Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200


 மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் ஒருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள விற்பனை மேலாளரை தேடி வருகின்றனர்.


  முசிறி அருகே அமைந்துள்ள 
கோதூர்பட்டியில் கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது இன்று 144 தடை உத்தரவு பின்னர் திறக்கப்பட்ட டாஸ்மார்க் கடையில் வியாபாரம் களைகட்டியிருந்தது 

 இந்நிலையில் நீதிமன்றம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய கோதூர் பட்டி டாஸ்மார்க் கடை விற்பனை மேலாளர் பாண்டியன்  அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு 1200 குவாட்டர் மதுபாட்டில்கள்  அடங்கிய 25அட்டை பெட்டிகளை ஆம்னி வேனில் ஏற்றி விற்பனை  செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளார். 

  அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் 1200 மது பாட்டில்களையும், ஆம்னி வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.    

 மேலும் ஜெகநாதன் என்பவரை   போலீசார் கைது  செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு  1 லட்சத்து 80  ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கோதுர்பட்டி டாஸ்மார்க் கடையின் விற்பனை மேலாளர் பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பிச்சாண்டவர் கோவில் பகுதியில் இன்று நடந்தது. 


இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலை, முன்னாள் மேயர் சுஜாதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூரண மதுவிலக்கு என்பது உலக அளவில் தோல்வியடைந்த விஷயமாகும். 



  அமெரிக்காவிலும் இது தோல்வியை சந்தித்துள்ளது. ஈரானிலும் பூரண மதுவிலக்கு சாத்தியப்படவில்லை. குஜராத்திலும் ஏட்டளவில் தான் பூரண மதுவிலக்கு இருக்கிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மாபியாக்கள் தலை தூக்கி விடுவார்கள். கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கும்.


  டாஸ்மாக் மதுபானக்கடைகளை கடந்த 45 நாட்களாக பூட்டி இருக்கவே கூடாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் அதாவது 11 மணி முதல் 1 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்த்திருக்கலாம். அதேபோல் ஆரம்பத்திலிருந்தே ஆன்லைன் மூலமும் மது விற்பனை செய்திருக்க வேண்டும். 


 அதனால் எதிர்வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் மது விற்பனையை தொடர வேண்டும். அதேபோல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தின் மூலம் மது விற்பனை செய்யவேண்டும்.  கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்காலத்தில் ஆன்லைனில் மது வாங்கும் முறையை கற்றுக் கொள்வார்கள். 

   அது மிகவும் எளிது. தற்போது ரயிலுக்கு கூட அனைவரும் ஆன்லைன் மூலமே டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். தற்போது சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை, நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்ற புகார்களின் அடிப்படையில் தான் நீதிமன்றம் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. 

  கொரோனா பிரச்சனை காரணமாக எந்த தேர்தலும் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. தற்போது செய்வது போல் சமூக இடைவெளியுடன் தள்ளி தள்ளி நின்று ஓட்டு போட்டு இந்த அரசை வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார்.
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சியில்  அமைச்சர் தொடர் நிவாரணம் ...!


 கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. 


 இதையடுத்து தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். 


 இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்த வகையில் இன்று திருச்சி மாநகராட்சி  மக்களுக்கு
25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.

Friday, May 08, 2020

On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

திருச்சியில் 
மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். 


கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இதையடுத்து தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அவரது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். 
இதன் ஒரு பகுதியாக இன்று பொது மக்களுக்கு
மளிகைப் பொருட்கள்  வழங்கினார்.
On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 
390 துப்புரவுப் பணியாளர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் 
மொத்தம் 487500 மதிப்பிலான பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு
அவர்கள் இன்று(08.05.2020) வழங்கினார். 

 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய 
மளிகைப்பொருட்களை வழங்கி தெரிவித்ததாவது:


 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தடுப்பு பணி முன்னெச்சரிக்கை 
தொடர்பாக மருத்துவத்துறை ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறை 
அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றுவதனால் நோய்தொற்று அதிகஅளவில் பரவாமல்
தடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட 51 நபர்கள் 
முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படடுள்ளனர். மருத்துவர்கள் செவிலியர்கள்
துப்புரவுப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 11 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9 நபர்களும் பெரம்பலூர்
மாவட்டத்தைச்சார்ந்த 13 நபர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சார்ந்த 2 நபரும் கரூர்
மாவட்டத்தினை சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 36 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அனைத்து 
நபர்களும் நலமுடன் உள்ளனர். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை முறையால் நோய் தொற்று 
ஏற்பட்டுள்ளவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பாகவும் மாவட்ட 
நிர்வாகத்தின் சார்பாகவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் 
கொள்கிறேன்
 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் 390 
பணியாளர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான தலா 10 கிலோ அரிசி 1கிலோ துவரம் பருப்பு
1கிலோ பச்சைப்பயிறு 1 கிலோ உளுந்தம் பருப்பு1 கிலோ பாசிப்பருப்பு 1கிலோ கோதுமை மாவு1 
கிலோ சர்க்கரை போன்ற ரூ.1250 மதிப்பீட்டில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 390 
துப்புரவு பணியாளர்களுக்கு மொத்தம்  487500 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.


