Sunday, December 14, 2014
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து
ஐ.ஏ.எஸ். அதிகரி சகாயம் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி சகாயம் கடந்த 3–ந்தேதி முதல் மதுரையில் விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
கிரானைட் தொழில் முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் இதுவரை 160–க்கும் மேற்பட்டோர் புகார் மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.
மேலும் வருகிற 15, 16 ஆகிய தேதிகளிலும் பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம் என்று சகாயம் தெரிவித்துள்ளார்.
வருகிற 15–ந்தேதி மதுரை வரும் சகாயம் 2–ம் கட்ட விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட சகாயம் முடிவு செய்துள்ளனர். இது கிரானைட் குவாரி அதிபர்கள் மத்தியில் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி அதிபர்கள் 86 பேருக்கு சம்மன் அனுப்பி அபராதம் விதிப்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். குவாரி அதிபர்கள் மற்றும் அவரது வக்கீல்கள் கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூலம் பட்டா நிலங்கள் கீழவளவு, இ.மலம்பட்டி பகுதியில் பட்டா நிலங்களை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 வழக்குகள் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் 89 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது மேலும் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பி. கிரானைட் நிர்வாகம் மீது மட்டும் இதுவரை 65 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள்
அன்னபூரணி (வயது21). இவருக்கும் மதுரை நரசிங்கம் பட்டியை சேர்ந்த பழனிவேல்
என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அதன்பின்னர் பழனிவேல், வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அன்னபூரணி திருமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து ‘பி.எட்’ முதலாம் ஆண்டும் படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அன்னபூரணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், விஷம் குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு அன்னபூரணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ் மின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அன்னபூரணிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது.
அதன்பின்னர் பழனிவேல், வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அன்னபூரணி திருமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து ‘பி.எட்’ முதலாம் ஆண்டும் படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அன்னபூரணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், விஷம் குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு அன்னபூரணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ் மின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அன்னபூரணிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது.
Saturday, December 13, 2014
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் ,கல்லூரிகள் மட்டும் அல்லாது மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிற இடமாக ரேஸ்கோர்ஸ் மைதானம் விளங்குகிறது .ஆனால் இங்கு விளையாட்டில் பங்கேற்க வரும் வீரர் மற்றும் வீராங்கனை களுக்கு அடிப்படை வசதிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது .குடிநீரை கூட வெளியில் விலைக்கு வாங்கி சமாளித்துக் கொண்டாலும் கழிப்பறையின் நிலையை காண சகிக்கவில்லை .கழிப்பறைக்குள் கால் வைக்க முடியாதபடி கழிவுகள் பரவிக் கிடக்கிறது .கழிப்பறையை பயன்படுத்தும் ஆண்களுக்கு உபயோகப்படுத்த ஒரு சொட்டு நீர் கூட இல்லாததால் பெரும்பாலான ஆண்கள் மைதானத்தின் கேலரி பின்புறத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் .ஆண்கள் நிலை இப்படி என்றால் பெண்கள் நிலையோ இன்னும் பரிதாபமாக உள்ளது .ஆனால் இதனை சரி செய்யாமல் இங்கு நடைபெறுகிற நிகழ்சிகளில் எத்தனையோ முறை கலந்து கொண்டுள்ள அமைச்சர்களும் ,நாடாளுமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற உறுப்பினர்கள் பல கோடி ரூபாய் விளையாட்டு துறைக்கு ஒதுக்கி உள்ளதாக புராணம் பாடுவதை ஏற்க முடியுமா ?
Friday, December 12, 2014
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும், தேவையான தொலைத்தொடர்பு கருவிகள், உபகரணங்களை பிஎஸ்என்எல்க்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட இருபது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் பிரதான தொலைபேசி நிலைய வாயிலில் வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் எஸ்.என்.இ.ஏ. நிர்வாகி பழனிவேல்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் என்எப்டிஇ செயலாளர் ஜெகநாதன், எப்என்டிஓ மாநிலத் துணைச் செயலாளர் தனபதி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், எஸ்என்இஏ முன்னாள் நிர்வாகி பா.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் அனைத்து சங்கத்தைச் சேர்ந்தோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக என்எப்டிஇ சார்பில் ஆண்டனி மரியபிரகாஷ் நன்றி கூறினார்.
