Monday, October 10, 2016

On Monday, October 10, 2016 by Tamilnewstv in    

Sunday, October 09, 2016

On Sunday, October 09, 2016 by Tamilnewstv in    
திருச்சி 9.10.16
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் பாஜகாவிற்கு எச்சரிக்கை தனியார் சட்;டத்திற்குள் தலையிடவேண்டாம்
திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் திருச்சி மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டம் வரகனேரி தவ்ஹித் மர்க்கஸில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் அல்தாஃபி கூறுகையில் சங்பரிவாரத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் உச்ச நீதிமன்றத்தில் தலாக் (விவாகரத்து) வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இஸ்லாமியச் சட்டத்திற்குள் நுழைவது முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகுமா? ஏன்ற கேள்வியோடு மத்திய அரசின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது
உடனே பரிந்துரை என்கிற பெயரில் பாஜக அரசு முஸ்லிம் விரோதப்போக்கைக் காட்டும் விதமான அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது
முத்தலாக் என்பது சமத்துவத்திற்கு எதிரானது பெண்களின் சயமரியாதையைப்பாதிக்கக்கூடியது என்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் இஸ்லாமியப்பெண்களின் நலனில் பாஜகவிற்கு ஏன்    அக்கரை தலாக் நடைபெறும் மதசார்ப்பற்ற இந்தியாவுக்கு பொறுந்தாது என்பதும் ஆணுக்கு எப்படி சம உரிமையோ பெண்களுக்கும் மதசார்பின்மை அரசுக்கு தானே தவிர தனிமனிதனுக்கு அல்ல என்றும் இதுபோன்ற தனிமனிதனின் சட்டத்திற்குள் பாஜக தொடரும் நிலை ஏற்ப்பட்டால் பாஜக அரசிற்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

பேட்டி அல்தாஃபி

Thursday, October 06, 2016

On Thursday, October 06, 2016 by Tamilnewstv   

Tuesday, October 04, 2016

On Tuesday, October 04, 2016 by Tamilnewstv in    
திருச்சி - 04.10.2016
திருச்சி – கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்துமத அமைப்புகளை தடை செய்ய கோரியும். தடையை மீறி ஆர்ப்பாட்டம் - மக்கள் அதிகாரம் அமைப்பினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது

கோவையில் இந்து முன்னணி தலைவர் சசிகுமார் கொல்லப்பட்டதை காரணம் காட்டி கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணி பிஜேபி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நடத்திய வன்முறைகளும் பொதுமக்களின் கடைகளும் வாகனங்களும் சு10றையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதையும் கண்டித்தும் அப்பாவி பொதுமக்களின் உயிரையும் உடமையையும் அழிக்க திட்ட மிட்டு ஏவி விட்ட இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி நடைபெற்ற போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர். தர்மராஜ் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இந்திய  கம்யூனிஸ்ட் கட்சிபுதிய தமிழகம்ஆதி தமிழர் கட்சி திராவிடர் விடுதலை கழகம் தந்தை பெரியார் திராவிட கழகம் ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்;த்தினர். 
பேட்டி: தர்மராஜ் (மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)
On Tuesday, October 04, 2016 by Tamilnewstv in    
திருச்சி 3.10.16
திருச்சி இன்று கடைசி நாள் வேட்பு மனு தாக்கல்
திருச்சியில் மொத்தம் 65 வார்டு மாமன்ற உறுப்பினர் பதிவிக்கு திமுக பஜாக தேமுதிக பாமக அஇஅதிமுக போன்ற பல்வேறு கட்சியிலிருந்து மனு தாக்கல் செய்தனர்
திருச்சி புத்தூர் கோ அபிஷேக புரத்தில் கண்ணன் உதவி தேர்தல் நடத்துனரிடம் 53வார்டுக்கு திமுக நாகராஜ் 50வார்டுக்கு பாஜக காளீஸ்வரன் 49வார்டுக்கு திமுககமால்முஸ்தாபா 41வாது வார்டுக்கு திமுக கவிதாசெல்வம் 41வார்டுக்கு தேமுதிக ரேவதி 53வார்டுக்கு அஇஅதிமுக தினேஸ் 40வாதுவார்டுக்கு திமுக முத்துச்செல்வம் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்;;.
இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இருக்க பலத்த காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Friday, September 30, 2016

