Friday, March 16, 2018

On Friday, March 16, 2018 by Tamilnewstv in ,    
பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்–அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

திருச்சியில் தொழில்துறையினர் நடத்தும் கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள், துப்பாக்கி  தொழிற்சாலையின் உயர்அதிகாரிகள் இந்தக்  கருத்தரங்கில் கலந்து கொண்டு தொழில்  வளர்ச்சிக்கான கருத்துக்களைப் பரிமாறி  கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய  பாதுகாப்பு துறை  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசுகையில்  :

இந்தியஅளவில் உள்ள  தொழில்களில் மத்திய  அரசின்கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில்தனியார் மயமாக்குதல்  என்பது எந்தவகையில் வளர்ச்சி பாதையை நோக்கிப்  பயணிக்கும்என்பது குறித்த  விளக்கங்களைத்தெரிவித்தார்

பொது நிறுவனங்கள்  தற்போது சிறு தனியார் நிறுவனங்களை நம்பி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே பொதுத்துறையில்தனியார்  தலையீடு இருந்தால்  வேலைவாய்ப்புஅதிகரிக்கும்,  பொருட்களின் உற்பத்தி, பொருட்களின் தரத்தில் கூடுதல் கவனம்,  என்றும், பல வளர்ச்சிகள்  உள்ளதாக கூறினார்.

திருச்சியைப் பொறுத்தவரை பாரத மிகுமின்நிலையம்,  துப்பாக்கி தொழிற்சாலை,  உள்ளிட்டவற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதற்கான  பணிகள் நடைபெற்று வருகிறது.  பாரதமிகு மின் நிலையத்தைச்சுற்றி உள்ளசிறு, குறு தொழில்  முனைவோர்கள்தங்களுடைய  திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கும்  ஒரு வாய்ப்புஇந்தத் தனியார் மயமாக்குதல் மூலம் நடக்கும்என்று கூறினார்.

ராணுவ தளவாடங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்யவும், தேஜஸ் விமானங்களை போர் விமானங்களாக தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்

தனியார் தலையீடு இல்லாமல்பொதுத்துறைநிறுவனங்கள் செயல்பட முடியாது.  பலதிறமையானவர்களை  தனியார் மயாக்குதல் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும், குறிப்பாக  இந்திய இராணுவத்திற்கும்,  தமிழககாவல்துறைக்குமான  தேவையை தற்போதுஉள்ள இந்தபொதுத்துறை நிறுவனத்தால்கொடுக்க முடியவில்லை. ஆனால் தனியாரின்தலையீடு இருந்தால் அதை நாம் ஈடுசெய்யமுடியும். நாங்கள் எதையும் விற்கவில்லைஅனைத்தையும் உயிர்ப்பிக்க முயற்சிசெய்கிறோம். என்று தெரிவித்தார். நம்முடைய நாட்டில் பாதுகாப்பு துறையை தனியார் மூலம் வலிமையான நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பது தான் மத்திய அரசின் கொள்கை எனவே அதனை செயல்படுத்த தான் இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்களிடம் தனியார் மயமாக்குதலை பற்றி எடுத்துக்கூறி வருகிறோம் என்று கூறினார்.

தொழிற் வளர்ச்சிக்கான சர்வதேச மாநாடுநடைபெற உள்ளது அதில் 60 நாடுகள் மற்றும்75 நிறுவங்கள் கலந்து  கொள்வதாகவும் இதில்50%  மானியத்துடன் வழங்கப்படும் என்றும்தெரிவித்தார். மேலும் அரசு  மற்றும் தனியார்நிறுவனங்கள் நன்று வளர்ந்து Make in indiaதிட்டத்தின் கிழ் கொண்டு வந்து நாட்டைமுன்னேற்ற பாதையில் கொண்டு போவதே எங்கள் நோக்கம் எனவும்  தெரிவித்தார்.இந்தியா  ஏற்றுமதியில் சிறந்து விளங்கஓத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்..






