தோன்றியதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.ஈரோடு மாநகராட்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்டது எஸ்.எஸ்.பி. நகர். இங்கு ராசாம்பாளையம் ரோட்டில் ஒரு ஓடைப்பள்ளம் உள்ளது. இந்த பகுதியையொட்டி ஸ்டாலின் வீதி என்ற குடியிருப்பு பகுதி இருக்கிறது. வீடுகளுக்கு இடையே உள்ள காலி நிலத்தில் முள்செடிகள் வளர்ந்து காடுபோல் கிடக்கிறது.நேற்று முன்தினம் இரவு ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் எதிரே உள்ள காலி நிலத்தில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆங்காங்கே தண்ணீர் குமிழ்விட்டு ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது. பொங்கி வழியும் தண்ணீர் அருகில் உள்ள ஓடை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தாலும் காலி இடத்தில் தேங்கி இருந்த தண்ணீர் கொஞ்சமும் குறையாமல் பெருகிக்கொண்டே இருந்தது.இதுபற்றி அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இந்த தகவல் பரவியதால் அந்த பகுதியை சேர்ந்த பலரும் அங்கு வந்து பார்த்தனர். ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அங்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குமிழ் குமிழாக நீரூற்று தோன்றி இருந்தது.இடி விழுந்ததால் தான் இப்படி நீரூற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் பரவியது. இதனால் பலரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இடி விழுந்ததால்தான் இந்த திடீர் நீரூற்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினார்கள். ஆனால் குடியிருப்பு பகுதியில் இடிவிழுந்ததா? இது தாழ்வான பகுதி என்பதால் உயர்ந்த பகுதியில் உள்ள வயல்வெளி தண்ணீர் ஊற்றெடுத்து உள்ளதா? என்பது பற்றி ஈரோடு தாசில்தார் அன்னபூரணி, துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு சோதனை செய்து வருகிறார்கள்.

ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஆக்கியில் இடம் பெற்ற வீரரை முதல்–மந்திரி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற்றது. இதில் இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த ஆக்கி அணியின் கோல் கீப்பராக கொச்சி பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜேஷ் (29) பணியாற்றினார்.
இதையடுத்து கேரள முதல்– மந்திரி உம்மன்சாண்டி, ஸ்ரீஜேஷ் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன், பென்னிபெகன் எம்.எல்.ஏ., உடன் இருந்தார்.
இது குறித்து முதல்–மந்திரி உம்மன்சாண்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜேஷின் பங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து உள்ளது. அவரை கேரள மக்கள் சார்பாக பாராட்டுகிறேன். இவரை போன்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கேரள அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். கேரள மாநில விளையாட்டு வீரர்களுக்கு இவர் முன் உதாரணமாக இருந்து வருகிறார். இவர், கேரள மாநில ஆக்கி அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் டாக்டர் போல உடையணிந்து நகைகள் திருடியவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 10–4–2014 அன்று பிரசவத்துக்காக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர் போல் உடையணிந்த ஒரு ஆசாமி அந்த பெண்ணின் அறைக்கு வந்து, அங்கு இருந்தவர்களை வெளியே அனுப்பினான். பின்னர், ஊசிபோடும் போல் நடித்து அந்த பெண்ணிடம் நகைகள் அணியக்கூடாது என்று கூறினான்.
அதை நம்பிய அந்த பெண் தான் அணிந்து இருந்த 15 பவுன் நகையை கழற்றி வைத்தபோது, அதை அந்த ஆசாமி திருடி சென்றுவிட்டான். இதுபோல் மாநகர பகுதியில் உள்ள 3 மருத்துவமனைகளில் சம்பவம் நடந்தது. எனவே போலீசார் அந்த மருத்துவமனைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அந்த ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மும்பையில் பதுங்கி இருந்த அந்த நபரை கடந்த 25–7–2014 அன்று கைது செய்தனர். விசாரணையில், அவர் மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த ராஜேஷ் அர்ஜூன் பாராஸ்கலே (வயது 28) என்பதும், அவருடைய தந்தை அர்ஜூன் பாராஸ்கலே டாக்டர் என்பதும் தெரியவந்தது.
மேலும் தமிழகத்தில் பல இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதன்பேரில் போலீசார், ராஜேசை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதற்கிடையே கோவை மாநகர பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் ராஜேஷ் திருடியதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதனுக்கு தனிப் படை போலீசார் பரிந்துரை செய்தனர். அதைத்தொடர்ந்து ராஜேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார்.
