Wednesday, October 15, 2014
Monday, October 13, 2014
திருப்பூர் : தீபாவளி கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்காக, திருப்பூர் நகரில் "பார்க்கிங்' மற்றும் போக்குவரத்தை மாற்ற போலீசார் திட்டமிட்டுள்ளனர்; வரும் 17 முதல், போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில் துணிகள், நகை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வாங்க, சுற்றுப்பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு பொதுமக்கள் வரத்துவங்கி உள்ளனர். விடுமுறை நாளான நேற்று, திருப்பூரில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. துணி கடைகள், நகை கடைகள் அதிகமுள்ள புது மார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காமராஜர் ரோடு பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. டூவீலர், கார் உள்ளிட்டவை ரோட்டில் நிறுத்தப்பட்டதாலும்; புது மார்க்கெட் வீதியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்து வரும் நாட்களில், இது மேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க, புது மார்க்கெட் ரோடு வழியாக செல்லும் பஸ்களை, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் வழித்தடம் வழியாக அனுப்ப வேண்டும். காமராஜர் ரோட்டில் இருந்து புது மார்க்கெட் ரோடு செல்லும் வழித்தடங்கள் அனைத்திலும், வாகனங்கள் செல்ல தடை விதித்து, பொதுமக்கள் நடமாடுவதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். காமராஜர் ரோடு, மங்கலம் ரோடு, நடராஜா தியேட்டர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் விசாலமான இடங்களை தேர்வு செய்து, அங்கு வாகனங்கள் நிறுத்த அறிவுறுத்த வேண்டும். குமரன் ரோடு, அவிநாசி ரோடுகளில் "பார்க்கிங்' முறைப்படுத்துவதுடன், கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியில் நியமிக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, "தீபாவளியை ஒட்டி, போக்குவரத்து மாற்றம் மற்றும் "பார்க்கிங்' ஏரியா ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புது மார்க்கெட் வழியாக செல்லும் பஸ்களின் பாதை, தற்காலிகமாக மாற்றப்படும். புது மார்க்கெட் வீதி மற்றும் பிரிவு ரோடுகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும்; வரும் 17 முதல், போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரும். மக்கள் நெரிசலை கண்காணித்து ஒழுங்குபடுத்த, கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்படுவர்,' என்றனர்
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,.25 வது வார்டு கிளைக்கழகம் சார்பில் .மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழிகாட்டுதலின் பேரில் கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில்,மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் பி.என்.ரோட்டில் உள்ள ராமையா காலனி ஆறுகொம்பை வீதியில் உள்ள ஸ்ரீ வீர பத்திரகாளியம்மன் கோவில் சாமிக்கு 1000 லிட்டர் பால் அபிஷோகம், 1008 எலுமிச்சை கனி மாலை அணிவித்தும்,புடவைசத்தியும், பூமாலை அணிவித்தும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள், கொட்டுரவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமராவதி ஆற்றிலிருந்து கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீரை திறந்து விடாததால் காய்ந்து போன பயிர்களுடன் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விசாயிகள் மனு.
அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தில் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் உள்ள அமராவதி ஆற்று நீரை நம்பி ஆயிரக்கணக்கான பாசன ஏக்கர் நிலங்கள் உள்ளடக்கிய விவசாயிகள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகாலமாக வறட்சியினால் அமராவதி ஆறு வறண்டது, இருந்தும் கடந்த ஆண்டும், நடப்பாண்டிலும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர் மட்டம் சராரியாக சுமார் 80 அடி அளவு கொள்ளவு எட்டிய போதும், அமராவதி ஆற்றுநீரை நம்பியுள்ள கடமடை பகுதியான கரூர் விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதோடு ஆற்றில் தண்ணீர் திறந்துவிடவில்லை. இதை கண்டித்து கடந்த மாதம் சின்னதாராபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போரட்டம் நடத்தியதை அடுத்து இரு நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட்டது. இதை நம்பி கரூர் விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அமராவதி குறையவே பயிர்கள் கருக தொடங்கியது. தொடர்ந்து கரூர் பகுதிக்கு தேவையான தண்ணீர் திறக்க அமராவதி ஆற்று பாசன பொறியாளர்கள் புறக்கணித்து வருதாலும். திருப்பூர் மக்கள் மட்டும் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடுவதாலும் இதனைகண்டித்து இன்று கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 700 க்கும் மேற்பட்டடோர் ஒன்று திரண்டு காய்ந்து போன பயிர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இது குறித்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாய சங்க செயலாளர் ராமலிங்கம் கூறும் போது, திருப்பூர் மாவட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கரூர் விவசாயிகளுக்கு தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். இதனால் 11 பழைய ஆயகட்டு கால்வாய்களை சார்ந்த விவசாயிகள் இன்று தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்களுக்கு உரிய நீரை வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.
விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடந்தபோது, மெரினா கடற்கரையிலும் கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழுந்தது. இதனால் மெரினா வெறிச்சோடி காணப்பட்டது.
வங்க கடலில் நிலை கொண்ட ஹூட் ஹூட் புயல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு இடையே மையம் கொண்டிருந்தது. இந்தப்புயல் நேற்று பகல் விசாகப்பட்டினம் அருகே பலத்த காற்றுடன் கரையை கடந்தது.
