Friday, May 15, 2020
On Friday, May 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன?
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நிறுவனம்தான் எல்பின் இந்த நிறுவனம் தமிழக மக்களை தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றி திருச்சி, தஞ்சை, மதுரை போன்று பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு ஊர்களிலும் புகார்கள் மற்றும் பல வழக்குகள் (பணம் ஏமாற்றியதற்கு பல கோடி ரூபாய் பொதுமக்களுக்கு தரவேண்டும் என பணமோசடி வழக்கு) இதுநாள் வரை நிலுவையில் உள்ளது.
இந்த போலி நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி பொதுச் செயலாளர் எஸ்ஆர்கே ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் சில நாட்களுக்கு முன்பு தங்கள் முறைகேடான முறையில் சம்பாதிப்பதை மறைப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்ச ரூபாய் கொடுத்தனர்.
தற்போது இவர்களின் புதிய திட்டம், இவர்கள் ஆரம்பிக்கும் (?) அனைத்து விதமான தொழில்களிலும் 2000 பேர் மட்டும் ரூ.36,000கட்டி உறுப்பினராக சேர வேண்டும் (Share Holder) அவர்களுக்கு இவர்களின் நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில் வாழ்நாள் ( யார் வாழ்நாள் முழுவதும் என தெரியவில்லை) முழுவதும் ஷேர் வழங்கப்படும் எனக்கூறி பணம் வசூல் செய்து வருகின்றனர். இதில் முதலில் பணம் தங்க மோதிரம் போன்ற பரிசுகள் வழங்க உள்ளதாக எல்பின் இயக்குனர் ராஜா அறிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் 5 லட்சம் கொடுத்தால் மூன்று வருடம் கழித்து 15லட்சம் ரூபாய், 10 லட்சம் கட்டினால் 30 லட்சம் ரூபாய் என்ற ஸிகீமில் வாங்கிய பல நூறு கோடிகளுக்கு காசோலைகள் இவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர் இந்த மூன்று வருட காலம் முடிவதற்கு சில நாட்கள் உள்ளன . இவர்கள் கொடுத்த காசோலைகள் தேதிகள் நெருங்கி வருகின்றன. பல நூறு கோடிகளுக்கு நிறுவனத்தில் பணம் உள்ளதா என்று கேட்டால் நகைப்பாக தான் உள்ளது. அத்தனை கோடிகளுக்கு காசோலை இவர்கள் கம்பெனி விதிமுறைப்படி கையில் கொடுத்து தான் பணத்தை வாங்க வேண்டும். வங்கியிலும் போட இயலாது எல்பின் கம்பெனி பொருளாதாரம் விழி பிதுங்கி உள்ளநிலையில் பல நபர்கள் இவர்களை விட்டு புத்திசாலித்தனமாக பணத்தை வசூல் செய்து கொண்டு வெளியேறிவிட்டனர்.
ஆனால் இவர்கள் தருவார்கள் என்று பலர் காசோலைகளை பத்திரமாக கையில் வைத்துக்கொண்டு காசோலைகள் காலம் முடிவதற்கு முன் இவர்கள் பணத்தை கொடுத்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு கோடிகளுக்கு இவர்களிடம் எங்கு பணம் உள்ளது, என்று தெரியவில்லை. பல நூறு கோடிகள் இவர்களால் திருப்பி அவர்களுக்கு அளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் பணத்தை கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெறுவார்களா என்று கேள்வி எழுகிறது. பணத்தை கேட்க வந்தால் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே என்கிற ரமேஷ் குமார் பணத்தை பெற வரும் நபர்களை சந்திப்பது இல்லையாம். பணத்தை முதலீடு செய்ய வந்தால் உடனடியாக வந்து அவர்களை சந்தித்து மூளைச்சலவை செய்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர் என அவருடைய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
ஆனால் இவர்கள் தருவார்கள் என்று பலர் காசோலைகளை பத்திரமாக கையில் வைத்துக்கொண்டு காசோலைகள் காலம் முடிவதற்கு முன் இவர்கள் பணத்தை கொடுத்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு கோடிகளுக்கு இவர்களிடம் எங்கு பணம் உள்ளது, என்று தெரியவில்லை. பல நூறு கோடிகள் இவர்களால் திருப்பி அவர்களுக்கு அளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் பணத்தை கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெறுவார்களா என்று கேள்வி எழுகிறது. பணத்தை கேட்க வந்தால் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே என்கிற ரமேஷ் குமார் பணத்தை பெற வரும் நபர்களை சந்திப்பது இல்லையாம். பணத்தை முதலீடு செய்ய வந்தால் உடனடியாக வந்து அவர்களை சந்தித்து மூளைச்சலவை செய்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர் என அவருடைய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இப்படி இந்தச் சூழ்நிலையில் எவருடைய பணத்தையோ வாங்கி இவர்கள் தானம் செய்து வருகிறோம் என்பது மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இதில் நிறுவனத் தலைவர் ராஜா என்னும் அழகர்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேருக்கு நலத் திட்டங்கள் வழங்க உள்ளனராம்.