அந்நிய முதலீட்டை 49 சதமாக உயர்த்த மோடி அரசு முடிவு: திருப்பூரில் எல்ஐசி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதமாக அதிகரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதைக் கண்டித்து அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காப்பீட்டுத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அடுத்த வாரம் இம்மசோதாவை தாக்கல் செய்யவும் மோடி அரசு தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் அதற்கு உடந்தையாக உள்ளது. எனவே இதை எதிர்த்து, காப்பீட்டுத் துறையைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளைச் செயலாளர் கே.ரகுநாதன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஊழியர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கண்டனம் முழங்கினர். மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த முடிவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி காப்பீட்டு கழக முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கே.ஜெயராமன், பி.சி.நரசிம்மன் ஆகியோர் உரையாற்றினர்.
பின்னல் புக் டிரஸ்ட் - பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றன. திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக இது தடம் பதித்துள்ளது. இதன்படி 12வது ஆண்டாக 2015 சனவரி 30 முதல் பிப்ரவரி 8ம் தேதி முடிய பத்து நாட்கள் இந்த புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டிசென்டரில் இந்த புத்தகக் கண்காட்சிக்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ட்ரிபிள்எக்ஸ் குப்புசாமி தலைமை வகித்தார். பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்றார். புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார் அகமது ஆகியோர் விளக்கினர்.
இதைத் தொடர்ந்து புதிய வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்குழுத் தலைவர் - ஆர்.ஏ.ஜெயபால், செயலாளர் - செ.முத்துக்கண்ணன், பொருளாளர் - அ.நிசார் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 29 பேர் துணைத் தலைவர்களாகவும், 32 பேர் உதவிச் செயலாளர்களாகவும், இவர்களுடன் 132 பேர் கொண்ட வரவேற்புக்குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த விழாவில் முந்தைய புத்தகக் கண்காட்சிகளின் தலைவர்களாக செயல்பட்ட அரிமா எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத் அலி, பிரிண்டிங் குமாரசாமி மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்கம் தலைவர் டாக்டர் ஆ.முருகநாதன், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்விநிறுவனங்களின் தாளாளர் தங்கராஜ், யுனிவர்சல் கல்விநிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக செ.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.
Thursday, December 11, 2014
On Thursday, December 11, 2014 by Unknown in Tiruppur
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மானுப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்.
நலத்திட்ட உதவிகள் இலவச தையல் இயந்திரம்,பசுமை வீடுகள் திட்டம்,வேளாண்மைத்துறை ,தோட்டகலை துறை ,குடும்ப அட்டை ,நலிந்தோர் உதவித்தொகை ,பட்டா மாறுதல் ,இயற்கை மரணம் ,மகன் மகள் திருமண உதவித்தொகை ,கல்வி உதவித்தொகை,உழவர் பாதுகாப்பு திட்டம்,ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டு மனைப்பட்டா ,இந்திராகாந்தி நினைவு திட்டம் மூலம் பயனடைந்தோர் ,ஒரு முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப்பட்டா, மாவட்ட மறுவாழ்வு மூலம் பயன் ஆகியநலத்திட்டங்கள் 747 பயனாளிகளுக்கு ஒரு கோடியே மூன்று லட்சத்து தொன்னூற்றி மூன்றாயிரம் ரூபாய்க்கு நலத்திட்டங்கள் வழக்கப்பட்டது.நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ,கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் ,சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ ஜெயராமன் ,சட்டமன்ற உறுப்பினர் திருசண்முகவேலு,ஊராட்சித்தலைவர்கள், மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் வட்டாட்சியர் சைபுதீன் நன்றி கூறினார் .
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

