Tuesday, May 29, 2018

On Tuesday, May 29, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் தமிழகமெங்கும் கடையடைப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக திருச்சி லால்குடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 காலமுறை ஊதியம் சமூகப்பாதுகாப்பு உடனடியாக பெற்றிட தொகுப்பு உதயம் எனும் கொத்தடிமை விளங்கிட தீவிர செயல்பாடுகள் கொண்ட இடைத்தரகர்கள் ஒலித்திட சுயநல வேட்கை கொண்ட மாவட்ட மேலாளர் பணியாளர் விரோதப்போக்கை தகர்த்திட மதுக்கூட ஒப்பந்ததாரர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் வன்முறைத் தாக்குதலை முறியடித்த உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் ஜவகர்லால் நேரு மாவட்ட தலைவர் பெருமாள் மாவட்ட அமைப்பு செயலாளர் முன்னிலை வகித்தனர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் வரவேற்புரையாற்றினார் முருகானந்தம் மாநில துணைச் செயலாளர் சிறப்புரையாற்றினார் ராஜா பூபதி சுப்பிரமணியம் கடல் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் பிச்சைமுத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றி உரையாற்றினார்


பேட்டி..... முருகானந்தம் மாநில துணைச் செயலாளர்

Sunday, May 27, 2018

On Sunday, May 27, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது நடைபெற்ற முகாமில் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்

மேலும் முகாமில் குடலிறக்கம் குடல் இறக்கம் ஏற்படும் இடங்கள் சார்ந்து ஐயா hiranya டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை முறைகள் லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்

மேலும் பித்தப்பை நோய்கள் கட்டிகள் சினைப்பை கட்டிகள் கர்ப்பப்பை கட்டிகள் மார்பக கட்டிகள் மூலம் தீக்காய சிகிச்சைகள் போன்ற நோய்களுக்கு இலவச ஆலோசனை வழங்கினார் நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர் முகாமின் ஏற்பாடுகளை மருத்துவ மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன் மற்றும் உதய பாஸ்கர் மருத்துவ ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

Sunday, May 20, 2018

On Sunday, May 20, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிரீன் கிரிஸ்டல் சோசியல் கமிட்டி சார்பாக ராகவேந்திரா மடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன அதைப் பற்றி டாக்டர் ராஜேந்திரன் கூறிய போது இந்தியா முழுவதும் 29 ஸ்டேட்டில் 2 யூனிட் டெரிட்டரி யூனிட் உள்ளது என்றும் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் அமைப்பினர் கவரப்பட்டுள்ளது என்றும் ஆந்திராவில்  11 மாவட்டங்கள் கவரப்பட்டுள்ளது என்றும் தெலுங்கானாவில் 39 மாவட்டத்தில் எட்டு மாவட்டங்கள் இந்த அமைப்பின் மூலமாக கவரப்பட்டுள்ளது என்றும் இந்த அமைப்பு


இந்த அமைப்பு மூலமாக மாணவர்களிடையே எழுச்சி ஏற்படுத்தவே நாங்கள் உள்ளோம் என்றும் யாரிடமும் நன்கொடை மற்றும் கொடை வாங்குவது இல்லை என்றும் தெரிவித்தார் இந்த அமைப்பு மூலமாக நீர் மேலாண்மையை மேம்படுத்த வே செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் வரும் வாரத்தில் பூம்புகாரில் கருத்தரங்கம் நடத்த போகிறோம் என்றும் கூறினார்


பேட்டி டாக்டர் ராஜேந்திரன்



Thursday, May 17, 2018

On Thursday, May 17, 2018 by Tamilnewstv in ,    
மலேசியா தலைநகர் கோலாம்பூரிலிருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் இன்று மதியம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் டோர் மெட்டல் டிடெக்டர் கருவியை தாண்டி செல்லும் போது பீப் சத்தம் ஒலித்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த ஹரிபிரகாஷ் (35) என்பவர் ரூ. 3.71 லட்சம் மதிப்பிலான 120 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

இதே போல் இலங்கை தலைநகர் கொலும்புவில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த விருத்தாசலம் அன்பரசன் (29) என்பவர் ரூ.3.55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த போது சிக்கினார்.

கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Thursday, May 17, 2018 by Tamilnewstv in    
திருச்சி   17.5.18

திருச்சி தீரன் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்குப் பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.வரும் கல்வியாண்டு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக பராமரிக்கப் படுகிறதா ஆய்வு செய்யப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்கள் 100% உறுதி செய்யப்படும் அனைத்து பள்ளி வாகனங்களும் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு செய்து முடிக்கப்படும்.

பள்ளி வாகனங்கள் ஆய்வை வருவாய் துறை மற்றும் இதர துறைகள் மூலம் கண்காணிக்கப்படும். பள்ளி வாகனஒட்டுனர்களுக்கு உடல் தகுதி, கண் பரிசோதனை போன்றவை ஆய்வு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வில் பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் வாகனங்களை தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

அந்த வகையில் திருச்சி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 17 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதி சான்று தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பள்ளி வாகனங்களும் முதலுதவி பெட்டி, அவசர கால வழிகள் உள்ளதா, டயர் மற்றும் பிரேக் திறன் ஆகியவற்றில் குறைபாடு இருப்பின் பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்.

