Monday, February 24, 2020
திருச்சி
குடியுரிமை திருத்தம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி போராட்டத்திற்கு அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்புக் கொடுத்த திருச்சி மாநகர காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்திருக்கிறது இது மிகுந்த வேதனை அளிக்கிறது, இத்தகைய வன்முறை வெடித்தது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குடி மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மக்களின் உணர்வுகளை மதித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக அறிவிக்க வேண்டும்
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாள் என்று அறிவித்திருப்பது வரவேற்கிறோம், ஆனால் இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாளாக அறிவித்தால் மட்டும் போதாது இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று அறிவித்த முதல்வர் அவர்கள் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உரிமைகளை ரத்து செய்வதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது, அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிற உரிமைகளை ரத்து செய்யாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது நகைச்சுவையாக வேடிக்கை கூடிய ஒன்றாகும்
குடிசையிலே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது வெட்கக் கேடானது
டிரம்பின் வருகையால் இந்திய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விடுமா என்ற கேள்விதான் எழுப்ப விரும்புகிறேன்
சி ஏ ஏ என்பிஆர் எதிர்ப்பு என்பது மோடி அரசின் எதிர்ப்பு என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் இது இந்து சமூகத்திற்கு எதிராக என்பது பார்ப்பது திசை திருப்பக்கூடிய அரசியலாகும்.
திருச்சி
திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு
திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு,திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன்,தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்
திருச்சி, கரூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும்,
ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது,உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு,
தான் தி.மு.க வில் இணைந்தது முதல் மாவட்ட செயலாளராக பணியாற்றியது வரையிலான நினைவுகளை பகிரிந்து கொண்டு புதிய மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.அதில்,மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்பு
பல அவமானங்களை சந்தித்துள்ளேன்.அதனால் தான் தற்போது முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளேன்.
கட்சிக்குள் ஜாதியை பார்க்காதீர்கள்.கட்சி வளர்ச்சிக்கு கட்சி தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிட கட்சி தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
என்ன வருத்தங்கள் இருந்தாலும் அதை பிறகு பார்த்து கொள்ளலாம்.சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
நான் மாவட்ட செயலாராக பொறுப்பேற்ற பிறகு மாவட்ட செயலாளராக கட்சிகாரர்கள் என்னை அங்கீகரிக்கவே 8 ஆண்டுகள் ஆனது.
தி.மு.க விலிருந்து ம.தி.மு.க பிரிந்த பின்பு ஏன் ம.தி.மு.க விற்கு செல்லவில்லை என பலர் கேட்டார்கள்.அப்போதே கருணாநிதி,அவர் மகன்,அவர் பேரன் என யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவாக தான் இருப்போம் என கூறினேன்.தற்போது அது உண்மையாகி உள்ளது என கூறினார்.
திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு
திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு,திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன்,தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்
திருச்சி, கரூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும்,
ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது,உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு,
தான் தி.மு.க வில் இணைந்தது முதல் மாவட்ட செயலாளராக பணியாற்றியது வரையிலான நினைவுகளை பகிரிந்து கொண்டு புதிய மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.அதில்,மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்பு
பல அவமானங்களை சந்தித்துள்ளேன்.அதனால் தான் தற்போது முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளேன்.
கட்சிக்குள் ஜாதியை பார்க்காதீர்கள்.கட்சி வளர்ச்சிக்கு கட்சி தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிட கட்சி தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
என்ன வருத்தங்கள் இருந்தாலும் அதை பிறகு பார்த்து கொள்ளலாம்.சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
நான் மாவட்ட செயலாராக பொறுப்பேற்ற பிறகு மாவட்ட செயலாளராக கட்சிகாரர்கள் என்னை அங்கீகரிக்கவே 8 ஆண்டுகள் ஆனது.
தி.மு.க விலிருந்து ம.தி.மு.க பிரிந்த பின்பு ஏன் ம.தி.மு.க விற்கு செல்லவில்லை என பலர் கேட்டார்கள்.அப்போதே கருணாநிதி,அவர் மகன்,அவர் பேரன் என யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவாக தான் இருப்போம் என கூறினேன்.தற்போது அது உண்மையாகி உள்ளது என கூறினார்.
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தே தகுதிப்பட்டை வழங்கப்பட்டது.
