Thursday, September 25, 2014
தமிழகத்தில் உள்ள 32 முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்–இந்து அமைப்புகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் முக்கிய தீவிரவாதியான வைகறை சாகுல் (27) துடியலூர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இந்து மத தலைவர்களை கொல்ல திட்டமிடுவதற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதற்கான புதிய அமைப்பில் உள்ள தீவிரவாதிகள் ஸ்பி லண்டர் செல்ஸ் எனப்படும் சிமி இயக்கத்தின் முன்னாள் மாணவர் அமைப்பினர் என தெரியவந்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பு கடந்த செப்டம்பர் 2001–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த அமைப்பில் இணைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் தீவிரவாத செயல்கள் செய்ய திட்ட மிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை கண்காணிக்க தொடங்கியுள்ளோம். இது தவிர கடந்த 1998 ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பின் பழைய குற்றவாளிகள் 150 பேரும் எங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர் களது செயல்பாடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் இந்து அமைப்புகளும் கண்காணிக்கப்படுகிறது. இந்து–முஸ்லிம் மோதலை தடுக்கவே இந்த அமைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் மக்களுடன் மக்களாக இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களது தீவிரவாத அமைப்பில் இருந்து விலகி தனித்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் அமைப்பில் உள்ள சக நபர் யார் என்பது கூட தெரியாது. தலைவரின் கட்டுப்பாட்டுக்கு இணங்க செயல்படுகிறார்கள். அவர்களையும் கண்டறியும் பணி மாநிலம் முழுவதும் நடை பெற்று வருகிறது.
சமீபத்திய கண்காணிப்பில் தற்போது பிரபலமடைந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்டு சிரியா தீவிரவாத அமைப்பில் இந்திய முஸ்லிம் இளைஞர்களை சேர்க்க மாநிலம் முழுவதும் ரகசியமாக மூளைச்சலவை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அதிர்ச்சி தரும் விதமாக முஸ்லிம் இளைஞர்களை சிலிப்பர் செல்ஸ் எனப்படும் தற்கொலை தீவிரவாத படைக்கு ஆட்களை தேர்வு செய்யவும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதை தடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி புதிய தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளவர்களை தீவிரவாத அமைப்பினர் உளவு அமைப்பினராக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள 32 முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த 7–ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை குடிமங்கலம் கொங்கல் நகரை சேர்ந்த ஒருவர் பாசன நீரை தனியாக பைப் லைன் அமைத்து திருடுவதாக ஆர்.டி.ஓ. குணசேகரனுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடுமலை தாசில்தார் சைபுதீன் உத்தரவின் பேரில் பி.ஏ.பி. அதிகாரி தயாளான், ஆர்.டி.ஓ.க்கள் பொன்ராஜ், ராமலிங்கம், கணேஷ்., கிராம நிர்வாக அதிகாரி ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர் கொங்கல் நகரை சேர்ந்த மூர்த்தி (வயது 42) என்பதும், தனியாக பைப் லைன் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து இணைக்கப்பட்டிருந்து குழாயை அதிகாரிகள் அகற்றினர். இது குறித்து குடிமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் வையாபுரி (வயது 70). இவரது மகன் கதிரவன் (வயது 35). இவரது மகள் சந்தியா (பெர் மாற்றப்பட்டுள்ளது). சந்தியா அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு சந்தியாவின் தாயார் தனலட்சுமி இறந்துவிட்டார்.
அவரது இறப்புக்கு பின்னர் சந்தியா மனமுடைந்த நிலையில் இருந்தார். ஆறுதலாக சந்தியா பள்ளிக்கு சென்று வந்தார். ஆனால் அவரது தாத்தா வையாபுரி மற்றும் தந்தை கதிரவன் 2 பேரும் சேர்ந்து சந்தியாவை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக வீட்டில் துணி துவைக்கவும், சமையல் செய்யவும் கூறி துன்புறுத்தி வந்தனர்.
சிறுமியான சந்தியா வால் அவர்களது தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனஉளைச் சலுக்கு ஆளானார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் பாபுவை தொடர்பு கொண்ட சிறுமி சந்தியா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் கணேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் சந்தியாவின் வீட்டில் ஆய்வு நடத்தி சந்தியாவின் தந்தை மற்றும் தாத்தாவை எச்சரித்து வந்தனர். மீண்டும் 2 நாட்கள் கழித்து ஆய்வுக்கு சென்ற போது தொடர்ந்து சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கணேஷ் பாபு உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி சந்தியாவை கொடுமைப்படுத்தியதாக கதிரவன் மற்றும் வையாபுரி மீது புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகார் உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து கதிரவன் மற்றும் வையாபுரியை போலீசார் கைது செய்து உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலக கட்டிடத்தையும், வணிக வளாக கட்டிடத்தையும், நிழற்குடையையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் பணிகளை தொடங்கி வைத்தார். காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முத்தூர் பேரூராட்சி தலைவர் செல்வ விநாயக முத்துக்குமார், செயல் அலுவலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்த கொண்டனர்.
இதேபோல் புதிய நீர் தேக்க தொட்டியையும் முதல்வர் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி கருங்கல் மேட்டில் ரூ.34.80 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்வர் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் குழாயினை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று எழுதப்பட்டிருந்தது . ஜெ.ஜோசப் .மாவட்ட செயலாளர் . கணேஷ் .மாநில செயற்குழு உறுப்பினர் . பாண்டியன் நகர் தொடக்கப்பள்ளி மாவட்ட ஆட்சியருக்கு தங்களுக்கு நேரிடும் குற்றங்களை அந்த மனுவின் மூலம் தெரிவித்தனர் . மதிபிற்குரிய ஐயா . பொருள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் BLO .பனி பயுற்சி குழந்தைகள் கல்வி நலன் பாதிப்பு தவிர்ப்பு வழங்கி மாற்று ஏற்பாடு செய்திட இயக்க வேண்டுகோள் சார்பு . வணக்கம் 22/09/2014.முதல் 26/09/2014.முடிய முதல் பருவத்தேர் வினை ஒட்டி மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு வாய்மொளித்தேர்வு மதிப்பீட்டு பணிகள் ஆகிய தொடர் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் ,தங்களை ஆட்படுதிக்கொல்லவெண்டிய சூழ்நிலையில் உள்ளோம் . எங்களது கல்வித்துறையின் பல்வேறு ஆணைகள் மூலமாக புள்ளிவிவரங்கள் அவசர அவசரமாக தயாரிக்க வேண்டிய கட்டாய நிலையுள்ளது . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சீன அதிபர் ஜி ஜின் பிங் 3 நாள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பான செய்தியை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் ஒரு நாள் மாலையில் ஒளிபரப்பியது.
அப்போது, செய்தி வாசிப்பாளர் சீன அதிபர் பெயரின் முதல் இரு ஆங்கில எழுத்துக்களான ‘எக்ஸ்ஐ’ என்பதை ‘ஜி’ என உச்சரிப்பதற்குப் பதிலாக ‘எக்ஸ்ஐ’ என்ற எழுத்துக்களை ‘11‘ (இலெவன்) என்னும் ரோமானிய எண்ணைக் குறிக்கும் எழுத்துக்கள் என்று கருதி ‘லெவன் ஜின்பிங்’ என வாசித்து விட்டார்.