ஆய்வின் போது பள்ளி வாகனஒட்டுநர்களுக்கு Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவனை செய்யப்பட்டு 152 ஒட்டுநர்களில் 16 ஒட்டுநர்க்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டுநர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை எப்படி அணைப்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், ஆய்வின் போது சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், திருச்சி சரகம் துணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி, உதவி காவல்துறை ஆணையர் அருணாச்சலம், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசை தம்பி, மணப்பாறை மோட்டார் வாகனம் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, மேற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அனிதா, முகமது மீரா ஆகியோர் உடன் இருந்தனர்

Monday, May 14, 2018

On Monday, May 14, 2018 by Tamilnewstv   
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் கண்ணன் மாவட்ட செயலாளர்   தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு மற்றும் பெருமாள் மாவட்ட அமைப்புச் செயலாளர் முன்னிலைவகித்தனர் மாவட்ட துணை மாநில துணை செயலாளர்
முருகானந்தம் சேகர் மத்திய செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் செல்வராஜ் மாநில செயலாளர் பால்ராஜ் மாவட்ட தலைவர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் ஆறுமுகம் மாவட்ட துணைத்தலைவர் ஆர்ப்பாட்ட உரை ஆற்றினர்
 துரை செல்வம் தலைமை நிலைய செயலாளர் பூபதி மாவட்ட துணை தலைவர் தனபால் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் ஜெயராமன் மாவட்ட துணைச் செயலாளர் கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய  மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Sunday, May 13, 2018

On Sunday, May 13, 2018 by Tamilnewstv   
திருச்சி.13.05.18.

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் தேர்த்திருவிழா இம்மாதம் 5 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு  சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளிய பின்னர் இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இன்று அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தேர்மண்டபத்தை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என நம்பெருமாளின் நாமத்தை விண்ணதிர முழங்கி தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Friday, May 11, 2018

On Friday, May 11, 2018 by Tamilnewstv   
திருச்சி திருவானைக்காவல் காவிரி ஆற்றுக்குள், வீர விளையாட்டு மீட்புக்  கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியா.க அமைக்க வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள தண்ணீர் அருந்தாமல் போராட்டம் நடைபெறுகிறது.*

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாக தலைவர் வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன்,
விவசாய சங்கத் தலைவர்கள் அய்யாக்கண்ணு, மகாதானபுரம் ராஜாராம், தீட்சிதர் பாலு உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

Wednesday, May 09, 2018

On Wednesday, May 09, 2018 by Tamilnewstv   




82 வது பிறந்த நாள் விழா              திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு நிர்வாகிகள் பங்கேற்பு  திருச்சி மே 8- முன்னாள் எம்.பி.அடைக்கலராஜ்னின் 82வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் அவர்களின் 82வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை ஜங்சன் ஜென்னி பிளாசா வளாகத்தில் அமைந்துள்ள அவரது  சிலைக்கு தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்டகாங்கிரஸ் தலைவர் ஜவகர் சார்பில் மாவட்டத் தலைவர்கள் ஜவகர், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி.பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிர்வாகிகள் பங்கேற்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜா நசிர், லோகம்மாள், மாநில செயலாளர் ஹேமா முல்லைராஜ், ரெக்ஸ், ராஜா கோபால், அல்லூர் சுரேஷ், அருண்,ராஜேஷ், பீரேம், என்ஜின்யர் காளிஸ்வரன், சத்தியநாதன், கள்ளிக்குடி சுந்தரம், யூ.ஸ்.காளிமுத்து, சிவாஜி சண்முகம், உய்யக்கொண்டான் திருமலை பாஸ்கர்,  என்ஜினியர் காளிமுத்து, ஜி.கே.முரளி, ஆபிரகாம், தென்னூர் குத்தூஸ், ஜெகதீஸ்வரி , கள்ளத்தெரு குமார், ஜோசப், ராஜா டேனியல்ராஜ், ஜாகீர் உசேன், அருண், சுந்தர்ராஜ், வீரமுத்து, கோபால், வீல்ஸ் முத்துகுமார், வக்கில் சந்திரன், ஜெயராமன், பூக்கடைபன்னீர்செல்வம் ஒவியர்கஸ்பர், உறந்தை செல்வம், கருப்பையா, மன்சூர், முத்து, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.                 பட வரி திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜினின் 82வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஜென்னிஸ் பிளசா வளாகத்தில் உள்ள சிலைக்கு தொழி திபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவகர், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர் சி . பாபு, மாநில செயலாளர் ஹேமா உள்ளிட்ட பலர் உள்ளனர்.