Showing posts with label kanniyakumari. Show all posts
Showing posts with label kanniyakumari. Show all posts

Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திருவட்டாரில் வாலிபர், ஆட்டை கடித்து குதறிய வெறிநாய் பஸ் மோதி செத்தது.

இதுகுறித்த விவரம் வருமாறு:–

வெறிநாய்

திருவட்டார் பகுதியில்    தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  திருவட்டார் பாலம் அருகே ஓட்டல் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் தெருநாய்களின் கூட்டம் அதிகமாக காணப் படுகிறது. இந்த நாய்கள் அவ்வப்போது, சாலையில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன.

இந்தநிலையில், நேற்று காலை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றி, சுற்றி வந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற, செம்பறாவிளை பகுதியை சேர்ந்த 33 வயது வாலிபரை வெறிநாய் கடித்தது. பின்னர், அந்த நாய் திருவட்டார் பஸ் நிலையம் வந்தது. பஸ் நிலையத்தில் காலை நேரம் என்பதால், மாணவ– மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பஸ்சுக்காக  காத்து நின்றனர். 

ஆட்டை கடித்தது

வெறிநாயை கண்டதும், பொதுமக்கள் அதை துரத்தினர். தொடர்ந்து, பஸ் நிலையத்தின் வெளியே வந்த நாய், அந்த பகுதியில் சாலையோரம் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை கடித்து குதறியது. பின்னர், அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற மாணவிகளை துரத்த தொடங்கியது.

இதற்கிடையே அந்த வழியாக வந்த பஸ் வெறிநாய் மீது மோதியது. இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே செத்தது. வெறிநாய் என்பதால், அதை யாரும் அப்புறப்படுத்த முன்வரவில்லை. காலை வேளையில்  இந்த வெறிநாயின் அட்டகாசம் திருவட்டார் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
On Saturday, September 13, 2014 by farook press in ,    
ஆரல்வாய்மொழி அருகே பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக டெம்போ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.5 லட்சம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த குருக்கள் மடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் (வயது 43).

அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (32), டெம்போ டிரைவர். இவர் குடும்ப செலவுக்காக ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலினிடம் 14–10–11 முதல் 5 தவணைகளாக ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் 12–12–13 அன்று ஆறுமுகம் வீட்டுக்கு கணவருடன் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் சென்று பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் கன்னத்தில் ஆறுமுகம் அடித்து, பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் புகார் செய்தார். அதில், ‘‘ஆறுமுகம் ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டெம்போ டிரைவர் ஆறுமுகம் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் தன் தாயாருடன் ஆறுமுகம் வீட்டு முன் 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்க சென்றார்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் அந்த பெண் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பெண் தனது மகன்களிடம் கூறி அழுதார். அவர்கள் தாயை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே வாலிபர் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, போலீசார் அந்த வாலிபரை தேடிச் சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணிடம் இன்று காலை நித்திரவிளை போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண், போலீசாரிடம் அளித்த புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த சேவியர் (வயது 32) என்ற வாலிபர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சேவியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சேவியரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
On Thursday, September 11, 2014 by farook press in ,    
குமரி மேற்கு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 17). பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். இவர் படித்த பள்ளியின் சீனியர் மாணவர் ஒருவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்த மாணவரின் பெற்றோர் மிகவும் வசதியானவர்கள். இதனால் அந்த மாணவர் ராணிக்கு அடிக்கடி விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளிப்பார். மேலும் அந்த மாணவி மேஜர் ஆனதும் அவரையே திருமணம் செய்து கொள்வேன் எனவும் உறுதி கூறினார்.
இதை நம்பிய ராணி அந்த மாணவரை தீவிரமாக காதலித்தார். மேலும் மாணவர் அழைக்கும் இடங்களுக்கும் தனிமையில் சென்றார்.
இப்படி அவர்கள் ரகசியமாக சுற்றி திரிந்ததில் ராணியும் அந்த மாணவரும் உல்லாசமாக இருந்தனர். இதில் ராணி கர்ப்பம் ஆனார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ராணியின் பெற்றோர் அவரிடம் விபரம் கேட்டனர்.
அப்போது ராணி மாணவர் ஒருவரை காதலிப்பதையும், அவர் மூலமே தான் கர்ப்பம் ஆனதையும் தெரிவித்தார். அதிர்ந்து போன பெற்றோர் அந்த மாணவனை சந்தித்து பேசினர். பின்னர் அவரது பெற்றோரையும் பார்த்து மாணவரால் ராணி கர்ப்பம் ஆன விபரத்தை தெரிவித்தனர்.
இந்த விபரம் ஊராருக்கு தெரிய வந்ததும் மாணவனின் உறவினர்கள் அவரை நைசாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இதற்கிடையே ஊரில் மாணவனை காணாத ராணியின் பெற்றோர் இது பற்றி விசாரித்த போது அவர் வெளிநாடு சென்றது தெரியவந்தது.
இதனால் தாங்கள் மோசம் போனதை புரிந்து கொண்ட ராணியின் பெற்றோர் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த வழக்கை சம்பந்தப்பட்ட கொல்லங்கோடு போலீசாரே விசாரிக்க அனுப்பி வைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை குளச்சல் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து மாணவியை ஆசைக்காட்டி மோசம் செய்த மாணவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்

