Thursday, June 03, 2021

On Thursday, June 03, 2021 by Tamilnewstv in    

 திருச்சியில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.  திமுக திருச்சி தெற்கு மாவட்டம் 9அ வட்டம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி அண்ணாசிலை அருகே பூசாரி தெருவில் கொடியேற்றி வெடிகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 


திமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். அங்கு கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.


இதைத்தொடர்ந்து முனிசிபல் காலனியில் 50 பேருக்கு தலா 5 கிலோ அரிசியை பகுதி செயலாளர் மதிவாணன் வழங்கினார். முன்னதாக அங்கு திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி திருவுருவ படத்திற்கு பகுதி செயலாளர் மதிவாணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



 இந்த நிகழ்ச்சிகளில் திமுக 9அ வட்ட செயலாளர் சண்முகம், ஜம்புலிங்கம், செபாஸ்டின், கணேசன்,  கந்தன், மோகன், சக்திவேல், பிரபாகரன், பெரியசாமி, காட்டு நாயக்கர் சங்க கவுரவத் தலைவர் செல்வராஜ், செயலாளர் லட்சுமணன், திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிக்கண்ணன், நிர்வாகிகள் மாணிக்கம், ஸ்ரீதர், ஆதி அரசு, மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் திராவிட பண்ணை என்கிற முத்து தீபக், வட்ட பிரதிநிதி தீனதயாளன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார்,  மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

On Thursday, June 03, 2021 by Tamilnewstv in    

 திருச்சி மேலசிந்தாமணியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி சமூக இடைவெளியை கடைபிடித்து தலைமைக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி கொண்டாடப்பட்டது.


மறைந்த திமுக தலைவர் 98வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திமுக திருச்சி தெற்கு மாவட்டம் 9வது வட்டம் மேலசிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திமுக முன்னாள் வட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.  


அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் 200 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி மற்றும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஸ்ரீதர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஜார் மைதீன், மாவட்ட செயலாளர் விக்டர், டோரி பாலு, ஆட்டோ பாலு, கோபி, விகேஎன் சுரேஷ், செந்தில், சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி அல்லாபிச்சை மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக கொடியை ஏற்றி கலைஞர் கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்


மாலை அணிவித்து பின்னர் இனிப்புகள் வழங்கி சமூக இடைவெளியை கடைப்பிடித்த கொண்டாடினர்.


 முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில்உள்ள அண்ணா மற்றும் கலைஞர் உருவச் சிலைகளுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி,லால்குடிசட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன். துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து திமுக கழகக் கொடியை ஏற்றி மாலை அணிவித்து திமுக கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

.

Tuesday, June 01, 2021

On Tuesday, June 01, 2021 by Tamilnewstv in ,    

 திருச்சி 



தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் முழு வீச்சோடு செயல்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கொரோனா தடுப்பு உதவி மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் தடுப்பு ஊசியின்  தேவையை வலியுறுத்தும் பிரச்சாரம் வாகனத்தை தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள், இலவசமாக வழங்குதல் சாலையோரம் மற்றும் தேவையுடையவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல், ஆம்புலன்ஸ் உதவி எண்கள் மூலம் உதவி செய்தல், கொரோனாவால் உயிரிழந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கான குழுவினரை பயன்படுத்துதல், கொரோனாவால்  பெற்றோர்களை இழந்த குழந்தை களுக்கு மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் மூலம், அவசரத் தேவைக்கான மருத்துவ எண்களை கொடுத்து உதவுதல், மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடியகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கான பணிகள் என ஜமால் முஹம்மது உதவி மையத்தின் மூலம் வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி உதவி மையத்தினை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு 100 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால், உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
On Tuesday, June 01, 2021 by Tamilnewstv in ,    

 மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளர்   ஏ.சீனிவாசன் பேட்டி 

                                     

தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஏ.சீனிவாசன் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களின்  தந்தை தாளாளர் ஏ.சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
                                        


தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தின்  கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 360 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது
.
                                  

மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து 150 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் நோய் தொற்று சிகிச்சைக்காக பதினைந்து படுக்கைகளும் மீதமுள்ள 135 படுக்கைகள் லேசான மற்றும் மிதமான கொரோனா ம் மற்றும் புற்று நோயாளிகளுக்கும் மீதமுள்ள 210 படுக்கைகள் பிற நோய்களுக்கான சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
                                 


இதுவரை 105 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 40 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பொது மக்களுக்கு அவசர தேவைக்காக மருத்துவ கல்லூரியின் ஆம்புலன்ஸ் சேவை தயார்நிலையில் உள்ளது எனவே தொகுதி மக்கள் அதை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் மற்றவர்களுக்கு ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு இந்த ஆம்புலன்ஸ் சேவை செய்ய தயாராக இருக்கிறது என்றும் இதுவரை 125 க்கும் அதிகமானோர்இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் Prof.Dr.ராஜேஷ் M.S, Associate Prof.Dr.சங்கர் M.d, மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார் மற்றும் மேற்கொள்ளும் சிகிச்சைகளைப் பற்றி ஆய்வு செய்தார்.

Saturday, May 29, 2021

On Saturday, May 29, 2021 by Tamilnewstv   

 திருச்சி புத்தூர் அருகே கபசுர குடிநீர் மற்றும் கொரோனா  தடுப்பு சித்த மருந்து தொகுப்பு வழங்கும் விழா அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது. அரசின் துரித நடவடிக்கையால் இந்த நிலை உருவாகி உள்ளது. எனினும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை நிறுத்த வேண்டும். வெளியில் வந்தாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். திருச்சி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒரு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மட்டும் தண்ணீர் கலங்கலாக வருகிறது. அதை சரி செய்வதற்காக உடனடியாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


தொடர்ந்து பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். திருச்சி மாநகரில் உள்ள தேவைகளை அறிந்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மூலம் செய்து கொடுக்கப்படும். மாநகரில் உள்ள குறைகளை களைய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக தான் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் விரைந்து தொடங்கும். தற்போது நடந்து கொண்டிருக்கும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும்.

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலக்காத நிலையை  உண்டாகுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. மழை வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி திருச்சி மாநகரில் நடைபெற்று வருகிறது. உய்யக்கொண்டான் வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் தூர் வாரப்படுகிறது. மாநகராட்சி பகுதியிலுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று தொடங்கியுள்ளது. மழைக்காலத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தில் இந்த பணி மேற் கொள்ளப்படுகிறது. அதேபோல் சாலைகள் செப்பனிடும் பணியும், புதிய சாலை அமைக்கும் பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும். கரோனாவை ஒழிப்பது மட்டுமின்றி மக்களுடைய அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கும். விரைவில் சாலை, கசீரான குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

நடைபெற்ற விழாவில்  தலைமை வகித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கரொனா தடுப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திருச்சியில் கரோனா அதிகபட்சமாக நாளொன்றுக்கு 1,750 வரை இருந்தது. இது தற்போது குறைந்துள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. ஒத்துழைப்பு இல்லாமல் அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் தொற்று குறைவதற்கு சாத்தியம் இல்லை.

56,000 தடுப்பூசி திருச்சி வந்தது. 5 தினங்களில் இன்றோடு முடிந்து விட்டது. மத்திய அரசிலிருந்து 2,000 தடுப்பூசிகள் தினமும் வருகிறது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வெளியில் இருந்து வாங்கி 56,000 தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு சித்தா பெட்டகம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியே வந்தாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.

தொற்று பரவுவதற்கு ஒருவரோடு ஒருவர் உரசுவது தான் காரணம். முகக்கவசம் ஒழுங்காக அணியவேண்டும். மூன்று நாட்கள் ஒரே முக கவசம் அணிவது பயனளிக்காது. அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைத்தாள் இன்னும் ஒரே வாரத்தில் கரோனா தொற்று திருச்சியில் 500 வரை குறைத்து விடலாம். மற்ற மாவட்டத்தை விட நமது மாவட்டத்தில் குறைவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தான் காரணம்.

10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 35 படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்சிஜன் படுக்கை 70 காலியாக உள்ளது. இதற்கு அரசின் துரித நடவடிக்கை தான் காரணம். காய் வாங்குவதற்கு அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. காய்கறி வாங்குகிறோமோ இல்லையோ கொரோனாவை வீட்டிற்கு வாங்கி செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உடலும் நல்லா இருக்கும், மாவட்டமும் நன்றாக இருக்கும் என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவள்ளி  கோட்ட உதவி ஆணையர் வினோத் மற்றும் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். நலம் நாட கொரோனா தடுக்கும் சித்தா மருந்து  பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டது பாரம்பரிய மருத்துவத்துடன் இணைந்து அனைவரும் கொரோனா நோயிலிருந்து விடுபட பாடுபடுவோம். அரசு வழிகாட்டுதலை பின்பற்றுவோம். என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

On Saturday, May 29, 2021 by Tamilnewstv   

 திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்தார்.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் உள்ளது. கழிவுநீர், குப்பை, ஆகாயத்தாமரை ஆகியவற்றால் இந்த வாய்க்காலில் நீரோட்டம் பாதித்துள்ளது.

