Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி:

காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனை செயல்படுத்த மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. கர்நாடக அரசின் இத்தகைய அணுகுமுறை குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

காவிர் நீரை திறக்க மறுத்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பிடிவாதமான நிலைப்பாடு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை என்பதை ஏற்க மறுத்துள்ளது. 

காரைக்கால் பிராந்தியத்தில் சம்பா நெற்பயிர்களுக்கு காவிரி நீர் முக்கியமாக தேவை. தண்ணீர் கிடைக்காவிட்டால் விவசாயிகள் துயரமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

எனவே, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பினை மீறுவது நீதித்துறைக்கும், சட்டமன்றத்துக்குமிடையே மோதலை மட்டுமே உருவாக்கும். மேலும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பினை அம்மாநிலஅரசு உறுதிசெய்ய வேண்டும்

On Saturday, September 24, 2016 by Unknown in    

திருப்பூர், திருப்பூர் மாநகரில் அடிக்கடி நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க மாநகர பகுதியில் வாகன தணிக்கை செய்ய போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சைமாத்தூர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருப்பூர் மாநகர பகுதிகளில் போலீசார் அதிரடியாக வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 20 பேர், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 35 பேர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 191 பேர் என்று சாலை விதிகளை மீறியதாக பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 489 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.82 ஆயிரத்து 620 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

On Saturday, September 24, 2016 by Unknown in    

இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

கோழிக்கோடு:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கேரளாவை நினைத்தாலே அது கடவுளின் நாடு என்பதுதான் நினைவுக்கு வரும். கேரளாவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து விழா மேடை வரையில் திரண்டிருந்த மக்களைக் கண்டு வியப்படைந்தேன்.

வளைகுடா நாடுகளுக்கு சென்று பணிபுரிபவர்களில் கேரள மக்களே அதிகம். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கேரள மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கும். 

ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் உயர்வில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. நான் தேர்தல் அரசியலில் நுழையும்முன் பா.ஜ.க,வில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். கட்சி தொண்டர்களின் கடின உழைப்பும் தியாகமும் ஒருபோதும் வீணாகிவிடாது

On Saturday, September 24, 2016 by Unknown in    

கோவையில் வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது.

இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் கோவையில் வெள்ளிக்கிழமை பரவலாக வன்முறை வெடித்தது 


கோவை ரயில் நிலையம், கலைக்கல்லூரி சாலை, டவுன்ஹால், உக்கடம், கெம்பட்டி காலனி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம் சாலை, ரத்தின புரி, காந்திபுரம் உட்பட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதனால், பேருந்துகள் ஓடவில்லை.

நகரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் என கண்டறியப்பட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆற்றுப்பாலம் சுங்கச் சாவடி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களாவர். இன்னும் பலர் கைதாகலாம் என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.

4 மாவட்டங்களில் கடையடைப்பு

சசிக்குமார் படுகொலையைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி மாவட்டங்களில் வெள்ளிக்கிழ்மை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளும் ஓட வில்லை. மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.முழு விவரம்: |கோவையில் போலீஸ் வாகனத்துக்கு தீ; பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் மக்கள்|

6 தனிப்படைகள் அமைப்பு:

இதற்கிடையில், கொலையாளிகளை கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தெரிவித்துள்ளார்.

சசிக்குமார் கொலை குறித்து உளவுப் பிரிவு, "சசிக்குமாரை கொன்றது 4 பேர் கொண்ட கும்பல். மொபட்டில் சசிக்குமார் அன்றாடம் செல்வதை கண்காணித்தே கொலையை நடத்தியுள்ளனர். இருப்பினும், சசிக்குமாரின் செல்போன் அழைப்பு மற்றும் வாட்ஸ் அப் போன்ற விஷயங்களையும் சேகரித்து வேறு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சசிக்குமாரின் முதுகு, கழுத்து, கை என பல பகுதிகளில் 11 வெட்டு விழுந்துள்ளன" என்றனர்.

சகோதரர் சொன்ன தகவல்:

கொலையான சசிக்குமாரின் தம்பியும், கோவை மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவருமான சுதாகர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘எங்கள் அண்ணன் சசிக்குமாருக்கு கேரளாவில் உள்ள ஒரு அமைப்பின் லெட்டர் பேடில் சில ஆண்டுகளுக்கு முன்பே மிரட்டல் கடிதம் வந்தது. அதையடுத்து அண்ணணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட் டது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரை அவருக்கு ஒரு போலீஸ் துணையாகவே இருந்தார். அதை ஒரு வாரம் முன்பு தான் விலக்கினார்கள்" என்றார்


