Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown in ,    
வணிக வரி வசூலைப் பெருக்கி இலக்கை அடைய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வணிக வரி அலுவலர்களுக்கு அத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுரை வழங்கினார்.
 வணிக வரித் துறையின் மதுரை கோட்ட அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வணிகவரித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். வணிக வரித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகரன், ஆணையர் கே.ராஜாராம், கூடுதல் ஆணையர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மதுரை கோட்ட இணை ஆணையர் எஸ்.விஜயகுமார், துணை ஆணையர்கள், மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர்.
  வணிக வரி துறையின் முன்னேற்ற நடவடிக்கைகள், வரி வசூலைத் தீவிரப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள், கணினி வழியிலான சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வணிகர்களை அறிவுறுத்துவது என்பன உள்ளிட்டவை குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டுக்கான வணிக வரி வசூல் இலக்காக ரூ.68 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  இதில் இப்போது வரை ஏறத்தாழ 50 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
 வரும் மாதங்களில் எஞ்சிய தொகையை வசூல் செய்து இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டது.
On Saturday, November 01, 2014 by farook press in ,    
பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்ளும் வரை இந்த போராட்டத்தை நடத்துவேன் என்று அக்கல்லூரி ஆராய்ச்சி மாணவி தெரிவித்துள்ளார்.
மேலும் போலீசாரிடம் கல்லூரி பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலத்காரம் செய்துள்ளார் என்று புகார் கூறியுள்ளார்.
மங்களூர் பல்கலைகழகத்தில் நான் கொடவா மொழி பயிலும் மாணவி கன்னடம் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்க்காக இங்கு வந்து சேர்ந்தேன்.
பேராசிரியர் வெதாவ கன்னடா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 2 தேதி அவரது வீட்டில் வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் தொடர்ந்து என்னை ஒருவருடமாக பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.பின்னர் வருத்தம் தெரிவித்து என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார் ஆனால் அவர் என்னை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.இது குறித்து நான் கல்லூரியின் துணைவேந்தரிடன் நடந்தவற்றை கூறினேன்.பின்னர் பேராசிரியர் வெதாவவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது பல்கலைகழகவிதிகளின் படி அவர் மீது சட்டபடை நடவடிக்கை எடுக்க முடியும் என்று கல்லூரி பதிவாளர் எடப்பாடித்தா கூறினார்.
என்னை அவமானபடுத்துவதுவதற்க்காக சதி நடக்கிறது நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன் இது போன்ற செயல்களில் நான் ஈடுபடமாட்டேன் என்று கூறினார்.
இந்த புகார்கள் ஆதரமற்றது என்று நிருபிப்பேன் நான் சட்டபடி இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்று கூறினார்.
இதற்கிடையில் கல்லூரி மாணவிக்காக மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
On Saturday, November 01, 2014 by farook press in ,    
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது, ரூ.100, ரூ.500 கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சு எந்திரம் மூலம் அச்சடிக்கும் பணியில் சிலர் ஈடு பட்டுக்கொண்டு இருந்தனர்.
உடனே போலீசார் அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் ஜபருல்லா, ராஜசேகரன், ஷாஜி, முத்துசாமி, சுடலை, பேராச்சி, கருப்பையா, தாமோதரன், சீதாலட்சுமி, செந்தில்குமார் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஜபருல்லா தவிர மற்ற 9 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ஜபருல்லா தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் 1998–ம் ஆண்டு நடந்தது.
மேலும் அந்த வீட்டில் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய அச்சு எந்திரங்கள், வெட்டு எந்திரங்கள், ‘பிலீம் ரோல்’ போன்றவற்றையும், ரூ.50 லட்சத்து 64 ஆயிரத்து 200 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு பின்னர் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
சீதாலட்சுமி தவிர மற்ற 8 பேரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். இந்த வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே கருப்பையா இறந்து விட்டார்.

