Saturday, March 07, 2015
திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசிணம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் ரூ.19½ லட்சம் மதிப்பில் ராக்கியாவலசு–புளியம்பட்டி இடையே புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஈரோடு எம்.பி.செல்வக்குமார சின்னையன் தலைமையில் தாராபுரம் எம்.எம்.ஏ.பொன்னுச்சாமி இதை தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. மூலனூர் ஒன்றிய செயலாளர் வி.பி.பெரியசாமி, அதிபர் சண்முகம், மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலையரசி, தாராபுரம் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மாணிக்கம், எரசினம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருப்பூரில் அடகு கடை வைத்து நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் மறுஅடகு வைக்கப்பட்ட 360 பவுன் நகையை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரியை சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி (வயது 42). இவருடைய மனைவி பகுதா (33). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தனர். இங்கு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 1,800 பேர் சுமார் 350 பவுனுக்கும் மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றிருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23–ந்தேதி அடகு கடையை பூட்டி விட்டு கணவன்–மனைவி இருவரும் திடீரென தலைமறைவாகிவிட்டனர். அப்பாஸ் மந்திரியின் கடையில் நகையை அடகு வைத்தவர்கள் இதையறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அப்பாஸ் மந்திரி, அவருடைய மனைவி பகுதா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
பின்னர் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18–ந்தேதி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பகுதாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருப்பூர் மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், தலைமறைவான அப்பாஸ் மந்திரியை பிடிக்க உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே அப்பாஸ் மந்திரி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். இதன் பின்னர் தனிப்படை போலீசார் பகுதாவை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இவர்கள், தங்களிடம் அடகு வைத்த நகைகளை தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மறு அடகு வைத்து சுமார் ரூ.75 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
பகுதா கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் மறு அடகுவைத்த 315 பவுன் நகையை தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் மீட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பி.என்.ரோடு பிச்சம்பாளையம் புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், பகுதா மறு அடகு வைத்த 45 பவுன் நகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் மீட்டனர். இதுவரை இந்த வழக்கில் 360 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. இந்த நகைகள் விரைவில் கோர்ட்டு மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அமராவதி வனப்பகுதியில் சந்தனக்கட்டை கடத்தல் குப்பலை சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் மான், காட்டெருமை, யானை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் சந்தனமரம் உள்ளிட்ட ஆபூர்வ வகை மரங்களும் அதிக அளவில் உள்ளது. எனவே வனவிலங்குகள் வேட்டையாடப்படாமல் பாதுகாக்கவும், ஆபூர்வ வகை மரங்களைப்பாதுகாக்கவும் வனத்துறையினர் தினசரி ரோந்துப்பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் வனப்பகுதியில் ஏராளமான நவீனரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் மான், காட்டெருமை, யானை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் சந்தனமரம் உள்ளிட்ட ஆபூர்வ வகை மரங்களும் அதிக அளவில் உள்ளது. எனவே வனவிலங்குகள் வேட்டையாடப்படாமல் பாதுகாக்கவும், ஆபூர்வ வகை மரங்களைப்பாதுகாக்கவும் வனத்துறையினர் தினசரி ரோந்துப்பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் வனப்பகுதியில் ஏராளமான நவீனரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 4–ந்தேதி நள்ளிரவில் அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாபுரம் வனப்பகுதியில் மர்மநபர்கள் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நபர்கள் மாவோயிஸ்டுகளா? அல்லது சந்தனக்கட்டை கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களா? என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வனப்பகுதியில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தளிஞ்சி வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து 25–க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தளிஞ்சி வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு இருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா புலியூரைச்சேர்ந்த காளி(வயது50), கிள்ளியூரைச்சேர்ந்த திருப்பதி (29),கீழுரைச்சேர்ந்த வேந்தன் (26), அதே ஊரைச்சேர்ந்த கோவிந்தராஜ் (26)என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பல்வேறு சந்தனக்கட்டை கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் கேரள மாநிலம் காந்தளூர், காரையூர் சந்தன மரக்காப்புக்காட்டுப்பகுதியிலும் சந்தன மரங்களை வெட்டிக்கடத்தும் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகமடைந்தனர். இதனைத்தொடர்ந்து பிடிபட்ட 4 பேரையும் விசாரணைக்காக கேரள மாநில வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து அமராவதி வனச்சரக வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் நடைபெற்றுள்ளதா? என்ற சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் பேரூர் இளைஞரணி மற்றும் கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.மூலனூர் பேரூர் இளைஞரணி சார்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்கு கல்பட்டி கார்த்தி தலைமையில் அண்ணாநகர் ஆரம்ப பள்ளியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இதை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்குகல்பட்டி கார்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மூலனூர் பேரூர் செயலாளர் தெண்டபாணி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.இதில் ஒன்றிய துணைச்செயலாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி இரா.செந்தில்குமார், வார்டு செயலாளர் சங்கர், பிரதிநிதி விஸ்வநாதன் ஒன்றிய, பேரூர் இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பேரூர் அவைத்தலைவர் சீரங்கராயன் தலைமையில் கன்னிவாடி, காதக்கோட்டை, மொங்க நல்லாம்பாளையம், மணலூர், எரச்சப்பாடி, ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி வடிவேல், பெரியசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூர் துணை அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி கிரிகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, செல்லமுத்து, குழந்தைவேல், தமிழரசி, சின்னத்துரை, பாலசுப்பிரமணி, சிவகுருபாலன், செண்பகவேல் பூபாலன் மற்றும் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பேரூர் அவைத்தலைவர் சீரங்கராயன் தலைமையில் கன்னிவாடி, காதக்கோட்டை, மொங்க நல்லாம்பாளையம், மணலூர், எரச்சப்பாடி, ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி வடிவேல், பெரியசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூர் துணை அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி கிரிகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, செல்லமுத்து, குழந்தைவேல், தமிழரசி, சின்னத்துரை, பாலசுப்பிரமணி, சிவகுருபாலன், செண்பகவேல் பூபாலன் மற்றும் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர், பல்லடம், அவினாசி தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையங்களில் அமைச்சர் ஆனந்தன் ஆய்வு
