இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி ஆசிரியர்
பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக சிறப்பு தேர்வு
நடத்தினார்கள். இப்படி தேர்வு நடத்தி தேர்வான ஆயிரக்கணக்கான மாற்றுத்
திறனாளிகளுக்கு இன்னும் பணி வழங்காமல் அரசு காலம் கடத்துவதாக கூறி
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Tuesday, December 09, 2014
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
தாங்கள் படித்து பட்டம் வாங்கி வேறு எந்த வேலைக்கும்
செல்ல முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே அரசு உடனே வேலை வழங்க வேண்டும்.
இல்லையேல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்றனர்.

அப்போது நம்மிடம் பேசிய அவர்கள், நீதிமன்றமே 2007
முதல் 2011 வரை காலியான ஆயிரத்து நூறு பணியிடங்களையும், அதற்கு பின்
ஏற்பட்ட காலியிடங்களையும் நிரப்ப சொல்லி உத்தரவிட்டும் கல்வித்துறை இந்த
உத்தரவை கண்டு கொள்ளாமல் உள்ளது.

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஹரிணியின் சடலம் அருகே இருந்த மோட்டார்
சைக்கிளையும் மீட்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து
வந்தவர் ஹரிணி. இந்நிலையில், அய்யர்பங்களா அருகே எரிக்கப்பட்ட நிலையில்
கல்லூரி மாணவி ஹரிணியின் சடலம் மீட்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கை:
’’பகவத்
கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள்
நிறைவடைந்துவிட்டதாகவும் மைய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து
சரிந்துவரும் பொருளாதார நிலையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்காமல், நூறுநாள்
வேலைத் திட்டத்தையும் பலவீனப்படுத்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில்
அடித்துள்ள பாஜக அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் இந்தித்
திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என ஒவ்வொருநாளும் ஒரு புதுப் பிரச்சனையைக்
கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது.
பாபர்
மசூதியை இடித்து நாடெங்கும் கலவரம் ஏற்படக் காரணமானவர்கள் இப்போது உலக
அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகால் குறித்தும் பிரச்சனை கிளப்ப
ஆரம்பித்திருக்கிறார்கள். பழங்காலக் கோயில் ஒன்றின் மீது தாஜ்மகால்
கட்டப்பட்டிருப்பதாக இப்போது உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லட்சுமிகாந்த்
பாஜ்பாய் பேசியிருக்கிறார்.
வகுப்புவாத
வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அந்தச் சந்தடியில் தனியாருக்கு
எல்லாவற்றையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு
உலை வைப்பதுதான் பாஜக அரசின் திட்டமோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.
”பகவத்
கீதை என்பது ஒரு நற்செய்தி நூலல்ல. அதுவொரு சமய நூலோ அல்லது தத்துவ நூலோ
அல்ல. தத்துவ அடிப்படைகளை முன்வைத்து மதத்தைத் தாங்கிப்பிடிக்கும்
நூல்தான் அது.” என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய
சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் எதிர்ப் புரட்சியை ஆதரிக்கும்
நூலாகவே அதை அவர் பார்த்தார். அதைத் தேசியப் புனித நூலாக அறிவிப்போம்
என்பதை சனநாயக சக்திகள் ஒருபோதும் ஏற்க முடியாது. மக்களைப் பிளவுபடுத்தும்
அந்த முயற்சியை பாஜக அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
நாமக்கல்
மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு அருந்ததியர் தெருவை
சேர்ந்தவர் மாதவி (வயது-14) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர்,
அருகிலுள்ள திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து
வருகிறார்.
இதே
பகுதியை சேர்ந்தவர் கவிமகன் (வயது-20). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர்கள்
இரண்டு பேருக்கும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்ற முறையில் பழக்கம்
ஏற்பட்டுள்ளது.
இந்த
நிலையில் மாணவி மாதவி கடந்த சில தினங்களாக, கவிமகனிடம் பேசவில்லை.
இதையடுத்து அவர் பள்ளிக்கு சென்ற மாணவியிடம் வாக்குவாதம் செய்து கையை
பிடித்து இழுத்து அடித்து, பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது.
சேலம்
மாவட்டம், ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன்
சக்திவேல் (வயது-17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில்
வேலை செய்து வருகிறார். இதேபோன்று மேட்டூர் தாலுகா அரங்கனூர் பகுதியை
சேர்ந்த கூத்தன் மகள் சந்திரா (வயது-22). இவரும் அதே நூல் மில்லில் வேலை
பார்த்து வருகிறார். இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம்
ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இதை
தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நூல் மில்லிற்கு வேலைக்கு சென்ற
சக்திவேலை காணவில்லை. இதையறிந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
வேலை செய்யும் நூல் மில்லில் விசாரித்தனர். அப்போது சந்திரா என்ற பெண்ணும்
இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை என தெரிய வந்தது.
உடனே
அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது சேலத்தை அடுத்த
சித்தர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் கடந்த இரண்டு
நாட்களாக சந்திராவின் வீட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. உறவினர்கள்
தேடுவதை அறிந்த காதலன் மற்றும் காதலி இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில்
தஞ்சம் அடைந்தனர்.
இதை
அறிந்த இரு வீட்டின் உறவினர்களும் காவல் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு
ஏற்பட்டது. காதலர்களிடம் பயிற்சி டி.எஸ்.பி. கீதாஞ்சலி விசாரித்தார்.