Thursday, March 15, 2018

On Thursday, March 15, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 15.3.18
இந்தியஅரசு நேரு யுவகேந்திரா திருச்சிராப்பள்ளி விவேகானந்தா சமூக சேவை அமைப்பு சார்பில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது

இந்நிகழ்சியின் நோக்கம் பாரளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த செயல்முறைகள் என்ன என்றும் மாணவ மாணவிகள் எ ப்படி அதை மேற்கொள்வது எ ன்றும் பாராளுமன்றம் எ ப்ப டிசெயல்படுகிறது என்றும் மாணவ மாணவியர்இடையே செயல்முறை விளக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது
அதன்படி  மாணவ மாணவிகள் தங்களின் பிரச்சனை தங்கள் பகுதி பொதுப்பிரச்சனை எப்படி தீர்க்க தீர்வு காண்பிக்கப்படுகிறது அரசியல் பிரமுகர்களிடம் எப்படி எதிர்நோக்குவது எ ன்பதன் விளக்கம் விளக்கப்படுகப்பட்டது 
இந்நிகழ்ச்சியில்(விஎஸ்ஓ )சந்தானகிருஷ்ணன் செயலாளர் வரவேற்புரையாற்றினார்ஸ்ரீமத்ஆண்டவன் கல்;லூரி இணை முதல்வர்பிச்சைமணி தலைமைவகித்தார் நேரு யுகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நோக்கவுரையாற்றினார்.டாக்டர்.ராமானுஜம் இயக்குனர்ஸ்ரீமத்ஆண்டவன் கல்லூரி டாக்டர். ராதிகா முதல்வர் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி  சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நேரு யுகேந்திரா திட்டங்கள்பற்றி மகேஷ்வரன் கணக்காளர் கூறினார்.ஸ்ரீதர் தலைவர்(விஎஸ்ஓ) நன்றியுரையாற்றினார்

Wednesday, March 14, 2018

On Wednesday, March 14, 2018 by Tamilnewstv in ,    

வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு
கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை
மாலை 3.00 மணியளவில் கல்லூரி திறந்த வெளி கலையரங்கத்தில்
அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது. கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு
அலுவலர் திரு. என். ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொண்டு விழாச் சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்லூரியின் பகுதி V செயல்பாட்டு விரிவாக்க அறிக்கையை (2017-18
கல்வியாண்டிற்கு) கல்லூரி விரிவாக்கப் பணிகள் புல முதன்மையர் முனைவர்
சி.தனபால் அவர்கள் தொகுத்தளித்தார்கள்.
மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி ‘ஸ்கோப்’
தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் எம். சுப்புராமன் அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்கள். சிறந்த தன்னார்வ தொண்டர்களுக்கான
விருதுகளை கல்லூரியின் துணை முதல்வர் எ·ப். சாமுவேல் கிறிஸ்டோபர்
அவர்களும், சுயநிதிப் பிரிவின் துணை முதல்வர் முனைவர் ஆ.ரெல்டன்
அவர்களும் வழங்கினார்கள். பகுதி V பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்களை
கல்லூரி முதல்வர் பாராட்டி சிறப்பு செய்தார்கள்.
சிறந்த சேவை செய்த பிரிவிற்கான விருதினை மாநகராட்சி ஆணையர்
அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்கள்.
முன்னதாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய
இந்நிகழ்விற்கு வருகை தந்தோரை கல்லூரி இயற்கை கழக ஆசிரிய
பொறுப்பாளர் திருமதி கிளெனி ஜோஸ்லின் அவர்கள் வரவேற்றார்கள். கல்லூரி
விரிவாக்கப் பணிகள் புல இணை முதன்மையர் முனைவர் எம். கேபிரியேல்
அவர்கள் நன்றி கூறினார்கள்.

On Wednesday, March 14, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி  14.03.18.

மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம்.

மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.இதில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசா மணி பேசிய போது தமிழக அரசு புதிதாக அமைத்திடும் தொழில்களை ஊக்கப்படுத்தவும் அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்கிடவும் மானியத்துடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவதாகவும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பின் தங்கிய வட்டாரங்களிலும் புதியதாக தொழிலகங்கள் அமைக்கப்பட்டு அதிக பட்சம் ரூ.30 இலட்சம் மூலதன மான்யமாக வழங்கப்பட்டு வருவதாகவும்,புதியதாக அமைக்கப்பட உள்ள தொழிலங்களுக்கு மின் மான்யம், ஜி.எஸ்.டி வரி மான்யம், ஜெனரேட்டர் மான்யம் வழங்கப்படுவதாகவும், மேலும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் அமைத்திட ரூ.10 இலட்சம் வரை வங்கி கடனுதவியும் மான்யமாக 1.25 இலட்சம் அரசு வழங்குகிறது. தமிழக அரசு பட்டம் மற்றும் பட்டயம் படித்துள்ள இளைஞர்களுக்கு ஏற்ற தொழில்களை ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மான்யம் வழங்கபட்டு கடனுக்கான வட்டி விகிதத்தில்  மூன்று விழக்காடு மான்யமும் வழங்கப்படுகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் விரைவில் தொழிற் வளர்ச்சிடையும் எனவும்
 இந்தியன் வங்கி சார்பாக தொழிற் செய்ய 80 ஆட்டோக்கள் வழங்கப்படுகிறது. மேலும் மணப்பாறையில் 1000 ஏக்கர் இடம் ஒதுக்கி தொழிற்பேட்டை அமைய உள்ளதாகவும் கூறினார். புதிதாக தொழிற்முனைவோர்கள் இந்த திட்டங்களின் கீழ் பயன் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திட முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்..

On Wednesday, March 14, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 14.3.18
திருச்சி மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் 


  மாவட்ட அவை தலைவர்கள் அம்பிகாபதி, பேரூர் தர்மலிங்கம்  தலைமையில் நடைபெற்றது.


அதில் தீர்மானங்களாக திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் 65 வது பிறந்த நாளை மாதம் முழுவதும் திருச்சி மாவட்டத்தில் கோலகளமாக கொண்டாடுவது எ ன்றும் வருகின்ற 24,25 ஆகிய தேதிகளில் நடைபெறவிற்கும் ஈரோடு மண்டல திமுக மாநாட்டிற்கு திருச்சி வடக்கு தெற்கு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கில் திரளாக பங்கேற்க வேண்டுமென்றும்தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு சங்கத்தேர்தல்களை முறைகேடுகள் நடைபெறமால் நேர்மையாக நடத்திட வேண்டுமெனதமிழக அரசைவலியுறுத்தியும்,காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் விளைநிலங்களுக்கு காவிரி நீரை முறையாக பெற்று தர உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வழியுறுத்தியும் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தல்களை நேர்மையாக மட்டுமே நடத்துவோம் எனவும் முறைகேடுகளில் ஈடுபட மட்டோம் என அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்   மாவட்ட அவை தலைவர்கள் அம்பிகாபதி, பேரூர் தர்மலிங்கம்  தலைமையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். இலக்கிய அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினரும், நடிகரும் மான வாகை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை ஆற்றினார். வடக்கு மாவட்ட செய லாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள்  செளந்திர பாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல். எ.க்கள் கே.என் - சேகரன், அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ் மாநகர நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி வன்னை அரங்கநாதன் இளை ஞர் அணி செயலாளர் ஆனந்த் உட்பட மாவட்ட, மாநகர ஒன்றிய மகளிர் அணி வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tuesday, March 13, 2018

On Tuesday, March 13, 2018 by Tamilnewstv   
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு

கல்வியாண்டிற்கான (2017-2018) சாதனையாளர் தின விழா 13.03.2018
செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்லூரி திறந்த வெளி
கலையரங்கத்தில் அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது.
ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர்மதிப்பெண்
பெற்ற 235 மாணவர்கள் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவிற்கு நிதித்துறை மேனாள் கணக்கியல் இணைப்பொது
நெறியாளரும் லக்க்ஷ்மி குமரன் & ஸ்ரீதரன் குழும (புது தில்லி) தலைமை
வணிகப் பங்காளருமாகிய திரு எஸ். சீதாராமன் அவர்கள் சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றி பரிசுகளை
வழங்கினார்கள். மதிப்புறு விருந்தினராக திருச்சி அகமது பிரதர்ஸ் ஜவுளி
நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் திரு.எச். முகமது சித்திக் அவர்கள்
கலந்துகொண்டு சாதனையாளர்களை வாழ்த்தினார்கள். சமூகசேவை நோக்கில்
சமூகப் பணியாற்றிய எட்டு வகுப்பு மாணாக்கர்களுக்கு Heber Philanthrophy
விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் வென்ற
30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கும், 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்
பரிசளித்து சிறப்பு செய்யப்பட்டது.
கல்லூரியில் கருத்தரங்குகள் நிகழ்த்திதந்த கருத்தரங்க
ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றிய சுமார் இருபது பேராசிரியர்களுக்கு
சிறப்பு செய்யப்பட்டது.
முன்னதாக இவ்விழாவினை கல்லூரி சமய நெறியாளர் அருள்திரு
பி.செல்வராஜ் அவர்கள் இறைவேண்டல் செய்து தொடங்கி வைத்தார். கல்லூரி
பாடகர் குழுவினர் இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரி பாடல்
ஆகியவற்றை பாடினர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Wednesday, March 07, 2018