இது குறித்து தூர்தர்ஷன் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சீன அதிபரின் பெயரை தவறாக உச்சரித்த அந்த செய்தி வாசிப்பாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவர் தற்காலிக செய்தி வாசிப்பாளர் என்றும், வழக்கமான செய்தி வாசிப்பாளர் விடுப்பில் இருக்கிறபோது, இத்தகைய தற்காலிக செய்தி வாசிப்பாளர்களின் பணி பயன்படுத்தப்படுகிறது என்றும் தூர்தர்ஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் போராட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் குடிமக்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் 15 நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிரியாவின் ஒரு பகுதியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய அரசாக அறிவித்துள்ளனர். இதனால் அண்டை நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து போர் புரிவதற்குப் பல்வேறு நாட்டை சேர்ந்த ஜிகாதிகள் ஈராக் சிரியாவிற்குச் செல்கின்றனர்.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகமான ஜிகாதிகள் செல்கின்றனர். இதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச சட்டம் ஒன்றைக கொண்டு வந்துள்ளது. இஸ்லாமிய போராளிகள் எழுப்பிவரும் உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் போராட்டங்களில் கலந்து கொள்ளச செல்லும் குடிமக்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
செய்தி ஊடகங்களின் தகவல் படி இந்த புதிய சட்டம் புதன்கிழமை செனட் சபையில் அறிமுகபடுத்தப்பட்டது. இந்தச சட்டப்படி ஆஸ்திரேலிய குடிமகன் செய்யும் போது அந்த அரசாங்கத்தால் போகக் கூடாத பகுதிக்கு செல்வது சட்டபடிக் குற்றமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள், கூட்டாளி அரபு நாடுகளின் பங்கேற்புடன் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) ஆயுததாரிகளுக்கு எதிராக 14 இடங்களில் விமான குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமைக் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.
சிரியாவின் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள இஸ்லாமிய அரசு இயக்கத்தின் பயிற்சி வளாகங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், வாகனங்கள், சேமிப்புக்கூடங்கள் போன்றவை இத்தாக்குதலில் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன என்று அது தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய அரசு இயக்கத்தினரின் தலைமையகம் அமைந்துள்ள சிரியாவின் வடகிழக்கிலுள்ள ரக்காவின் இலக்குகளும் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன. இத்தாக்குதல்களில் குறைந்தது 20 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனிலிருந்து செயல்படுகின்ற சிரியா நிலவர கண்காணிப்புக் குழு கூறுகிறது.
மேற்குலக நலன்களுக்கு எதிராக விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுக்கொண்டிருந்த அல்கொய்தா மூத்த உறுப்பினர்களின் வலையமைப்பு மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் கட்டுப்பாட்டுத் தலலமையகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.4 லட்சம் கோடி முதலீட்டைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப், 26 ஆம் தேதி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 25 ஆம் தேதியே பிரதமர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். ஜெர்மனி தலைநகர் பிராங்பர்ட் நகரில் ஓய்வு எடுத்து விட்டு பயணத்தைத் தொடருவார். பின்னர், 26 ஆம் தேதி நியூயார்க்கில் தரை இறங்குவார். அன்றிரவு நியூயார்க்கில் தங்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து 27 ஆம் தேதி மோடியின் 6 நாள் அமெரிக்க சுற்றுபயணம் தொடங்குகிறது. இதில் நியூயார்க்கில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரம் பகுதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்துவார். பின்னர், அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசுவார். பேச்சு வார்த்தையில் அமெரிக்கா – இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின் உற்பத்தி திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ. 7 கோடி செலவில் உபகரணங்கள் நிறுவப்பட வேண்டும். ஆகையால் 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.4 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும். இத்திட்டத்தை அமெரிக்கா உதவியுடன் செயல்படுத்த பிரதமர் மோடி மிகவும் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாநகராட்சி 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண் ணப்பனுக்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசு தன், வேலுமணி, நீதிராஜன, ரத்தினகுமார், பி.லோகநாதன் பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை சரியாக 7.17 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.
விண்கலத்தில் உள்ள முக்கிய என்ஜினை நேற்று இயக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்தது. மேலும் ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டு அந்த விண்கலம் சரியான திசையில் திருப்பி விடப்பட்டது.
அந்த விண்கலம் தற்போது வினாடிக்கு 22.1 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அதிகாலை அந்த பயண வேகம் வினாடிக்கு 4.4 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டு செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து இலக்கை எட்டி உள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜெட் பிரோபல்சன் ஆய்வுக்கூடம் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை வலுவுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய சபையொன்றை உருவாக்குவதென்று, அதன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்குழுத் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுவதற்குரிய யாப்பு ஒன்றைத் தயாரிப்பது, பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய சபையை உருவாக்குவது, வடமாகாண சபையின் செயற்பாடுகளை கட்டுக்கோப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வது என்பது உள்ளிட்ட நான்கு முக்கிய தீர்மானங்கள் இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் தத்தமக்கென பிராந்தியங்களில் செல்வாக்கு பெற்றிருக்கின்றபோதிலும், அவற்றின் செயற்பாடுகள் உளப்பூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, அத்தகைய ஒரு குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசியல் செயற்பாடுகளில் மக்களை ஒன்றிணைப்பதற்காக அமைக்கப்படவுள்ள தேசிய சபை உருவாக்கப்படும்போது, இந்தக் குறைபாட்டை நீக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
கூட்டமைப்பின் நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, சரியான அரசியல் தீர்வொன்றின் தீர்வு காண்பதென்றும், அதற்கான முன்னெடுப்புக்கு சகலரையும் உள்ளடக்கிய தேசிய சபை பேருதவியாக இருக்கும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஓன்றிணைந்த அரசியல் கட்சிகளின் அமைப்புக்கு அப்பால் பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய இத்தகைய கட்டமைப்புக்கள் பல நாடுகளில் செயற்பட்டிருக்கின்றன, செயற்பட்டு வருகின்றன என்றும் அதனைப் பின்பற்றியே தாங்களும் ஈபிஆர்எல்எவ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிகளின் மாநாடுகளில் மேற்கொண்ட தீர்மானங்களின் அடிப்படையில் தேசிய சபையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி க்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசு தன், வேலுமணி, நீதிராஜன, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி, சுந்தரி,, ரைகானா , ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
திருப்பூர், செப். 25-
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் இரயில்டெல் நிறுவனம் மூலம் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள் வழங்குவது குறித்து கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்கள் உடனான விளக்க கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர் உடுமலை .கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.. இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர் களின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமானது அனைத்து மக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையை பெறும் திட்டமான அகண்ட அலைவரிசை திட்டத்தை (பிராட்பேன்ட்) துவக்குகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி எண்.110-ன் கீழ் அறிவித்த அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள், ஆகியவற்றை இரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி இந்தச் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற வந்துள்ள ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பயன்பெற்று மக்களுக்கு இச்சேவையினை சென்றடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் களின் சேவை அனைவருக்கும் தேவை என்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் இணையதள சேவைகளை தங்கள் வாயிலாக அனைத்து குக்கிராம மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக கேபிள் டி.வி. மூலமாக செயல்படுத்தி உள்ளார்கள். இதன் மூலமாக கேபிள் டி.வி. ஆபரேட்டா;கள் தங்கள் வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும் உயரும். எனவே இச்சேவைகளை திறம்பட செய்ய வேண்டும். மேலும் இத்தகைய கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு இன்னும் பல சலுகைகளை வழங்க உள்ளார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா அவா;கள் அறிவிக்க உள்ளாலீ;கள். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவா; உடுமலை .கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை, நிறுவி திறம்படி செயல்படுத்தி வருகிறார்கள். இதனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் பொதுமக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையினை பெற முடிகிறது. 3 ஆண்டுகள் கேபிள் டி.வி. நிறுவனம் ரூ.12 கோடி இலாபத்தினை அடைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 27000 கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் உள்ளனர்
முன்னதாக, இரயில்டெல் நிறுவனம் மூலமாக தயாரி க்கப்பட்ட இணையதள தொழில்நுட்பம் குறித்து விளக்க குறுந்தகடுகள் (சி.டி.) வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் , தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைமை தொழில்நுட்ப அலுவலர் .பி.முரளி, முதுநிலை மேலாளர் ; (தொழில் நுட்பம்) .பழனிவேலன், மேலாளர் (வர் த்தகம்) இரயில்டெல் கிருபானந்தன், கிளை மேலாளர் தனிவட்டாட்சியர் எம்.விஜயகுமார், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கேபிள் பாலு மற்றும் திருப்பூர் ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டாகள் உட்பட பலா கலந்து கொண்டனா;.
திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் , அங்கேரிபாளையத்தில் நடந்தது.
