Monday, August 16, 2021
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்
ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து
பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2021) சுதந்திர தின விழா இவ்விழாவில் ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கொரானா (covid - 19) நோய் தடுப்பு பணியில் அர்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்த 16 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
ஆதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து நிறைவு செய்த 12 பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் ஆணையர் அவர்கள் வழங்கினார்.
பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காந்தி சந்தைஅருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகரப் பொறியாளர் திருமதி. எஸ் . அமுதவள்ளி, , நகர் நல அலுவலர் திருமதி. மரு. எம்.யாழினி , செயற்பொறியாளர்கள் திரு.பி.சிவபாதம், திரு.ஜி.குமரேசன், உதவிஆணையர்கள் திரு.ச.நா.சண்முகம், திரு.எம்.தயாநிதி, திரு.எஸ்.திருஞானம், திரு.சு.ப.கமலக்கண்ணன், திரு.எஸ், செல்வபாலாஜி மற்றும் உதவிசெயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவாரசு தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்திய திருநாடனாது விடுதலை பெற்று இன்று 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொடியேற்றி கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் காலை 09:05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அணிவகுப்பின் படை தளபதியுடன் வாகனத்தில் பயணித்து. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் மூவர்ணக் கலர் கொண்ட பலூன்களை வானில் பறக்கவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 323 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன்,மாநகர காவல் ஆணையர் அருண், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான்,திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது
திருச்சி 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கோ அபிஷேகத்திற்கு உட்பட்ட கோட்டத்தில் உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியின் போது உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம் இளநிலை பொறியாளர்கள் இப்ராஹிம் புஷ்பராணி ராஜ்பெரியசாமி நிர்வாக அலுவலர்கள் ரஷீதா பேகம் புவனேஸ்வரி மற்றும் ஊழியர்கள் உதவியாளர்கள் மாநகராட்சிகோட்டை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா குடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியின் போது ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலக அலுவலர்கள் பள்ளி குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Sunday, August 15, 2021
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
முத்தரசநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு கௌரவித்து ஓய்வு பெற்ற நபருக்கு மரியாதை அன்பளிப்பு கொடுக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது .
மேலும் இந்நிகழ்ச்சியில் முத்தரசநல்லூர் வார்டு உட்பட்ட நம்பர் கணேசன் மற்றும் சதீஷ் பஞ்சாயத்து அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tuesday, August 10, 2021
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோரிடம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டின் படி
ரூபாய் 3 கோடி மதிப்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை பகுதிகளுக்கும், தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் முகக் கவசங்கள் மற்றும் 83 வென்டிலேட்டர் கருவிகளையும் இன்று வழங்கினார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு. சிவராசு அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன்
இனிகோஇருதயராஜ் அப்துல்சமத் மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கு கொண்டனர்
Monday, August 09, 2021
பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா இன்று (09.08.2021) அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியில் நடைபெற்றது.
பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பொதுமக்களுக்கான இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. ம. சுப்ரமணியன் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரால் இன்று (09.08.2021) அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். சிவராசு அவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியை இது போன்ற பொன்னான காரணத்திற்காக கொரோனா தடுப்பூசியினை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க தங்கள் சிஎஸ்ஆர் நிதியை தாராளமாக முன்வந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நிறுவனங்கள் அளிக்கும் நிதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு எஸ் சிவராசு அவர்கள் பெற்றுக்கொண்டு அவர் மூலமாக அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியில் செலுத்தப்பட்டு பயனாளிகளுக்கு இம்மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவமனை பொது மேலாளர் திரு. சாமுவேல் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
Friday, August 06, 2021
திருச்சியில் கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் துவக்கிய அப்பல்லோ மருத்துவமனை குழுமம்
திருச்சி, தமிழ்நாடு அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி அப்போலோ குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி அவர்களால், அனைத்து அப்போலோ மருத்துவமனைகளும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்துடன் இணைந்து 2 லட்சம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசியானது தமிழ்நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வியாழன் அன்று (05.08.2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, டெல்டா மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி 30,000 தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, அமைச்சர்கள் திரு. கே. என். நேரு மற்றும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.எஸ் சிவராசு, தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் திரு.பாலசுப்ரமணியன் உடன் இருந்தனர்.