தற்போது ராஜேஷ் அர்ஜூன் பாராஸ்கலே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை தனிப்படை போலீசார் சிறைத்துறை அதி காரிகளிடம் வழங்கினார்கள். இந்த ஆண்டில் கோவை மாநகரில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டதாக இதுவரை 37 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை வெரைட்டி ஹால் ரோட்டை சேர்ந்த வடமாநில வியாபாரிகள் ராம்சிங் உள்பட பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், பணத்தையும் பறித்ததாக ஜிம் ஹக்கீம் உள்பட 15 பேர்மீது வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்களில் சிலர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ஜிம் ஹக்கீம் உள்பட சிலர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளீதரன், 20–ந்தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவாவுடன் இணைந்து புது படத்தில் நடிப்பேன் என்று நடிகர் விஷால் கூறினார்.விஷால், சுருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி இயக்கியுள்ளார். தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகிறது.
இதையொட்டி விஷால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–பூஜை படம் தமிழ், தெலுங்கில் தீபாவளிக்கு வருகிறது. ஏற்கனவே நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு படங்களை தயாரித்தேன். பூஜை படத்தையும் நானே தயாரித்து இருக்கிறேன். குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக வந்துள்ளது. சத்யராஜும் இப்படத்தில் நடித்துள்ளார். அவரோடு நடிப்பது பெருமையாக இருந்தது.
சுருதிஹாசனுக்கு நல்ல கேரக்டர். ரொம்ப அழகாக தெரிவார். நல்ல காதலும் படத்தில் இருக்கிறது.ஹரியுடன் தாமிரபரணி படத்தில் இருந்தேன். இப்போது மீண்டும் சேர்ந்தது இருக்கிறோம். அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை நகரை பின்னணியாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். கதை கோவையில் துவங்கி பாட்னாவில் முடியும். அரிவாள், துப்பாக்கியெல்லாம் தூக்கியுள்ளேன். தயாரிப்பாளரானதும் தூக்கம் குறைந்து விட்டது. நான் தயாரித்த படங்களில் பூஜை முக்கிய படமாக இருக்கும்.
325 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறோம்.இப்படத்தை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கும் ஆம்பள படத்தில் நடிக்கிறேன். பிறகு சுசீந்திரன் படத்தில் நடிக்க உள்ளேன். அப்படத்தில் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். லட்சுமிமேனனை ஜோடியாக்கும் படி டைரக்டர்களை நிர்ப்பந்திக்கவில்லை.மேலும் விஷால் கூறும் போது ‘‘நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட சம்பளம் வாங்காமல் புது படமொன்றில் நடிக்க இருக்கிறேன். இதில் என்னுடன் ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட மேலும் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். யாரும் சம்பளம் வாங்க மாட்டார்கள். இலவசமாகவே நடிக்கிறார்கள். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு துவங்கும். டைரக்டர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை’’ என்றார்.சுருதி ஹாசன் பேசும் போது, பூஜை நல்ல படம். இதில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. புது அனுபவம் கிடைத்தது திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று நான் சொன்னதாக வெளி வந்த செய்தியில் உண்மை இல்லை. நான் அப்படி சொல்லவே இல்லை என்றார்.சத்யராஜ் கூறும் போது நான் நடிக்க வந்து 36 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது குணசித்திர வேடங்களில் வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் நல்ல கேரக்டர்கள் அமைகிறது. பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன் என்றார்.
டைரக்டர் ஹரி, ஒளிப்பதிவாளர் ப்ரியன், தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோரும் பேசினார்கள்.

ஜெயலலிதா மீதான ரூ.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கர்நாடகா சிறப்புக் கோர்ட்டு கடந்த 27-ந்தேதி 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித் தது. இதையடுத்து முதல்- அமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டார். அதே ஜெயிலில் ஜெயலலிதாவுடன் சேர்த்து தண்டனை வழங்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதா கரன் ஆகியோரும் அடைக்கப் பட்டுள்ளனர். இன்றுடன் இவர்கள் 11 வது நாளாக சிறையில் உள்ளனர்.
27-ந்தேதி ஜெயிலில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவால் மறுநாள் 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இயலவில்லை. அதோடு தசரா விழாவுக்காக கர்நாடகா ஐகோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் ஜாமீன் மனு மீதான விசார ணையை உடனே நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 29-தேதி ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு, மறுநாள் 30-ந்தேதி கர்நாடகா ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அவர் 6-ந்தேதி ஐகோர்ட்டு பெஞ்சில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றார்.