பேரூராட்சி ஒன்றிய செயலாளர் கே..விஜயகுமார், தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ் .எம்.ஆனந்தன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் பாண்டியன், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, ஒன்றிய தலைவர் சாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, ச்டீபனராஜ், பூளுவபட்டி பாலு, பட்டுலிங்கம், எஸ்.எம்.பழனிசாமி, மார்க்கேட்சக்திவேல், எஸ்.ஆர். ஜெயக்குமார்,தம்பி மனோகரன், பாசறை செயலாளர் தங்கராஜ், சடையப்பன்,கருனாகறன, கவுன்சிலர்கள் சத்யா, கல்பனா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம்,நீதிராஜன், ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குற்ற வழக்குகளில் சிக்கும் கைதிகள், போலீஸ் மற்றும் நீதிபதி முன் மிகவும் பவ்யமாக நடந்து கொள்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் கைதி ஒருவர், போலீசாரின் கார் இருக்கையை கடித்து சேதப்படுத்தி மற்றொரு வழக்குக்கு ஆளாகி உள்ளார். அமெரிக்காவின் ஜடகோ மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டாசி ஸ்பென்ஸ். இவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு தம்பதி மீது மிளகுபொடியை வீசினார். எனவே அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஸ்டாசி ஸ்பென்சை போலீசார் கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சென்ற அவர், திடீரென ஒரு போலீஸ் காரின் பின் இருக்கையை தனது பற்களால் நறுநறுவென கடித்து துப்பினார். இதனால் அந்த இருக்கை முழுவதும் சேதமடைந்தது. இது தொடர்பாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிகிறது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியில் எந்த அளவுக்கு ஒரு டாக்டரின் பணி
முக்கியமோ, அதே அளவுக்கு நர்சுகளின் பணியும் அவசியம். நர்சுகள் கூறும் ரத்த
அழுத்தம், உடல் வெப்பநிலை போன்ற உடல் பரிசோதனை முடிவுகளின்படி தான்
நோயாளிகளுக்கு டாக்டர் சிகிச்சை அளிப்பார். அவ்வாறு நர்சுகள் கொடுக்கும்
பரிசோதனை முடிவுகள், அவர்களது மோசமான கையெழுத்துக்களால் நோயாளியின் உயிரையே
பறித்து விடுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் உள்ள 2 மருத்துவமனைகளை ஆய்வு செய்தனர். கடந்த 2004 முதல் 2010 வரை நடத்திய ஆய்வில், நர்சுகளின் மோசமான கையெழுத்து காரணமாக 2 மருத்துவமனைகளிலும் 750 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மருத்துவமனைகளில் உள்ள நர்சுகளுக்கு தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ போன்களும், ஐ பேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 15 சதவீதம் இறப்பு விகிதம் குறைந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சியில் அ.இ .அ .தி .மு க வேட்பாளர் திரு .c மாசிலாமணி வெற்றி பெற்றார் .வேட்பாளரை வாழ்த்தி பொள்ளாச்சி .வ .ஜெயராமன் சட்ட மன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி பாராளுமன்ற c மகேந்திரன் எம் .பி . சண்முகவேலு எம் .எல் .ஏ .அரசு கேபிள் டிவி வாரியத்தலைவர் உடுமலை ராதகிருஷ்ணன் மாவட்ட கவுன்சிலர் திரு தமயந்தி மாசிலாமணி உடன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுந்தரசாமி மற்றும் அ.இ .அ .தி .மு க.நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெரிய கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக
இருப்பவர் பாண்டி .இவர் பெரிய கட்டளையில் உள்ள சர்வே எண் 116 ல் சுமார் 59
சென்ட் வண்டிப்பாதை ,மயானப் பாதை மற்றும் ஊரணியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக
பெரிய கட்டளை கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
அளித்துள்ளனர் .இதனால் விவசாய இடுபொருட்கள் எடுத்து செல்வதற்கு இடையூறாக
உள்ளது .59 சென்டையும் ஆக்கிரமித்து கார் செட் ,வீடு கட்டிக் கொண்டு
இருக்கிறார்கள் .இதனை தடுத்தி நிறுத்தி பாதையை மீட்டு தர வேண்டும் என
பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’
இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்
மதுரையில்
திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு
மேலாக தேடப்பட்டு வந்தவர் அட்டாக் பாண்டி. தலைமறைவாக உள்ள இவர்
ஐதராபாத்தில் உள்ளதாக தகவல் கிடைத்து, அவரை கைது செய்ய போலீசார் அங்கு
விரைந்துள்ளதாகவும், சுற்றி வளைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது தேனா புதுக்கோட்டை கிராமம். இங்கு, முதுகளத்தூர் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் முருகனுக்கு தொடர்புடைய செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரி அருகே ராமநாதபுரம் மாவட்ட எல்லையான சூலூர் கிராமத்தில் துரைப்பாண்டி என்ற வழக்கறிஞருக்கு செம்மண் குவாரி உள்ளது.
இந்நிலையில். முருகனுக்கு தொடர்புடைய குவாரிக்கு
லைசன்ஸ் காலாவதி ஆகிவிட்டதால் அதை புதுப்பிக்க முருகன் விண்ணப்பம்
செய்துள்ளார். இதனால் கடந்த ஒருவாரமாக அவரது குவாரி செயல்படாமல் உள்ளது.
ஆனால் இரவு நேரங்களில் முருகன் குவாரியில் இருந்து துரைபாண்டி குவாரிக்கு
மணல் அள்ளபட்டு, விற்பனை செய்யபட்டு வந்துள்ளது. இரவு நேரங்களில் இந்த மணல்
கடத்தும் விவகாரம் மானாமதுரை காவல்நிலையத்திற்கு தகவல் போயிருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில்,
மானாமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், ஊர்க்காவல்படை
காவலர் இருவருடன் ஸ்பாட்டுக்கு போயிருக்கிறார். அப்போது முத்துகிருஷ்ணன்
மஃப்டியில் இருந்திருக்கிறார். மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை நிறுத்தி
விசாரித்தாராம். அப்பொழுது லாரி ஓட்டுனர்களுக்கும், போலீஸுக்கும் இடையே
வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர் துரைப்பாண்டிக்கு
தகவல் சொல்ல... அவர் விரைந்து வந்திருக்கிறார். இவரும் போலீஸாருடன்
வாக்குவாதம்... கைகலப்பு என்று அதிரடியாக இறங்க அங்கே கலாட்டா
அரங்கேறிருக்கிறது.

போலீஸாருக்கு சரமாரியாக அடி விழ... ஒரு கட்டத்தில்,
எஸ்.ஐ.யான முத்துகிருஷ்ணன் மின்னல் வேகத்தில் அவரது துப்பாக்கியை எடுத்து
வானை நோக்கி சுட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மணல்
கோஷ்டியினர், மிரண்டு போய் அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க
ஒடிவிட்டார்களாம். அதையடுத்து, நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் மணல் அள்ள
பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்
செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட
காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதோடு,
அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சமீபத்தில் சந்தித்து பேசிய ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களும், நீங்கள் கடந்து வந்த பாதைகளும் எனக்கு வியப்பளிப்பதாக உள்ளன.
தமிழக மக்கள் அனைவரும் உங்களை 'அம்மா' என்று அழைப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.
ஏனென்றால் நீங்கள் உங்கள் மாநிலத்தில் உள்ள பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வகுத்துள்ள பணிகளும் மிக சிறப்பானது.
அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை எல்லாம் நான் வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை.
மேலும், நீங்கள் ஏற்படுத்தியுள்ள காற்றாலை மின் திட்டங்கள், சுற்றுசூழல் விழிப்புணர்வு திட்டங்கள் அனைத்தும் மிகவும் பாராட்டக்கூடியவை.காற்றாலை மூலம் மின் உற்பத்தி பெறுவது சுற்றுசூழலுக்கு ஏற்ற விடயம்.
அதிலும், இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் 39 சதவீத தமிழகத்தின் பங்கு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.நான்கு வருடங்களுக்கு முன்னர் 'R20' என்ற நிறுவனத்தை நான் ஏற்படுத்தினேன்.
காலநிலை மாற்றம் ஏற்படும் தருணத்தில் சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற்காக 560க்கும் மேற்பட்ட நகரங்களையும் மாகாணங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் இணைத்து சில செயல்முறைகளை கையாண்டு வருகிறோம். இந்த திட்டத்தில் தமிழகமும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
இதுகுறித்த விவரங்களை நான் விரைவில் உங்கள் மாநில சுற்றுசூழல் அமைச்சகத்தை தொடர்புகொண்டு பேசுகிறேன். இது ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது மாநிலத்துக்கான வளர்ச்சி பாதை இல்லை, ஒட்டு மொத்த உலகுக்கும் வழிகாட்டும் நடைமுறை ஆகும். நான் கலிஃபோர்னியாவில் செய்ததை நீங்கள் தமிழகத்தில் செய்துள்ளீர்கள்.
இந்த திட்டத்தில் உங்கள் மாநிலமும் இணைவதன் மூலம் வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. நீங்கள் உங்களது சிறப்பான பணியை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில்
எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது
என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நகரமாக மாறி
வருகிறது. கடந்த 9 மாதங்களில் மதுரையில் 64 கொலைகள் நடந்துள்ளன. பழிக்குப்
பழி, ஆதாயக் கொலை, அரசியல் கொலை என்று காவல் துறை காரணங்கள் பலவாகச்
சொன்னாலும் கொலை கொலைதானே?
மதுரை,
புதூர் தி.மு.க செயலாளர் வேலுவின் மகன் முத்துப்பாண்டி தி.மு.க.வின்
ஒன்றிய துணை அமைப்பாளர். இவர், கடந்த 18ஆம் தேதி மதுரை அரசு ஐ.டி.ஐ எதிரே
உள்ள சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை
சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க. இளைஞர் அணியைச் சேர்ந்த முகேஷ் சர்மா,
ராஜ்குமார் உட்பட நான்கு பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
முகேஷ் சர்மா தி.மு.க. பிரமுகர் குருசாமியின் மருமகன். இது பழிக்குப் பழி
சம்பவம் என்று போலீஸ் தரப்பு கூற...
அதே நாளில், தல்லாகுளம் பகுதியில் கருப்பையா, ராம்கி, ரவிக்குமார் என்று மூன்று நபர்களை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டுச் சென்றது ஒரு டீம். ரத்த வெள்ளத்தில் கருப்பையாவின் உயிர் பிரிய, மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். ‘‘தி.மு.க தல்லாகுளம் பகுதி பொறுப்பாளர் கருணாநிதியின் கார் டிரைவரான கருப்பையா ரியல் எஸ்டேட் பிரச்னையின் தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நான்கு பேர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். விசாரணை நடக்கிறது’’ என்கிறார்கள் போலீஸார்.
இரவில் இந்தச் சம்பவங்கள் நடக்க, பகலில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு வீட்டுக்குள் மூவரைக் கொடூரமாகக் குத்தி, குதறிவிட்டுச் சென்றிருக்கிறது 10 பேர் கொண்ட கும்பல். 10க்கு 10 அளவு கொண்ட அந்த வீட்டில் உறுப்புகள் அனைத்தும் சிதறிக் கிடக்க, சுவரில் ரத்தம் படிந்து தரையும் ரத்தக்குளமாகக் காட்சியளிக்க பல்வேறு கொலைகளைப் பார்த்து பழகிப்போன காவல் துறையே கர்சீப் எடுத்து மூக்கை பொத்திக் கொண்டது.
இக்கொலைப்பற்றி ஜெய்ஹிந்த்புரம் போலீஸார், ‘‘குண்டுமலை இருளாயி மகன்களான கருப்பும், பாம்பு நாகராஜும் சகோதரர்கள். பாம்பு நாகராஜ், தி.மு.க பிரமுகர் அப்பளராஜாவின் கூட்டாளி. அப்பளராஜா மதுரையில் பிரபல ரவுடியாக இருந்து சென்னையில் செட்டில் ஆன டாக் ரவியின் கூட்டாளி. மதுரையில் டாக் ரவியிடன் கவாத்து திருப்பதியும், அப்பளராஜாவும் இணைந்து பல சம்பவங்கள் செய்தனர். டாக் ரவி சென்னை சென்றதும் மதுரையில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளுக்கு யார் கோலோச்சுவது என்று இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கவாத்தின் ஆளான சவுந்தரை பாம்பு நாகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து வெட்டினார்கள்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்பளராஜா வேறு ஒரு வழக்கில் கோர்ட்டில் சரண்டர் ஆகி மதுரை ஜெயிலில் இருக்கிறார். பாம்பு நாகராஜ் கோவைக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நடந்த அன்று காலையில் ஊருக்கு வந்த அவரைப் பழிவாங்க கவாத்து திருப்பதியின் தம்பி குண்டுமணி, ராஜா உள்பட 10 நபர்கள் இந்த மூன்று கொலைகளை செய்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின்போது டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் என்கிற நபரும் கொலை செய்யப்பட்டார். கொலையை நேரில் பார்த்த பாம்பு நாகராஜின் தாத்தாவை மட்டும் விட்டு வைத்து விட்டுச் சென்றது அந்தக் கும்பல்’’ என்றனர்.
இதேபோல், கற்பழிப்பு சம்பவங்கள் 23, கொள்ளை சம்பவங்கள் 81, பாலியல் துன்புறுத்தல்கள் 9, கூட்டு கொள்ளைகள் 4, சாதாரண க்ரைம் சம்பவங்கள் 32 என்று க்ரைம் பட்டியலை வாசிக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்!
கொலைப் பட்டியல்
2014ஆம்
ஆண்டு மதுரையில் புதுவருடம் பிறக்கும் பொழுதே கொலையுடன் பிறந்தது, சரியாக
ஹாப்பி நியூ இயர் சொல்லும் 12 மணியளவில் மதுரை புதூரில் செந்திலநாதன்
என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். காரணம் போதையில் தகராறு.
ஜனவரி 3: அன்று வில்லாபுரத்தில் தமிழரசன் என்பவர் கொலை. காரணம், கள்ளக்காதல்.
ஜனவரி 4: வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கண்ணன். இருவரும் இரட்டைக்கொலை செய்யப்பட்டனர். கோஷ்டி மோதலில் நடந்த பழி தீர்க்கும் சம்பவம்.
ஜனவரி 8: தல்லாக்குளத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டார்.
ஜனவரி 22: கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் காதல் பிரச்னையில் வெட்டிக்கொலை.
ஜனவரி 23: வில்லாபுரத்தில், வாழப்போன இடத்தில் அடிக்கடி தொல்லை தருகிறார் என்கிற காரணத்துக்காக அக்காவின் மாமியாரை கொலை செய்தார் ஒரு பெண். பிறகு, போலீஸில் சரணடைந்தார்.
ஜனவரி 30: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மேலூர் அரிட்ட பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அவரது மருமகள் தனது கள்ளக்காதலன் மூலம் அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
பிப்ரவரி 6: வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்ஸ் கடை ஓனரின் மகள், பட்டப் பகலில் வீட்டுக்குள் கொலைசெய்து கிடந்தார். மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்த அவரது கணவருக்கு பெரும் அதிர்ச்சி. கொலை செய்தது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 17: மேலூர் அண்ணா காலனியில் சைக்கிளில் தெரு வழியாக போனதால் நடந்த சண்டையில் வீரன் என்பவர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார்.
பிப்ரவரி 18: மதுரை கருடர் பாலம் அடியில் இளம் வயது ஆண் பிணம் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் தந்தனர். இறந்தவர் யார் என்ற விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 21: பெரியார் பேருந்து நிலையத்தில் பால்பாண்டி என்பவர் வெட்டிக்கொலை. இது மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழிக்குப் பழி வாங்க செய்த கொலை.
