Tuesday, November 04, 2014

Monday, November 03, 2014

On Monday, November 03, 2014 by Unknown in    
உடுமலைபேட்டை குடிமங்கலம் ஒன்றியம் கள்ளபாளையத்தை  சேர்ந்த
 அ. தி. மு. க . தொண்டர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி சட்டபேரவை துனண சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார் .



  திருப்பூர்   மாவட்டம் குடிமங்கலம்  ஒன்றியம் கள்ளபாளையத்தை  சேர்ந்த மணிகண்டன். அ. தி. மு. க பொதுசெயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு  ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுஇறந்தார் .மணிகண்டன் குடும்பத்திற்கு அ. தி. மு. க சார்பில் ரூ 3 லட்சம்  நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மணிகண்டனின் மனைவி பானுமதியிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது .உடுமலை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி
 வ .ஜெயராமன்  வழங்கினார்.உடன் அரசு கேபிள் டி. வி K . ராதாகிருஷ்ணன்
S.இன்பதுரை சிறுபான்மை நலப்பிரிவு மாநிலதுனண செயலாளர்
 ,M அப்துல்ஹமீது.அண்ணா தொழிர்சங்கபேரவை பொருளாளர் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C மகேந்திரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடுமலை நகர்மன்றதுணைதலைவர் M கண்ணாயிரம், மாவட்ட ஊராட்சி தலைவர் M. சண்முகம் ,கழக நிர்வாகிகள் வசந்தாமணி ,நடராஜன்,வாசுதேவன்,அம்மாபேரவை திருப்பூர் புறநகர் மாவட்டம் ,வசுந்தராதேவி ,வக்கீல் வெங்கடசாலபதி ,பெதவை பாண்டியன்,
பல்லடம் Vice பழனிச்சாமி ,அன்வர் ராஜா,A நாகராஜன்,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுந்தரசாமி, மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர் 









                                            
On Monday, November 03, 2014 by Unknown in    
உடுமலைபேட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு விழா. கோட்டாட்சியர் சாதனைகுறள்   தலைமையில் நடைபெற்றது .





