Monday, September 26, 2016
திருப்பூர் அருகே 19வது வார்டு மும்மூர்த்திநகர்,அம்மன்நகர்,கருப்பராயன்நகர் ஊர் பொதுமக்கள் அடிப்படை வசதிகளான சாக்கடை,சாலை வசதி அமைத்திடவேண்டி பூலுவப்பட்டி சிக்னல் நாண்குவழிச்சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது விஷயமறிந்தஅனுப்பர்பாளையம் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்துவந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின்பு கூட்டம் கலைந்துசென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது..
திருப்பூர். அவினாசி சாலை குமார் நகர் சிக்னலில் தனியார் பள்ளி இடம் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து .150. க்கும் மேற்பட்டோர் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மனி நேரம் போக்குவரத்து நெரிசல்.
பிரகு தாசில்தார் மற்றும் பள்ளி மாவட்ட co. விரைந்து வந்து பேச்சு வார்த்தைக்கு பின்பு கூட்டம் கலைந்தனர்.
Saturday, September 24, 2016
சிரோகி: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஓட்டலில் மலைப்பாம்பு பிடிபட்டது. அந்த பாம்பின் அருகே சென்று செல்பி எடுத்த வாலிபரை அந்த பாம்பு பாய்ந்து சென்று கடித்து விட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் திடீரென சில அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதை ஊழியர்கள் கவனித்து அலறினர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி வாலிபர்கள் திரண்டு வந்து துணிச்சலாக மலைப்பாம்பை பிடித்தனர். இதற்கிடையே, ஓட்டல் நிர்வாகிகள், வனத்துறைக்கு தகவல் கொடுத்திருந்தனர். அவர்களும் ஓட்டலுக்கு வரவே பிடித்த பாம்பை அவர்களிடம் வாலிபர்கள் ஒப்படைத்தனர்.
முன்னதாக, மலைப்பாம்பை கையில் பிடித்த நிலையில் வாலிபர்கள், புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். மேலும், ஓட்டலில் பாம்பு பிடித்த சம்பவத்தை விவரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், ஆர்வக் கோளாறால் மலைப்பாம்பின் தலைப்பகுதி அருகே சென்று அதனுடன் போஸ் கொடுப்பது போல நின்று செல்பி எடுத்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் பாம்பு துள்ளிச் சென்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாலிபரின் தோளில் பாய்ந்து கவ்வியது.
இதை கண்டு கூட்டத்தினர் அலறினர். பாம்பிடம் இருந்து கையை உதறிய வாலிபர் பயத்தில் சற்று தள்ளி சென்று விழுந்தார். பின்னர், காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நல்ல வேளையாக சிறிய காயத்துடன் அவர் உயிர் தப்பினார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செல்பியால் மலைப்பாம்பு வாயில் சிக்கிய வாலிபர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
தேனி: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனியில் வாக்காளர்களுக்கு பணம், சேலைகளை வழங்கும் பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. தேனி நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் நாராயணபிரபு விருப்ப மனு கொடுத்துள்ளார். கடந்த 2006, 2011 ஆகிய தேர்தல்களில், இந்த வார்டில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில், இப்போதே ‘வேலையை’ தொடங்கி விட்டார் நாராயணபிரபு.
தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி அக். 2ம் தேதி கற்பக விநாயகர், முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சகஸ்ர கலச அபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேக பூஜை நடத்த உள்ளார். இதில் கலந்துகொள்ளுமாறு, பெரிய சைஸ் தாம்பூல தட்டில் தாலி, மஞ்சள் கயிறு, சேலை மற்றும் பழங்கள் சகிதத்துடன் பணமும் வைத்து வீடு, வீடாக வழங்கி வருகிறார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, வெளிப்படையாக இதுபோன்று பணம், பொருள் கொடுக்க முடியாது என்பதால், இப்போதே அதிமுகவினர் களம் இறங்கியிருப்பது வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஐதராபாத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் கடந்த 5 நாள்களாக பெய்து வரும் பலத்த மழைக்கு 13 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஐதராபாத் மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளோம்’’ என்றார். பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 2 நாட்களாக, சில சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றச் செய்துள்ளன. சில நிறுவனங்கள் விடுமுறை அளித்தன.
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில், 3 பெண்கள் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்த முதல்வர் சந்திரசேகரராவ், உடனடியாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழை காரணமாக நிலக்கரி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் ராஜிவ் சர்மா தெரிவித்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் 45,840 ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழைக்கு விசாகப்பட்டினம் மற்றும் குண்டூர் மாவட்டங்களில் 9 பேர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 5 நாட்களுக்கு தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பையிலும்கனமழை
மும்பையிலும் தொடர்ந்து 6 நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த மழை இடைவிடாமல் பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். பலத்த மழை பெய்து வருவதால் அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடும்பத்தினரை சந்தித்தனர்.

ஐதராபாத்:
லிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த், விஜய் குமார் ஆகியோர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டனர். சிர்தே பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த கோபிகிருஷ்ணா, தெலுங்கானாவைச் சேர்ந்த பலராம் கிஷன் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் 414 நாட்கள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு பேராசிரியர்களும் கடந்த 15-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து லிபிய ராணுவம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மூலம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி, தீவிரவாதிகள் பிடியில் இருந்து மீண்டு வந்த இரண்டு பேராசிரியர்களும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் விமானம் மூலம் இன்று காலை ஐதராபாத் வந்து சேர்ந்தனர். அப்போது அவர்களின் குடும்பத்தினர் அவர்களை கண்ணீர்மல்க வரவேற்று மகிழ்ந்தனர்.
அப்போது தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததை நினைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றார் கோபிகிருஷ்ணா. மேலும், தங்களை விடுவித்து பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட லிபிய ராணுவம் மற்றும் வெளியுறவு மந்திரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதேசமயம், தன்னை சிறைப்பிடித்தது குறித்த தகவல் எதையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...