On Saturday, September 24, 2016 by Unknown in    

திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜினீயரிங் மாணவர் கொலை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சங்கர்(வயது 22). இவருடைய மனைவி கவுசல்யா(19). இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டனர். கடந்த மார்ச் மாதம் 13–ந் தேதி உடுமலையில் சங்கரையும், கவுசல்யாவையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது.இதில் சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் தாய்மாமா பாண்டித்துரை உள்பட 11 பேரை கைதுசெய்தனர். இதில் 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.28–ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

இந்த கொலை வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி(பொறுப்பு) எம்.கே.ஜமுனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்து சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு சுதா முன்னிலையில் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனால் மாஜிஸ்திரேட்டு சுதாவுக்கு இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மாஜிஸ்திரேட்டு நேற்று சாட்சியம் அளிக்க வரவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 28–ந்தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது

On Saturday, September 24, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் டாக்டர் சரவணனின் இறப்பு சம்பவத்தில் டெல்லி போலீசாரின் ஒத்துழைப்பு இல்லை என்று அவருடைய தந்தை கணேசன் நேற்று நிருபர்களிடம் கூறினார்.டாக்டர் சரவணன்

திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த டாக்டர் சரவணன் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் அவர் கடந்த ஜூலை மாதம் 9–ந் தேதி தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் டாக்டர் சரவணன் இறந்தது தற்கொலையாக இருக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் திருப்பூரில் நேற்று டாக்டர் சரவணனின் தந்தை கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:–ஒத்துழைப்பு இல்லை

எனது மகனின் இறப்பு தற்கொலை அல்ல என்று அப்போதே கூறினேன். தற்கொலை செய்வதற்கான அவசியம் அவருக்கு இல்லை. இது திட்டமிட்ட கொலை. படிப்பதில் அவர் நம்பர் ஒன். அவருடைய குறிக்கோள் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தான். அங்கு இடம் கிடைத்த பின் அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.உப்பிலிய நாயக்கர் பேரவை உதவியுடன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எங்களுக்கு டெல்லி போலீசாரின் ஒத்துழைப்பு இல்லை. தற்கொலை என்று வழக்கை முடிப்பதிலேயே அங்குள்ள போலீசார் குறியாக உள்ளனர். திட்டமிட்டு கொலை என்று கூறுவதற்கு காரணம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. டெல்லி போலீசாரும் இதற்கு உடந்தை. நாங்கள் விசாரித்தவகையில், அங்கு இதுபோல் பல கொலைகள் நடந்ததாக தெரிவித்தனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார், திருப்பூரில் உள்ள டாக்டர் சரவணனின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–மரண தண்டனை

டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல. கொலை தான் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் கூட்டமைப்பை சேர்ந்த தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவையினர் ஒத்துழைப்புடன் இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டில் அணுகினோம். வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சியினரும் குரல் கொடுக்கிறார்கள். இதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு இதை துரிதப்படுத்த வேண்டும்.டாக்டர் சரவணனின் குடும்பத்துக்கு தமிழக முதல்–அமைச்சர் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இந்த வழக்கை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கொலையாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். மத்திய அரசும், டெல்லி அரசும், போலீசாரும் சேர்ந்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும். டாக்டர் சரவணனின் குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

On Saturday, September 24, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலையில் கடைகளை அடைக்க வலியுறுத்தியதாக இந்து முன்னணியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.கடைகளை அடைக்க வலியுறுத்தல்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் உடுமலையில் நேற்று காலை கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. இதற்கிடையில் இந்து முன்னணியினர் சிலர் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.இதன் பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மேற்பார்வையில் அங்கு போலீசார் விரைந்தனர். அத்துடன் அங்கு கடைகளை அடைக்க வலியுறுத்தியதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும் இந்து முன்னணியை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.21 பேர் கைது

மேலும், ஆங்காங்கே கடைகளை அடைக்க வலியுறுத்தியதாக இந்து முன்னணியை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடுமலை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வ.உ.சி. வீதி உள்ளிட்ட வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.சில வீதிகளில் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ஆனால் பெரும்பாலான பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. காலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள் பிற்பகலில் அடுத்தடுத்து திறக்கப்பட்டன

On Saturday, September 24, 2016 by Unknown in    

*கோவையில் இயல்பு நிலை திரும்பியது : பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிப்பு*

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையால் நேற்று பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோவையில் இயல்புநிலை திரும்புகிறது. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்க தொடங்கின. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Thursday, September 22, 2016

On Thursday, September 22, 2016 by Unknown in    

பொங்கலூர் ஒன்றிய பகுதியில் தார் சாலை பூமிபூஜை சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் நடந்தன.உடன் ஒன்றிய பெருந்தலைவர் சிவாசலம்,ஊராட்சி மன்ற தலைவர் US.பழனிசாமி,புத்தெரிச்சல் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.