உடுமலைபேட்டை வட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உடுமலைபேட்டை வட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி01.11.2014 அன்று உடுமலைபேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது .போட்டியில் தேர்வு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது .இந்நிகழ்ச்சியில்  வட்டாட்சியர் சைபுதீன்,கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் முத்துராமன் ,தேர்தல் துணை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் ,விழா ஏற்பாட்டினை வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம் செய்திருந்தார் .
On Monday, November 03, 2014 by Unknown in ,    
2016 தேர்தலுக்கு கூட்டணி அமைக்க வாசனுடன் ரகசியமாக பேச்சு நடத்தும் கட்சிகள்
காங்கிரஸ் கட்சியை உடைத்து ஜி.கே.வாசன் உருவாக்கும் புதிய கட்சி, தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கு அச்சாரமிடும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது காங்கிரசில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாசன் பக்கம் இருப்பார்கள் என்று கருதப்படுவதால், வாசனை தங்கள் பக்கம் இழுக்க இப்போதே கட்சிகள் போட்டா போட்டியில் இறங்கி விட்டன.
புதிய கட்சிக்கு தலைமை ஏற்று இருக்கும் ஜி.கே.வாசனுக்கு எல்லா கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். மூப்பனார் போலவே வாசனும் மற்ற கட்சியினருடன் நன்கு பழகியுள்ளார். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும், யாரையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதே இல்லை.
இந்த பண்பு வாசனுக்கு இப்போது கை கொடுத்துள்ளது. வாசனை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டால் காங்கிரஸ் ஓட்டுக்களை பெற முடியும் என்று பெரும்பாலான கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு அவர்கள் கடந்த 2 நாட்களாக வாசனுடன் ரகசியமாக பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் முதல் நபராக வாசனுடன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் வாசனிடம், உறுதியான முடிவு எடுத்து உத்வேகத்துடன் செயல்படுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
அதுபோல பா.ம.க., ம.தி.மு.க. தரப்பில் இருந்தும் வாசனுக்கு வாழ்த்துக்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட நட்பு ரீதியாக வாசனை தொடர்பு கொண்டு புதிய கட்சி குறித்து பேசி வாழ்த்தியதோடு சில அறிவுரைகளையும் கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாரதீய ஜனதா தேசிய தலைவர்களும் ஜி.கே.வாசனின் புதிய கட்சி தொடக்கத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் வாசனுடன் தொடர்பில் இருப்பதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் வாசனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக உள்ளன. 2016–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி ஏற்படுத்த வாசனின் வருகை உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வட்டாரத்திலும் வாசனை அரவணைக்க சில தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் வாசன் அ.தி.மு.க. கூட்டணி அல்லது தி.மு.க. கூட்டணியில் சேருவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
பா.ஜ.க., தே.மு.தி.க.வின் கூட்டணியில் அவர் இடம் பெறக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. வாசனின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மூலம் அவர் எந்த கூட்டணி பக்கம் செல்வார் என்பது தெரிந்து விடும்.
On Monday, November 03, 2014 by Unknown in ,    
அரசு அனுமதித்தபின் கிரானைட் முறைகேடு விசாரணை தொடங்கப்படும்: கலெக்டர் தகவல்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவித் தொகையை வழங்குவதற்காக கலெக்டர் சுப்பிரமணியம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்றார்.
அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். கொட்டாம்பட்டி அருகேயுள்ள மணப்பச்சேரியை சேர்ந்த விவசாயி ராசுவுக்கு சொந்தமான மாடு மின்னல் தாக்கி இறந்தது. இதற்கு ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும், மழையால் வீடுகள் சேதம் அடைந்த ஆறுமுகம், ஆரம்மாள் ஆகியோருக்கு தலா ரூ.2500 காசோலையும் கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் விசாரணை குறித்து கலெக்டர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, தமிழக அரசு அனுமதி கிடைத்ததும் சகாயம் விசாரணை தொடங்கும் என்றார்.
இந்த நிலையில் கலெக்டர் சுப்பிரமணியன் கிரானைட் வழக்குகள் குறித்து செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை கிழக்கு வட்டம் திருமோகூர் கிராமங்களில் உரிய அனுமதியின்றி பட்டா இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்துண்டுகளை அரசு உடமையாக்கும் வகையில் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் அதன் பங்குதாரர்களான பி.பழனிச்சாமி (வயது63), ப.செல்வி (44), சுரேஷ்குமார் உள்பட 8 பேர் மீது மொத்தம் 6 வழக்குகளும், மேலூர் வட்டம் திருவாதவூர் கீழையூர் மற்றும் நாவினிப்பட்டி கிராமத்தில் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பி.கே.செல்வராஜ், ராம்ஸ் எக்ஸ்போர்ட், பி.ஆர்.பி. கிரானைட், பி.ஆர்.பி.எக்ஸ்போர்ட், ஸ்ரீமீனாட்சி எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனத்தை சேர்ந்த தெய்வேந்திரன், பழனிச்சாமி, கார்த்திகேயன், வெங்கட்ராமன் ஆகியோர் மீது 14 வழக்குகள் உள்பட மொத்தம் 20 வழக்குகள் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
On Monday, November 03, 2014 by Unknown in ,    
திருப்பரங்குன்றத்தில் டீசலுக்காக வரிசையில் நின்ற அரசு பஸ்கள்: பொதுமக்கள் அவதி
திருமங்கலம் அரசு பஸ் டிப்போவில் சுமார் 105 பஸ்கள் இயங்குகின்றன. இவற்றின் மூலமே அருகில் உள்ள கிராமப்பகுதிகளான கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பள்ளிகள், அலுவலகங்களுக்கு திருமங்கலம் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் அரசு பஸ் டிப்போவில் டீசல் இல்லை என்பதால் நேற்று காலை முதலே திருப்பரங்குன்றம் பணிமனையில் டீசல் பிடிக்க அரசு பஸ்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பல கிராமப்புற பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த இடங்களுக்கு காலை நேரம் பஸ்கள் செல்லாததால் கிராமப்புறத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவியர் பெரும் அவதியுற்றனர். அவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இது போன்ற டீசல் இல்லாத நிலை அரசு பேருந்து பணிமனைகளில் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