அப்போது காதலன் சக்திவேலுக்கு இன்னும் திருமண வயதை கடக்கவில்லை என அறிவுரை
கூறி இருவரையும் அவரவர் வீட்டிற்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.
17
வயது சிறுவனை 22 வயது பெண் திருமணம் செய்து கொண்டு ஓமலூர் காவல்
நிலையத்திற்கு வந்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சக்திவேலின்
காதலி சந்திராவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவர் கணவனுடன்
வாழாமல் தாய் வீட்டில் இருப்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈரோடு
மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர்
அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை,
மகன்கள் மார்ட்டின், சில்வர் ஸ்டார் ஆகிய இருவருக்கும், சமீபத்தில்,
பாகபிரிவினை செய்து வைத்துள்ளார்.
இதில்
உடன்பட்டு ஏற்படாததால், மூத்தமகன் மார்ட்டின், அடிக்கடி தந்தையிடம்
கூடுதல் சொத்து கொடுக்கவேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
அத்தோடு,
சரிவர வேலைக்கு போகாமல், சும்மா சுற்றிக்கொண்டு, மது அருந்திவிட்டு
உள்ளூரில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல, நேற்று, அளவுக்கு
அதிகமாக மதுகுடித்த மார்ட்டின், எனக்கு மட்டும் சொத்து குறைவாக கொடுத்தாய்
என்று சொல்லி பிரச்னை செய்து, அன்புரோஸை தாக்க முயன்றார்.
இதனால்,
ஆத்திரமடைந்த அன்புரோஸ், தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் மகன்
மார்டினை சுட்டுள்ளார். குறி தவறி சுட்டதில், மார்டினின் வயிற்று
பகுதியில், பால்ரஸ் குண்டுகள் பாய்ந்ததால், அவர் ரத்த காயத்துடன், உயிர்
தப்பினார். அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக, அந்தியூர்
தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக, அந்தியூர்
போலீஸார் வழக்குபதிவு செய்து, அன்புரோஸை கைது செய்து, அவர் வைத்திருந்த
நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
மதுரை அருகே சத்திரப்பட்டியில் விவசாயி வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை
புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி நகை, பணத்தை
கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி பகுதியில் குடியிருப்பவர் செந்தில்குமார் (34). விவசாயி. இவரது மனைவி சரிதா (30). இவர்கள் குழந்தைகள், தந்தையுடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவரது வீட்டுக்கு திங்கள்கிழமை அதிகாலை ஹெல்மெட் மற்றும் துணியால் முகத்தை மூடிய நிலையில் வந்த 4 மர்மநபர்கள், வெளியிலிருந்த இரும்புக் கேட்டையும், உள்புறம் இருந்த மரக்கதவின் பூட்டையும் வெல்டிங் மூலம் சேதப்படுத்தி வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்கு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் கண்விழித்த செந்தில்குமார் கொள்ளையரைக் கண்டு திடுக்கிட்டு, குழந்தையை வாங்க முயற்சித்தார். உடனே கொள்ளையரில் ஒருவர் கத்தியால் செந்தில்குமாரின் வலது மணிக்கட்டில் வெட்டியுள்ளார். அதன்பின் நகைகளை கழற்றித்தருமாறு கொள்ளையர் மிரட்டியதால், சரிதா தனது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார். குழந்தைகளிடமிருந்தும் நாலரைப்பவுன் நகைகளை கொள்ளையர் கழற்றியுள்ளனர். அதன்பின் பீரோ மற்றும் செந்தில்குமாரிடமிருந்த ரூ. 13,000ம், செல்போன்கள், ஏ.டி.எம்.கார்டுகளையும் பறித்துக்கொண்டு சென்றனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த, மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்ட நிலையில், 2 பேர் வெளியே நின்றிருக்கலாம் எனவும், கார் அல்லது இருசக்கர வாகனங்களில் வந்திருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு டி.கல்லுப்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டிலும் மர்மக்கும்பல் காரில் வந்து கொள்ளையடித்தனர். அதேபோல இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து சத்திரபட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
துப்பாக்கியை காட்டி...
செந்தில்குமார் வீட்டிலிருந்து கொள்ளையர்கள் வெளியேறும்போது வாசலில் நின்ற காரையும் எடுத்துச்செல்ல முயன்றனர். அப்போது கார் நண்பரிடம் இரவல் வாங்கியது என செந்தில்குமார் கூறியதால் விட்டுச் சென்றுள்ளனர். வந்திருந்த கொள்ளையர்களில் ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அதை வைத்து சுட்டு விடுவதாக மிரட்டியதாகவும் விசாரணையில் செந்தில்குமார் தெரிவித்தார்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நாயர். இவரது மனைவி கனகாம்பாள் (வயது 51). 20
வருடங்களுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள திருவாதவூருக்கு குடிவந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒரு தனியார் டாக்டரிடம், கனகாம்பாள் கம்பவுண்டராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.
இந்த அனுபவத்தை வைத்து அவர், திருவாதவூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இதுகுறித்து மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. மங்களேஸ்வரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேலூர் தனிப்படை சப்–இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கலாசேகர் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கனகாம்பாள், போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கனகாம்பாள், சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரிகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘‘லிங்கா’’ படத்துக்கு தடை கேட்டு மதுரை
ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிபதி வழக்கை
ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தர விட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம், வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், ரமேஷ் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் மனு செய்திருந்தனர். அதில், ரஜினிகாந்த், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் முரண்பாடுகள் உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த், பட தயாரிப்பாளர் வெங்கடேஷ், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வருகிற 10–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...