Saturday, March 03, 2018

On Saturday, March 03, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 3.3.18
திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்
திருச்சி திருவாணைக்காவல் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இது குறித்து தெரிவித்தது திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் (தற்போது மாநில நெடுஞ்சாலையில்) உள்ள குறுகிய திருவாணைக்காவல் ரயில்வே மேம்பாலத்திறற்கு மாற்றாக நான்கு வழித்தட புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டிருந்தது அதன்படி இப்பாலம் பணிகள் சென்னை- திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும் கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுவருகிறது.இப்பால பணி சென்னை திருச்சி கல்லணை ஆகிய மூன்று சாலைகளையும்  இணைக்கும் சாலையாக  உள்ளது
இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 2.10 லட்சம்மக்கள் தொகை கொண்ட திருவரங்கம்ääதிருவாணைக்காவல் மற்றும் லால்குடி புள்ளம்பாடிääதிம்மராய சமுத்திரம் மேலூர் திருச்சி மாநகரம் மற்றும் கரூர்ää குளித்தலை நகரத்துடன் இணைக்கும்.தற்போது திருவானைக்காவல் பழைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது
இப்பால வேலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்புதிய மேம்பாலத்தின் நீளம் 1430.284 மீட்டரும் 17.20 அகலமும் பாலப்பகுதியில் மட்டும் கட்டுமான பணிகள் 907.76 மீட்டரும் பாலத்தின் ஓடுதள அகலம் 7.50மீட்டரும் (நான்கு வழிச்சாலை )ஆகும் 
இப்புதிய மேம்பாலத்திற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது பாலத்தின் மீதம் உள்ள பணிகளை முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு முடிபெரும் தறுவாயில் உள்ளது என்றும் அதனால் சென்னை- திருச்சி திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் திருவானைக்காவல் மேம்பாலம் ரூ47.3கோடி மதிப்பில் கட்டப்பட்டு தற்போது 85 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுமெனவும் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணி முடிந்தவுடன் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

On Saturday, March 03, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி      3.3.18

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை  அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில் அனைத்து வார்டுகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அன்னதானம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி பெரியகடை வீதி சந்துக் கடை பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு    எழை எளிய மக்கள் 200 பேருக்கு மதியம் உணவுகள் மற்றும் 200 பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை  அமைச்சர்கள்

வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியானது சந்துகடை வார்டு வட்ட பிரதிநிதி  சந்துரு  ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம்ம
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு சால் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

Sunday, February 25, 2018

On Sunday, February 25, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி      25.2.18

இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி  என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு

2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.

இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.

NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.

பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி
On Sunday, February 25, 2018 by Tamilnewstv   

Friday, February 23, 2018

On Friday, February 23, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லுரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி 20 ஆம் தேதி துவங்கியது 
துவங்கிய இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றனர். 

முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் நாளை நடைபெற உள்ள கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள். 
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை மறுநாள் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி இன்று மாலை நடைபெற்ற பாராட்டு விழாவில் போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கப்படனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட்டது

On Friday, February 23, 2018 by Tamilnewstv in ,    

திருச்சி         22.2.18

இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார்

சர்வதேச ஆசிய நாடுகள் பங்குப் பெற்ற விளையாட்டுப் போட்டிகள் பாக்ஸிங், சிலம்பாட்டம், வில்வித்தை, ஜிம்னோஸ்டிக் என்பன போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்றன. இப்போட்டியில்  பங்களாதேஷ், ஈரான், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, நேபாளம், ஈராக், இந்தியா உட்பட 9 நாடுகள் கலந்து கொண்டனர். 

இந்த விளையாட்டு போட்டிகளில் திருச்சியை சேர்ந்த 21 பேர் தங்கம், வெள்ளி பரிசுகளை வென்றனர். அதில் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த யுகேஷ்குமார் - 11-ம் வகுப்பு மாணவன் 2 நாள் டெல்லியில் நடைப்பெற்ற சிலம்பாட்ட போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் பரிசாக தங்கம் வென்றார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுகேஷ்குமார் :
நான் கற்ற இந்த கலையை மற்றவருக்கு கற்றுக் கொடுத்து தங்கம் வெல்ல செய்வேன் என்று தெரிவித்தார்

Thursday, February 22, 2018

On Thursday, February 22, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி            22.2.18

விருந்தோம்பலில் வணிக விடுதி பட்டத்தை பெற்ற திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்

அசோசியேசன் சேம்பா் ஆர் காமர்ஸ் சார்பில் கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான போட்டியை நடத்தியது.

பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் தென் தமிழகத்தில் இருந்து சுமார் 25 -க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகள் பங்கேற்றன.

அதில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி சிறந்த விருந்தோம்பலுக்கான  பரிசையும் - கோப்பையும் பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சியானது டெல்லியில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிபெற்ற நட்சத்திர விடுதிகளுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கான விருதை திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம் விடுதி பொது மேலாளர் மாரி ராஜா பெற்று கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

பேட்டி : மாரி ராஜா - பொது மேலாளர் (எஸ்.ஆர்.எம் விடுதி)

Tuesday, February 20, 2018

On Tuesday, February 20, 2018 by Tamilnewstv   
நல்ல குடிமகனாக உருவாக பள்ளிகள் வழிகாட்ட வேண்டும்
மயில்சாமி அண்ணாதுரை

திருச்சி
இளைய தலைமுறை நல்ல குடிமகனாக உருவாக பள்ளிகள் வழிகாட்ட வேண்டும் என்றார் இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.
திருச்சி செளடாம்பிகா கல்விக் குழுமத்தின் மெளன்ட் லிட்ரா ஸி பள்ளியின்(சிபிஎஸ்சி) ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியது:
மாணவர்கள் பாடத்தில் மட்டுமல்லாது விளையாட்டு போட்டிகளில் முன்னணியில் வருவதைக் காட்டிலும் நல்ல குடிமகனாக உருவாக வேண்டும். அதற்கு பள்ளிகள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். இதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் இருந்த பள்ளிகளில் இருந்த உள்கட்டமைப்பு வசதிகள் இன்று பன்மடங்கு அதிகமாகியுள்ளன. இது மாணவர்களுக்கு பல்வேறு பரிமாணங்களில் சிறப்பாக விளங்க பேரூதவி வருகின்றன. மாற்றங்களுக்குட்பட்டது தான் உலகம். அந்த மாற்றத்தை நாம் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டாலேவாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முதல் செயற்கைக்கோளை ரஷ்யாவின் உதவியோடு தான் விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தற்போது 40 நாடுகள் தங்களது செயற்கைக்கோளை இஸ்ரோ வழியாக அனுப்ப ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் நம்நாடு பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
இதுபோட்டிகள் நிறைந்த உலகம். நாங்கள் கடந்த மாதம் ஒரு செயற்கைக்கோள் தயாரித்தோம் என்றால், அதே விட நேர்த்தியாக அடுத்து தயாரிக்கும் செயற்கைக்கோளை தயாரிக்க வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது.
செவ்வாய் கோளுக்கு செயற்கைக்கோளை அனுப்ப அமெரிக்கா 5 முறையும், ரஷ்யா 9 முறையும் முயற்சித்த பிறகே வெற்றி பெற்றன. ஆனால், முதல் முயற்சியிலேயே சந்திரயான் செயற்கைக்கோளை நாம் வெற்றிகரமாக ஏவினோம். அதற்கு காரணம் பல்வேறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டோம்.
நம் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதை பெற்றோர்கள் செய்து முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
பள்ளிக்கூட படிப்பு மட்டும் இந்த காலத்தில் போதுமானதல்ல. அதையும் தாண்டி நிறைய திறன்களை கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த உலகில் நாம் சாதிக்க முடியும். அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோரும் இதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
விழாவில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் பேசுகையில், எந்த தொழிலிலும், பணியிலும் போட்டியாளரை வைத்து தான் நமது வெற்றி உறுதிசெய்யப்படுகிறது. போட்டியாளர் நம்மை விட திறமையானவராக இருந்தால் நாம் பின்னுக்கு தள்ளப்படுகிறோம். போட்டியாளர் இருந்தால் தான் நமதுதிறமைகளை மேன்மெலும் வளர்த்துக் கொள்ள முடியும்.
வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல், அனைத்திலும் பங்கேற்பு என்பது முக்கியமானது. அப்போது தான் நாம் எந்தநிலையில் இருக்கிறோம் என்பது தெரியவரும். இல்லையெனில் வெற்றிக்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்பது கூட தெரியாமலேயே போய்விடும்.
தன்னம்பிக்கை, துணிச்சல், விடாமுயற்சி ஆகியவை தான் வெற்றிக்கு முக்கியமானவை. இதை மாணவர்கள் மனதில் கொண்டால் எதிலும் வெற்றி கிடைக்கும் என்றார்.
விழாவுக்கு குழுமத் தலைவர் எஸ். ராமமூர்த்தி, செயலாளர் ஆர். செந்தூர்செல்வன், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.