On Wednesday, March 07, 2018 by Tamilnewstv   
திருவெறும்பூரை அடுத்துள்ள பெல் கணேஷா பஸ் ஸ்டாப் அருகே ஹெல்மெட் கேஸ்போடும் போலீஸாரின் அத்துமீறலால் புதுமணப்பென் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலை மார்க்கத்தில் போக்குவரத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி திருவெறும்பூரை அடுத்த பெல் கணேஷா பஸ் ஸ்டாப் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் காட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியினர் நிற்காமல் சென்றதால் போலீஸார், அவர்களை மற்றொரு பைக்கில் விரட்டிச்சென்று மறித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் பைக்கில் இருந்த தம்பதியினரை எட்டி உதைத்துள்ளார்.
இதனால் பைக்கை ஓட்டி வந்த ராஜா நிலை தடுமாற பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷா சாலையில் கீழே விழுந்துள்ளார்.
அதேநேரம் அந்தப்பகுதியை கடந்த வேன் ஒன்று பைக் ஓட்டி வந்த ராஜா என்கிற தர்மராஜ் மனைவி உஷாவின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாத கர்ப்பிணியான உஷா துடிதுடித்து கணவன் கண் முன்னேயே பலியானார். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். பின், போலீஸ்மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்க, சக போலீஸார் அவரை அலக்காக தூக்கி திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகேயுள்ள காவிரி அதி நவீன மருத்துவமனையில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்த விபத்தையும் போலீஸாரின் நடவடிக்கைகளையும் பார்த்த பொதுமக்கள் ஆவேசமடைந்த தங்களது மொபைல் போன் மூலம் சமூக ஊடகங்களுக்கும், ஊடகங்களுக்கும் தகவல் கொடுக்க அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனிடையே உஷாவின் இறப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை கைது செய்துள்ளதாக எஸ்.பி. கல்யாண் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் கேஸ் போட்டு வசூலைப்பார்க்கும் போலீஸ் மனித உயிர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றாலும் சரி இப்படி கேவலமா நடந்துக்கறது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் போலீஸாரை அர்ச்சனை செய்யத்துவங்கி விட்டனர்.


Monday, March 05, 2018

On Monday, March 05, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 
திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் பல்வேறுகட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் புகார் மனு

மக்கள் அரசு கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அரவிந்த்ஜெய்
அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் மாநில தலைவர்  வழக்கறிஞர் அருண்சித்தார்த்தா  மக்கள்மறுமலர்ச்சி கழகம்நிறுவனர் வழக்கறிஞர் பொன்.முருகேஷன் ஆகியோர்திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீதும்அதனை நடத்தி வரும்ஈஸ்வரன் மீதும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்
அப்போது மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் பொன்.முருகேஷன் கூறுகையில் செவிலியர் (நர்சிங்) பயிற்சிக்கு போலி சான்றிதழ் அளித்து வரும்திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீதும்அதனை நடத்தி வரும்ஈஸ்வரன் மீதும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்பல்வேறு இடங்களில் நிறுவனம் நடத்தி மக்களையும் அதில் பயிலும் மாணவிகளுக்கு போலிசான்றிதழ் அளித்து ஏமாற்றி வருகிறார் அதனை தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்
பேட்டி .....பொன்.முருகேஷன் வழக்கறிஞர் (மக்கள்மறுமலர்ச்சி கழகம்நிறுவனர்)
On Monday, March 05, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி        

ஸ்ரீரங்கம்,அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று காலை காவிரி ஆற்றில் தென்கரையில் மேல சிந்தாமணி படித்துறை பகுதியில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் கால யாக பூஜையும் தொடர்ந்து நேற்று காலை கால யாக பூஜையும், பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைப்பெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், மஹா பூர்ணாஹீதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து திருக்குடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் யாக சாலை பிரவேஷம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் விமானத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.