On Thursday, September 11, 2014 by farook press in ,    
கன்னியாகுமரியில் சுனாமி தாக்குதலுக்கு பிறகு கடலில் பெரியஅளவில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். அதன்படி கன்னியாகுமரியில் சமீபகாலமாக அடிக்கடி கடல்நீர் உள்வாங்குதல், கடல்நீரின் நிறம் மாறுதல், கடலில் அலைகள்இன்றி குளம்போல காட்சி அளித்தல் என்று அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகிறது.
கடந்த ஒருவாரமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல்நீர் உள்வாங்கும் சம்பவம் நடந்து வருகிறது. இன்று கன்னியாகுமரியில் காலையில் இருந்தே கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு காலையில் படகு போக்குவரத்து நடைபெறவில்லை.
இதனால் படகு தளத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
வெள்ளமடம் அருகே உள்ள ஆண்டார்குளத்தில் நாயை விழுங்கிய மலைப்பாம்பை  வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
வெள்ளமடம் அருகே உள்ள ஆண்டார்குளம் அம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தையொட்டி வசிப்பவர் செல்லத்துரை (வயது 55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும், வீட்டில் ஒரு குட்டி நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் அந்த நாய் குரைத்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்து நாய் குரைக்கும் சத்தம் கேட்கவில்லை. உடனே செல்லத்துரையின் மருமகள் தீபா பின்னால் சென்று பார்த்த போது அந்த நாயை ஒரு மலைப்பாம்பு ஒன்று சுருட்டி விழுங்கி கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா உடனே அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். 
பொதுமக்கள் வந்த சத்தத்தை கேட்டதும் மலைப்பாம்பு நாயை கக்கிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சி செய்தது. உடனே, மீன் பிடிக்கும் ஒரு கருவியான ஊத்தாலைக் கொண்டு மலைப்பாம்பை பிடித்து வைத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, பூதப்பாண்டி வனசரக அலுவலர் ஸ்ரீ வில்சன் உத்தரவின் பேரில் வனகாப்பாளர் கிருஷ்ணன்குட்டி, தோட்டக்காவலர் தங்கப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு ஆரல்வாய்மொழி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த மலைப்பாம்பு பொய்கை காட்டுப்பகுதியில் கொண்டுவிடப்பட்டது. பிடிபட்ட இந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளமும், 70 கிலோ எடையும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
On Friday, September 05, 2014 by farook press in ,    
திருவிதாங்கோட்டில் மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. கட்டிடத்தை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் திறந்து வைத்தார். விழாவுக்கு மாவட்ட முஸ்லிம் ஜமா­த் கூட்டமைப்பு கட்டிட கமிட்டி கன்வீனர் அப்துல் லத்தீப் தலைமை தாங்கினார். தேங்காப்பட்டணம் காதர், திருவிதாங்கோடு முஹம்மது ஹனீபா, குளச்சல் அப்துல் ரகுமான், திட்டுவிளை ரஷீதலி, தக்கலை அப்துல்கபூர், களியக்காவிளை நாசர், மேக்காமண்டபம் ஜலாலுதீன், மணவாளக்குறிச்சி பஷீர், மாதவலாயம் பீர்முகம்மது, மேக்காமண்டபம் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் இமாம் எப்.ஷாஹீல் ஹமீது அன்வரி, கிறாஅத் ஓதினார். அலுவலக மேல் தளத்தை கூட்டமைப்பு கல்வி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஷாஜகான் திறந்துவைத்துப் பேசினார். முஸ்லிம் ஜமா­த் கூட்டமைப்பு பொது செயலாளர் எம்.ஏ.கான் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்புரையாற்றினார். காயல்பட்டினம் மஹ்ளரா அரபிக் கல்லூரி பேராசிரியர் அஸ்செய்யித் அப்துர்ரஹ்மான் பாளில் அஹ்சனி தங்கள், மாவட்ட ஜமாத் உலமா பேரவைத் தலைவர் அபூசாலிஹ் ஆலிம், நாகர்கோவில் கலாசார கழக இமாம் ஷவ்கத் அலி ஆலிம் உஸ்மானி, நிலாமுதீன், குளச்சல் நகர்மன்றத் தலைவர்  நசீர், ஜகபர்சாதிக், பாவலர் சித்திக், பெட் டிரஸ்ட் தாளாளர் எஸ்.எம்.எஸ்.ஹாமீது, எம்.இ.டி. பொறியியல் கல்லூரித் தலைவர் முகம்மது எக்கிம், முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் அப்துல்லா இஸ்மத் ஆகியோர் பேசினர்.  திருவிதாங்கோடு அஞ்சுவன்னம் முஸ்லிம் ஜமாத் தலைவர் நசீர் நன்றி கூறினார்.

Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
கூடங்குளம் முதலாவது அணு உலையில் வணிகரீதியான மின் உற்பத்திக்கான அணுப்பிளவு தொடர்வினை புதன்கிழமை தொடங்கியது.
கூடங்குளத்தில், 1,000 மெகா வாட் மின்உற்பத்தி திறனுள்ள முதலாவது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் வணிகரீதியான மின் உற்பத்திக்கான ஆய்வு பணி கள் கடந்த ஜூலை 16-ம் தேதி தொடங்கியது. இதனால், மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்க அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரிய ஒப்புதலுடன், 35 நாட்கள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகள் வெற்றிகரமாக முடிக்கப் பட்டு, வணிகரீதியில் மின்உற்பத் திக்கு முதலாவது அணுஉலை தயார் நிலையில் இருந்தது. ஆய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கை அணுசக்தி ஒழுங்க மைப்பு வாரியத்திடம் அளிக்கப் பட்டிருந்தது. கடந்த 31-ம் தேதி வணிகரீதியில் மின்உற்பத்திக்கு வாரியம் அனுமதி அளித்தது.
புதன்கிழமை அதிகாலை 5.35 மணியளவில் முதலாவது அணு உலையில், ‘கிரிட்டிக்காலிட்டி’ எனப்படும் அணுப்பிளவு தொடர் வினை தொடங்கியது. அதில் இருந்து 12 மணி நேரத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி எட்டப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
குழித்துறை அருகே நூதன முறையில் கடத்திய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி பறக்கும் படை சிறப்பு தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யது அலி, டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் நேற்று காலை மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த லோடு ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. 
உடனே, அதிகாரிகள் லோடு ஆட்டோவை துரத்தி சென்று, குழித்துறை அருகே கல்லுக்கெட்டி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, அதில் மிட்டாய் பொருட்கள் இருப்பதாக கூறினார். 
அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சாக்கு மூட்டைகளை சோதனையிட்ட போது, அதில் மிட்டாய் பொருட் களுடன் போதை புகையிலை பொருட்கள், பாக்கு பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கூறப் படுகிறது. 
இவை நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளையில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு செல்வதாக டிரைவர் கூறினார். 
கேரளாவில் இத்தகைய புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய போதை பொருட்களை களியக்கா விளையில் பதுக்கி வைத்து விட்டு அங்கிருந்து  கேரளாவுக்கு கடத்தி செல்ல, எடுத்து வந்ததாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து, அதிகாரிகள், நூதன முறையில்  கடத்திய போதை புகையிலை பொருட்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், லோடு ஆட்டோ டிரைவர் நாகர்கோவில், கோட்டாறு பகுதியை சேர்ந்த டிரைவர் கணேசும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.