ஷோட்டோ கான் கராத்தே வேர்ல்டு பெடரேஷன் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிறைவு விழா திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். தாங்கள் பெற்ற பயிற்சியினை அவர்கள் செய்முறை வழியாக வெளிப்படுத்திய பின் தகுதி அடிப்படையில் கராத்தே பட்டைகள் வழங்கப்பட்டது. வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் தகுதி பட்டைகளை தலைமை பயிற்சியாளர் சங்கர் வழங்கினார். இது குறித்து திருச்சி மாவட்ட தற்காப்பு பயிற்சி தலைமை பயிற்சியாளர் பத்மா கூறும்போது..... பெண்களுக்கு சவால் தரும் காலகட்டம் தற்போது நிலவி வருகிறது. எனவே இதன் அவசியத்தை கருதி பெண்கள் கராத்தே பயில்வதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழக அரசு இதனை பள்ளிகளில் பாடமாகக் கொண்டு வந்து பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்தார்.
Sunday, February 23, 2020
திருச்சியில் 6 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பேருந்து பயணியர் நிழற்குடையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
திருச்சி செந்தண்ணீ புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்து தர, திருச்சி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து பயணியர் நிழற்குடையை கட்டினார். 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த பேருந்து பயணியர் நிழற்குடையை அவர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது....... நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் மக்கள் என்னிடம் வைக்கும் பத்து கோரிக்கைகளில் என்னால் முடிந்த இரண்டு, மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன். திமுக ஆட்சி அமையும்போது பத்துக்கு பத்து என அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித் தருவேன் என்றார். இவ்விழாவில் பகுதி செயலாளர் தர்மராஜ், வட்டச்செயலாளர்கள் ரெங்கநாதன், சண்முகம், துரை, வரதராஜன், மணி, தவசீலன் தங்கவேல் , செல்வராஜ், இளைஞரணி ஜோஸ்வா, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுகை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில்
எல்பின் நிறுவனத்தினர் மதுரையில் தங்களது டாப் லீடர் களை அழைத்து கூட்டம் நடத்த இருந்தனர் ஆனால் பலத்த எதிர்ப்பு இருந்ததால் சென்னையில் ஆளுங்கட்சி காவல்துறையை எதிர்த்து நமது பலத்தை காட்ட வேண்டும் என்று மாமல்லபுரம் அருகில் உள்ள ஓர் 7 நட்சத்திர ஹோட்டலில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்களது பிசினஸ் கூட்டத்தை நடத்துகின்றனர். இவர்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்னதான் காவல்துறை திறம்பட செயல்பட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் 20 முதல் 30 சதவீத உறுப்பினர்களைத் திரட்டி ஆளும் கட்சிக்கு எதிராக மாபெரும் கூட்டத்தைத் திரட்டினர். காவல்துறை டிஜிபி திரிபாதி அவர்கள் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைத்து வருகிறார் அவரை ஏமாற்றி இவர்கள் நடத்தும் கூட்டத்தில் காவல்துறையினர் நுழைய முடியாதபடி கூட்டத்தை நடத்துகின்றனர். என்னதான் நாம் தினமும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் வீடியோ அனுப்பினாலும் அவர்கள் மூளையை சலவை செய்து எல்பின் அழகர்சாமி என்கிற ராஜா ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்
பொதுமக்கள் பணத்தை ஆட்டையை போடுவதில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.. பொதுமக்கள் ஏமாந்தால் காவல்துறையை நோக்கித்தான் வருவார்கள். எனவே காவல்துறை டிஜிபி அவர்கள் இந்த கூட்டம் முடியட்டும் இனி இதுபோல் எந்த கூட்டமும் தமிழகத்தில் நடைபெற விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஜெய் ஹிந்த்
....................................................................................
பின்குறிப்பு :-
*ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின் நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர் மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
*தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
On Sunday, February 23, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியின் முடிவில் நடந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
நாங்கள் முஸ்லீம்கள் இல்லை. இருப்பினும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு காரணம், நாங்கள் ஜனநாயக சக்திகள். இந்து மத கொள்கை மீது மிகுந்த பற்று கொண்ட காந்தியையே கோட்சே சுட்டுக் கொன்றான் என்றால் ஆர்எஸ்எஸ்சை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்சிற்கு பல அணிகள் உண்டு. அதில் ஒரு அரசியல் அணிதான் பிஜேபி. சங் பரிவாரின் வெறுப்பு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தான். தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகள் ஆனது யாரும் போட்ட பிச்சை அல்ல. அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டமே அதற்கு காரணம். முஸ்லீம்களை தனிமைப்படுத்த நாங்கள் விடமாட்டோம்" எனக் கூறினார்.
