Sunday, May 06, 2018

On Sunday, May 06, 2018 by Tamilnewstv   
திருச்சி 05.05.18


இன்று நீட் தேர்வு நடப்பதையடுத்து தமிழகம் முழுவதும் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 82 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 170 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் தேர்வு எழுத முடியும்.

 திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வானது 12 மையங்களில் இன்று நடைபெறுகிறது. இதில் 9420 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

தற்போது நாம் நிற்கும் பகுதியான திருச்சி காஜா நகர் சமது பள்ளியில் 1200 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவினர் 7.30 மணி முதல் 8.30 மணி வரையும், 2 வது பிரிவினர் 8.30 மணி முதல் 9.30 மணி வரையும் தேர்வு எழுதும் அறைக்கு வர வேண்டும் என நீட் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு காணப்பட்ட கெடுபிடி காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுத வந்த மாணவிகள் முன்னெச்சரிக்கையாக காது களில் தோடு அணியாமலும், Free hair என்று சொல்லக்கூடிய வகையிலும் வந்திருந்தனர். கூடுதலான மாணவிகள் துப்பட்டாக் கூட அணியவில்லை மேலும் மாணவிகள் கொலுசு அணிந்து வருவதற்கும் தடை என்பதால், கொலுசு அணிந்து வந்த மாணவிகள் அவசர அவசர மாக கொலுசுகளை கழட்டி பெற்றோரிடம் வழங்கினர்.

புகைப்படம் இரண்டு எடுத்து வர வேண்டும். எனக் கூறப்பட்டுள்ள நிலையல் ஒரு சில மாணவர்கள் ஒரு புகைப்படம் மட்டுமே எடுத்த வந்தனர் அவர்களுக்கு உடனடியாக இலவசமாக புகைப்படம் எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள்  தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாணவர்கள் தேர்வு மையங்கள் சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயலூர் அமிர்தா வித்யாலயா 540 தேர்வர்களும்,

வயலூர் பாரதியார் நகர் காவேரி குளோபல் பள்ளி 660 தேர்வர்களும்,

திருச்சி கமலா நிகேதன் மான்டிசோரி பள்ளி 840 தேர்வர்களும்,

திருச்சி துப்பாக்கி பேட்டை அருகில் உள்ள எண்:1 கேந்திரவித்யாலயா 600 தேர்வர்களும்,

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள எண்:2 கேந்திரவித்யாலயாவில் 1200 தேர்வர்களும்,

 தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா 480 தேர்வர்களும்,

காட்டூர் மான்ட்போர்ட் பள்ளி 660 தேர்வர்களும்,

திருச்சி காஜா நகர், சமத் மேல்நிலைப்பள்ளி 1200 தேர்வர்களும்,

 பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி 1440 தேர்வர்களும்,

ஸ்ரீரங்கம் ஸ்ரீவிகாஸ்  வித்யாஸ்ரமம் முதுநிலை இடைநிலைப்பள்ளி 720 தேர்வர்களும்,

திருச்சி சென்னை ரிங் ரோடு ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி 600 தேர்வர்களும்,

 திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா 480 தேர்வர்களும் என

 மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 9420 மாணவ, மாணவியர்கள், 12 தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.
On Sunday, May 06, 2018 by Tamilnewstv   
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்


முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு, கல்லீரல், குடல், இரைப்பை, சிறுநீரக கோளாறு போன்ற பல்வகை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் Dr.இராஜரத்தினம் தலைமையில் நடைப்பெற்றது.

இருதய நோயாளிகள் பயன் பெறும் வகையில் ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு - கார்டியாக் கேத் லேப்-னை மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.முகாமில் இலவச இசிஜி, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இம் மருத்துவமனையில் கல்லீரல், இருதயம், சிறுநீரகம் செயழிலந்த நோயாளிகளுக்கு மிக குறைந்த செலவில் கல்லீரல், இருதயம் , சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுகிறது மற்றும் ECMO சிகிச்சை இங்கே தான் உள்ளது தெரிவித்தார்.