On Friday, September 30, 2016 by Unknown in    

திருப்பூர், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ‘ பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் வருவாய் கிராம அளவிலான பயிர் அறுவடை அடிப்படையில் இழப்பீடு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் கட்டாயம் இந்த திட்டத்தில் இணைக்கப்படுவர். கடன் பெறாதவர்கள், கரீப் பருவத்தில் காப்பீட்டுத்தொகையில் 2 சதவீதமும், ரபி பருவத்தில் 1.5 சதவீதமும் செலுத்தி பயிர்க்காப்பீடு செய்யலாம். வர்த்தக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டு தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள காப்பீட்டு கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்தும். இழப்பீட்டு தொகை முழுவதும் காப்பீட்டு நிறுவனமே வழங்கும்.இந்த காப்பீட்டுத்திட்டத்தில் பருவம் தொடங்கும் முன் மழை பொய்த்தாலும், விதைப்புக்கு பிறகு மழை பொய்த்து போனாலும், காப்பீடு தொகையில் 25 சதவீதம் வரை இழப்பீடு பெறலாம். அறுவடைக்கு பின், தானியங்களை உலர வைக்க வேண்டிய பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும்’ என்றார்.கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குமார், வேளாண்மை இணை இயக்குனர் ரங்கநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அல்டாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

On Friday, September 30, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலை அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–பூட்டு உடைப்பு

உடுமலையை அடுத்துள்ள கண்டியகவுண்டன்புதூர் பொன்மயில் நகரைச்சேர்ந்தவர் அசோக் (வயது40) விவசாயி. இவர் கடந்த 26–ந்தேதி குடும்பத்துடன் ஆந்திரமாநிலம் மந்த்ராலயாவில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் குடியிருக்கும் சிதம்பரசாமி என்பவர் அசோக் வீட்டின் வழியாக நேற்றுமுன்தினம் வந்தபோது அசோக்கின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சிதம்பரசாமி உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட தகவல் அசோக்கிற்கு தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு நேற்று உடுமலைக்கு வந்து சேர்ந்தார்.13 நகைகள் திருட்டுஅவர் வந்து பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அசோக் உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை உடுமலை போலீசார் தேடி வருகின்றனர்

On Friday, September 30, 2016 by Unknown in    

ஊத்துக்குளி,பனியன் கழிவுகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் தொழில் செய்ய வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் வாலிபர் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டார்.இந்த பரிதாப சம்பவம் பற்றி கூறப்படுதாவது:–வங்கியில் கடன்

திருப்பூர் பூலுவப்பட்டி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துராமன் மகன் ராம்கணேஷ் (வயது27). இவர் ஊத்துக்குளி அருகே உள்ள பள்ளகவுண்டம்பாளையத்தில் பனியன் கழிவுகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் 9 பேர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.ராம்கணேஷ் திருப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.28 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இன்னும் ரூ.7 லட்சம் கடன் கட்ட வேண்டி இருந்தது. கடந்த 4 மாதங்களாக வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை ராம்கணேஷ் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் வங்கியில் இருந்து அதிகாரிகள் வந்து ஏன் கடன் தவணையை கட்டவில்லை என்று ராம்கணேசிடம் விசாரித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை

இதனால் மனம் உடைந்த காணப்பட்ட ராம்கணேஷ் நேற்று பள்ளகவுண்டம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் தனது காலில் மின்சார வயர்களை சுற்றிக்கொண்டு மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ராம்கணேசின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

On Friday, September 30, 2016 by Unknown in    

திருப்பூர், பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதிராணியை சந்தித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் மனு கொடுத்தார்.கலந்தாய்வு கூட்டம்

இந்தியாவில் பருத்தி பஞ்சு விலை சீராக்கும் வகையில் மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதிராணி தலைமையில் நேற்று டெல்லியில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், பொதுச்செயலாளர் விஜயகுமார், நிப்ட்–டீ கல்லூரி தலைவர் முருகானந்தம், நூற்பாலை அதிபர்கள் சங்கமான சைமா, டாஸ்மா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதுபோல் ஆந்திரா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த நூற்பாலை அதிபர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரியிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட்டது.பஞ்சு விலை

கூட்டம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, ‘வரும் காலங்களில் பருத்தி பஞ்சு விலை சீராக இருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஜவுளித்துறை மந்திரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருத்தி பஞ்சு விலை உயர்வு காரணமாக அடிக்கடி நூல் விலை அதிகரித்து அதனால் பின்னலாடை துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவித்தோம்.பருத்தி பஞ்சு தட்டுப்பாடு காரணமாக நூல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பின்னலாடை தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும். இந்திய நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தி பஞ்சு தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ள பருத்தியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதுதொடர்பாக மத்திய மந்திரி தலைமையில் இந்திய பருத்தி ஏற்றுமதி கழகம், மத்திய செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு மீண்டும் நூற்பாலை அதிபர்களுடன் கூட்டம் நடத்தி தகுந்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் என்றார்.மேலும் பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.