இந்த அத்தியாவசிய பொருட்கள் ஊரக வளர்ச்சி பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. 
 பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் கைகளை 
கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் சேர்ப்பு கொண்டு கைகளை கழுவவேண்டும்
சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு கடைபிடித்தால் நோய் தொற்றில் இருந்து 
நம்மைநாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார் 
 இதனை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் நோய்பரிசோதனை 
செய்யும் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று(08.05.2020) 
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.அனிதா இணை இயக்குநர்
(மருத்துவம்மற்றும் ஊரகநலப்பணி) டாக்டர்.லெட்சுமி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) 
டாக்டர்.சுப்ரமணி மருந்து கண்காணிப்பாளர் டாக்டர்.ஏகநாதன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர்நல 
அலுவலர் ஜெகநாதன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் ஊரக 
வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் ஊரக வளர்ச்சி பொறியியல்துறை
உதவிப பொறியாளர் வடமலைக்குமார் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் உள்ளனர்.
On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் 36 பேருக்கு
கொரோனா சிகிச்சை

மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல்


திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்தனர்

இதில் 51 பேர் பூரண நலத்துடன் இல்லம் திரும்பிவிட்டனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னையில் இருந்து திருச்சி வந்த நபர்கள் 11 பேருக்கு ஏற்கனவே கொரொனா தொற்று உறுதியானது.இன்று 365 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 1 நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 12 நபர்கள்,அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த
9 நபர்கள்,பெரம்பலூர் மாவட்டத்தினை சேர்ந்த 14 நபர்கள்,புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 2 நபர்கள் உள்பட கூடுதல் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எல்லோரும் நலமாய் உள்ளனர்.
On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி 


திருச்சியில்   10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகையில்


மது விற்பனை நேரம் தவிர 24 மணி நேரமும் இந்த மதுக்கடையில் காவல் துறை முழு ஒத்துழைப்புடன் டாஸ்மாக் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மது விடுமுறை நாட்களிலும் மற்ற நாட்களிலும் 24 மணி நேரமும் விற்கப்படுகிறது சமீபத்தில் 15 நாட்களுக்கு முன்பு குடித்து குடித்து ஒருவர் இறந்துள்ளார். 

இதனைப்பற்றி நாங்கள் புகார் தெரிவித்தாலும் காவல்துறை டாஸ்மாக் அதிகாரி மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்வதில்லை என்றும் மேலும் இப்பகுதியில் டாஸ்மாக் விற்பனை செய்தால் நெடுஞ்சாலை என்பதாலும் யாத்ரி நிவாஸ் அருகில் இருப்பதாலும் பல ஊர்களில் இருந்தும் பல இடங்களிலிருந்தும் மது அருந்த இங்கு வருகிறார்கள் இந்த கடையில் 24 மணி நேரமும் முதல் விற்பனை ஆவதால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது என்ற அச்சத்துடன் பெண்கள் ஒன்று கூடி கடையை திறக்க கூடாது என்று மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது .

மேலும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் 
ஊரடங்கு காரணமாக
அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்ட நிலையில்  நேற்று முதல் மதுபான கடைகள் செயல்படத் துவங்கியது.

இந்நிலையில் இந்த அழகிரிபுரம் பகுதியில் மதுபான கடை10315
10409 திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100 க்கும் மேற்பட்ட நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் ஸ்ரீரங்கம்
வட்டாச்சியர் ஸ்ரீதர்,
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் துரைமுருகன்,  மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் 1மாதம் பின்னர் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் கடையினை மாற்ற  நடவடிக்கை எடுக்கப்படும்
என கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.
On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கத்தின் கோரிக்கைகள்


 தாய்சங்கத்தின்  மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 08.05.2020 வெள்ளிகிழமை அன்று அரசு பணியாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், இணைப்பு சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முன்னனி தோழர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து

 கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட தலைநகரில் ஏதாவது ஒரு அலுவலகத்தில் சமூக இடைவெளி விட்டு நின்று ஆட்சேபனையை தெரிவிப்பதுடன், அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்திட வேண்டும் என்றும் மேலும்


கோரிக்கைகள் 
                                       
பல்வேறு ஆண்டுகளாக போரடி பெற்ற உரிமைகளான அகவிலைப்படி 3 தவணை நிறுத்தம், சரண்டர் விடுப்பூதியம் நிறுத்தம் மற்றும் பி எப்  வட்டி விகிதம் குறைப்பு போன்ற அரசு பணியாளர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக கைவிடவேண்டும்.

கொரோன நோய் தொற்று நடவடிக்கையில் பணிபுரிந்து வரும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் சிறப்பூதியம் வழங்க வேண்டும்.   மேலும் அனைத்து துறையிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்,  ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் மேல்நிலை தொட்டி காவலர்கள்,  தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் சிறப்பூதியம் வழங்க வேண்டும். 

மேலும் இவர்களுக்கு மாதாந்திர ஊதியம் நிலுவைஇன்றி வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.         

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக 44 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை,  சமூக பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தமிழகம் அமைதியாக திகழ்கிறது.   எனவே *சமூகத்தை சீரழிக்க கூடிய மதுக்கடைகளை அரசு நிரந்தரமாக மூட வேண்டும். அங்கு பணியாற்றும் பணியாளர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி, மாற்று பணி வழங்கிட வேண்டும்

தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம்  மாநில மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி
காவல்துறை வெளியிட்டுள்ள தற்போது விழிப்புணர்வு வீடியோ


ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய மாநில அரசுகள் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் தமிழக அரசும் தொற்று வராமல் தடுக்க காவல்துறையினரையும் மருத்துவத் துறையினரும் வைத்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.


ஆனால் பொதுமக்கள் விழிப்புணர்வு இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் மார்க்கெட் மற்றும் அதிகமான மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இடைவெளியை கண்டுகொள்ளாமல் வெளியில் திரிந்து வருகின்றனர்.


பொதுமக்களுக்கு சமூக இடைவெளி முக கவசம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறையினர் ஒரு வீடியோ பதிவு தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது