Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by Unknown in ,    


திருப்பூர் மாவட்டம், மூலனூர் சர்வோதய சங்கத்தின் சார்பில், வடுகபட்டி சாலையில் காதி பவன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருப்பூர் தமிழ்நாடு சர்வோதய சங்கச் செயலாளர் ஏ.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மூலனூர் சர்வோதய சங்கச் செயலாளர் சி.ராமசாமி வரவேற்றார். திருப்பூர் சங்க பொருளாளர் எஸ்.ராஜு, மூலனூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் பி.பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோவை, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநர் ஆர்.கணேசன் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
இதில், காதி பவனை திறந்து வைத்து கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குநர் டி.தனபால் பேசியது:
கதர் தொழில்களை மேம்படுத்த, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளித்து வருகிறது. இவற்றின் உற்பத்தி, விற்பனை, தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான ஒத்துழைப்பு மூலம் தற்போது இதற்காக ரூ. 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தமிழகத்தில் 5 கதர் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் 11 நிறுவனங்கள் இணைய உள்ளன. கதர் தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் தரமான பொருள்களை தனியாரைப் போல நவீன விற்பனையகங்கள் மூலம் விற்றால், அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியும். கதர் கிராமத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது என்றார்.
மூலனூர் சங்கத் தலைவர் கே.ஈஸ்வரன், பொருளாளர் கே.பாண்டித்துரை, கிளை மேலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி கே.லிங்கசாமி நன்றி கூறினார்.
On Tuesday, September 30, 2014 by Unknown in ,    


உடுமலை அருகில் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
உடுமலை, காந்தி சவுக் பகுதியைச் சேர்ந்த தாவூத்கான் மகன் பஷீர் அகமது(36). ஆட்டோ ஓட்டுநரான இவர், திங்கள்கிழமை நண்பர்களுடன் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணைப் பகுதிக்கு சென்றார். பின்னர் பஷீர் அகமது அங்குள்ள அமராவதி பிரதான கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் வாய்க்காலின் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்று தண்ணீருக்குள் குதித்தபோது பஷீர் அகமது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பஷீர் அகமது உயிரிழந்தார். அமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Tuesday, September 30, 2014 by Unknown in ,    




Displaying IMG_9648.JPG



Displaying IMG_9681.JPG





Displaying IMG_9604.JPG


திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க.  சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில்  ஈடுபட்டனர்.அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், ஸ்டீபன்ராஜ், உள்ளிட்டோர் பங்க்ஹெற்றனர்.


தீர்ப்பையடுத்து தனது கைவிரலை அறுத்து  தொண்டர்.
On Tuesday, September 30, 2014 by Unknown in ,    
Displaying IMG_9710.JPG






Displaying IMG_9694.JPG



திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க.  சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில்  ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் .கைதாகினர்.
நிகழ்ச்சியில்  மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  தம்பி மனோகரன்,நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர்  சாமிநாதன்,  கவுன்சிலர்கள்   கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, சண்முகசுந்தரம், விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி,   கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன், மதுரபாரதி,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி,  ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
On Tuesday, September 30, 2014 by Unknown in ,    




திருப்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த கணவருக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி தங்கமணி (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி தங்கமணி நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 2013 அக்டோபர் 4-ஆம் தேதி இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தங்கமணியின் தோள்பட்டை, இடதுகையை தங்கராஜ் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த தங்கமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதன் பிறகு தங்கமணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் தங்கராஜை கைது செய்தனர். இதையடுத்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி வசந்தலீலா திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், தங்கமணியை கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக தங்கராஜூக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
உடுமலை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மடத்துக்குளம் நால்ரோட்டில் அதிமுகவினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் பாசன சங்க தலைவர் ராஜ்குமார் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் கணியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பேரூர் கழக செயலாளர் காஜாமொய்தீன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அதிமுகவினர் பங்கேற்றனர். அதே போல் மெட்ராத்தி, காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர்: திருப்பூர் குமாரானந்தபுரம் ராம் நகரை சேர்ந்தவர் லட்சுமி (22). இவர், கடந்த மூன்று மாதமாக அப்பகுதியில் தங்கி பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் லட்சுமி அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூரில்
 மனவளர்ச்சி குன்றிய வாய்பேச முடியாத இளம்பெண்ணை நள்ளிரவில் வீட்டுக்குள் அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து, அதே பகுதியில் வசித்து வருபவர் 30 வயது இளம் பெண். இவர், சற்று மனவளர்ச்சி சரியில்லாமலும், வாய்பேச முடியாமலும் இருந்ததாக தெரிகிறது. அதனால் திருமணமாகாமல் இருந்துள்ளார். இவர், குடியிருக்கும் அதே காம்பவுண்டில் உள்ள எதிர் வீட்டில் வசித்து வருபவர் சலீம் (38). இவர், அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் அயர்னிங் கான்டிராக்டராக வேலை பார்க்கிறார். சலீமிற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சலீமின் மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டு விசேஷசத்திற்காக சிவகாசி சென்றுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு அந்த இளம்பெண்ணை, சலீம் கட்டாயப்படுத்தி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலை அந்த இளம்பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையை விட்டு எழாமல் மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, அவரிடம் விசாரித்த போது சலீம் வீட்டில் நடந்ததை கூறி அழுதுள்ளார். அதனை தொடர்ந்து, இளம்பெண்ணின் தாயார் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சலீம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பாதிப்புக்குள்ளான இளம்பெண் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,