பிப்ரவரி 22: மதிச்சியம் வைகை ஆற்றுப் பகுதியில் காமராஜர் புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுவும்கூட பழிக்குப் பழி வாங்க நடந்த கொலையே!
மார்ச் 28: சிந்தாமணி தியேட்டர் பகுதி லட்சுமிபுரம் கோகுல்நகை அடகுக்கடை ஓனர் சின்னையா என்பவர் இரவு 7 மணிக்கு கொலை. கடை ஊழியர் முருகேசனின் நண்பர் கைது. இதே நாளில் பெத்தானிய புரத்தில் பாண்டீஸ்வரி என்பவர் அவரது வீட்டில் கொலை செய்து கிடந்தார்.
மார்ச் 30: சுப்ரமணியபுரத்தில் மாமியார் மூக்காயி என்பரை அவரது மருமகன் டேவிட் ஆனந்தகுமார் இரவில் கொலை செய்து போலீஸில் சரண்.
ஏப்ரல் 8: பழங்காநத்தம் பைகாரா பகுதியைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளியான கண்ணன் என்பவர் குடி போதையில் நடந்த தகராறில் மாலை நேரத்தில் கொலை செய்யபட்டார்.
ஏப்ரல் 10: அலங்காநல்லூரில் பரமசிவம் என்பவரை அவரது மனைவி பாப்பாத்தி தனது ஆண் நண்பரான கார்த்திக்ராஜா என்பவருடன் சேர்ந்து கொலை செய்தார். கள்ளக்காதல் விவகாரமாக இருக்கலாம் என்கிறது போலீஸ்.
ஏப்ரல் 12: தத்தனேரியில் குடிபோதையில் அம்மா பேச்சியம்மாளை அவரது மகனே கொலை செய்துவிட்டார். போதை தெளிந்ததும் காவல் நிலையத்தில் கதறி அழுதார்.
ஏப்ரல் 14: உசிலம்பட்டியில் உறவினர்களுக்குள் நடந்த ஈகோவால் கார்த்திக்ராஜா என்பவர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஏப்ரல் 15: அழகர் கோயிலுக்குள் உள்ள நடைபாதை பகுதியில் காலை 5 மணிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த் முத்துப்பாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஏப்ரல் 19: விராதனூர் பகுதியில் ஆயிரம் பிள்ளை என்கிற பெண் கொலை செய்து கிடந்தார். இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏப்ரல் 21: மேலூர் கொட்டக்குடி பகுதியில் வீரம்மாள் என்பவர் கழுத்து நெரித்துக் கொலை. காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை.
மே 2: மேலூர் பகுதியில் உள்ள கல்குவாரி கிணற்றில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரைக் கடத்திவந்து கொடூரமாகக் கொலை செய்து போட்டுவிட்டுச் சென்றனர். காரணம் தெரியவில்லை.
மே 13: மாடக்குளத்தில் குடியிருப்போர் நலசங்கத் தலைவர் ஆண்டியப்பன் என்பவர் முன்விரோத பகையில் கொலைசெய்யப்பட்டார். கொலையாளி கோர்ட்டில் சரண்.
மே 21: உசிலம்பட்டியில் அப்பா மாயாண்டியை மகன் பாண்டியராஜ் வெட்டி கொலை. காரணம், குடிபோதை தகராறு.
மே 27: கே.கே. நகரில் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து வந்திருந்த விக்னேஷ் என்பவருடன் திருமண சரக்கு பார்டியில் அவரது நண்பர்களுக்குள் வாக்குவாதம். பீர் பாட்டிலால் விக்னேஷ் தலையில் அடித்துக் கொலை.
மே 30: தல்லாகுளம் பகுதியில் நாகபாண்டி என்பவர் வெட்டிக் கொலை. இது பழிவாங்கும் கொலை சம்பவம்.
ஜூன் 1: திருமங்கலம் அ.தி.மு.க. நகரச்செயலாளர் விஜயன் என்பவரது உறவினர் செண்பக பாண்டியனை குடி போதையில் கொலை செய்தது ஒரு குரூப். இதுவும் முன்விரோத பகையில் நடந்த கொலை.
ஜூன் 2: குலமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வெட்டிக்கொலை. காரணம், கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜூன் 3: பேரையூர் பகுதியில் உள்ள சாப்டூர் பகுதியைச் சேர்ந்த துரைபாண்டியை அவரது மனைவியே விறகு கட்டையால் அடித்துக் கொலை. காரணம். செக்ஸ் தொல்லை தந்ததால் இப்படி செய்தேன் என்றாராம் அவரது மனைவி.
ஜூன் 8: மதுரை காய்கறி சந்தையில் கடை ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் சரவணக்குமார் என்பவர் வெட்டிக்கொலை. இதே நாளில் புதூரை சேர்ந்த செல்வசந்திரன் என்பவர் கொலை செய்து கிடந்தார். காரணம், இன்னமும் கண்டுபிடிக்கபடவில்லை.
ஜூன் 10: நீண்ட நாட்கள் ஆகியும் எனது மனைவியை காணவில்லை என்று உமாராணி என்பவரின் கணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் எட்டு மாதத்துக்குமுன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட உமாராணியை, அழுகிய நிலையில் கண்டெடுத்தனர். உமாராணியை 50 ஆயிரம் பணத்துக்கு அவரது தோழியான பிரேமா தனது கள்ளக்காதலன் வேல்முருகன் மூலம் கொலை செய்தது தெரியவந்தது.
ஜூன் 14: ஜெய்ஹிந்த்புரத்தில் காதணி விழா நடத்திய கல்யாண மண்டபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் பொழுது நடந்த தகராறில் ஷேக் இப்ராஹிம் என்பவர் சம்பவ இடத்திலே வெட்டிக்கொலை. இதே நாளில் கருப்பாயூரனி ரிங் ரோட்டில் இரவு கரிமேடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி செந்தில்குமார் கொலை செய்துகிடந்தார்.
ஜூன் 15: தந்தையர் தினமான இன்று உசிலம்பட்டியில் குடிபோதையில் தந்தை அழகர்சாமியை மகன் ராமர்பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்து, செய் நன்றி காட்டினார்.
ஜூன் 19: பேரையூர் அரசபட்டியில் இரவில் செல்வம் என்பவர் உறவினர் மூலம் கொலை செய்யப்பட்டார்.
ஜூன் 29: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் ஹோட்டல் நடத்தி வந்த ஜான் சுதாகர், எட்வின் என்கிற இருவரும் தன்னிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளியான சிவன்காளையை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்றனர். காரணம் குடி போதையில் நடந்த வாய் தகராறு.
ஜூலை 2: கருப்பாயூரணி குன்னத்தூரை சேர்ந்த டிரைவர் முத்துராஜா. திடீரென ஒரு நாள்... அவரது வீட்டுக்குள் பரமசிவம் என்பவர் புகுந்து, முத்துராஜாவின் மனைவி, குழந்தைகள் என கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். முத்துராஜ் அதே இடத்தில் பிணமானார். கொலையாளி பரமசிவம் போலீஸில் “தனது மனைவியை அபகரித்துக் கொண்டதால் கொலைசெய்தேன்” என்று சொன்னார்.
ஜூலை 6: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி மாணவன் சேது சூர்யா. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் பட்டப்பகலில் கொலை செய்தது மாணவர் கோஷ்டி.
ஜூலை 9: சோழவந்தானில் சீனிவாசன் என்பவர் அவரது சகோதரனால் கொலை செய்யப்பட்டார்.
இதே நாளில், கூடல்நகர் எஸ்.வி.பி. நகரில் ஆண் சடலம் ஓன்று எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவர் விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஜூலை 12: ஜீவா நகரில் சொத்து தகராறில் தம்பி கணேசனை அண்ணன் பாலமுருகன் என்பவர் கொலை செய்தார்.
ஜூலை 13: அ.தி.மு.க பிரமுகர் ஜெயபாண்டி என்பவர் மதுரை கலெக்டர் அலுவலக சாலையில் வைத்து வெட்டி கொலை. இது, பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஜூலை 16: கள்ளக்காதல் தகராறில் போஸ் என்பவரை சிவபாண்டி போதையில் கொலை செய்தார்.