அப்போலோ மருத்துவமனை சார்பில் அப்போலோ குழுமத்தின் முதுநிலை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அப்போலோ குழுமத்தில் கோவிட் தடுப்பூசிக்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இது தொடர்பாக மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் கூறுகையில் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறினார். திருச்சி மருத்துவமனை தலைவர் சாமுவேல், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் சிவம், மற்றும் மருத்துவமனை துணை பொது மேலாளர் சங்கீத் உடனிருந்தனர்.
Sunday, July 25, 2021
உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக திருச்சியில் கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி சேர்மென் A.மனோகரன் மற்றும் சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் சேர்மேன் Dr.A. பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக சேர்மன் Dr.A.M.ராய் பெர்னான்டோ அவர்கள் தலைமையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் தர்ஷிகா (10) சிறுவயதில் இருந்தே யோகா, தியானம் மீது ஆர்வம் கொண்ட இவர் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் உள்ள நிலையில் யோகா மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு செய்ய தர்ஷிகா முடிவு செய்து சேலம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவி தர்ஷிகா பத்மாசனமிட்டு தலையில் தக்காளி பழத்தை வைத்து முப்பத்தி ஒரு நிமிடம் (31) யோகாசனம் செய்து பதஞ்சலி புக் ஆப் வேர்ல்டு ரெக்காட்ஸ் இடம்பெற்று கேடயம் வழங்கப்பட்டது. மற்றும் திருச்சி மேலப்புதூர் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் சுகித்தா. இவர் கடந்த மூன்று வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை தனது சிலம்ப ஆசான் கலைசுடர்மணி திரு.எம்.ஜெயக்குமார் அவர்களிடம் முறைபடி சிலம்பத்தை கற்று தேர்ந்து சிலம்பத்தில் 5 புதிய உலக சாதனைகளும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கற்று தங்கம் வென்று, மேலும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்ப போட்டிகளில் பங்குபெற்று இதுவரை 25 தங்கம் 12 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.
இவரை நமது இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி உயர்திரு. வெங்கையா நாயுடு அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி பிஸ்டல் சுடும் போட்டியில் பங்கு பெற்றும் தங்கம் வென்றுள்ளார். மேலும் யோகா குருஜீ கிருஷ்ணகுமார் அவர்களின் பயிற்சியில் யோகாவில் புதிய உலக சாதனையும் செய்துள்ளார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முன்னோடி பெண்மனி விருதும் கொடுத்து கௌரவ படுத்தியுள்ளார்கள்.
இவர் தான் கற்ற சிலம்ப கலையை தனது மூத்த ஆசான் ஜெயக்குமார் அவர்களின் அறிவுரை படி இலவசமாக பல அரசு பள்ளிகளுக்கும் சென்று கற்று கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனது 13 வயதிலேயே இத்தனை சாதனைகளை புரிந்த மோ.பி.சுகித்தா அவர்களுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக இளம் கௌரவ டாக்டர் பட்டமும், மேலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவில் மூன்று தலைமுறையாக வசித்து வரும் கலைமாமணி அன்பழகன் குப்புசாமி அவர்கள் தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை நன்கு கற்றறிந்து தான் கற்ற சிலம்ப கலையை மலேசியாவில் 8 மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் சிலம்பக் கோர்வை கழகம் என்கிற அமைப்பைத் துவங்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 100க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்களையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது பல சிலம்ப போட்டிகளில் தனது மாணவர்களைப் பங்கெடுக்கச் செய்தும் சர்வதேச போட்டிகளை நடத்தியும் அதில் வெற்றி பெற வைத்ததைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.
மேலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அயோத்தி அவர்களின் மகன் ராஜலிங்கம் அவர்கள் மலேசியாவில் குடியுரிமை பெற்று மலேசியாவில் கடந்த 20 வருடங்களாக கம்யூனிகேஷன் துறையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மலேசியாவில் தனது தொழிலை திறம்பட நடத்தி வருகின்றார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மலேசியாவில் திறம்பட தொழில் செய்வதை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் பெறனர். இந்த பட்டமளிப்பு விழாவை திருச்சி ருத்ர சாந்தி யோகாலையா குருஜீ கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
