திருப்பூர், பல்லடம், அவினாசி தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய 9 தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய 10 இடங்களில் பொது இ–சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 தாலுகா அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் இந்த சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய 9 தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய 10 இடங்களில் பொது இ–சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 தாலுகா அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் இந்த சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 24–ந் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் இந்த சேவை மையங்கள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆகியவற்றை இந்த மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண நிதி உதவிதிட்டம் தொடர்பான அனைத்து கோரிக்கை மனுக்களும் இங்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு
மேலும் மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் பொது சேவை மையம் மூலம் வழங்கப்படுகிறது. அதுபோல் மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் ‘பான்கார்டு’ பெறவும், ஆதார் அட்டை பெறுவதற்கு ஒப்புகை சீட்டு இருந்தால் அதை பயன்படுத்தி ஆதார் அட்டை நகல் எடுத்துக்கொள்வதற்கும் இங்கு விண்ணப்பிக்கலாம். இதுதவிர தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்துகொள்ளவும், பாஸ்போர்ட் பெறுவதற்கும், அதுதொடர்பான காவல்துறையின் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கும், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) தவணை தொகை செலுத்தவும் இந்த பொது இ–சேவை மையத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். திருப்பூர் வடக்கு, பல்லடம், அவினாசி ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையத்துக்கு சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சான்றிதழ்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மேயர் விசாலாட்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், கருப்பசாமி, துணைமேயர் குணசேகரன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், அவினாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள், பல்லடம் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவாசலம், உகாயனூர் ஊராட்சி தலைவர் யு.எஸ்.பழனிசாமி, பல்லடம் நகர அ.தி.மு.க. செயலாளர் ரத்தினசாமி, ஒன்றிய துணை செயலாளர் சித்துராஜ், தாசில்தார்கள் சிவக்குமார், ரமேஷ், அம்சவேணி, அரசு கேபிள் டி.வி. தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குட்டப்பாளையம் பகுதியில் வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர், நத்தக்காடையூர், குட்டப்பாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாய சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்து பலன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் எண்ணெய்வித்து பயிர் சாகுபடிக்கு முறைத்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் எள், மக்காசோளம், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் குட்டப்பாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது எண்ணெய்வித்து பயிர் சாகுபடிக்கு அடுத்த படியாக குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக பலன் தரும் வெண்டை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது வயல்களில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவு வரை வெண்டை சாகுபடி செய்துள்ளனர்.
இதன்படி 1 ஏக்கர் வெண்டை சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பார்கட்டுதல், அடி உரமிடுதல், விதை ஊன்றுதல், களைஎடுத்தல், உரநிர்வாகம், பயிர் பாதுகாப்பு பேணுதல் என ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த வெண்டை செடிகளில் தற்போது மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து அயல் மகரந்த சேர்க்கை மூலம் வெண்டை பிஞ்சுகள் உருவாகி வெண்டை காய்களாக காய்த்துள்ளன.
வெண்டை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்துள்ள வெண்டை காய்களை அறுவடை செய்து முத்தூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், காங்கயம், அரச்சலூர், சிவகிரி, கந்தசாமிபாளையம், ஆகிய பகுதிகளில் செயல்படும் வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகளுக்கு நேரில் கொண்டு சென்று விற்று பலன் அடைந்து வருகின்றனர். இப்பகுதிகளில் குறுகிய காலத்தில் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் வெண்டை காய்கள் சாகுபடி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 கோடியே 58 லட்சத்துக்கு 60 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபோல் இயக்குதலும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.7 கோடி மானியம் ஒதுக்கப்பட்டதில் ரூ.7 கோடியே 31 லட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்ட ரூ.9 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 69 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதுதவிர நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பில் குமார்நகர்– அவினாசி ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– புஷ்பாதியேட்டர் சந்திப்பு, ராக்கியாபாளையம் பிரிவு– காங்கயம் ரோடு சந்திப்பு, மாநகராட்சி அலுவலக சாலை– மங்கலம் ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு– காங்கயம் ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– டவுன்ஹால் சந்திப்பு ஆகிய 6 இடங்களில் உயர்மட்ட நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
திருப்பூர் மாநகராட்சிக்கு தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 கோடியே 58 லட்சத்துக்கு 60 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபோல் இயக்குதலும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.7 கோடி மானியம் ஒதுக்கப்பட்டதில் ரூ.7 கோடியே 31 லட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்ட ரூ.9 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 69 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதுதவிர நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பில் குமார்நகர்– அவினாசி ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– புஷ்பாதியேட்டர் சந்திப்பு, ராக்கியாபாளையம் பிரிவு– காங்கயம் ரோடு சந்திப்பு, மாநகராட்சி அலுவலக சாலை– மங்கலம் ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு– காங்கயம் ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– டவுன்ஹால் சந்திப்பு ஆகிய 6 இடங்களில் உயர்மட்ட நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி மொத்தம் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று மாநகரின் பல்வேறு இடங்களில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூமிபூஜைகளை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் முருகசாமி, கீதா ஆறுமுகம், பி.கே.முத்து, விஜயகுமார், சண்முகசுந்தரம், கேபிள்சிவா, ஆனந்தன், மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர்கள் தமிழ்செல்வன், திருமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Thursday, March 05, 2015
On Thursday, March 05, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...