ஆகஸ்ட் 5: உசிலம்பட்டி மாதரையில் கோழிக்கடை பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஆகஸ்ட் 6: திருமங்கலத்தில் காதர் மொய்தீன் என்பவர் கொலை. போலீஸ் சொல்லும் காரணம், அவரது அண்ணன் பஷீர் என்பவர் தனது மைத்துனியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு சொல்லி கேட்காமல் போனதால் காதர் மொய்தீன் கொலை செய்யப்பட்டாராம்.
ஆகஸ்ட் 7: யாகப்பா நகரில் சிடி கடை நடத்தும் தகராறில் விஜயகுமார் கொலை. ஜெகதீசன் கோஷ்டியினர் செய்தனர் என்கிறது போலீஸ்.
ஆகஸ்ட் 8: மதுரை திருப்பாலை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் காலை நேரத்தில் வக்கீல் முத்துதுரையை மூன்று பேர் கொண்ட குழு அரிவாளால்வெட்டி கொத்து பரோட்டா போட்டுவிட்டு பறந்துவிட்டது. பழிக்கு பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ். அன்று இரவே அ.தி.மு.க பிரமுகர் கீழவளவு பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வெட்டி கொலை. வெட்டிய கும்பலில் ஒருவரான நிரஞ்சன் என்பவரது மணிக்கட்டில் தவறுதலாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு நாளில் நிரஞ்சன் மரணம் அடைந்தார்
மதுரை,
புதூர் தி.மு.க செயலாளர் வேலுவின் மகன் முத்துப்பாண்டி தி.மு.க.வின்
ஒன்றிய துணை அமைப்பாளர். இவர், கடந்த 18ஆம் தேதி மதுரை அரசு ஐ.டி.ஐ எதிரே
உள்ள சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை
சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க. இளைஞர் அணியைச் சேர்ந்த முகேஷ் சர்மா,
ராஜ்குமார் உட்பட நான்கு பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
முகேஷ் சர்மா தி.மு.க. பிரமுகர் குருசாமியின் மருமகன். இது பழிக்குப் பழி
சம்பவம் என்று போலீஸ் தரப்பு கூற...அதே நாளில், தல்லாகுளம் பகுதியில் கருப்பையா, ராம்கி, ரவிக்குமார் என்று மூன்று நபர்களை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டுச் சென்றது ஒரு டீம். ரத்த வெள்ளத்தில் கருப்பையாவின் உயிர் பிரிய, மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். ‘‘தி.மு.க தல்லாகுளம் பகுதி பொறுப்பாளர் கருணாநிதியின் கார் டிரைவரான கருப்பையா ரியல் எஸ்டேட் பிரச்னையின் தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நான்கு பேர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். விசாரணை நடக்கிறது’’ என்கிறார்கள் போலீஸார்.
இரவில் இந்தச் சம்பவங்கள் நடக்க, பகலில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு வீட்டுக்குள் மூவரைக் கொடூரமாகக் குத்தி, குதறிவிட்டுச் சென்றிருக்கிறது 10 பேர் கொண்ட கும்பல். 10க்கு 10 அளவு கொண்ட அந்த வீட்டில் உறுப்புகள் அனைத்தும் சிதறிக் கிடக்க, சுவரில் ரத்தம் படிந்து தரையும் ரத்தக்குளமாகக் காட்சியளிக்க பல்வேறு கொலைகளைப் பார்த்து பழகிப்போன காவல் துறையே கர்சீப் எடுத்து மூக்கை பொத்திக் கொண்டது.
இக்கொலைப்பற்றி ஜெய்ஹிந்த்புரம் போலீஸார், ‘‘குண்டுமலை இருளாயி மகன்களான கருப்பும், பாம்பு நாகராஜும் சகோதரர்கள். பாம்பு நாகராஜ், தி.மு.க பிரமுகர் அப்பளராஜாவின் கூட்டாளி. அப்பளராஜா மதுரையில் பிரபல ரவுடியாக இருந்து சென்னையில் செட்டில் ஆன டாக் ரவியின் கூட்டாளி. மதுரையில் டாக் ரவியிடன் கவாத்து திருப்பதியும், அப்பளராஜாவும் இணைந்து பல சம்பவங்கள் செய்தனர். டாக் ரவி சென்னை சென்றதும் மதுரையில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளுக்கு யார் கோலோச்சுவது என்று இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கவாத்தின் ஆளான சவுந்தரை பாம்பு நாகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து வெட்டினார்கள்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்பளராஜா வேறு ஒரு வழக்கில் கோர்ட்டில் சரண்டர் ஆகி மதுரை ஜெயிலில் இருக்கிறார். பாம்பு நாகராஜ் கோவைக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நடந்த அன்று காலையில் ஊருக்கு வந்த அவரைப் பழிவாங்க கவாத்து திருப்பதியின் தம்பி குண்டுமணி, ராஜா உள்பட 10 நபர்கள் இந்த மூன்று கொலைகளை செய்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின்போது டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் என்கிற நபரும் கொலை செய்யப்பட்டார். கொலையை நேரில் பார்த்த பாம்பு நாகராஜின் தாத்தாவை மட்டும் விட்டு வைத்து விட்டுச் சென்றது அந்தக் கும்பல்’’ என்றனர்.
இதேபோல், கற்பழிப்பு சம்பவங்கள் 23, கொள்ளை சம்பவங்கள் 81, பாலியல் துன்புறுத்தல்கள் 9, கூட்டு கொள்ளைகள் 4, சாதாரண க்ரைம் சம்பவங்கள் 32 என்று க்ரைம் பட்டியலை வாசிக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்!
கொலைப் பட்டியல்
2014ஆம்
ஆண்டு மதுரையில் புதுவருடம் பிறக்கும் பொழுதே கொலையுடன் பிறந்தது, சரியாக
ஹாப்பி நியூ இயர் சொல்லும் 12 மணியளவில் மதுரை புதூரில் செந்திலநாதன்
என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். காரணம் போதையில் தகராறு.ஜனவரி 3: அன்று வில்லாபுரத்தில் தமிழரசன் என்பவர் கொலை. காரணம், கள்ளக்காதல்.
ஜனவரி 4: வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கண்ணன். இருவரும் இரட்டைக்கொலை செய்யப்பட்டனர். கோஷ்டி மோதலில் நடந்த பழி தீர்க்கும் சம்பவம்.
ஜனவரி 8: தல்லாக்குளத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டார்.
ஜனவரி 22: கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் காதல் பிரச்னையில் வெட்டிக்கொலை.
ஜனவரி 23: வில்லாபுரத்தில், வாழப்போன இடத்தில் அடிக்கடி தொல்லை தருகிறார் என்கிற காரணத்துக்காக அக்காவின் மாமியாரை கொலை செய்தார் ஒரு பெண். பிறகு, போலீஸில் சரணடைந்தார்.
ஜனவரி 30: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மேலூர் அரிட்ட பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அவரது மருமகள் தனது கள்ளக்காதலன் மூலம் அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
பிப்ரவரி 6: வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்ஸ் கடை ஓனரின் மகள், பட்டப் பகலில் வீட்டுக்குள் கொலைசெய்து கிடந்தார். மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்த அவரது கணவருக்கு பெரும் அதிர்ச்சி. கொலை செய்தது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 17: மேலூர் அண்ணா காலனியில் சைக்கிளில் தெரு வழியாக போனதால் நடந்த சண்டையில் வீரன் என்பவர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார்.
பிப்ரவரி 18: மதுரை கருடர் பாலம் அடியில் இளம் வயது ஆண் பிணம் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் தந்தனர். இறந்தவர் யார் என்ற விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 21: பெரியார் பேருந்து நிலையத்தில் பால்பாண்டி என்பவர் வெட்டிக்கொலை. இது மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழிக்குப் பழி வாங்க செய்த கொலை.