மேலும், இம் முகாமில் Dr. ரியாஸ், Dr.மணி வேலன், Dr. மகாலெட்சுமி, Dr.ராஜ்கண்ணா மற்றும் பத்மநாபன், லோகேஸ், மோகன்ராஜ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்கள்.

Monday, April 30, 2018

On Monday, April 30, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்





சென்னை சில்க் ஸ் நிர்வாக இயக்குனர்கள் சிவலிங்கம் மற்றும் நந்தகோபால்  அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் தினத்திற்காக  கடந்த 7 வருட காலமாக இரத்த தான முகாம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சென்னை சில்க் ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் உயிர்கள் காக்க உதவி செய்துள்ளனர்

மேலும் சென்னை செலக்ஸ் சார்பாக,இதனால் வரை 11 ஆண்டுகள் நடை பெற்ற கண்  சிகிச்சை முகாமில் 4250 ற்கும் மேற்பட்டோருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூல மாக சிகிச்சை பெற்று பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Sunday, April 29, 2018

On Sunday, April 29, 2018 by Tamilnewstv   
திருச்சி 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட  மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீரங்கம் என்றாலே மிகவும் பிரசித்தி பெற்ற ரெங்கநாத ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது அதில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது என்பது பெருமை சேர்க்கிறது கும்பாபிஷேகம் என்றால் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உற்சவம் ஆகும் அதேபோன்று மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஓமம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் காளியம்மன் அருள் பெற்றனர் இந்த தளம் ஸ்ரீரங்கத்தில் பெருமை சேர்க்கக்கூடிய தலமாக மக்கள் கருதுகின்றனர்

 இத்தலத்தில் பூஜைகள் செய்வதன் மூலம் பக்தர்களின் பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சினைகள் அகலும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகா காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக மகா காளியம்மன் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கும்பாபிஷேகம் பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடைபெற்றது கும்பாபிஷேகம் முன்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்து பின்னர் ஓம கலசங்களை கும்பாபிஷேகத்திற்கு எடுத்துச் சென்று மேலே காணும் கும்பத்திற்கு அபிஷேக நீர் ஊற்றப்படுகிறது இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அவர்களுடைய குறைகள் தீர்ந்து நம்மை காணப்படுவதால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
On Sunday, April 29, 2018 by Tamilnewstv in ,    
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் கம்யூனிட்டி சென்டரில் நடைப்பெற்றது.


இப்போட்டியில் ஜூனியர் - சீனியர் இரு பிரிவுகளில் 8 பிரிவு 56 - 62 - 69 - 77 - 85 - 94 - 105 + 105

இதில் சிறப்பு அழைப்பாழராக பரதன் பி லீம் மேனேஜிங் டைரக்டர் பரதன் மருத்துவர் ஜெயப்பி காஷ் நாராயணன் Qmed மருத்துவமனை கலந்து கொண்டனர் டி.எஸ்.எம் பூபதி (பழுதூக்கும் சங்கம் தலைவர் ) எஸ், எம்பி வீரமணி, மற்றும் லோகநாதன் (சேட்டு ( பழுதூக்கும் சங்கம் துணை தலைவர்கள்) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

சண்முகவேல் செயலாளர் தமிழ்நாடு மாநில பழுதூக்கும் சங்கம் முன்னிலை வகுத்தார். தேசிய பழுதூக்கும் மற்றும் தமிழக கற்பிப்பாளர் சிதம்பர ராஜன், சந்தோஷ் பாஷ்யம் (எஸ் ஆர் எம் கற்பிப்பாளர் ) சுகுமார், ராம்குமார் பழுதூக்கும் சங்கத்தின் துணை செயலாளர்கள் விழாவை நடத்தினர்

Saturday, April 28, 2018

On Saturday, April 28, 2018 by Tamilnewstv   
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம்.
திருச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் அன்பில் பவுண்டேஷன் இனைந்து ஆண்கள், பெண்கள், இருபாலருககுமான, மாநில அளவிலான அன்பில் பாஸ்கர் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டி லீக் முறையில் திருச்சி, பிஷப் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகக இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, அன்பில் பவுண்டேஷன், திருவாரூர் வேலுடையார் நண்பர்கள் ஆகிய 4 அணிகளும்,  பெண்கள் பிரிவில் தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர், தத்தனுர், மீனாட்சி ராமாசாமி கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை சாய் ஆகிய 4 அணிகளும் பங்கேற்கின்றன.