On Monday, November 03, 2014 by Unknown in ,    
போலீஸ் குடும்பத்தினர் குற்றச்சாட்டு ரேஷன் பொருட்கள்                                                                                                                              போலீஸாரின் குடும்பத்தினருக்கு, மானிய விலையில் வழங்கும் ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை,'' என்று போலீஸார் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும், 1.20 லட்சம் போலீஸார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், தனியே ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, ரேஷன் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ரேஷனில் சரியாக பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, கரூரில் பணிபுரியும் போலீஸார் கூறியதாவது:
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, சரிவர கிடைப்பதில்லை. உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை எப்போதாவது தான் தருகின்றனர். எங்களுக்கு மாதக் கடையில், 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை தான் ரேஷன் பொருட்கள் வழங்குகின்றனர். இது குறித்து ரேஷன் கடைக்காரரிடம் கேட்டால், போலீஸார் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பொருட்கள், இன்னும் வந்து சேரவில்லை, என்று கூறுகின்றனர். கோதுமை சுத்தமாக கொடுப்பதே இல்லை.
இதனால், போலீஸாரின் குடும்பத்தினர் பரிதவிப்பில் உள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அதிகாரி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இது குறித்து கரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விக்னேஷ்வரன் கூறியதாவது:
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதன் பின், மற்றவர்களுக்கு வழங்கி வருகிறோம். மாதக்கடைசியில் பொருட்கள் வழங்கப்படுவது, என்று போலீஸார் கூறுவது போல் இல்லை. ஸ்டாக் இருந்தால், அனைவருக்கும் கொடுக்கப்படும். போலீஸாருக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு இருந்தால், சம்மந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் மூலம் தெரிவிக்கலாம். உடன் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்றால், அந்த கடைகளை குறிப்பிட்டு, புகார் வந்தால் ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜோசி நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸார் குடும்பத்தினர் தெரிவித்தனர். 
On Monday, November 03, 2014 by Unknown in ,    
வாக்காளர் பெயர் சேர்ப்பு கரூர் கலெக்டர் அதிரடி                                                                                                           கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை பார்வையிட்ட கலெக்டர் ஜெயந்தி, கம்ப்யூட்டர் மூலம், புதிய வாக்காளரை பதிவு செய்தார்.
கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்மங்கலம் தாலுக்கா மண்மங்கலம் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி, கரூர் தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை, கலெக்டர் ஜெயந்தி பார்வையிட்டார். கம்ப்யூட்டர் மூலம் தேர்தல் கமிஷன் இணைய தளத்தில் (ஆன்லைன்) பதிவு செய்யப்படுவதையும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் பதிவுகளை சரியான முறையிலும், விரைவாக செய்யுமாறு உத்தரவிட்டார். தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில், புதிய வாக்காளர் ஒருவரின் விண்ணப்பதை பெற்று, கலெக்டர் ஜெயந்தி, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தார். கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், கரூர் தாசில்தார் மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.
On Monday, November 03, 2014 by Unknown in ,    
அரசு மருத்துவமனையில் கழிவறை இடிப்பு : நோயாளிகளின் உறவினர்கள் தவிப்பு                            கரூர் அரசு மருத்துவமனையில், ஆண்களுக்கான கழிப்பறை இடிக்கப்பட்டதால், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனை நகரின் மையப்பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து, சிகிச்சை பெற்று செல்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் வெளி நோயாளியாக வருபவர்கள் பயன்படுத்த பிரேத பரிசோதனை அருகே ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே கழிவறை இருந்தது. மருத்துவமனை போலீஸாருக்கு என்று தனியே கழிவறை இருந்தது. கரூர் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் பலர் கூடுவதால் அருகே அமைந்துள்ள கழிவறை பயன்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென, இரண்டு நாட்களுக்கு முன் ஆண்கள் கழிவறை மற்றும் போலீஸார் பயன்படுத்தும் கழிவறை திடீரென இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நோயாளிகளை பார்க்க வருபவர்களும், வெளி நோயாளிகளும் கழிவறை இன்றி பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து, கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் கூறியதாவது:
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், கரூர் அரசு மருத்துவமனை வந்து செல்கின்றனர். ஆண்களுக்கு, என இருந்த பொதுக்கழிப்பிடத்தை திடீரென இடித்து விட்டனர். இதனால், பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் பலர் கழிவறை இல்லாததால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவறை இடிக்கும் முன், மாற்று ஏற்பாடாக ஆண்கள் கழிவறைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். உடனடியாக, அதே இடத்தில் மீண்டும் கழிவறை கட்டித்தரப்பட வேண்டும். இதற்கு உடனடியாக, கரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்னை குறித்து கரூர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
கரூர் அரசு மருத்துவமனையில், இடிக்கப்பட்ட ஆண்கள் கழிவறை இடத்தில் யோகா மற்றும் இயற்கை வாழ்க்கை முறை சிகிச்சை அளிக்க கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்காக, தனியே டாக்டர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்குள் இப்பணிகள் முடிவடையும். பிரேத பரிசோதனைக்கு வரும் உறவினர்கள் தங்குவதற்கும் சேர்த்து, மொத்தம், 30 லட்சம் செலவில் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கரூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான பொதுக்கழிப்பிடம் இல்லாததால் பெரிதும் பரிதவித்து வருகின்றனர். இதற்கு தற்காலிகமாக, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், என்பதே அனைவரின் கோரிக்கை.