பிப்ரவரி 22: மதிச்சியம் வைகை ஆற்றுப் பகுதியில் காமராஜர் புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுவும்கூட பழிக்குப் பழி வாங்க நடந்த கொலையே!
மார்ச் 28: சிந்தாமணி தியேட்டர் பகுதி லட்சுமிபுரம் கோகுல்நகை அடகுக்கடை ஓனர் சின்னையா என்பவர் இரவு 7 மணிக்கு கொலை. கடை ஊழியர் முருகேசனின் நண்பர் கைது. இதே நாளில் பெத்தானிய புரத்தில் பாண்டீஸ்வரி என்பவர் அவரது வீட்டில் கொலை செய்து கிடந்தார்.
மார்ச் 30: சுப்ரமணியபுரத்தில் மாமியார் மூக்காயி என்பரை அவரது மருமகன் டேவிட் ஆனந்தகுமார் இரவில் கொலை செய்து போலீஸில் சரண்.
ஏப்ரல் 8: பழங்காநத்தம் பைகாரா பகுதியைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளியான கண்ணன் என்பவர் குடி போதையில் நடந்த தகராறில் மாலை நேரத்தில் கொலை செய்யபட்டார்.
ஏப்ரல் 10: அலங்காநல்லூரில் பரமசிவம் என்பவரை அவரது மனைவி பாப்பாத்தி தனது ஆண் நண்பரான கார்த்திக்ராஜா என்பவருடன் சேர்ந்து கொலை செய்தார். கள்ளக்காதல் விவகாரமாக இருக்கலாம் என்கிறது போலீஸ்.
ஏப்ரல் 12: தத்தனேரியில் குடிபோதையில் அம்மா பேச்சியம்மாளை அவரது மகனே கொலை செய்துவிட்டார். போதை தெளிந்ததும் காவல் நிலையத்தில் கதறி அழுதார்.
ஏப்ரல் 14: உசிலம்பட்டியில் உறவினர்களுக்குள் நடந்த ஈகோவால் கார்த்திக்ராஜா என்பவர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஏப்ரல் 15: அழகர் கோயிலுக்குள் உள்ள நடைபாதை பகுதியில் காலை 5 மணிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த் முத்துப்பாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஏப்ரல் 19: விராதனூர் பகுதியில் ஆயிரம் பிள்ளை என்கிற பெண் கொலை செய்து கிடந்தார். இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏப்ரல் 21: மேலூர் கொட்டக்குடி பகுதியில் வீரம்மாள் என்பவர் கழுத்து நெரித்துக் கொலை. காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை.
மே 2: மேலூர் பகுதியில் உள்ள கல்குவாரி கிணற்றில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரைக் கடத்திவந்து கொடூரமாகக் கொலை செய்து போட்டுவிட்டுச் சென்றனர். காரணம் தெரியவில்லை.
மே 13: மாடக்குளத்தில் குடியிருப்போர் நலசங்கத் தலைவர் ஆண்டியப்பன் என்பவர் முன்விரோத பகையில் கொலைசெய்யப்பட்டார். கொலையாளி கோர்ட்டில் சரண்.
மே 21: உசிலம்பட்டியில் அப்பா மாயாண்டியை மகன் பாண்டியராஜ் வெட்டி கொலை. காரணம், குடிபோதை தகராறு.
மே 27: கே.கே. நகரில் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து வந்திருந்த விக்னேஷ் என்பவருடன் திருமண சரக்கு பார்டியில் அவரது நண்பர்களுக்குள் வாக்குவாதம். பீர் பாட்டிலால் விக்னேஷ் தலையில் அடித்துக் கொலை.
மே 30: தல்லாகுளம் பகுதியில் நாகபாண்டி என்பவர் வெட்டிக் கொலை. இது பழிவாங்கும் கொலை சம்பவம்.
ஜூன் 1: திருமங்கலம் அ.தி.மு.க. நகரச்செயலாளர் விஜயன் என்பவரது உறவினர் செண்பக பாண்டியனை குடி போதையில் கொலை செய்தது ஒரு குரூப். இதுவும் முன்விரோத பகையில் நடந்த கொலை.
ஜூன் 2: குலமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வெட்டிக்கொலை. காரணம், கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜூன் 3: பேரையூர் பகுதியில் உள்ள சாப்டூர் பகுதியைச் சேர்ந்த துரைபாண்டியை அவரது மனைவியே விறகு கட்டையால் அடித்துக் கொலை. காரணம். செக்ஸ் தொல்லை தந்ததால் இப்படி செய்தேன் என்றாராம் அவரது மனைவி.
ஜூன் 8: மதுரை காய்கறி சந்தையில் கடை ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் சரவணக்குமார் என்பவர் வெட்டிக்கொலை. இதே நாளில் புதூரை சேர்ந்த செல்வசந்திரன் என்பவர் கொலை செய்து கிடந்தார். காரணம், இன்னமும் கண்டுபிடிக்கபடவில்லை.
ஜூன் 10: நீண்ட நாட்கள் ஆகியும் எனது மனைவியை காணவில்லை என்று உமாராணி என்பவரின் கணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் எட்டு மாதத்துக்குமுன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட உமாராணியை, அழுகிய நிலையில் கண்டெடுத்தனர். உமாராணியை 50 ஆயிரம் பணத்துக்கு அவரது தோழியான பிரேமா தனது கள்ளக்காதலன் வேல்முருகன் மூலம் கொலை செய்தது தெரியவந்தது.
ஜூன் 14: ஜெய்ஹிந்த்புரத்தில் காதணி விழா நடத்திய கல்யாண மண்டபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் பொழுது நடந்த தகராறில் ஷேக் இப்ராஹிம் என்பவர் சம்பவ இடத்திலே வெட்டிக்கொலை. இதே நாளில் கருப்பாயூரனி ரிங் ரோட்டில் இரவு கரிமேடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி செந்தில்குமார் கொலை செய்துகிடந்தார்.
ஜூன் 15: தந்தையர் தினமான இன்று உசிலம்பட்டியில் குடிபோதையில் தந்தை அழகர்சாமியை மகன் ராமர்பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்து, செய் நன்றி காட்டினார்.
ஜூன் 19: பேரையூர் அரசபட்டியில் இரவில் செல்வம் என்பவர் உறவினர் மூலம் கொலை செய்யப்பட்டார்.
ஜூன் 29: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் ஹோட்டல் நடத்தி வந்த ஜான் சுதாகர், எட்வின் என்கிற இருவரும் தன்னிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளியான சிவன்காளையை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்றனர். காரணம் குடி போதையில் நடந்த வாய் தகராறு.
ஜூலை 2: கருப்பாயூரணி குன்னத்தூரை சேர்ந்த டிரைவர் முத்துராஜா. திடீரென ஒரு நாள்... அவரது வீட்டுக்குள் பரமசிவம் என்பவர் புகுந்து, முத்துராஜாவின் மனைவி, குழந்தைகள் என கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். முத்துராஜ் அதே இடத்தில் பிணமானார். கொலையாளி பரமசிவம் போலீஸில் “தனது மனைவியை அபகரித்துக் கொண்டதால் கொலைசெய்தேன்” என்று சொன்னார்.
ஜூலை 6: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி மாணவன் சேது சூர்யா. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் பட்டப்பகலில் கொலை செய்தது மாணவர் கோஷ்டி.
ஜூலை 9: சோழவந்தானில் சீனிவாசன் என்பவர் அவரது சகோதரனால் கொலை செய்யப்பட்டார்.
இதே நாளில், கூடல்நகர் எஸ்.வி.பி. நகரில் ஆண் சடலம் ஓன்று எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவர் விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஜூலை 12: ஜீவா நகரில் சொத்து தகராறில் தம்பி கணேசனை அண்ணன் பாலமுருகன் என்பவர் கொலை செய்தார்.
ஜூலை 13: அ.தி.மு.க பிரமுகர் ஜெயபாண்டி என்பவர் மதுரை கலெக்டர் அலுவலக சாலையில் வைத்து வெட்டி கொலை. இது, பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஜூலை 16: கள்ளக்காதல் தகராறில் போஸ் என்பவரை சிவபாண்டி போதையில் கொலை செய்தார்.