இதனால் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் எதிர்வரும் மழை காலத்தில் இந்த பகுதியிலிருந்து மழை நீர் வடிவதற்கு மிகவும் இடையூறாக இருக்கும். மழை காலம் வருவதற்குள் திருச்சி மாநகரில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகராட்சி மூலம் இந்த வாய்க்காலை தூர்வார வலியுறுத்தினார்.

தற்போது கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்டார். வாய்க்கால் முழுவதையும் ஆழமாக தூர்வார மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.


 திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..

சமூக வலைத்தளத்தில் இனிகோ இருதயராஜ் நிர்வாகிகளை அழைப்பது இல்லை எனவும் நிர்வாகிகள் உடன் சேர்ந்து ஆய்வுக்கு செல்வதில்லை எனவும் இதனால் திமுக நிர்வாகிகள் இனிகோ இருதயராஜ் மீது அதிருப்தியில் உள்ளதாக பொய்யான செய்தி பரப்பியுள்ளனர்.

திருச்சியில் இனிகோ இருதயராஜ் திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அப்பாற்பட்டு செயல்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிற செய்தி  முற்றிலும் பொய்யானது.

'அனைவரும் பாருங்கள்' அனைத்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னுடன்தான் இருக்கிறார்கள். ஆய்வுக்கு செல்லும் அனைத்து இடங்களிலும் நிர்வாகிகள் என்னுடன் பயணிக்கிறார்கள் எனக் எனக் கூறினார்.

இந்த ஆய்வின் போது திமுக பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டி சேகர்  உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Friday, May 28, 2021

On Friday, May 28, 2021 by Tamilnewstv   

 திருச்சி ஸ்ரீரங்கம் 

தமிழக அரசு உத்திரவுப்படி, காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது

கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து சென்ற வாரத்திலிருந்து முழு ஊரடங்கு தளர்வுகள் இன்றி செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தங்கு தடையின்றி கிடைத்திட தமிழக அரசு விரிவான ஏற்பாடு செய்து இன்று ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் அருகில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு பண்டகசாலை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் தள்ளுவண்டி வியாபாரிகள் பெரும் திரலாக கலந்து கொண்ட நிலையில் விற்பனையை தொடங்கி வைக்க,
திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, 


ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம் பழனியாண்டி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு வீடுகள் தொரும் 2900 நடமாடும் காய்கறிக் கடை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அருகில் அனைத்துதத்துறை அதிகாரிகள், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


பேட்டி ...அமைச்சர் கே என் நேரு

Sunday, April 04, 2021

On Sunday, April 04, 2021 by Tamilnewstv   

 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


இன்று துறையூர் குட்டகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நான் 10 ஆண்டுகளாக காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் பொது வார்டு மற்றும் எஸ்சி வார்டுகளில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டேன். மக்களுக்கு கவுன்சிலராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் துறையூரை தனி மாவட்டமாக மாற்ற முயற்சி செய்வேன்.

அரசு கலைக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி கூடம், தொழிற்பேட்டை ஆகியவை துறையூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் துறையூர் பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் முசிறியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துறையூருக்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் இந்திராகாந்தி ஏற்கனவே ஐந்து ஆண்டுகள்  சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் ஸ்டாலின் குமாரும் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர்கள்  இரண்டாவது முறையாக மீண்டும் வந்து வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது துறையூருக்கு என்ன செய்தார்கள்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் முதன்முறை போட்டியிடும் புதியவரான எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் துறையூரை வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக மாற்றி காட்டுவேன். நான் கவுன்சிலராக இருந்த போதே மக்களுக்காக போராடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அதேபோல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் கண்டிப்பாக போராடி திட்டங்களை கொண்டு வருவேன். துறையூர் அருகே உள்ள பச்சமலைக்கு இரு வழிப் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரியை தூர் வாரி படகு சவாரி விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைச் செயலாளர் ரவி, நகர அவைத் தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சின்னவர், நிர்வாகிகள் சந்தோஷ், குகன், எம்ஜிஆர் மன்ற தலைவர் பழனிராஜன், மாவட்ட பிரதிநிதி குட்டி, கூட்டணிக் கட்சியான தேமுதிக நகர செயலாளர் சதீஷ், செல்லதுரை, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர்.