இதையடுத்து ஜெயலலிதா வின் ஜாமீன் மனு மீது விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 1-ந்தேதி அந்த மனுவை விசாரித்த விடுமுறை கால கோர்ட்டு நீதிபதி, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை ரெகுலர் பெஞ்சில் நடத்தப்படுவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறி 7-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.அதன்படி இன்று ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.ஜெயலலிதா வக்கீல் ராம் ஜெத் மலானி வாதாடுகையில்
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. இதுதொடர்பாக லில்லி தாமஸ், ரவி பாட்டீல் ஆகியோரது வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்கலாம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு ஜாமீன் அளித்தால் அவர் எங்கும் தப்பியோடி விட மாட்டார். அவர் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பவர் ஆவார். கோர்ட் உத்தரவிட்டபோதெல்லாம் அவர் நேரில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும். ஜெயலலிதாவிடம் உள்ள நகைகள் 1971ம் ஆண்டு அவரது பெற்றோர்களிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்தவையாகும். அவரது குடும்ப நகை. ஆனால் இந்த வாதத்தை தனி நீதிமன்றம் கண்டு கொள்ளவே இல்லை என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட்டார். இதையடுத்து பவானி சிங்கின் வாதம் தொடங்கியது.
பவானி சிங் வாதிடுகையில், ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர். எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அப்படி ஜாமீன் தந்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தனது முதல்வர் பதவிக்காலத்தின்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிய ஜெயலலிதா பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். இதுதொடர்பாக முறையான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு அவை நிரூபிக்கவும் பட்டுள்ளன. எனவே இவரை தற்போது ஜாமீனில் விடுவித்தால் அவர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க முயற்சிப்பார். அதிகாரத்தையும் அவர் பயன்படுத்துவார். எனவே ஜாமீன் தரக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட ராம்ஜேத்மலானி, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 17 ஆண்டுகளாக நடந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா ஒரு முறை கூட தவறான வழியில் நடந்ததில்லை. மேலும் அவர் இந்த காலகட்டத்தில் 2 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். இது அரசியல் சூழ்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்காகும் என்றார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் வாதிட்டனர்.
ராம்ஜெத்மலானியின் 2 வது கட்ட வாதம் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ராம்ஜெத்மலானி தனது 2-வது கட்ட வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சுதாகரன் திருமணச் செலவு குறித்த வாதத்தை முன்வைத்தார். "ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவில்லை. அதை அவர் ஏற்கவில்லை. மாறாக பெண் வீட்டார்தான் செலவு செய்தனர், அனைத்து செலவையும் அவர்கள்தான் ஏற்றனர்" என்று அவர் வாதிட்டார்.
ஜெயலலிதாவுக்கு சாதகமான சட்டப் பிரிவு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனைதான் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தாராளமாக ஜாமீன் தரலாம் என்று ராம்ஜெத்மலானி சட்ட நுணுக்கங்களையும், பிற தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டி வாதாடினார். மேலும் சுப்ரீ்ம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளையும் அவர் விரிவாக எடுத்து வைத்து வாதாடினார்.
இதன் காரணமாக காலையில் எதிர்ப்பு தெரிவித்த பவானி சிங் பிற்பகலில் தனது நிலையை மாற்றிக் கொண்டார்.4 தரப்பு வாதமும் முடிந்தபின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் சட்டத்திற்கு உட்பட்டு ஜெயலலிதவை விடுவிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கலாம் என்று பவானி சிங் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஜெயல்லிதா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்ட்டார் எனவும் தெரிவிக்கபட்டது முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின இதை தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். சென்னை முதல் செங்கோட்டை வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டங்களில் குதித்தனர். ஆனால் சில நிமிடங்களில் பெங்களூர் நீதி மன்றம் ஜெயலலிதா ஜாமீன் மனுவை நிராகரித்ததாக தகவல் வந்தது இதை தொடர்ந்து தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது அதில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கபட்டதாக கூறபட்டு உள்ளது.

பொங்கலூர் அருகே உள்ள அவினாசிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அவினாசிபாளையத்தில் பேக்கரி மற்றும் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா(வயது 25). இவர் நேற்று மாலை கடையில் இருந்துள்ளார். அப்போது கடைக்கு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர் டீ கேட்டுள்ளார். பிரியா டீ போட்டுக்கொண்டிருந்தபோது அந்த மர்ம நபர் திடீரென பிரியாவின் பின்னால் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். அதிர்ச்சியடைந்த பிரியா திருடன், திருடன் என சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து அவினாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் குருந்தங்குடியை சேர்ந்த மணிமுத்து என்பவரது மகன் அருளாளன்(35) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அருளாளன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களையும் வழிபாடுகளையும் நடத்தி வருகின்றனர். அதன்படி உடுமலையை அடுத்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அடிவாரப்பகுதியில் மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் தலைமையில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ மணிவாசகம், வி.என்.வெங்கடேஷ், ரகுபதி, பெதப்பம்பட்டி வாசுதேவன், ராசப்பன், ராஜேந்திரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலையாக வேண்டி, ஊத்துக்குளி கயித்தமலையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு மற்றும் யாகம் செய்தனர். இதில் ஒன்றிய கழக செயலாளர் சி.டி.ரவிசந்திரன், பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ரங்கசாமி, நகர செயலாளர் சின்னசாமி மற்றும் அய்யாசாமி, கழக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

.jpg)