ஆகஸ்ட் 5: உசிலம்பட்டி மாதரையில் கோழிக்கடை பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஆகஸ்ட் 6: திருமங்கலத்தில் காதர் மொய்தீன் என்பவர் கொலை. போலீஸ் சொல்லும் காரணம், அவரது அண்ணன் பஷீர் என்பவர் தனது மைத்துனியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு சொல்லி கேட்காமல் போனதால் காதர் மொய்தீன் கொலை செய்யப்பட்டாராம்.
ஆகஸ்ட் 7: யாகப்பா நகரில் சிடி கடை நடத்தும் தகராறில் விஜயகுமார் கொலை. ஜெகதீசன் கோஷ்டியினர் செய்தனர் என்கிறது போலீஸ்.
ஆகஸ்ட் 8: மதுரை திருப்பாலை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் காலை நேரத்தில் வக்கீல் முத்துதுரையை மூன்று பேர் கொண்ட குழு அரிவாளால்வெட்டி கொத்து பரோட்டா போட்டுவிட்டு பறந்துவிட்டது. பழிக்கு பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ். அன்று இரவே அ.தி.மு.க பிரமுகர் கீழவளவு பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வெட்டி கொலை. வெட்டிய கும்பலில் ஒருவரான நிரஞ்சன் என்பவரது மணிக்கட்டில் தவறுதலாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு நாளில் நிரஞ்சன் மரணம் அடைந்தார்

* மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான்.
* செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பத் திறமையை இந்தியா பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
* மங்கள்யான் விண்கலத்தின் மொத்த எடையே 15 கிலோதான். ஆனால் அதிநவீனமாக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
* மங்கள்யானில் மொத்தம் 5 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ஒரு கருவி மீத்தேன் இருக்கும் அளவை ஆராயும். 2–வது கருவி லைமன் ஆல்பா ஒளிமானி எனப்படும் போட்டோ மீட்டர் கருவியாகும். மேற்கண்ட இவை இரண்டும் செவ்வாய் கிரக காற்று மண்டல தகவல்களைத் தரும்.
* செவ்வாய் கிரகத்தின் மேற்புற படிமங்களை ஆய்வு செய்ய அதிநவீன கலர் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல சிறப்பு நிற கதிர்கள் பற்றி மற்றொரு கருவி ஆய்வு செய்யும். இவை தவிர செவ்வாய் புறக்காற்று மண்டலத்தை 5–வது கருவி ஆய்வு செய்யும்.
* செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக ஒரு ராக்கெட் தளம் அமைப்பதற்கான ஆய்வையும் மங்கள்யான் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். இதன் மூலம் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்தியாவால் விண்கலங்களை அனுப்ப முடியும்.
* மங்கள்யான் அனுப்பும் படங்களின் அடிப்படையில் விண்வெளி தொடர்பு முறைகளை விருத்தி செய்யவும் இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
* மங்கள்யான் இன்னும் 6 மாதங்களுக்கு செயல்படும் ஆற்றல் கொண்டது. இந்த 6 மாதங்களில் சுமார் 60 தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் விண்கலம் சுற்றி வரும்.
* மங்கள்யான் தனது 300 நாள் பயணத்தின்போது, வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஹெலன் புயலை மிகத் தெளிவாக படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
* மங்கள்யான் தன் 4–வது சுற்றுப்பாதையை தொடங்கிய போது சிறிது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. சரியான நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்து விட்டதால் உடனடியாக அந்த எந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டது.
* மங்கள்யான் தன் பயணத்தின் 200–வது நாள் 42 கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தது. இது மொத்த பயண தூரத்தில் 60 சதவீதமாகும்.
* மங்கள்யானின் மொத்த பயண நாளான 325 நாட்களில் 4 தடவை பாதை மாற்றி விடப்பட்டது.
* செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் 3.2 நாட்களுக்கு ஒரு தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் சுற்றி வரும்.
* மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்று சேர மொத்தம் 250 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* செவ்வாய் கிரக ஆய்வில் மங்கள்யானின் பணி, அமெரிக்காவின் நாசா திட்டங்களையும் விட முதன்மையானதாக, வலுவுள்ளதாக, பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
* மங்கள்யான் அடுத்த 6 மாதங்களில் செயல்பட போவதை பெங்களூர் அருகே உள்ள பயலாலுவில் உள்ள இந்திய தொலைநிலை விண்வெளி கட்டுப்பாட்டு மையம் கண்காணிக்கும்.

திருப்பூர்,செப்.25-
திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணிபட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 79 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள உற்பத்தி செய்யும் ரகங்களை கொமுதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக திகழும் காஞ்சிபுரம்,சேலம்,கோவை,ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்று திகழ்கின்றன.வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்புகளை கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து நிலையங்களிலும் கடந்த 15.09.2014 முதக்ல், அடுத்த ஆண்டு 31.01.2015 வரை 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. திருப்பூர் மாநகராட்சி அலுவலக வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் விற்பனை மற்றும் தங்க மழை பரிசு திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.மேலும் புதிய வரவான மகாராணிபட்டுச் சேலையை கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கூறியதாவது:-
தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமலகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு பருத்தி சேலைகளில் போர்வைகள்,படுக்கை விரிப்புகள்,தலையணை உறைகள, வேஷ்டி, லுங்கி,துண்டு ரகங்கள ஆடவர்கள அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டில் புது முயற்சியாக மகாராணி பட்டுச் சேலைகளை தீபாவளி பண்டிகை விற்பனைக்கு அறிமுகபடுத்தபத்டுள்ளது.200 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்த சாத்தூர், புதுக்கோட்டை,சின்னமனூர்,தலைவன் கோட்டை, போன்ற ஜமீன்களின் அரண்மணைகளுக்கு கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பு குழுவினர் நேரில் சென்று மன்னர்களின் ராணிகள்,இளவரசிகள் அணிந்த சேலைகளை சேகரித்து அவற்றை போலவே அச்சு அசலாக வெண்பட்டில் சிறுமுகை, திருப்பூர் கணபதிபாளையம், கோயில் வழி ஆகிய நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கோ-ஆப்டெக்ஸ்மகாராணி பட்டுச் சேலைகள் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த சேலைகள் ரூ.7 ஆயிரம் முதல், ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்த சேலைகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
14ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த அதியா துறையாரு மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராணிகள் உடுத்திய சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் அவரது குடும்ப வாரிசுகளிடமிருந்து பிரத்தியகமாய் பெற்றுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளி 2013 ம் ஆண்டின் பொது கோவை மண்டலம் செய்த விற்பனை ரூ.1473.88 லட்சங்களாகும்.நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2014ம் ஆண்டிற்கு கோவை மண்டலத்திற்கு ரூ.2400.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2013 ஆண்டின் பொது கோ-ஆப்டெக்ஸ் திருப்பூர் குமரன் விற்பனை நிலையம் ரூ.49.71 லட்சம் விற்பனை செய்துள்ளது.நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2014 ஆண்டிற்கு ரூ.75.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கபத்டுள்ளது.மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் கடந்த ஆண்டு தீபாவளி 2013 ஆண்டின் போது 155.62 லட்சங்கள் ஆகும்.நடப்பு ஆண்டிற்கு திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.240.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அரசு பணியாளர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனக்களின் பணியாளர்களுக்கு கடன் வசதி அளிக்கப்படுகிறது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கோரினார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது,வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் து.சதாசிவம், தணிக்கை மேலாளர் கோ.ராஜேந்திரன், துணை மண்டல மேலாளர் பி.ரவி, ரக மேலாளர் கே.ரவி, மக்கள் தொடர்பு மேலாளர் ஆர்.நடராஜன், கோ-ஆப்டெக்ஸ் திருப்பூர் குமரன் விற்பனை நிலைய மேலாளர் எஸ்.ஏ.தனபாலன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...