போட்டியை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் திருச்சி நந்தா கேஸ் ஏஜென்சி  கே. செந்தில்வேல், தமிழ் நாடு வாலிபால் சங்க சீனியர் துணை தலைவர் மற்றும் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் தங்க பிச்சையப்பா, மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

Friday, April 27, 2018

On Friday, April 27, 2018 by Tamilnewstv   
திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட தலைவர்கள் கருத்தரங்கம், மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா, உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ,பரிசளிப்பு விழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாரளுமன்ற உறுப்பினர் பா.குமார் உட்பட
கலெக்டர் ராஜாமணி, மாவட்ட நூலக அதிகாரி சிவக்குமார், மாணவரணி கார்த்திகேயன், அருள் ஜோதி, ஏர்போர்ட் விஜி,பொன்.செல்வராஜ்,தர்கா காஜா, திருப்புகழ், அக்தர் பெருமாள், மகாலட்சுமி மலையப்பன்
பலர் கலந்து ெகாண்டனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்கொண்டு வருகிறது. அதற்கான கடிதத்தை சிபிஎஸ்சி-க்கு கடிதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது விடுமுறை காலங்களில்  சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது புகார்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

Thursday, April 26, 2018

On Thursday, April 26, 2018 by Tamilnewstv   
திருச்சி .26.04.18.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் திருச்சி மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி தலைமையில் தற்போது நடைபெறுகிறது.
அமைச்சர்கள் வளர்மதி, வெல்ல மண்டி நடராஜன்
M.P. குமார், ஆட்சியர் கு.ராசா மணி பங்கேற்பு
கூட்டத்தில் பேசிய,மின்சாரத் துறை
அமைச்சர்,தங்கமணி
மின்வாரியத்துறை அதிகாரிகள் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் துணை மின் நிலையங்கள் அதிகமாக தேவை என கண்டறியப்பட்டு
அரசும் உடனடியாக  132 துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்வர்  110 விதியின் கீழ் அறிவித்தார்.
துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.டெல்டா மாவட்டங்களான
திருச்சி தஞ்சையில் விவசாயம் பிரதானமாக இருந்து வருவதால் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் மின்வெட்டே இல்லை  என்றாலும் ஒரு சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரம் தடைபட்டாலே பொது மக்கள் அது குறித்து என்னிடமே கேள்வி கேட்கும் அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்று கூறினார்
On Thursday, April 26, 2018 by Tamilnewstv in ,    

நிர்மாலா தேவி விசாரணை தொடர்பாக பெண் நீதிபதி தலமையிலான  சிறப்பு விசாரணை குழு  நியமிக்கப்பட வேண்டும் – திருச்சியில் திருமாவளவன் பேட்டி

தஞ்சையில் நடைபெறும் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த திருமாளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

தமிழகத்திற்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் நான்கு  கட்ட போரட்டங்களை பொதுமக்களுடன் வெற்றிகரமாக நடத்தி உள்ளோம் ஆனால் மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. ஆகவே கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளோம்,

காவேரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக கண்காணிப்பு குழு அல்லது மேற்பார்வை குழு  இதில் எதாவது ஒன்று தான் மத்திய அரசு அமைக்கும் ஆனால் தொடர் போராட்டங்கள் மூலமாக சட்ட ரீதியாக பெற வேண்டிய உரிமையை பெறுவோம்.

நிர்மாலா தேவி தொடர்பாக இரு வேறு விசாரனண என்பது சட்டத்துக்கு புறம்பானது பெண் நீதி தலமையிலான சிறப்பு  புலணாய்வு அமைக்க வேண்டும் அதில் சரிபாதியாக பெண் உறுப்பினர் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

காவேரி போரட்டங்களை பொய் வழக்குகள் மூலம் தமிழக அரசு நசுக்க முயற்ச்சிக்கிறது,

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் கூறினார்.