Thursday, September 22, 2016
திருப்பூர்: திருப்பூரில் இயங்கும் சாய, சலவை ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
அனுமதிபெறாமல் இயங்குவது, சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் நிறுவனங்களை கண்டறிந்து, "சீல்' வைப்பது, மின் இணைப்பை துண்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
பறக்கும்படை பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையிலான மாசுகட்டுப் பாடு வாரிய அதிகாரிகள், நேற்று முன்தினம், தொடர் ஆய்வு நடத்தினர். லட்சுமி நகர் பகுதியில், வாடகை கட்டடத்தில், அடுத்தடுத்து இரண்டு, பட்டன், ஜிப்களுக்கு சாயமேற்றும் நிறுவனங்கள் இயங்கின; அனுமதி பொறாமல் இயங்கிய இந்நிறுவனங்கள், பிளாஸ்டிக் டிரம் பயன்படுத்தி, பட்டன், ஜிப், லேஸ் ஆகியவற்றுக்கு சாயமேற்றி, கழிவுநீரை அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டது தெரியவந்தது. இந்த நிறுவனங்களுக்கும், அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
தொட்டிய மண்ணரையில் வேலுசாமி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில், 50 கிலோ கொள்ளளவு உள்ள "விஞ்ச்' மெஷின் வைத்து, "சேம்பிள் டையிங்' இயக்கியதால், இந்த நிறுவனத்துக்கும் "சீல்'வைக்கப்பட்டது.
திருப்பூர்: தண்ணீர் தேடி வந்த புள்ளி மான், தெரு நாய்கள் கடித்து இறந்தது. உயிருக்கு போராடிய நிலையில், மற்றொரு மான் சுற்றி வருகிறது.
அவிநாசி அருகே கோதபாளையம், வண்ணாற்றங்கரை ஓடை ஆகிய பகுதிகளில், நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள் வசிக்கின்றன. பருவ மழை பொய்த்ததால், குளம், ஓடை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. உணவு, நீர் தேவைக்காக, அங்குள்ள புள்ளி மான்கள் வழி தவறி வெளியே வருகின்றன.
மூன்று நாட்களுக்கு முன், கோதபாளையம் வஞ்சிபாளையம் ரோட்டில், ஒன்றரை வயதுடைய பெண் மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. வண்ணாற்றங்கரை ஓடை வழியாக வந்த, ஒன்றரை வயது பெண் மான், வழி தவறி, நேற்று முன்தினம் இரவு திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம், சொர்ணபுரி ரிச் லேன்ட் பகுதிக்குள் வந்துள்ளது.
அங்கிருந்த தெரு நாய்கள் மானை துரத்தி, கடித்து குதறியுள்ளன. பரிதாபமாக இறந்த மானை, வனத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனை செய்து, ஓடை பகுதியில் புதைத்தனர்.
அதேபோல், வஞ்சிபாளையம் பகுதியில், ஒன்றரை வயது ஆண் மான் ஒன்று, நாய்கள் கடித்து குதறியதில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடிய நிலையில் சுற்றி வருகிறது.
எனவே, தண்ணீர் பற்றாக்குறையை போக்க, போர்வெல் அமைத்து, அங்குள்ள தொட்டிகளில் நீர் விட்டால், மான்கள் வெளியேறுவது தடுக்கப்படும். இதற்கான நடவடிக்கையை, வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர்: திருப்பூரில், ஏலச்சீட்டு நடத்தி, லட்சக்கணக்கில் பணம் தராமல் தலைமறைவானவர் குறித்து, "டிபாசிட்'தாரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கொங்கு மெயின் ரோடு, மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர், மாநகர போலீஸ் கமிஷனரகத்தில், மத்திய குற்றப் பிரிவு உதவி கமிஷனரிடம், நேற்று புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியுள்ளதாவது:
கொங்கு மெயின் ரோடு, மூர்த்தி நகரில், கணேஷ்ராம் என்பவர், ஸ்ரீபாலாஜி சிட் பண்ட்ஸ் என்ற சீட்டு நிறுவனம் நடத்தினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அவரிடம், திருப்பூரை சேர்ந்த பலரும், 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, பல குரூப்புகளில் ஏலச் சீட்டு சேர்ந்து, பணம் செலுத்தினோம்.
சீட்டு முதிர்வடைந்த பின்னும், தொகையை தரவில்லை. திடீரென, அவர் வீடு மற்றும் அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவரது சொந்த ஊரிலும் இல்லை. அவரது மனைவி, பதில் அளிக்காமல் எங்களை விரட்டினார். நாங்கள், 12 பேர் 20 லட்சம் ரூபாயை, பறிகொடுத்துள்ளோம். தலைமறைவாக உள்ள கணேஷ்ராமை கண்டு பிடித்து, பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் புதிய பஸ்களை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மண்டலத்தில் 5 புதிய பஸ்கள் நேற்றுகாலை முதல் இயக்கத்துக்கு வந்தன. அதன்படி திருப்பூர்–தேனி வழித்தடத்தில் 2 பஸ்களும், கோவை–பழனி வழித்தடத்தில் 2 பஸ்களும், திருப்பூர்–திண்டுக்கல் வழித்தடத்தில் ஒரு பஸ்சும் என்று 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. தொடக்க நிகழ்ச்சியில், திருப்பூர் மேயர் விசாலாட்சி, எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், பரமசிவம், அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் சேனாபதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