இதனையொட்டி தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், ஆந்திராவில் புயல் கரையை கடக்க உள்ளது என்ற தகவல் காரணமாக நேற்று பகல் பொழுதில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.
காலை வேளையில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது.
மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் பகல் நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் சாலை முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. போலீசார் மட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேப்பியர் பாலம் அருகில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி அலுவலகத்திலும் கடற்படை வீரர்களும், மீட்பு படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
கடற்சீற்றம் காரணமாக ராட்சத அலைகளும் எழுந்ததால், கடற்கரைக்கு வந்த ஒரு சில இளைஞர்கள் செல்போன் மூலம் ராட்சத அலைகளை படம் எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கடலில் தண்ணீர் இருக்கும் பகுதிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வழக்கமாக பகல் பொழுதில் மெரினா கடற்கரையில் அதிகம் காணப்படும் காதல் ஜோடிகளையும் காணமுடியவில்லை. புயல் கரையை கடந்துவிட்டது என்று அறிவிப்பு வந்த உடன் பொதுமக்கள் வழக்கம் போல் மெரினா கடற்கரையில் குளித்து ஆரவாரம் செய்தனர்.
சென்னையில் கந்து வட்டி கும்பலை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். நேற்று கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் கந்து வட்டிக்கொடுமையில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களை, சிறையில் தள்ளி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கந்து வட்டி வசூலித்து கோடிகளை அள்ளி, கொடுமை புரிந்து வந்த 9 பேர் கடந்த 2 மாதங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் சட்டமும் இவர்கள் மீது பாய்கிறது.
இருந்தாலும் சென்னையில் கந்து வட்டிக்காரர்களின் அட்டூழியம் தொடர்கிறது. இதனால் கந்து வட்டி கொடுமை புரிபவர்களை தொடர்ந்து வேட்டையாடி பிடிக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் செயல்படும் தனிப்படை போலீசார், கந்து வட்டி வசூலித்த கணவன்-மனைவி இருவரை கைது செய்தனர்
நேற்று கைதான கல்யாணராமன், அவரது மனைவி தமிழ்செல்வி என்ற செல்வி ஆகியோர், சென்னை பள்ளிக்கரணை, துலுக்காணத்தம்மன் கோவில், பிரதான சாலையில் வசிக்கிறார்கள். கல்யாணராமன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தவர். தமிழ்செல்வி, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.
நாளடைவில், இவர்கள் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு நடத்தி அதன்மூலம் சம்பாதித்த பணத்தை கந்து வட்டிக்கு கடன் கொடுத்து வந்தனர். 10 சதவீதம் வட்டி வசூலித்து வந்துள்ளனர்.
பள்ளிக்கரணை தனம் நகரைச் சேர்ந்த கற்பகம் என்பவர், இவர்களிடம் தனது குடும்ப செலவுக்காக ரூ.2.95 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு ரூ.6.89 லட்சம் வட்டியாக திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், மேலும் ரூ.3.55 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன கற்பகம், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டார். புகார் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவின் கந்து வட்டி தனிப்படை போலீசார், வழக்குப்பதிவு செய்து, கல்யாணராமனையும், அவரது மனைவி தமிழ்செல்வியையும் கைது செய்து சிறையில் தள்ளி விட்டனர்.
கந்து வட்டி கொடுமையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் முஸ்தபாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராக்து பிரசாத். பண்ணை தொழிலாளி இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 19 வயதான மூத்த மகளை. அருகில் உள்ள பிஷன்பூர் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திவரும் ரஞ்சித் குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மூத்தமகள் தனது கணவனுடன் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். 2 நாட்களுக்கு முன் பிரசாத் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். ஒரு அறையில் 4 குழந்தைகளும் மற்றொரு அறையில் மூத்தமகளும் அவரது கணவரும் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவில் எழுந்த பிராசாத் மருமகன் ரஞ்சித் குமாரை வீட்டுக்கு வெளியே போகுமாறு கூறினார். பின்னர் தனது மூத்த மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவிலை இத்னால் ஆவேசம் அடைந்த பிரசாத் அருகில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து மகளை 20 இடங்களில் கொடூரமாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அந்த பெண்
அதே இடத்தில் பிணமானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மீனாபூர் போலீசார் விரைந்துவந்து ராக்து பிரசாத்தை கைது செய்ததனர்.அவர் மீது கொலைவழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது. தற்போது அவர ஹூடி ராம் போஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க நடிகைகள் பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தனர்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 15 நாட்களாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், நடிகர்–நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியன், சம்பத், ஜெயபால் மற்றும் நடிகைகள் சரஸ்வதி, குயிலி, பாத்திமா பாபு, வாசுகி மற்றும் எம்.பி.க்கள் அசோக்குமார், இளவரசன், ஹரி, அருண்மொழித்தேவன் உள்பட ஏராளமானவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.ஜாமீன் வழக்கில் ஆஜராகும் வக்கீல்கள் குழுவை தவிர சிறையில் ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்தித்து பேசவில்லை. வழக்கம்போல் இன்று வந்தவர்களும் சிறை வாசலில் சிறிது நேரம் இருந்துவிட்டு திரும்பி சென்றனர். அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே சிறை கட்டிடத்தின் முன் பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் தொண்டர்கள் ஒசரோடு சந்திப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஒசரோடு சந்திப்பில் இரும்பு தடுப்பு வேலி போடப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...