முதிர்வு காலம் முடிந்துவிட்டது பணம் கொடுங்கள் என்று காசோலை உடன் வந்து கேட்டால் பிறந்தநாளுக்கு ஏழைகளுக்கு செலவு செய்து விட்டோம் என கூறுவதற்காக இந்த நடிப்பா என தெரியவில்லை?
ஏதோ ஒரு பழமொழி சொல்வதுபோல இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்பது விரைவில் தெரிந்துவிடும்.
முதிர்வு காலம் முடிந்துவிட்டது பணம் கொடுங்கள் என்று காசோலை உடன் வந்து கேட்டால் பிறந்தநாளுக்கு ஏழைகளுக்கு செலவு செய்து விட்டோம் என கூறுவதற்காக இந்த நடிப்பா என தெரியவில்லை?
ஏதோ ஒரு பழமொழி சொல்வதுபோல இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இந்நிலையில் இவர்கள் தமிழகம் முழுவதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதேபோன்று பல நூறு கோடிகள் செக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் டாக்டர் பட்டம் விலைக்கு வாங்கிக் கொண்டு தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் டாக்டர் என்று கூறுவது சட்டத்திற்குப் புறம்பாகவும் சட்டத்தை ஏமாற்றுவதாக உள்ளது. இதற்கும் கூடிய விரைவில் முடிவு தெரியும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் மதுரை மற்றும் தஞ்சையில் அதிகாரிகளை இவர்கள் யாரையும் விலைக்கு வாங்க முடியவில்லை, அதனால் அங்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதை போல் அனைத்து மாவட்டங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். விரைவில் இவர்கள் மீது அரசு சார்பில் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுத்து பொது மக்கள் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு உள்ளது.
(மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றுவது எப்படி)
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்)
இதுநாள் வரை நிறுவனத்தின் மீது திருச்சி
( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தில் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்கள் இன்று வரை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பல உண்மை தகவல்கள் மற்றும் ஆதாரங்களுடன் விரைவில் சந்திப்போம்.......
பொது மக்களை பாதுகாப்போம்........
Thursday, May 14, 2020
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர்
பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் வயது-37. என்பவர் 4 கண்ணிகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து வேட்டையாட முயற்சித்தபோது அங்கு ரோந்து பணியிலிருந்த வனக்காப்பாளர் ஜான் ஜோசப் மற்றும் வனக்காவலர் கலைப்பிரியா ஆகியோர் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி மணிகண்டன் முயல் வேட்டைக்காக வந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் வன உயிரினப்பாதுகாப்பு சட்டப்பரிவுகளின் கீழ் வன உயிரினப் குற்ற வழக்கு பதிவு செய்து. மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவுபடி ரூ.15000 இனக்கட்டணம் அபராதமாக விதித்து விடுவிக்கப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட மாவிலிப்பட்டி காப்புகாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில் - ஏவ10ர் ஐய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 1.கார்த்திக். 2.சந்துரு 3. சந்தோஷ் 4.குணசேகர் 5.பாலமுருகன் 6.கலைக்செல்வன் மற்றும் 7.பிரகாஷ் ஆகியோர்கள் கடந்த மாதம் முயல் வேட்டையாடியதை வுஐமு வுழுமு யுPP-ல் பதிவேற்றம் செய்துள்ளதை அறிந்த திருச்சி வனப்பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி மணிகண்டன் முயல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் வன உயிரினப்பாதுகாப்பு சட்டப்பரிவுகளின் கீழ் வன உயிரினப் குற்ற வழக்கு பதிவு செய்து. மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவுபடி ரூ.20000 இனக்கட்டணம் அபராதமாக விதித்து விடுவிக்கப்பட்டாhர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 7 நபர்கள் மற்றும் அவர்களை ஜாமீனில் எடுக்கவந்த ஊர் தலைவர் மற்றும் பொது மக்களுக்கு வன விலங்குகளை வேட்டையாடுதல் குற்றம் எனவும் விழிப்புணர்பு ஏற்படுத்தியும் மறைந்த வனக்காவலர் சந்துரு நினைவாக திருச்சி மாவட்ட வனக்கோட்டம் அலுவலகம் முன்பு மரக்கன்று நடவு செய்த பின்னர் அவர்கள் பிரிந்து சென்றனர்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 13
காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய நீர்வளத் துறையின் கீழ் ஒரு பிரிவாக மாற்றியதை கண்டித்தும், மாநில மின்வாரியங்களையும், உரிமைகளையும் பறித்து தமிகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மற்றும் பொதுநல அமைப்புகள் மனு அளித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் , தமிழக விவசாய சங்கம் உட்பட 13 அமைப்புக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அம்மனுவில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரி வந்தனர். தமிழக அரசு இதனை ஏற்றுது. இந்நிலையில் இதற்கு பெரும் கேடு விளைவிக்கும் விதமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத் துறையின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பை நீர்வளத்துறை ஒரு பிரிவாக மாற்றி இருப்பதே வன்மையாக கண்டித்தும், மேதும், மத்திய மின்சார சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்த மின் உற்பத்தி வினியோகம், விலை நிர்ணயம் அனைத்தையும் தனியார் மயமாக்குவதோடு, விவசாயிகள், நெசவாளர்கள், வீட்டு உபயோக ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சலுகைகள் இலவச மின்சாரம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசு இதனை முற்றாக நிராகரிக்க
வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இம்மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வடிவேல்பிரபு அரசுக்கு கோரிக்கை மனுக்கள் குறித்து அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 13
திருச்சியை சேர்ந்த
9பேர் பேருந்து மூலம்
மகாராஷ்ட்ராவிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமா வெளிமாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். இதே போல் தமிழர்களும் சொந்த ஊருக்கு வர முடியவில்லை. இந்நிலையில் மத்திய அரசு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலத்தில் பணிபுரியம் தமிழகத்தில் திருச்சி, நாகப்பட்டினம். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை
சேர்ந்த
29தொழிலாளர்கள் பேருந்து மூலம் தமிழ்நாடு எல்லையான ஓசூர் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள்
பேருந்து மூலம் இன்று காலை திருச்சி வந்தனர். அவர்களில்
திருச்சி பாலக்கரை, திருவெறும்பூர், மணப்பாறை, மற்றும் துறையூர் பகுதிகளை
சேர்ந்த 9 நபர்கள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் இறக்கி விடப்பட்டு பின்னர் தஞ்சை, திருவாரூர், செல்லும் நபர்கள் பேருந்து மூலம் சென்றனர். இந்நிலையில் திருச்சியில் இறக்கி விடப்பட்ட
9நபர்களுக்கும் மருத்துவர்கள்
தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொரனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை செய்வதற்காக
அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் பரிசோதனை செய்த பின்னர் 14 முதல் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிபதிகள் சார்பில் ரூபாய் ஓரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் தலா 10 கிலோ அரிசி இரண்டு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ பச்சை பயிறு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ஒரு கிலோ பாசிப் பருப்பு ஒரு கிலோ கோதுமை மாவு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஒரு கிலோ உப்பு ஒரு கிலோ சர்க்கரை 200 கிராம் மல்லித்தூள் 200 கிராம் மிளகாய்த்தூள் 200 கிராம் டீத்தூள் 200 கிராம் மஞ்சள் தூள் போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தலா ரூபாய் 1250 மதிப்பீட்டில் 264 துப்புரவுத் தொழிலாளர் பணியாளர்களுக்கு
திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிபதி முரளி சங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஆகிய அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மளிகை பொருட்களை வழங்கினார்கள் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அனிதா மருந்து கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
முகக் கவசம் அணியவில்லை
சமூக இடைவெளி கடைபிடிடக்கப்படவில்லை
மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வேதனை
திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தியில்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பெரும்பாலும் கடைகள் திறந்த நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றும் பழக்கம் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை
ஓலிபெருக்கி மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவு இல்லை
எனவே, அனைத்து கடைகள் ( இறைச்சிக்கடைகள் உள்பட) மற்றும் வணிக நிலையங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதல் குறித்தான விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்
இது ஊரடங்கு நிபந்தனைகளின்படி சமூக இடைவெளி பின்பற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்
இனி வரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமலும் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் வணிகம் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில்
முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்.
நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிப் பகுதியைப் பொறுத்தவரை கொரோனா தொற்று இல்லாத பகுதியாக விளங்கி வருவதுடன் அதற்கான தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதோடு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வகையில் மணப்பாறையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு வகையான வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி அபாராதம் விதித்தனர். இதுமட்டுமின்றி பலருக்கும் முகக்கவசம் வழங்கியதோடு, சிலருக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதுபோன்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில்
காசநோய், தொழுநோய் உள்ளிட்ட பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள்.
மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா ஊரடங்காக இந்த கால கட்டத்தில் காசநோய், தொழுநோய், ஆட்கொல்லி நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களும் வழங்கப்பட்டது. மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வழங்கினர்.
இதே போல் மணப்பாறை பகுதியில் கொரோனா முடக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள தப்பாட்ட கலைஞர்களுக்கு தாசில்தார் தமிழ்கனி அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்கினார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...