தாராபுரம்தாராபுரம் பஸ் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது பெண் குழந்தை, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.1½ வயது பெண் குழந்தை
தாராபுரம் பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சுமார் 1½ வயதுள்ள பெண் குழந்தை ஒன்று நடைபாதையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த அந்த குழந்தை, சற்று நேரத்திற்கு பிறகு கண்விழித்ததும் ‘‘அம்மா... அம்மா’’ என்று அழுது கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது.ஆதரவற்ற நிலையில் அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை பஸ் நிலையத்தில் இருந்த கடைக்காரர்கள் தூக்கி வைத்துகொண்டனர். பிறகு குழந்தையின் பெற்றோர் அருகே எங்காவது இருக்கிறார்களா? என்று தேடி பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தையைத்தேடி யாரும் வராததால், தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் நேற்றுகாலை பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு, குழந்தை பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியைச்சேர்ந்த பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து குழந்தையை பார்த்துச்சென்றனர். யாருக்கும் குழந்தை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.குழந்தை அழகாக இருந்ததால் ஒரு சிலர் வளர்க்க தங்களிடம் குழந்தையை கொடுக்கும்படி போலீசாரிடம் கேட்டனர். குழந்தையை தரமறுத்த போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சைல்டு லைன் குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றிற்கு தகவல் கொடுத்தனர்.குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு
அதனைத்தொடர்ந்து சைல்டு லைன் ஊழியர் வளர்மதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ராஜசேகர் ஆகியோர் தாராபுரம் வந்தனர். போலீசார் முறைப்படி குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திருப்பூரில் உள்ள குழந்தைகள் நலக்குழுவிடம் (கோர்ட்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் பஸ் நிலையத்தில் 1½ வயது பெண் குழந்தையை பெற்றோர் விட்டுச்சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

உடுமலைஉடுமலையில் நகராட்சி சுகாதார வளாகத்தை அதிகாரிகள் பூட்டியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புகார்கள்
உடுமலை நகராட்சி 11–வது வார்டுக்கு உட்பட்ட பை–பாஸ் ரோட்டில் உடுமலை நகராட்சி ஒருங்கிணைந்த சுகாதார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார வளாகம் உள்ளது. இங்கு கழிப்பிடம் மற்றும் குளியலறை உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை நகராட்சியின் அனுமதி பெற்று மகளிர் சுய உதவிக்குழு பராமரித்து வருகிறது.நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொது கழிப்பிடத்தை பராமரிப்பு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கழிப்பிடம், குளியலறை ஆகியவற்றை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொது மக்களிடம் இருந்து நகராட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.சாலை மறியல்
இதனைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நேற்று மதியம் சுகாதார வளாகத்திற்கு வந்தனர். சுகாதார வளாகத்தை பராமரிப்பு மேற்கொள்ள மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அனுமதியளித்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, சுகாதார வளாகத்தை நேற்றுகாலை 10 மணி முதல் நகராட்சி திருப்பி எடுத்துக்கொள்கிறது என்ற அறிவிப்பை சுகாதார வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் ஒட்டினர். பின்னர் சுகாதார வளாகத்தின் கதவை பூட்டினர். இந்த தகவல் கிடைத்ததும் ஆவேசம் அடைந்த இந்த வார்டுக்கு உட்பட்ட பழனி சாலை அருகில் வசிக்கும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.அவர்கள் சுகாதார வளாகத்தின் முன் பை–பாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் நகராட்சி நகர்நல அதிகாரி அருண், நகரமைப்பு அதிகாரி பாஸ்கரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் எங்களுக்கு கழிப்பிட வசதி தேவை. அதனால் சுகாதார வளாகத்தை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது தி.மு.க.வை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர்கள் 4 பேர் அங்கிருந்தனர். சாலை மறியலால் பை–பாஸ் ரோடு, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன.போக்குவரத்து பாதிப்பு
இதன் பின்னர் நகராட்சி அதிகாரிகள் சுகாதார வளாக பூட்டை திறந்து விட்டனர். இதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு விட்டு பொதுமக்கள் சுகாதார வளாக பகுதிக்கு சென்றனர். பின்னர் சுகாதார வளாகத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என சுய உதவிக்குழு பெண்களிடம் நகராட்சி அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் பகுதியை சேர்ந்தவர்களிடம் வசூலிப்பதில்லை என்றும், வெளியாட்கள் வந்தால் மட்டுமே அவர்களிடம் சுகாதார வளாகத்தை பராமரிப்பதற்காக கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தினர்.அப்போது அந்த வழியாக வந்த பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் சுகாதார வளாகத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
Wednesday, September 21, 2016

அவினாசி,அவினாசியில் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மனு கொடுத்தனர்
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயர் கோவில்காலனியை சேர்ந்த 40–க்கு மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:–ராயர் கோவில் காலனியில் 50 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி தவறாமல் செலுத்தி வருகிறோம்.இந்தநிலையில் எங்கள் பகுதியில் குடியிருந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் உங்கள் எல்லோருக்கும் இடத்தை பத்திரம் பதிவு செய்து தருகிறேன். அதற்கு பணம் செலவு ஆகும் என்றார். நாங்கள் அதை வேண்டாம் என்று கூறிவிட்டோம்.பரபரப்புஅதை மனதில் வைத்து கொண்டு எங்கள் காலனியில் ரோடு வருகிறது. எனவே வீட்டின் முன் இருக்கும் சலவைக்கல், மரம், செடி, கொடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களது பட்டாவை ரத்து செய்து விடுவேன்.என்று எங்களை மிரட்டுகிறார். எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அந்த நபரை விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...