இப்பேரணியின் முடிவில் நடந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
நாங்கள் முஸ்லீம்கள் இல்லை. இருப்பினும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு காரணம், நாங்கள் ஜனநாயக சக்திகள். இந்து மத கொள்கை மீது மிகுந்த பற்று கொண்ட காந்தியையே கோட்சே சுட்டுக் கொன்றான் என்றால் ஆர்எஸ்எஸ்சை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்சிற்கு பல அணிகள் உண்டு. அதில் ஒரு அரசியல் அணிதான் பிஜேபி. சங் பரிவாரின் வெறுப்பு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தான். தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகள் ஆனது யாரும் போட்ட பிச்சை அல்ல. அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டமே அதற்கு காரணம். முஸ்லீம்களை தனிமைப்படுத்த நாங்கள் விடமாட்டோம்" எனக் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (சனிக்கிழமை) 'தேசம் காப்போம் பேரணி' திருச்சியில் நடைபெற்றது
எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியிலிருந்து தொடங்கிய இப்பேரணி, எடமலைப்பட்டி புதூர் வழியாக கிராப்பட்டி வந்தடைந்தது. பேரணியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமின்றி இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிஏஏ-விற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரணிசுமார் 50 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியிலிருந்து தொடங்கிய இப்பேரணி, எடமலைப்பட்டி புதூர் வழியாக கிராப்பட்டி வந்தடைந்தது. பேரணியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி
என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தோல் .திருமாவளவன் பேட்டி
திருச்சியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் என்.ஆர்.சி,என்.பி.ஆர் ஆகியவற்றை செயல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் தேசம் காப்போம் பேரணி இன்று திருச்சியில் நடைபெற உள்ளது.
இந்த சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் எட்டு கோடி பேர் நாடற்றவர்களாக மாறும் நிலை உருவாகும்.26558 தடுப்பு முகாம்கள் கட்ட இருக்கிறார்கள்.இதற்கு 12 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய நேரிடும் என கணகிடப்பட்டுள்ளது.இது இந்தியாவின் பொருளாதராத்தை பாதிக்கும்.
மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடு இருள்மயமாகி விடும்.
இந்த சட்டத்தால் முஸ்லீம்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என நம்பினால் அது மிகப்பெரிய மூட நம்பிக்கை.
என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்.
நாட்டு மக்களை திசை திருப்பி ஏமாற்றும் முயற்சியில் அவர்கள்
ஈடுபட கூடாது.பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் நடவடிக்கை.
அரசியலமைப்பு சட்டத்தை வலுவிழக்க செய்து அதை சிதைப்பது சங்பரிவாரிகளின் நீண்ட நாள் கனவு.
முதலமைச்சர் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்த விரும்புகிறார்.ஆளும் பா.ஜ.க வின் பாவசெயலுக்கு முட்டு கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.கூட்டணி தர்மத்திற்காக பா.ஜ.க செய்யும் பாவ செயலுக்கு அ.தி.மு.க,பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் துணை போகிறது.
ஒ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக வி.சி.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
தாழ்த்தப்பட்ட சமூகங்களை நீதிபதிகளாக நியமித்தது குறித்து ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு வருத்தமும்,அதிர்ச்சியும்,வலியையும்அளிக்கிறது. அவர் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதால் மேலும் அது குறித்து பேச தேவையில்லை என்றார்.
திருச்சி பிராட்டியூரில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களுக்கும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் கட்டைகளாலும், பீர் பாட்டில்களாலும் தாக்கி கொண்டனர்.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த மோதல் சாலைக்கும் சென்றது. மோதலில் 8 பேர் மண்டை உடைந்தது. 4பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக திருச்சி போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 28 மாணவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆயுதங்களால் தாக்கி கொள்ளுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.
இதனிடையே இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டதால் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி 28 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு செய்தனர். அந்த மனு மாண்புமிகு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அழகுமணி, இந்த மாணவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வழக்கு நிலுவையில் இருந்தால்அவர்களின் எதிர்காலம் பாதிக்கும். இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல விரும்புகின்றனர்.
எனவே மாணவர்கள் ரத்ததானம் செய்யவோ, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவோ, மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பணிளை செய்வது என எந்த நிபந்தனை விதித்தாலும் செய்ய தயாராக உள்ளனர். இந்த நீதிமன்றம் மாணவர்களின் நலன்கருதி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி வழக்கில் உள்ள 28 மாணவர்களும், இன்று 22-ந்தேதி திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு சென்று பொது வார்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் சான்றிதழ் பெற்று வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவையடுத்து 28 மாணவர்களும் இன்று திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் ஏதோ ஒரு மனநிலையில் மோதிக்கொண்டோம். தற்போது மனம் திருந்தி அனைவரும் ஒற்றுமையாகி விட்டோம். இருப்பினும் செய்த தவறை உணர வேண்டும் என்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனையை ஒரு நாள் முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு நீதிபதி நூதன தண்டனை விதித்தார். அதன்படி இன்று மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இந்த தண்டனையை நாங்கள் வாழ்க்கையில் ஒரு விழிப்புணர்வாக கருதுகிறோம் என்று கூறினர்
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...