இதில் இறுதி கட்ட விசாரணை முடிந்து நேற்று நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஷாஜி, முத்துசாமி, சுடலை, தாமோதரன், செந்தில்குமார் ஆகிய 5 பேருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், சீதாலட்சுமி தொடர்ந்து சிறையில் இருந்து வருவதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். ராஜசேகரன், பேராச்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஜபருல்லா தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
On Saturday, November 01, 2014 by farook press in ,    
காங்கயத்தில் போலீசாருக்கு உதவும் வகையில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி வழங்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து சீர்படுத்துவது, திருவிழா காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் விபத்து காலங்களில் செய்யவேண்டிய உதவிகள், வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை போலீஸ் தலைமை காவலர் கணேஷ்பாபு மற்றும் காங்கயம் ஊர்க்காவல் படை பொறுப்பாளர் பூபதி ஆகியோர் அளித்தனர். கடந்த ஒரு மாத காலமாக நடந்த இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை பொறுப்பாளர் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஊர்க்காவல் படையின் மண்டல துணை தளபதி ஆர்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
On Saturday, November 01, 2014 by farook press in ,    
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் பி.என்.ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் திருப்பூர் கல்லூரி சாலை கண்ணகி நகரை சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜ்(வயது 55) என்பவர் கடந்த மாதம் 24–ந் தேதி ரூ.10 கோடிக்கான காசோலையை வசூலுக்கு செலுத்தினார். அந்த காசோலை, மேற்குவங்காளத்தில் உள்ள மத்திய நிலக்கரி சுரங்க தொழிலாளர் சேமநலநிதி அமைப்பின் மண்டல கமிஷனர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வழக்கம்போல் வங்கி அதிகாரிகள் அந்த காசோலையை மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தங்களது வங்கி கிளைக்கு வசூலுக்காக அனுப்பினார்கள். அப்போது, செல்வராஜ் கொடுத்த ரூ.10 கோடிக்கான காசோலையில் குறிப்பிடப்பட்டு இருந்த எண்ணுடைய காசோலை கடந்த ஜூலை மாதம் 1–ந் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வங்கியிலேயே ரூ.13 லட்சத்து 32 ஆயிரத்து 452–க்கு வசூலுக்கு செலுத்தப்பட்டு பணம் பெறப்பட்டது தெரியவந்தது. இதனால் செல்வராஜ் கொடுத்த காசோலை போலியானது என்றும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் பி.என்.ரோடு பாரத ஸ்டேட் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் மோகன்குமார், அந்த காசோலைக்கு உரிய பணத்தை கொடுக்காமல் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையிலான போலீசார் கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வராஜை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலி காசோலை தயாரிக்க, திருப்பூரை சேர்ந்த அன்பு(48), பிரதீப்குமார்(34), செந்தில்குமார்(41), கருப்பையா(46) ஆகியோர் உள்பட மேலும் சிலர் செல்வராஜுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், அன்பு, பிரதீப்குமார், செந்தில்குமார், கருப்பையா ஆகிய 5 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபோல் வங்கியில் போலியான காசோலைகள் கொடுத்து ஏமாற்றும் நபர்கள் அடையாளம் காண்பதில் வங்கி அதிகாரிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், காசோலைகளின் மீது பணம் கொடுப்பதற்கு முன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் அறிவுறுத்தி உள்ளார்.
On Saturday, November 01, 2014 by farook press in ,    




மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள கருவம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மற்றும் அக்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், தண்ணீர் ஊற்று விநாயகர், முருகன்,சிவன்,கன்னிமார்,துர்கையம்மன்,நவக்கிரகம்,துவாரபாலகர் ஆகிய கோவில்களில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜைக்கு  துணை மேயர் சு.குணசேகரன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எம்.மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், நிலைக்குழு தலைவர் பூலுவபட்டி பாலு, கருணாகரன்,சாகுல்அமீது, ராஜேஷ்கண்ணா, மாரிமுத்து, மயில்ராஜ், பி.பார்த்திபன், கவுன்சிலர்கள்  சண்முகசுந்தரம், கணேஷ் மற்றும் கோகுல், யுவராஜ் சரவணன், சடையப்பன்,பிரிண்டிங் மணி,பொன்.மருது, நீதிராஜன், முன்னாள் கவுன்சிலர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோமதி சம்பத், பஸ் ஸ்டாண்ட் சந்திரன்,ஆண்டிபாளையம் செல்வராஜ், சுபாஷ் மற்றும் மகளிர் அணியினர்கள்ஆகியோர் உள்பட பாலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவில் நிர்வாகிகள் மைடி பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தசாமி,சி.டி.சி.பொன்னுசாமி,கோவில் குருக்கள் பாலசுப்பிரமணியம், உதவி குருக்கள் வெங்கடேஷ்,ரகுநாதன் ஆகியோர் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோர்களை  வரவேற்றனர்.பூஜையை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
On Saturday, November 01, 2014 by farook press in ,    


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம் ஆகியோர் வழங்கினர். விழாவில் மேலும் பூளவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 104 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், குடிமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 111 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 177 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 35 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், ஏ.நாகூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 71 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1012 பேருக்கு வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்ச்சியில் குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, தொகுதிச்செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழுதலைவர் முருகன், உடுமலை நகரமன்றத்துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், வட்டாட்சியர் சைபுதீன், செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, பூளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகானந்தன், குடிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கஜம் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
On Saturday, November 01, 2014 by Unknown in ,    
ஆசிரியர் தற்கொலை                                                                                                                                                                                                                                                                                                                                                    கரூர் அருகே, அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.                                
கரூர் அருகே, திருமாநிலையூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், 40, குருணைகுளத்து அரசு பள்ளியில் ஆசிரியர். மனைவி சவுந்தர்யா, 24. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்ற சவுந்தர்யா, மீண்டும் வீட்டுக்கு வராமல் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் காசிவிஸ்வநாதன், தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார்.பசுபதிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர். 
On Saturday, November 01, 2014 by Unknown in ,    

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணனை தேடி தரும்படி தங்கை போலீசி ல் புகார்                                                                                  க.பரமத்தி நஞ்சைகாளக்குறிச்சி அருகே அமராவதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணணை தேடி தரும்படி தங்கை சின்னதாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

திருச்சி மாவட்டம், முசி றி வட்டம், ராமசமுத்திரம் அய்யலூரை சேர்ந்தவர் பழனிவேல் (55). இவரது தங்கை லட்சுமி. இவர் கரூர் மாவட்டம், நஞ்சைகாளக்குறிச்சி அருகேயுள்ள செல்லாண்டியம்மன்கோயில் பகுதியில் வசித்து வருகிறார். பழனிவேல் மகன் கணேச னும் (18), மகள் நந்தினி (15) ஆகியோர் அத்தை லட்சுமி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் பார்ப்பதற்காக பழனிவேல் அங்கிருந்து புறப்பட்டு நஞ்சைகாளக்குறிச்சி அமராவதி ஆற்றின் எதிர்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் பகுதிக்கு செல்ல ஆற்றில் இறங்கியுள் ளார். அப்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென் றதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், போலீசார் அவரை தடுத்துள்ளனர்.  எதிர்கரையில் இருந்த கணேசனும், தந்தையை ஆற் றில் இறங்கி வரவேண்டாம் என தடுத்துள்ளார். இவற்றையெல்லாம் மீறி ஆற்று வெள்ளத்தில் பழனிவேல் இறங்கியதாக தெரிகிறது. அப்போது அவரை வெள் ளம் அடித்துச் சென்றுள் ளது. இதுகுறித்து அவரது தங்கை லட்சுமி சின்னதாராபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நீரில் அடி த்துச் சென்ற பழனிவேலை தேடி வருகின்றனர்.